இன்றைய உலகின் உலக யுத்தம்

21 Jun,2019
 

 


இந்த நூற்றாண்டில் எங்கோ ஒரு நாட்க  யுத்தம் டிற்குள் ( உள்நாட்டு) சண்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது ( உதாரணம் யேமன்) . நாடுகளுக்கு இடையான சண்டை பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. காரணம், பல பலமான நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டு இருப்பதே அல்லது அந்த நாடுகள் தமது ஆதரவை தெரிவிப்பதுதான் ( வெனிசுவேலா இல்லை சிரியா) . 
ஆனால், உலகின் மிகப்பெரிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருப்பது, பொருளாதார சண்டை; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில்.
சீனாவின் சடுதியான பொருளாதார வளர்ச்சிற்கு காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கொளகை - மலிவான தொழில்திறன். ஆனால், சீனா கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்காவையும் வளர்த்து தன்னையும் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டது. 
அமெரிக்காவின் பலம் அதன் மத்திய வங்கி ( US Federal Reserve) . அது தும்மினால் உலகமே காய்ச்சல் பிடித்து தவிக்கும். அதன் வட்டி வீதம் அதன் மாற்றம் உலக பொருளாதாரத்தையே தன்னுள் வைத்துள்ளது. அவ்வாறான  வங்கி விற்கும் பண முறிவுகளை ( US Treasury) அது பொருளாதாரா ரீதியாக 2009இல் தடுமாறிய பொழுது சீன நாடு அவற்றை வாங்கியது. சீனாவின் அறிவு சார்ந்த இந்த நடவடிக்கையை எடுத்தது - சீன மத்திய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் மூலம் பல த்ரிலியன்கள் அமெரிக்க டாலர்கள் பெறுமதியை சீன அரசு கொண்டுள்ளது. 
 
 
ஏற்றுமதி - இறக்குமதியில் சமநிலுவை இல்லை என்பதே இந்த சண்டையின் அடிப்படை வாதம் என கூறப்பட்டாலும், சீனாவின் வளர்ச்சி வீதமே ஒரு முக்கிய பயமாக அமெரிக்காவிற்கு உள்ளது.
இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ச்சி ஒரு பலத்த பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் யாரால் அதிக காலம் தாக்குப்பிடிக்கலாம் என்பதில் தமது பலத்தை பிரயோகித்து வருகின்றனர். சீனா ஆசியாவிலும், ஆப்பிக்காவிலும் தனது பொருளாதாரா வலுவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகின்றது. அமெரிக்கா, வழமையான உறவு நாடுகளுடன் தொடர்ந்தும் உறவை பேணுவதுடன் சீனாவிற்கு மாற்று நாடுகளை தேடி வளர்த்து வருகின்றது. 
வியட்னாம்: ஒபாமாவின் பிரயாணம் ஊடாக இந்த உறவை வளர்த்து வருகின்றது. ஆனால், தென் சீன கடல் பிரச்சனையில் சீனாவின் முறுகல் நிலையம் உண்டு. 
மீண்டும் ட்ரம்ப் வென்றால், இந்த அமெரிக்க - சீன 'உறவு ' அடுத்த பரிமாணத்தை பெறலாம். 
வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகளுடனான உறவு மோசமடைந்ததை அடுத்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக கிழக்கத்திய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மேற்குலகத்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இரு நாட்டு உறவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இன்னும் நெருக்கமாக்கியது என்கிறார்கள் வல்லுநர்கள்.
இரு நாடுகள் இடையேயான வணிகம், 2018ம் ஆண்டு 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பர்
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் காணப்படும் நிலையில், ஜி20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வருகின்றது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக அளவில் வரி விதித்து வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஜி 20 மாநாடு ஜப்பானில் இந்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அதேநேரம் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றால், புது வரிவிதிப்பு அமுல்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இருதரப்பும் இவ்வாறு முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு
பட்டுப்பாதை பிறந்தது எப்படி?
அமெரிக்காவின் பிரெளன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின் எழுதியிருக்கும் புத்தகம் "பட்டுப் பாதையின் கண்டுபிடிப்பு" எனப் பொருள்படும் ''தி இன்வெண்ஷன் ஆஃப் சில்க் ரோட்.''
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது பட்டுப் பாதை. அமெரிக்கா, உலக மேலாதிக்க வர்த்தக சக்தியாக உருவெடுத்தபின், 1500ஆம் ஆண்டு வாக்கில், பட்டுப்பாதை பட்டுப்போனது.
சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?
இருந்தாலும், அதன்பிறகு, ஜெர்மனி 1877- இல், ஃபெர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் என்ற புவியியலாளரை சீனாவுக்கு அனுப்பியது.
சீனாவில் இருக்கும் நிலக்கரி இருப்பு மற்றும் அதை ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதுதான் அவருக்கு பணிக்கப்பட்ட வேலை.
 
 
 
ஐரோப்பாவுக்கு மாற்று
சீனாவில், பட்டுச்சாலை என்ற பதத்தை சில கல்வி சஞ்சிகைகள் அவ்வப்போது பயன்படுத்தி வந்தன.
அதன்பிறகு, 1950களில், தங்களுடைய அண்டை நாட்டினர் உடனான உரையாடல்களில் சீனர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
மேற்கத்திய சக்திகளுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டுப் பாதைத் திட்டம் சீனாவுக்கு உதவியது.
சீனாவின் ஆசியக் கனவு
அடுத்த நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக நாம் எடுத்துக் கொள்ளும் புத்தகம் 'சீனாவின் ஆசியக் கனவு' (China's Asian Dream). ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கும் கஜகஸ்தானின் அல்மட்டியின் மாணவரான டாம் மில்லெர் எழுதிய புத்தகம் அது.
பட்டுப் பாதையில் சீனப் படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதை யாரும் பார்ப்பது சாத்தியமற்றது என்று டாம் மில்லெர் கூறுகிறார்.
படத்தின் காப்புரிமை Getty Images Image caption 1254 - 1324 இடையே பட்டுப்பாதை வழியாக மார்க்கோ போலோ சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதையின் வரைபடம்
அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. ஆனால் இதுபற்றி டாம் மில்லெர் உறுதி கூறவில்லை. அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, மற்ற நாடுகளுக்கு சீனா பணம் கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கத்தானே பார்க்கும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
சீனாவின் தென்பகுதியில் இருக்கும் மலைப்பிராந்திய நாடான லாவோஸில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் கூட, அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பங்களிப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
லாவோஸ் நாட்டு அரசுடன் இணைந்து, அந்த நாட்டின் ஊடாக செல்லும் ரயில் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஏழு பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது லாவோஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி. லாவோஸ் இதை எப்படி திருப்பச் செலுத்தும்?
மிக மிக மெதுவாக?
தனது இயற்கை வளங்களிலிருந்து மெதுவாக திருப்பச் செலுத்த தொடங்குவதே நடைமுறை வழக்கம். எனவே, இந்த ரயில் திட்டம், லாவோஸில் இருக்கும் விலை மதிப்புமிக்க இயற்கை வளங்களை சீனாவிற்கு கொண்டுச் செல்லும் ஒரு 'கன்வேயர் பெல்ட்' ஆக பயன்படும்.
இந்தக் கோணத்தில் ஆராயும் டாம் மில்லெர், சீனாவின் முதலீட்டால் பிற நாடுகள் உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை பாதிப்பை சந்திக்க நேரிடும் என்கிறார்.
அண்டை நாடுகளில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும் சீனா, துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள் மூலம் அவற்றை தன்னுடன் இணைத்துக்கொள்ளும்.
அடிப்படையில், பட்டவர்த்தனமான லஞ்சம் என்றே இதனைச் சொல்லலாம்.
தொடரும் "வரி" போரால், ஆப்பிள் நிறுவனம் பொருட்களின் உற்பத்தியின் ஒரு பகுதியை சீனாவில் இருந்து வேறு ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகின்றது. 
அத்துடன், தொடரும் சீன-அமெரிக்க வர்த்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என கூறியுள்ளது. 
அதேவேளை, அமெரிக்க அதிபர் சீன அதிபரை இந்த மாதம் நடக்க இருக்கும் ஜீ 20 மாநாட்டில் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.
 

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies