ருத்ராட்சம் மாலையை எப்போதெல்லாம் அணிய வேண்டாம்
21 Jul,2019
ருத்ராட்சை மாலையை பலர் அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்பது சிவனுக்கு உகந்த ஒன்று ஆகும். ஆனால் இந்த ருத்ராட்சம் மாலையை எப்போதெல்லாம் அணிய வேண்டாம் என்பது தெரிந்து கொண்டு அந்தந்த தருணங்களில் அணியாமல் இருந்தால் உங்களுக்கும் நன்மை இந்த சமூகத்திற்கும் நன்மை.
ருத்ராட்சம் அணியக்கூடாத காலங்கள்
உறங்கும்போது ருத்ராட்சம் அணிய வேண்டாம்
பெண்கள் வீட்டைவிட்டு விலகியிருக்கும் நாட்களில் அணிய வேண்டாம்
மாமிசம் உண்ணும்போது அணிய வேண்டாம்.
மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அணிய வேண்டாம்
மருத்துவமனைக்குச் செல்லும் காலம் அணிய வேண்டாம்
திருமணங்களுக்கு செல்லும்போது அணிய வேண்டாம்
பிறந்த நாள் திருமண நாள் போன்ற வீட்டு விழா நடக்கும் காலம் அணிய வேண்டாம்
மயானபூமி அமரர் ஊர்தி ஊர்வலம் முதலிய இடங்களுக்கு செல்ல வேண்டிய காலத்தில் அணிய வேண்டாம்