பணமும், ஆயுதமும் புளொட்டுக்கு வழங்கிய றோ! புளொட்டின் மறுபக்கம். - தொடர்

30 Jul,2019
 

 

 
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு.
ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் பெண்கள,; குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாயிரம் பேரை கொன்று குவித்தது. பல நூற்றுக்கணக்கான பெண்களை கற்பழித்தது.
பெண்கள் கற்புடன் இருப்பதும், வயோதிபர்கள் குழந்தைகள் உயிருடன் இருப்பதும் இந்தியப்படையின் கண்ணோட்டத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உண்மையில் இலங்கையில் இந்தியப்படை இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை யுத்தகால அழிவுகளாக கொள்ள முடியாது.அது ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமல்ல அமைதிப் பணி என்ற பெயரில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு இப்படித்தான் அந்தச் சம்பவங்களைப் பார்க்க முடியும்.
ரஜீவ்காந்தி இலங்கைக்கு வந்த போது ஒரு சிங்கள சிப்பாய் பகிரங்கமாக அவரைத் தாக்கினார். அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா வெய்யிலின் கொடுமையினால் ஏற்பட்ட மூளைக்கோளாறினால் அந்தச் சிப்பாய் அவ்வாறு நடந்து கொண்டதாக பகிரங்கமாகச் சொன்னார்.
இந்திய இராணுவத்தின் வருகைக்கு எதிராகவும் ரஜீவ்காந்தி கடைப்பிடித்த இலங்கை தொடர்பான அரசியல் போக்கிற்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டியது.
வடக்கில் தமிழ் மக்களை நம்பவைத்து மோசம் செய்த ரஜீவ்காந்தியின் படைகளை எதிர்த்து உயிர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இந்தியா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டது. வடகிழக்கில் சீனாவை எதிர்த்து மேற்கே பாகிஸ்தானை எதிர்த்து தெற்கே புலிகள் ஜே.வி.பி எதிர்ப்பு உள்நாட்டில் பஞ்சாப், கஸ்மீர், மிஸோராம், நகலாந்து, கூர்க்கா போராளிகளின் எதிர்ப்பு தன்னைச் சுற்றியும் தனக்குள்ளேயும் எதிரிகளை அது தேடிக்கொண்டது.
இது ரஜீவ்காந்தியினுடைய தலைமைத்துவத்தின் மீதான அவநம்பிக்கையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோற்றுவித்துவிடும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் அஞ்சினார்கள். இந்தியாவின் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத சின்னஞ்சிறு நாட்டின் சிப்பாய் மரியாதை அணிவகுப்பின் போது தாக்கியதும், அதைப் பாரதூரமான சம்பவமாக நினைத்து அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனா மன்னிப்புக் கோராமல் மனநிலை பாதிக்கப்பட்டவரின் செயலாக கூறியதை அவர்கள் மிகப்பெரிய விடயமாக எடுத்துக் கொண்டார்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை யாராவது இன்னொரு நாட்டு பிரதமரை வரவேற்கும் அணிவகுப்புக்கு அனுப்புவார்களா? ஜே.ஆர் திட்டமிட்டு இந்தியாவையும் ராஜீவையும் அவமானப்படுத்திவிட்டார் என அவர்கள் கறுவிக் கொண்டார்கள். புலிகளையும் ஜே.வி.பியையும் அடக்குவதோடு ஜே.ஆர்க்கும் அவரைப்போன்ற சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இந்தியாவின் பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரத்தை கையாள்வதற்கு இந்தியாவின் பார்ப்பணிய மூளையான றோவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.
றோ அதிகாரிகள் தெற்காசிய வரைபடத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக்கு அண்மையில் இருந்த சின்னஞ்சிறு நாடான மாலைதீவு, அவர்கள் கண்களில் பட்டது. காஸ்மீரையும், சிக்கின்மையையும் தந்திரமாக தங்கள் நாட்டில் மாநிலங்களாக ஆக்கிக் கொண்ட தாங்கள் நேபாளத்தையும், பூட்டானையும் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி இராணுவ மேலான்மைக்கு கீழ் கொண்டுவந்த தாங்கள் இந்தச் சின்னஞ்சிறு மாலைதீவை இதுவரை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
மாலைதீவிலே ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அப்தும் ஹயும் இந்தியாவுடன் அவ்வளவு தொடர்பில்லாதவர். ஆனால் பாகிஸ்தானுடன் நெருக்கமானவர். அதனால் அவரை இந்தியாவின் பக்கம் எடுப்பது பாகிஸ்தானை சீண்டுவதாக ஆகிவிடும்.
அதைவிட அவரின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை இந்திய சார்பாளர்களாக்கி பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் மாலைதீவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என றோ நினைத்தது. அது அவர்களிற்கு பெரிய சிரமமாக இருக்கவில்லை. அப்தும் ஹயும் ஏற்கனவே ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்றின் மூலமே பதவிக்கு வந்தவர்.
அவரால் பதவி இறக்கப்பட்ட அவரின் எதிரிகளில் இருவர் சிங்கப்பூரிலும் ஒருவர் கொழும்பிலும் இருந்தனர். றோ அதிகாரிகள் சிங்கப்பூருக்கும் கொழும்புக்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மாலைதீவில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சாத்தியமில்லை என்பதும் அப்தும் ஹயும் எதிரிகள், இந்தியசார்பாளர்கள் என்பதும் தெரிந்தாலே இஸ்லாமியத்தின் எதிரிகள் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு என்பதும் றோவுக்கு புரிந்தது.
எனவே இராணுவச் சதி புரட்சி ஒன்றின் மூலம் கயோமின் ஆட்சியைக் கவிழ்ப்பதே சிறந்ததும் சுலபமானதுமான வழி என்று அவர்கள் தீர்மானித்தனர். முன்னூறு பேர்வரை இல்லாத மாலைதீவு பாதுகாப்புப படையை முறியடிப்பது பெரிய கஸ்ரமான விடயமல்ல என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் யாரை வைத்து இந்தச் காரியத்தை சாதிப்பது என்பது அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. மாலைதீவு இளைஞர்களை பயன்படுத்தினால் அவர்களுக்குப் புதிதாக பயிற்சி அளிக்க வேண்டும்.
வெறும் பயிற்சி மட்டும் போதாது யுத்த காலத்தில் நின்ற அனுபவமும், தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த விடயம் இன்றைக்கும் வெளியே வராமல் பாதுகாக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாலைதீவு இளைஞர்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே ஈழப் போராளிகளையே இதற்கு பயன்படுத்த வேண்டும் என்று றோ எண்ணியது யாரைப் பயன்படுத்துவது?
இதுவும் றோவுக்கு ஒரு சிக்கலான விடயமாக இருந்தது. நுPசுடுகுஇ நுNனுடுகுஇ வுநுடுழு இந்த மூன்றும் தங்களுடன் ஒட்டிக் கொண்டு இருப்பவை. இந்திய இராணுவத் துணையோடு இயங்குபவை இவர்களைப் பயன்படுத்தினால் நிச்சயமாக நாங்கள் தான் இந்தப்புரட்சிக்கு பின்னணியில் நின்றவர்கள் என்று பகிரங்கமாகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சர்வதேச நெருக்கடியைக் கொண்டு வந்துவிடும் என்று அவர்களுக்குத் தோன்றியது. எனவே, இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டிராத ஒரு குழுவை அவர்கள் தேடினார்கள்.
அப்போது புளொட் குழு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பும், பேச்சுவார்த்தையும் வைத்துக் கொண்டாலும் வெளியில் அது மற்றைய இயக்கங்களைப் போல் இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருக்காது தனித்து நின்றது. அதே சமயம் புலிகளின் எதிரியாகவும் அது விளங்கியது. எனவே இந்தக்காரியத்திற்கு புளொட்டைத் தான் பயன்படுத்த வேண்டும் என றோ தீர்மானித்தது.
புளொட்டினுடைய நிரந்தர இந்தியத் தொடர்பாளரான “பாலபுத்தர்” முலம் உமாமகேஸ்வரனுக்கு தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது. என்ன காரணத்துக்காக என்பது “பாலபுத்தரிடம்” சொல்லவில்லை புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதற்கு ஆயுதம் வழங்கவே உமாமகேஸ்வரனை அழைப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். றோவிடம் இருந்த தகவல் வந்திருந்த சமயத்தில் உமாமகேஸ்வரனின் சகாக்கள் ஜோதீஸ்வரன் (கண்ணன்), வாசுதேவா ஆகியோர் புலிகளால் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனால் பல தடைவ தன்னை நம்பவைத்து மோசம் செய்த றோவின் மீது ஆத்திரம் கொண்டீருந்த உமாமகேஸ்வரன் அதை மறந்து றோவை சந்திக்க ஒப்புக்கொண்டார். 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி வவுனியா செட்டிகுளத்தில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் இந்திய இராணுவத்தின் விசேட விமானத்தின்மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
இந்திய இராணுவ விமானப்படை அதிகாரிக்கோ அல்லது விமானிக்கோ கூட தங்களால் அழைத்துச் செல்லப்படுபவர் உமாமகேஸ்வரன் என்று தெரியாது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் உமாமகேஸ்வரன்; றோ இரகசியச் சந்திப்பு நடந்தது. அந்தச்சந்திப்பில் மாலைதீவின் அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. தாங்கள் சொல்கின்ற தாக்குதலைச் செய்ய வேண்டும் என்றும் அதற்குப் பணமும், ஆயுதமும் புளொட்டுக்குத் தருவதாக றோ சொன்னது. புலிகளுக்கெதிரான தாக்குதலாகவே அது இருக்கும் என உமாமகேஸ்வரன் நினைத்துக் கொண்டார்.
அன்றைய சந்திப்பின் போது றோ 50லட்சம் ரூபா இந்தியப் பணத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்தது. அடுத்த சந்திப்பின் போது ஆயுதம் வழங்கப்படும் என்றும் அதற்கான இடத்தையும், திகதியையும் பின்பு அறிவிப்பதாகச் சொல்லி மீண்டும் இந்திய இராணுவ விமானத்திலேயே உமாமகேஸ்வரனை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். ஊருக்கு வந்த உமாமகேஸ்வரன் றோவின் பணத்தை கற்பிட்டியில் மாசிக் கருவாட்டுத் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய கோழிப்பண்ணை ஒன்றை அமைக்கவும் முதலீடு செய்துவிட்டு றோவின் அடுத்த சந்திப்பிற்காக காத்திருந்தார்.
தொடரும்ஸ

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies