ஐ.எஸ். அமைப்பு தொடர்­பாக 13 தக­வல்கள் கிடைத்­தன

07 Aug,2019
 

 

 
நான் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக பத­வி­வ­கித்த காலப்­ப­கு­தியில் பாது­காப்பு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்து ஐ.எஸ். அமைப்பு தொடர்­பாக 13 தக­வல்கள்  கிடைத்­தன. அவற்றில்  சிங்­கள – முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் பற்­றிய ஆறு தக­வல்கள் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த­தாக  அமைச்சர் சாகல ரத்­நா­யக்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.  
உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு முன்­னி­லையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை  சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்­ட­போதே அவர் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் இவற்றைக் கூறினார். சாட்­சியம் வரு­மாறு;
கேள்வி :- நீங்கள் சட்டம், ஒழுங்கு அமைச்­ச­ராக செயற்­பட்ட காலத்தில் இந்த சம்­ப­வபம் தொடர்பில், அரச புல­னாய்வு பிரிவு அதி­கா­ரிகள் உங்­களை அறி­வு­றுத்தி இருந்­த­னரா?
பதில்:- 2015.02.12 சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ராக இருந்தபோது தினமும் பாது­காப்பு  அறிக்கை ஒன்று கிடைக்கும். ஜனா­தி­பதி, பிர­தமர், பிரதி அமைச்சர் பாது­காப்பு, ஜனா­தி­பதி செய­லா­ள­ருக்கும் அந்த அறிக்கை அனுப்­பப்­பட்­டி­ருக்கும். கடந்த 24 மணித்­தி­யால பாது­காப்பு தக­வல்கள் பற்­றிய விட­யங்கள் அந்த கடி­தத்தில் இருக்கும், ஆயுதம் கிடைக்­கப்­பெற்­றமை உள்­ளிட்ட விட­யங்கள் அந்த கடி­தத்தில் காணப்­படும். மிரி­ஹான பொலிஸ் பிரி­வி­லி­ருந்து பொலிஸ்மா அதிபர் கையொப்­பத்தில் அந்த கடிதம் வரும். விசேட கார­ணங்கள் இதில் கூறப்­பட்­டி­ருந்தால் அது­பற்றி கேட்­ட­றிவேன். பொலிஸ்மா அதி­பரும் என்­னுடன் பேசி ஆலோ­ச­னை­களை பெறுவார். அதன்பின்னர் வாராந்த மீளாய்வு செயற்­பா­டு­களும் இடம்­பெறும். அதனால் அதி­கா­ரி­க­ளுக்கும் அவர்­களின் பிரச்­சி­னைகள் பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும்.
கேள்வி : - பாது­காப்பு பிரச்­சி­னைகள் பேசப்­ப­டுமா?
பதில்:- காலோ­சி­த­மான பிரச்­சி­னைகள் பற்றி பேசப்­படும். அதற்கு மேல­தி­க­மாக அரச புல­னாய்வு பிரிவு எனக்கு தகவல் கூறு­வ­தில்லை. அவர்கள் பாது­காப்பு அமைச்­சுக்கே அறி­விப்பர். ஆனால் சட்டம் ஒழுங்கு தொடர்­பாக எனது காலப்­ப­கு­தியில் 407 புல­னாய்வு தொடர்­பான கடி­தங்கள் கிடைத்­துள்­ளன. தொலை­பேசி  மூலமும் எனக்கு அறி­வுறுத்தியுள்­ளனர். அவ்­வா­றான நிலையில் தான்  ஐ.எஸ். அமைப்பு பற்றி 13 புல­னாய்வு தக­வல்கள் கிடைத்­தன.  அவற்றில், ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­டைய இந்­தி­யர்கள் இலங்­கையில் வசிப்­பது, ஐ.எஸ். அமைப்பு வெளி­நா­டு­களில் நடத்தும் தாக்­கு­தல்கள், ஐ.எஸ். அமைப்பு வெளி­யிட ஆரம்­பித்­துள்ள சஞ்­சிகை, இலங்­கை­யி­லி­ருந்து அந்த அமைப்பின் வலைத்­த­ளங்­களை தேடு­ப­வர்கள் பற்­றிய தக­வல்கள் ஆகி­ய­னவும் 2016ஆம் ஆண்டில், முதல் முறை­யாக தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பு ஐ.எஸ். அமைப்பின் கொள்­கை­களை நியா­யப்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் தகவல் கிடைத்­தன.  அதன் பின்னர் ஐ.எஸ். அமைப்­பினால் இலங்­கைக்கு ஏற்­ப­டலாம் என கருதும் நெருக்­க­டிகள் பற்­றியும் அந்த அச்­சு­றுத்­த­லுக்கு முகம்­கொ­டுக்க தயா­ராக வேண்டும் என்றும் 14.07.2014 அன்று நடந்த பாது­காப்பு சபை கூட்­டத்தில் அறி­வு­றுத்­தியும் இருக்­கிறேன். அதேபோல் 2018 ஆம் ஆண்டில் மத நல்­லி­ணக்கம் பற்­றிய 400 மேற்­பட்ட நிக­ழ­்வுகள் நடத்த­ப்­பட்­டுள்­ளன. அத­னை­ய­டுத்து புல­னாய்வு தக­வல்­களை பறி­மாற்றல், வெளி­நாட்டு புல­னாய்வு பிரி­வு­க­ளி­டத்­தி­லி­ருந்து தாக்­கு­தல்­களை பெற்­றுக்­கொள்ளல் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பி­லான பத்­திரம் ஒன்றும் தயா­ரிக்­க­ப்பட்­டது. 2016ஆம் ஆண்டில் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவில் மத அடிப்­ப­டை­வாதம் பற்­றிய தனி­யான பிரி­வொன்றை அமைத்து, சஹ்ரான் பற்றி பேஸ்புக் மூலம் தேடிப்­பார்க்­கு­மாறும் அறி­வு­ரைக்­கப்­பட்­டது.
கேள்வி: 2016.11.02 சஹ்ரான் பற்றி உங்­க­ளுக்கு கிடைத்த தகவல் என்ன? யார் வழங்­கி­யது?
பதில்:-தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்­ரானின்  பிர­சாரம் பற்றி  அரச புல­னாய்­வு­பி­ரிவு தக­வல்கள் கிடைத்­தன.
கேள்வி: - தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்த கிழக்கு மாகாண பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிகள் மேற்­படி விவ­காரம் தொடர்­பான தகவல் கிடைக்­க­வில்லை என்­கி­றார்கள்? ஏன் அவ்­வாறு நடந்­தது?
பதில்:- ஏனக்கு தக­வல்கள் கிடைப்­பது போல பொலிஸ்மா அதிபர் உள்­ளிட்ட பல­ருக்கும் அறி­விக்­கப்­படும்.
கேள்வி: - தற்­கொலை தாக்­குதல் பற்றி தகவல் கிடைத்­ததா?
பதில்:- இல்லை. எனது காலப்­ப­கு­தியில் கிடைக்­க­வில்லை, மத அடிப்­ப­டை­வாதம் பற்­றித்தான் கிடைத்­தது. மத அடிப்­ப­டை­வாதம் தலை தூக்­கி­ய­மை­யினால் தான் அது பற்றி ஆராய பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வுக்குள் தனிப்­பி­ரி­வொன்றை அமைத்தோம்.
கேள்வி:-  - பாது­காப்பு சபை கூட்­டங்­க­ளுக்கு அழைப்பு கிடைக்­குமா?
பதில்:- அமைச்­ச­ராக பத­வி­யேற்ற ஆரம்ப காலத்தில் என்னை அழைக்­க­வில்லை. 4-5 மாதங்­களின் பின்னர் அழைப்பு கிடைத்­தது.
கேள்வி: - 2017 ஆம் ஆண்டில் காத்­தான்­கு­டியில் மோதல் ஒன்று இடம்­பெற்­றது. அப்­போது சஹ்ரான் பற்றி பாது­காப்பு சபையில் பேசப்­பட்­டதா?
பதில்:- அங்கு பேசப்­பட்­ட­தாக நினை­வில்லை. ஆனால் அப்­போதும் அது பற்­றிய அறிக்கை என்­னி­டத்தில் இருந்­தது.
கேள்வி:- அரச புல­ன­னாய்வு பிரிவு உங்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்தால் பாது­காப்பு சபை­யிலும் அறி­வித்­தி­ருக்கும்?
பதில்:- ஆம்.
கேள்வி:- காத்தான்குடி சம்­ப­வத்­துக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது பற்றி பேசப்­ப­ட­வில்­லையா?
பதில்:- அப்­போ­தைய காலப்­ப­கு­தியில், 2017.03.10 தான் இந்த மோதல் நடந்­தது. அப்­போது தௌஹித் ஜமாஅத் அமைப்பு பொலிஸார் தங்­க­ளுக்கு நியா­ய­மாக ஒரு­போதும் செயற்­பட்­ட­தில்லை என்று கூறி வந்­த­தாக அறிய முடிந்­தது. அப்­போது கைது செய்­யப்­பட்ட சப்ரான் என்ற நபர் அவரை பார்க்கச் சென்ற தாயா­ரி­டத்தில் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்­காக இல்லை  என்றும் தன­க்கு  பிணை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்க வேண்டாம் என்றும் அவ­ரு­டைய தாயாரை எச்­ச­ரித்­துள்­ளா­தாக அறிய முடிந்­தது.
கேள்வி :- புல­னாய்வு தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு கிடைப்­ப­தில்­லையா?
பதில் :- புல­னாய்வு  தகவல் கிடைக்­கா­விட்­டாலும், அதில் உள்­ள­டங்­கி­யுள்ள கார­ணிகள் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு செல்­வ­தற்­கான பொறி­முறை ஒன்று இருந்­தது. அதனால் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்­தினர் அறி­யாமல் இருந்­தது பற்றி தெரி­ய­வில்லை.
கேள்வி: - கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வா­தியின் மன­நிலை எவ்­வா­றாக இருந்­தி­ருக்கும் என அறிய முடி­கி­றது?
பதில் :- மேலே குறிப்­பிட்ட சப்ரான் என்ற நபர் தன்னை பார்க்கச் சிறைக்குச் சென்ற தனது தாயா­ரிடம்.  ஐ.எஸ். போன்ற அமைப்­பு­களை உரு­வாக்­கு­வதால் மாத்­தி­ரமே இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர­மைக்க முடியும் எனவும் தெரி­வித்தார்.
கேள்வி : - உங்கள் பத­விக்­காலம் நிறைவு பெறும் வரையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் கோரப்­பட்ட கடி­தத்­தக்கு நீண்­ட­காலம் பதில் கிடைக்­க­வில்லை?
பதில்:- பொலிஸ் அதி­கா­ரிகள் நேர­டி­யாக திணைக்­க­ளத்­துக்கு சென்று பேசுவர். நானும் சில சம­யங்­களில் அலை­பேசி மூலம் பேசு­வ­துண்டு அவ்­வா­றான பிரச்­சி­னைகள் இருக்­க­வில்லை.
கேள்வி:-  சமூக வலை­த்த­ளங்கள் மூலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சட்­ட­வி­ரோத பிர­சா­ரங்­க­ளுக்கு பதில் செயற்­பா­டுகள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­பட்­டன?
பதில்:- பொலிஸ் திணைக்­க­ளத்தில்  கிடைக்­கப்­பெறும் சில தக­வல்கள் உட­ன­டி­யாக ஆரா­யப்­பட்டு அதற்­கு­ரிய பதில் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.
கேள்வி:-  - அதன் பின்னர் ஆரா­யப்­பட்­டதா?
பதில்:- இல்லை என்­னிடம் கூற­வில்லை.
கேள்வி: பொலி­ஸுக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக நீங்கள் இருந்த காலத்தில், ஐ.எஸ். அமைப்­புகள் தொடர்பில் 13 விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன.  உங்­க­ளுக்கு அதில் மேல­திக விட­யங்கள் காணப்­பட்­ட­னவா?
பதில்:- முஸ்லிம், - சிங்­கள அடிப்­ப­டை­வாதம் பற்­றிய 6 தக­வல்­களும் கிடைக்­கப்­பெற்­றன.
கேள்வி:-  வவு­ண­தீவு, மாவ­னெல்லை சம்­ப­வங்கள் அறிக்­கை­யி­டப்­பட்ட போது, இது குறித்து அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­ட­வில்­லையா?
பதில்:- அமைச்­ச­ர­வையில் பேச­வில்லை. எனக்கு அழைப்பு கிடைத்­தி­ருக்­க­வில்லை.
கேள்வி: - 21 இறுதி தாக்­குதல் என உறு­தி­யாக  கூற முடி­ய­வில்லை. ஆனால் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள்  குறித்த ஒரு எதிர்­வு­கூ­ற­லுக்கு வர முடி­ய­வில்­லையா?
பதில்:- இல்லை பொலிஸ் சேவை 24 மணித்­தி­யா­ல சேவை­யாகும். அவ்­வாறு காலத்தை செல­வ­ழிக்க கூடி­யவர் அதனை செய்­தி­ருக்க வேண்டும்
கேள்வி:- உங்­க­ளுக்கு நேரம் இருக்­க­வி­ல்­லையா?
பதில்:- எனது காலத்தில் நான் அதனை செய்தேன். சம்­பவம் நடந்த பின்பு ஆராய்­வதை விட நடக்கும் முன்பு ஆராய வேண்­டி­யது அவ­சியம்.
கேள்வி: - நீங்கள்   பாது­காப்பு பத்­திரம் ஒன்­றையும் தயா­ரித்­துள்­ளீர்கள், சில தொடர் சம்­பவம் உள்­ளிட்ட விட­யங்கள் பற்­றிய ஆராய்­வுகள் தொடர்ந்­த­னவா?
பதில்:- ஆம் நடந்­தி­ருக்கும்.  பின்பு வந்­த­வர்கள் என்ன செய்­தி­ருப்­பார்கள் என்று எனக்கு தெரி­யாது
கேள்வி: - நீங்கள் அமைச்­சி­லி­ருந்தபோது திகன சம்­பவம் பற்­றிய தகவல் கிடைத்­ததா?
பதில்:- இல்லை குறு­கிய காலத்தில் நிலைமை எப்­படி வேண்­டு­மா­னாலும் மாறலாம். என்னால் பாது­காப்பு அமைச்சின் செயற்­பா­டு­க­ளையும் குறை கூற முடி­யாது.
கேள்வி:- உங்­களின் கடமை பற்றி?
பதில்:- பொது­மக்கள் பாது­காப்பு, பொலிஸ் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்தல் போன்­றன.
கேள்வி: - நாட்டின் சட்­டத்தை பற்றி அறிந்­துள்­ளீர்­களா?
பதில்:-எனக்கு அறி­வுரை வழங்கும் அதி­கா­ரிகள் பொலிஸ் திணைக்­க­ளத்தில் உள்­ளனர்.
கேள்வி:சஹ்ரான் பற்றி அறிந்­தி­ருந்­தீர்கள்? பாது­காப்பு சபையில் எப்­போது  பேசப்­பட்­டது?
பதில்:- ஆம் 2016.11.12 க்கு பிறகு அதி­க­மாக பேசப்­பட்­டி­ருக்கும்.
கேள்வி: - இந்நிலை­மையை முடக்க பாது­காப்பு சபையில் அறி­வுரை வழங்­கப்­பட்­டதா?
பதில்:- ஆம் கிடைத்­தது, நடவ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அறி­வு­றுத்­தப்­பட்­டது. எவ்­வாறு செய்­யப்­பட வேண்­டு­மென கூறப்­ப­ட­வில்லை.
கேள்வி:- அறி­வு­ரைக்கு அமைய பாது­காப்பு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வில்லை?
பதில்:- அதனை ஏற்க முடி­யாது. எனது காலப்­ப­கு­தியில் நடந்­தது.
கேள்வி:- அவ்­வாறு செயற்­பட்­டி­ருந்தால் சஹ்ரான் இருந்­தி­ருக்க மாட்டார்?
பதில்:- பொது­வாக பார்க்க வேண்­டிய காரணம்.
கேள்வி: - எவ்­வா­றா­யினும் பயங்­க­ர­வா­தத்தை முடக்க முடி­யாமல் போனது?
பதில்:- அடி  முதல் நுனி வரை குறை கூற முடி­யாது காரணம் யாதென தேடிப்­பார்க்க வேண்டும். அப்­போ­துதான் பிரச்­சினை தீரும்.
கேள்வி: - பாது­காப்பு சபை போலவே உங்­க­ளு­டைய   தரப்­பி­லி­ருந்தும் சஹ்­ரானை முடக்க அறி­வுரை வழங்­கப்­பட்­டதா?
பதில்:- ஆம் வாய் மூல­மாக வழங்­கினேன்.
கள்வி:-- விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளைப் பிர­தானி, சஹ்­ரான பற்றி என்­றுமே அறிந்­தி­ருக்­க­வில்லை என்று கூறினார். அவர்கள் இது­பற்றி அறிய வழி இல்­லையா?
பதில்:- பொலிஸ்மா அதி­ப­ருக்கு தான் அவர்கள் தகவல் வழங்­குவர். அந்த அமைப்­புக்கு பொலிஸ்மா அதிபர் தகவல் வழங்­குவார். எவ்­வா­றா­யினும் நாம் அந்த பிரி­வையும் பலப்­ப­டுத்தி உள்ளோம். இன­வாதம் போன்ற செயற்­பாட்­டா­ளர்கள் போதைப்­பொருள் விற்­பனை தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருப்பர். அவர்­களைப் பற்றி தேடும் முயற்­சிகள் இட­ம்பெற்­றன. தகவல் கிடைக்­க­வில்லை என்­பதை ஏற்­க­மாட்டேன்.
கேள்வி: - சஹ்­ரான திறந்த பிடி­யா­ணைக்கு ஆக்கப்­பட்­டி­ருந்த காலத்தில் அவரைக் கைது செய்­வ­தற்கு ஏன் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை? ஏன் கைது செய்­ய­வில்லை?
பதில்:- பிடி­யாணை உள்ள பலர் உள்­ளனர். இது பற்றி பேசினோம். பொலிஸார் கைது செய்யும் விதம் பற்றி நான் கூற­வில்லை. அவ­சர கைதுகள் பற்றி நாம் பேசுவோம் அந்த நட­வ­டிக்­கையை பொலி­ஸாரே எடுக்க வேண்டும்.
கேள்வி:- இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு பயிற்சி பெற்­ற­வர்­களை நிய­மிக்­கு­மாறு கூற­வில்­லையா?
பதில்:- பொலிஸ் தொடர்­பான அமைச்­சுக்கு படைகள் இல்லை. பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வுக்கு அந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அழுத்தம் இருந்­தது. சஹ்ரான் பயங்­க­ர­வாதி என்று அறி­ய­வில்லை. கேள்வி: - குண்டு வைக்கும் வரை அவர் தீவி­ர­வாதி என அறி­ய­வில்லை?
பதில்:- நான் அதனை ஏற்­க­மாட்டேன். தரமாக பொலிஸாரின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  எனது காலத்துக்கு பிற்பட்ட காலம் தொடர்பில் நாம் அறியவில்லை. எஸ்.டி.எப். ஐ பயன்படுத்தவில்லையா என்பது குறித்து எனக்கு ஒன்றும் கூறமுடியாது. அது பொலிஸாரின் கடமை. இதில் முக்கியமாக டி.ஐ.டி. க்கே அதிக பொறுப்பு இருந்தது. அவர்கள் தான் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் நபர்கள். இதில் எஸ்.டி.எப். பயன்படுத்த அவர் பயங்கரவாதியாக இருக்கவில்லை. மத அடிப்படைவாதி என்றே அறிவிக்கப்பட்டது. நான் பொறுப்பில் இருந்த காலத்தில் சரியாக கையாண்டேன். எனது காலத்திற்கு அப்பால் என்ன நடந்தது என்பது குறித்து  என்னால் ஒன்றும் கூற முடியாது
கேள்வி: - பிரபாகரன் துரையப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதேதான் அவர் பயங்கரவாதி என அறியப்பட்டார்.  அவ்வாறாயின் சஹ்ரானை பற்றி அறிய முடியவில்லையா?
பதில்:- அவர் கொலைகளை செய்ததாக பதிவுகள் இருக்கவில்லை. எனது காலத்தில் பிரச்சினைகள் பற்றி பேச நீண்ட காலம் செலவழித்தோம். பொலிஸாருக்கு சம்பள அதிகரிப்பு, இடமாற்றம் உரிய முறையில் கிடைத்ததால் பொலிஸாரின் செயற்பாடுகள் பலப்பட்டன என்றார்.

 



Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies