இன்று உங்கள் ராசிபலன்11.09-2019

11 Sep,2019
 

 
 
மேஷம்
இன்று சந்தோஷமான நாள். சொந்த பிரச்சினையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ராசி பலன்கள்
 
ரிஷபம்
இன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், கிரகிக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்பவர்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம். தொழிலில் நிதானம் தேவை. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ராசி பலன்கள்
 
மிதுனம்
இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். ஞாபக மறதியால் தொல்லைகள் ஏற்படலாம். விருந்து கேளிக்கைகளில் மனம் லயிக்கும். பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6
ராசி பலன்கள்
 
கடகம்
இன்று அலுவலகத்தில் நண்பர்கள் கிடைப்பார்கள். மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கான உதவிகள் கிடைக்கும். வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்
 
சிம்மம்
இன்று தொழிலில் திருப்திகரமான பணவரவு இருக்கும். வியாபாரிகள் கடன் வாங்க வேண்டாம். வெளியில் கொடுத்த கடன் கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கொடுக்கும். கணவன் - மனைவி உறவு வலுப்பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்
 
கன்னி
இன்று மனநிம்மதி கிடைக்கும். சகோதரர்களின் ஆலோசனை படி கேட்டு நடந்தால் நன்மைகள் அதிக அளவில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் வருமானம் அதிகமாக எதிர்பார்க்கலாம். சுற்றுலா சென்று வருவீர்கள். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9
ராசி பலன்கள்
 
துலாம்
இன்று தொழிலில் உற்பத்தியும், வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். வேலை செய்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். வழக்கு, விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். பணம் பல வழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
ராசி பலன்கள்
 
விருச்சிகம்
இன்று வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்தால் கவலை வேண்டாம். சரியாகி விடும். தாய்வழி உறவினர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்
 
தனுசு
இன்று மாணவர்கள் உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல் வாதிகளுக்கு கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைப்பது மன நிறைவைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்
 
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9
ராசி பலன்கள்
 
கும்பம்
இன்று முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அதை செய்து முடிப்பீர்கள் . உங்கள் கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3
ராசி பலன்கள்
 
மீனம்
இன்று உற்சாகமான நாள். சிக்கலான குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அது சரியாகி விடும். அரசியல் வாதிகளுக்கு தொண்டர்களிடையே மதிப்பும், மரியாதையும் உயரும். வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். சொத்து விவகாரங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies