ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய விடாப்பிடியில் ரணில் - சஜித்

19 Aug,2019
 

 


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அவரின் சகோ­த­ரரும் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­த­பாய ராஜ­பக் ஷ கள­மி­றக்­கப்­ப­டுவார், பெய­ரி­டப்­ப­டுவார் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த சூழலில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அது நடந்­தது. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவை  எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடந்த ஞாயிற்­றுக்­ கி­ழமை அறி­வித்தார். 
ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் முத­லா­வது தேசிய சம்­மே­ளனம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­ததாச உள்­ளக அரங்கில் நடை­பெற்­றது. அதில்   பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ
தெரி­வு­செய்­யப்­பட்டார். அதன் பின்னர் கட்­சியின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் அதன் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக் ஷவை மஹிந்த ராஜ­பக் ஷ பகி­ரங்­க­மாக அறி­வித்தார். 
கோத்­த­பாய ராஜ­பக் ஷவே மஹிந்த தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வருவார் என பர­வ­லாகக் கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக அறி­விக்­கப்­பட்டு வந்­தது. அதற்­கான ஆரம்பக் கட்ட காய் ந­கர்த்­தல்­களில் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் முழு­வீச்சில் ஈடு­பட்­டி­ருந்தார். வியத்­மக மற்றும் எலிய போன்ற அமைப்­புகள் உரு­வாக்­கப்­பட்டு கோத்­த­பாய ராஜபக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற விடயம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. 
அதே­போன்று கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் பெரும்­பா­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோத்­த­பாய ராஜபக்ஷவை வேட்­பா­ள­ராகப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும் எனக் கோரி­ வந்­தனர். எப்­ப­டி­யி­ருப்­பினும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில், ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதி­காரம் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷவிடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ரிடம் ஐந்து பெயர்கள் காணப்­பட்­டன. கோத்­த­பாய ராஜ­பக் ஷ, சமல் ராஜ­பக் ஷ, பசில் ராஜ­பக் ஷ, தினேஷ் குண­வர்த்­தன, குமார வெல்­கம ஆகி­யோரின் பெயர்கள் மஹிந்த ராஜ­பக் ஷவின் பரி­சீ­ல­னையில் இருந்­தன. மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரும் மஹிந்த ராஜ­பக் ஷவின் பரி­சீ­ல­னையில் இருந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. 
எனினும் இறு­தியில் இந்தப் பெயர்­களில் கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் பெயரையே மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வு செய்திருக்கின்றார்.  அத­ன­டிப்­ப­டையில் கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி கோத்­த­பாய ராஜபக் ஷவை  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மஹிந்த அறி­வித்­தி­ருக்­கின்றார். அவ­ரது பெயர் அறி­விக்­கப்­பட்­டதும் சாதக பாதக விமர்­ச­னங்கள் வந்­து­ கொண்­டி­ருக்­கின்­றன. மறு­புறம் கோத்­த­பாய ராஜபக் ஷ பௌத்த புனித ஸ்தலங்­க­ளுக்கு விஜயம் செய்து சமய வழி­பா­டு­களிலும் ஈடு­பட்டு வரு­கின்றார்.   கூட்டு எதி­ர­ணிக்­குள்ளும் கோத்­த­பாய ராஜபக் ஷ தொடர்பில் எதிர்­மறை கருத்­து­க்கள் நில­வி­ வந்­தன. குறிப்­பாக குமார வெல்­கம ஆரம்­பத்­தி­லி­ருந்தே கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் பெய­ரி­டப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை. அவர் அந்த முடிவை கடு­மை­யாக விமர்­சித்­து­ வந்தார். அதன் கார­ண­மாக குமார வெல்­கம தற்­போது கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­தி­ரக் கட்­சி­யி­லேயே மீண்டும் தஞ்­ச­ம­டைந்­து­ விட்டார். 
அதே­போன்று பொது­ஜன பெர­மு­னவில் கூட்டுக் கட்­சி­யாக அங்கம் வகிக்கும் வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் கோத்­த­பாய ராஜ­ப க் ஷ தொடர்பில்   வித்­தி­யா­ச­மான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்தார். எனினும் தற்­போது அவர் கோத்­தா­வுக்கு ஆத­ரவு வழங்கத் தயா­ரா­கி­யுள்ளார் என்றே தெரி­கின்­றது. அதே­போன்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரே­ராவும் கோத்­த­பாய ராஜபக்ஷ தொடர்பில் கடந்த காலங்­களில் விமர்­ச­ன­மான பார்­வையைக் கொண்­டி­ருந்தார். கோத்­தாவை விட வேறு யாரா­வது வேட்­பா­ள­ராக வந்தால் நன்­றாக இருக்கும் என்றும் அவர் கூறி­ வந்தார். எனினும் தற்­போது கோத்­த­பாய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கத் தயார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரே­ராவும் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருக்­கிறார். 
தமிழ்ப்பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விடயம் தொடர்­பா­கவே டிலான் பெரேரா கோத்­த­பா­யவின் விவ­கா­ரத்தில் முரண்­பட்­டி­ருந்தார். எனினும் தற்­போது தமிழ்ப்பேசும் மக்­க­ளுக்­கான நியா­ய­மான ஓர் அர­சியல் தீர்வு விட­யத்தில் கோத்தா தரப்­பி­லி­ருந்து நல்ல முடிவை எதிர்­பார்க்­கலாம் என நம்­பு­வ­தாக டிலான் பெரேரா அறி­வித்­தி­ருக்­கின்றார். அது­மட்­டு­மன்றி ஐக்­கிய தேசி­யக்­ கட்­சிக்கு எதி­ரான தரப்பு என்ற வகையில் கோத்­தாவை ஆத­ரிப்­பதைத் தவிர வேறு வழி­யில்லை என்றும் டிலான் பெரேரா தெரி­வித்­தி­ருக்­கின்றார். 
அந்­த­ வ­கையில் பல்­வேறு தடைகள், முரண்­பா­டுகள், சிக்­கல்­க­ளுக்கு மத்­தியில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் அவ­ருக்­கான கதவை மஹிந்த ராஜ­பக் ஷ 
திறந்தி­ருக்­கி­றார்.  அடுத்த கட்­ட­மாக மஹிந்த தரப்பு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான கொள்கைப் பிர­க­ட­னத்தைத் தயா­ரிக்கும் செயற்­பாட்டில் மிகத் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தாகத் தெரி­கி­றது. 
அது­மட்­டு­மன்றி பல்­வேறு தரப்­பி­ன­ரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தும் முயற்­சி­க­ளிலும் பொது­ஜன பெர­முன ஈடு­பட்டு வரு­வ­தாகத் தெரி­கி­றது. குறிப்­பாக பல்­வேறு அர­சியல் கட்­சி­க­ளுடன் ஜனா­தி­பதித் தேர்தல் விட­யத்தில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு பொது­ஜன பெர­முன எதிர்­பார்க்­கி­றது. வடக்கு, கிழக்கு தமிழ்ப்பேசும் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கான ரா­ஜ­தந்­திர முயற்­சி­களில் பொது­ஜன பெர­முன ஈடு­ப­டு­மெனத் தெரி­ய­வ­ரு­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்கும் விட­யத்தில் மஹிந்த தரப்பு முதல் அடியை எடுத்து வைத்­தி­ருக்­கி­றது. ஆளும் கட்­சியின் வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­ரா­கவே மற்றும் ஆளும் கட்சி வேட்­பாளர் யார் என்­பதை ஊகிக்க முடி­யாத சூழ­லிலும் எதிர்க்­கட்சி தனது வேட்­பா­ளரை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 
இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆளும் கட்­சி­யி­லி­ருந்து ரணில் விக்­­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாஸ , கரு ஜய­சூ­ரிய என யார் வந்­தாலும் தமது தரப்­புக்கு சவால் இல்லை என்றும் தாம் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­யீட்­டு­வது உறுதி என்றும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 
இவ்­வாறு மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பின் கதவு திறக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஆளும் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­காரம் இன்னும் திண்­டாட்­ட­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­­ர­ ம­சிங்க, தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றார். அதற்­கான அர­சியல் காய்­ந­கர்த்தல் மற்றும் முயற்­சி­க­ளிலும் அவர் தொடர்ந்தும் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்றார். மறு­புறம் கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸவும் தான் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்­பதில் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றார். இந்த நிலை­யி­லேயே இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பாடு தொடர்ந்து நீடித்­து வருகின்றது. இரு­வரில் ஒருவர் கூட விட்­டுக்­கொ­டுப்­ப­தாக இல்லை. 
கடந்­த­ வாரம் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வுக்கும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் இடையில் இது தொடர்பில் பல்­வேறு எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் நடை­பெற்ற சந்­திப்­பிலும் எந்­த­வி­த­மான இணக்­கமும் காணப்படவில்லை. இந்தச் சந்­திப்பில் இரு­வ­ருமே தாம் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக போட்­டி­யிட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­துள்­ளனர். எனவே அந்தச் சந்­திப்பு எந்­த­வி­த­மான இணக்­கப்­பாடும் இன்றி முடி­வ­டைந்­தது. 
அது மட்­டு­மன்றி அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோவின் ஏற்­பாட்டில் பது­ளையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்­றிலும் சஜித் பிரே­ம­தாஸ கலந்து கொண்டு, தான் நிச்­ச­ய­மாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டுவதாகப் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார். அது­மட்­டு­மன்றி அவர் தனது ஆத­ர­வா­ளர்கள் ஊடாகத் தொடர்ச்­சி­யாக தான் போட்­டி­யிட வேண்டும் என்ற விட­யத்தை வலி­யு­றுத்தி வரு­கின்றார். இந்த நிலையில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தலை­மை­யி­லான ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணியை அமைக்கும் முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. தேசிய கூட்­ட­ணியை அமைத்தன் பின்­னரே ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்க வேண்டும் என ரணில் தரப்பு கூறி­ வ­ரு­கின்­றது. அதே­போன்று தேசிய கூட்­ட­ணியை அமைப்­ப­தற்கு முன்­ப­தாக வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­ட­ வேண்­டு­மென சஜித் தரப்பு கூறி­ வ­ரு­கின்­றது. இந்தச் சூழலில் வேட்­பாளர் விவ­கா­ரமும் இழு­ப­றியில் இருந்து வரு­வ­துடன் தேசிய கூட்­ட­ணியை உரு­வாக்கும் பணி­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. இரண்டு தரப்­பி­ன­ரையும் ஓர் இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்டு வரும் முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் அவை வெற்­றி­பெ­று­வ­தாகத் தெரி­ய­வில்லை. 
இந்­நி­லையில் சில தினங்­க­ளுக்கு முன்னர் அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தா­ஸவும் ராஜித சேனா­ரத்­னவும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது தேசிய கூட்­ட­ணியை அமைத்­ததன் பின்னர் ஜனா­தி­பதி வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதே பொருத்­த­மா­னது என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் எடுத்­து­ரைத்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அப்­போது ஒரு குறிப்­பிட்டளவில் இந்த விட­யத்­துக்கு சஜித் பிரே­ம­தாஸ இணங்­கி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் அது தொடர்பில் எந்­த­வி­த­மான பகி­ரங்க அறி­விப்­பு­களும் வெளி­யா­க­வில்லை. 
அதே­போன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்கள் பங்­கேற்ற கூட்டம் நடை­பெற்­றது. இதன்­போது  மூன்று முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதா­வது  இதன்­போது  உப கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன் மூன்று முக்­கிய தீர்­மா­னங்­களும்   எடுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த உப­ குழு  இன்று   சனிக்­கி­ழமை கூடி   ஜன­நா­யக தேசி­ய­ கூட்­டணி தொடர்பில்   பல முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளது. கூட்­டத்­தின்­போது  ஜன­நா­யக தேசிய கூட்­டணி தொடர்பில் இறு­தித்­ தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இந்தக் கூட்­டணி தொடர்­பாக நாட்­டுக்கு அறி­விக் கும் திக­தியும் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­படும்.  
 கூட்­டணி குறித்து நாட்­டுக்கு அறி­விக்கும் தினத்தில் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணிக்­கான ஆவ­ணத்தில்  பங்­கா­ளிக் கட்­சிகள்  கையெ­ழுத்­தி­ட­வுள்­ள­துடன்   கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் அறி­விக்­கப்­ப­ட­வுள்ளார். இவையே செவ்­வாய்க்­கி­ழமை கூட்­டத்­தின்­போது எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளாகும். அதன்­படி இன்று சனிக்­கி­ழமை முக்­கிய சில தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
இந்தப் பின்­ன­ணி­யி­லேயே ஆளும் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­காரம் தொடர்ந்து இழு­பறி நிலையில் நீடிக்­கி­றது. எதிர்க்­கட்சி தமது வேட்­பா­ளரை அறி­வித்­து­விட்ட நிலையில் ஆளும் கட்சி தொடர்ந்து இதனை தாம­திப்­பது அர­சியல் ரீதியில் அந்தத் தரப்­புக்கு பாத­கமாக அமை­யலாம் என பல்­வேறு தரப்­பி­ன­ராலும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. விசே­ட­மாக இந்த விட­யத்­துக்கு மிக விரைவில் தீர்­வு கா­ணப் ப­ட வேண்­டு­மென தேசிய கூட்­ட­ணி யில் இடம்­பெ­ற­வுள்ள கூட்­டுக்­ கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான மக்கள் காங்­கிரஸ் போன்றவை விரை­வாக தேசிய கூட்­டணி அமைக்­கப்­ப­ட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­ட­ வேண்டும் என்றும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன. 
இதற்­கி­டையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவும் தானும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடத் தயார் என அறி­வித்­தி­ருக்­கின்றார். கட்சி தன்னை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்தால், தான் ஒரு சிறந்த முறையில்  போட்­டியிடுவதற்குத் தயார் என்று சரத் பொன்­சே­காவும் அறி­வித்­தி­ருக்­கின்றார். எப்­ப­டி­யி­ருப்­பினும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பாளர் யார் என்­பது தொடர்பில் அக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் ஆர்­வ­மாக இருக்­கின்­றனர். ஆனால் கட்­சிக்குள் தொடர்ந்து இழு­பறி நிலைமை வேட்­பாளர் விட­யத்தில் நீடிப்­பதைக் காண­ மு­டி­கின்­றது. 
அதே­போன்று மறு­புறம் மக்கள் விடு­தலை முன்னணியும் நாளை 18ஆம் திகதி தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவிருக்கிறது. பெரும்பாலும் மக்கள் விடுதலை முன்ன ணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அறிய முடிகின்றது. அந்த வகையில் எதிர்க் கட்சியின் வேட்பாளர் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு விட்டார். ஆளும் கட்சியில் சஜித் பிரேமதாஸவா அல்லது ரணில் விக்ரமசிங்கவா என்ற கேள்விக்கு பதில் இல்லாத நிலைமை நீடிக்கிறது. இவர்கள் இருவரில் ஒருவரே வேட்பாளராக வரும் சாத்தியம் நிலவுகிறது. அதேபோன்று மக்கள் விடுதலை முன்ன ணியும் தனி வேட்பாளரை நிறுத்தவிருக் கிறது. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளரை களமிறக்காது என்றும் பிரதான வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்திருக்கின்றது. இந்நிலையில் எதிர்வரும் மாதங்கள் ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கப் போகின்றன. தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க வேட்பாளர்கள் தமது கொள்கைப் பிரக டனங்களை வெளியிடுவார்கள். சிறிய கட்சிகள் பேரம் பேசுதல்களை நடத்தும். எனினும் இறுதியில் மக்களின் முடிவே முக்கியமானதாக அமையப்போகின்றது. ஒரு கட்சியின் வேட்பாளர் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு விட்டார். ஏனைய பிரதான கட்சியின் வேட்பாளர் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே போட்டி பலமாக இருக்கும். விசேடமாக ஆளும் தரப்பு வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடிக்கும். விடியும் வேளையில் நல்ல நல்ல விளையாட்டுக்களைப் பார்க்கலாம் என்று கூறுவதுண்டு. எனவே அடுத்த மூன்று மாதங்களுக்குள் நல்ல நல்ல அரசியல் விளையாட்டுக்களைக் கண்டுகளிக்கலாம் என்பது மட்டும் யதார்த்தம். 
R.அன்­டனி

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies