கப் செர்ரி கேக்

01 Jun,2019
 

 

 
கோதுமை மாவு: 110 கிராம்,
முட்டை: 2 (பெரியது),
சர்க்கரை: 100 கிராம் (பொடித்தது),
வெண்ணெய்:75 கிராம்,(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்)
பேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்: 1/2 டீஸ்பூன்,
டூட்டி ஃபுரூட்டி: 25 கிராம்(பல வண்ணங்கள்),
செர்ரி: 25 கிராம்(இரண்டாக நறுக்கவும்)(பழம் அல்ல).
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை போட்டு எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு கலக்கவும்.பிறகு அதில் வெண்ணெய், எசென்ஸ், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.பின் ஹான்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பின் அதில் டூட்டி ஃபுரூட்டி மற்றும் செர்ரியை சேர்த்து அந்த கலவையை பிரித்து சிலிக்கான் மோலின் மேல் பேப்பர் கப்பை வைத்து அதில் கலவையை நிரப்பவும்.பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.
 
 
 
சாக்லெட் சிப்ஸ் கப் கேக்

கோதுமை மாவு: 125 கிராம்,
சர்க்கரை: 100 கிராம் (பொடித்தது),
முட்டை: 1,
பேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன்,
உப்பு: 1 சிட்டிகை,
பால்: 100 மில்லி,
ஆயில்: 50 மில்லி,
சாக்லெட் சிப்ஸ்: 50 கிராம்.
அலங்கரிக்க:-(வேகவைக்கும் முன்)
சாக்லெட் சிப்ஸ்: 1 கைப்பிடி,
நாட்டு சர்க்கரை: 1 டீஸ்பூன்,
சர்க்கரை: 1 டீஸ்பூன்,
இந்த பொருட்களை எல்லாம் கலந்து மேலே தூவவும்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், சாக்லெட் சிப்ஸ்  ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். பிறகு அதில் பால் மற்றும் ஆயில் ஊற்றி கலந்து பிறகு அதில் மேலே கலந்து வைத்துள்ள பொருட்களை ஹான்ட் பீட்டர் கொண்டு கலந்து அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்

 

ஈஸி ஆரஞ்ச் ஸ்பான்ச் கப் கேக்
 
கோதுமை மாவு:150 கிராம்,
வெண்ணெய்:150 கிராம்,
முட்டை:3 (அடித்து தனியாக வைக்கவும்),
பேக்கிங் பவுடர்:1 டீஸ்பூன்,
சர்க்கரை:150 கிராம் (பொடித்தது),
ஆரஞ்சு:1 (பெரியது தோல் துருவியது)
ஆரஞ்சு ஜூஸ்:1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்.பின் அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும். கடைசியாக அதில் துருவிய ஆரஞ்சு தோல்  மற்றும் ஆரஞ்சு ஜூசை கலந்து அந்த கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். ஆறிய பின் பட்டர் கிரீம் டாப்பிங் போட்டு அதன் மேல் ஆரஞ்சு தோல் மெல்லிசாக  நறுக்கியதை போட்டு பரிமாறவும்

 

லெமன் ட்ரிசில் கப் கேக்

கோதுமை மாவு: 150 கிராம்,
சர்க்கரை: 150 கிராம் (பொடித்தது),
வெண்ணெய்: 150 கிராம்,
பெரிய எலுமிச்சம்பழம் துருவியது: ஒரு டேபிள்ஸ்பூன்(தோல் தடிமனாக உள்ள எலுமிச்சை),
எலுமிச்சை சாறு:  டீஸ்பூன்,
முட்டை: 3,
பேக்கிங் பவுடர்: 1/2 டீஸ்பூன்.
மேலே அலங்கரிக்க..
பட்டர் க்ரீம்: ஒரு கப்,
மஞ்சள் ஃபுட் கலர்: சிறு துளிகள்,
எலுமிச்சை சாறு:  1/2 டீஸ்பூன் (மூன்றையும் கலந்து கேக்கின் மேல் போடவும்).
செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் அதில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து சேர்த்து கலக்கவும். பின் அதில் லெமன் சாறு, எலுமிச்சை துருவியது ஆகிய வற்றை போட்டு நன்கு கலக்கி பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை அதில் போட்டு கலக்கவும். பிறகு இந்த கலவை யை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.ஆறிய பின் பட்டர் க்ரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்

 

ஓரியோ கப் கேக்
 
கோதுமை மாவு:125 கிராம்,
Coco Powder: 30 கிராம் (கோகோ பவுடர்),
பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா:1/4 டீஸ்பூன்,
உப்பு:1/4 டீஸ்பூன்,
நாட்டு சர்க்கரை: 100 கிராம்,
ஆயில்:80 மில்லி,
மோர்:120 மில்லி,
முட்டை:(1 பெரியது),
ஓரியோ தூள்:4 டேபிள் ஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர்:1 டீஸ்பூன், (சுடு தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
சுடுதண்ணீர்:120ml,
வெனிலா எசன்ஸ்:1 டீஸ்பூன்
மேலே அலங்கரிக்க
விப்பிங் கிரீம் - 1,ஓரியோ பிஸ்கட் தூள் 1 (6 to 8 பிஸ்கட் ,விப்பிங் கிரீம் செய்த பிறகு அதில் ஓரியோ தூள் சேர்த்து கேக்கின் மேல் தடவி அதன் மேல் முழு (அ) அரை ஓரியோ பிஸ்கட் வைத்து கொடுக்கவும்.

 

 

 

காபி கப் கேக்
 
கோதுமை மாவு:150 கிராம்,
கோகோ பவுடர்:25 கிராம்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர்:1
டேபிள் ஸ்பூன் (சுடு தண்ணீரில் ஊற்றி கரைத்து வைக்கவும்),
பேக்கிங் பவுடர்:1 டீஸ்பூன்,
முட்டை:3 (பெரியது),
சர்க்கரை:150 கிராம்,
வெண்ணெய்: 150 கிராம்,
பால்:100 மில்லி.
மேலே அலங்கரிக்க: (வெந்தபின்)
விப்பிங் கிரீமில் கொஞ்சம் காபி எசென்ஸை கலந்து கேக்கின் மேல் தடவி காபி பவுடரை தூவவும்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டையை சேர்த்து கலக்கவும்.பின்பு காபி எசென்ஸ் பாலில் போட்டு நன்கு கலக்கவும். பின்னர் அதில் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பின் இந்த கலவையை கப்பில் போட்டு வேக வைத்து எடுத்து ஆற வைத்து அலங்கரிக்கவும்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies