சுமார் 5000 ஆண்டுகள் பழமையான பியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 May,2019
மண்ணில் புதைந்திருந்த மிகப்பழமையான பியரை இஸ்ரேல் தொல்லியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய கால மண்பாண்டத்தில் கிடைத்த 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈஸ்டுகளால் அருந்தத் தகுந்த பியர் மற்றும் மேட் பானங்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தயாரித்து அசத்தியுள்ளனர்.
இஸ்ரேல் எல்லைக்குள் அமைந்துள்ள பண்டைய எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஜீடானை சேர்ந்த கிபி 3000 இருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட மண் பாண்டங்களில் உள்ள நுண் துளைகளில் இருந்த ஈஸ்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த ஈஸ்ட்டுகளைக் கொண்டு பண்டைய கால சுவையை அறிந்துகொள்ளும் நோக்கில் நவீன செய்முறைப்படி பியர் மற்றும் மேட் பானங்களை இஸ்ரேல் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
பியரானது எகிப்து மற்றும் மெசபடோமிய மக்களின் தினசரி பிரதான உணவாக இருந்திருக்கிறது.
இரும்பு பியர் , நண்பனின் பியர் , பாதுகாவலனின் பியர் என ஆரம்பகால எகிப்திய நூல்களில் பல வகையான பியர் வகைகள் பற்றிய குறிப்புகளை காண முடிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்