வனவிலங்கு பூங்காவில் 9 வயது சிறுமியை முட்டி தூக்கி வீசிய காட்டெருமை VIDEO
26 Jul,2019
அமெரிக்காவில் 9 வயது சிறுமி ஒருவர் வனவிலங்கு பூங்காவில் காட்டெருமையை பார்த்துக் கொண்டிருந்த போது, குறித்த சிறுமியை காட்டெருமை முட்டி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் தான் இந்த பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை குறித்த பூங்காவில் வனவிலங்குகளை பார்ப்பதற்கு கூட்டம் அதிகமாக வந்திருந்தது.
அப்போது அங்கு திடீரென ஒரு காட்டெருமை வந்துள்ளது அதை பலரும் தங்களது கேமராவில் போட்டோ எடுத்து உள்ளனர்.
இதற்கிடையில், திடீரென காட்டெருமை அங்கிருந்து கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. இதனால் பதற்றமடைந்த பார்வையாளர்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர்.
அப்போது, 9 வயது சிறுமி ஒருவர் அங்கிருந்த காட்டெருமை பார்த்த வண்ணம் நின்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காட்டெருமை அந்த சிறுமியை முட்டி தூக்கி வீசியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த சிறுமியை உடனே மருத்துவ குழுவினர் வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு குறித்த சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்