தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் - 200 கிராம்,
சிறிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 150 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 80 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - 1 கொத்து,
கடுகு - 5 கிராம்,
வெந்தயம் - 5 கிராம்,
மிளகு 10 - கிராம்,
சீரகம் - 5 கிராம்,
தேங்காய் விழுது - 100 கிராம்,
எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
கலந்த மிளகாய்த்தூள் - 20 கிராம்,
மஞ்சள் தூள் - 5 கிராம்,
தனி மிளகாய்த்தூள் - 10 கிராம்,
புளி - 15 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பெரிய வெங்காயம் - 1.
செய்முறை
மிளகு, சீரகம், சின்ன வெங்காயத்தை எண்ணையில் வதக்கி பிறகு அரைத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் கடுகு, வெந்தயம், சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை ேசர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கலந்த மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மசிந்து வரவேண்டும். பிறகு புளி தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவேண்டும். பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மூடிப்போட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும். மீன் அந்த சூட்டிலேயே வெந்திடும். பிறகு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அலங்கரிக்கவும்.
காசிமேடு மீன் குழம்பு
என்னென்ன தேவை?
மீன் -1/2கிலோ ,
சின்ன வெங்காயம் - 2,
தக்காளி - 5,
பச்சை மிளகாய் - 5,
தேங்காய் – 1/2மூடி,
இவைகளை அரைத்துக் கொள்ளவும்.
சோம்பு - , சீரகம் – 1/2ஸ்பூன்,
க.எண்ணெய் – 100மிலி,
கடுகு - , சீரகத்தூள் - ,
மிளகுத்தூள் - 1/2ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது நேரங்கழித்து மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும். பின்பு மீனை சேர்த்து வெந்தவுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
காரைக்குடி மீன் மசாலா
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிது,
கடலெண்ணெய் - 100 கிராம்,
வெந்தயம் - தேவைக்கேற்ப,
சோம்பு - ேதவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் ,
கல் உப்பு - தேவைக்கேற்ப,
புளி - 1 கப்,
வஞ்சிர மீன் - 3 துண்டு.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். கடலெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த உடன் வெந்தயம், சோம்பு சேர்க்கவும். பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். சிவந்தவுடன் நறுக்கியத் தக்காளியை சேர்த்து கிளறவும். நன்றாக வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் போட்டுக் கிளறவும். நன்றாகக் கொதித்தவுடன் மீன் துண்டை அதில் போடவும். போட்டு சிறிது நேரம் வற்றிய பிறகு இறக்கி வைக்கவும். சிறிது கொத்தமல்லித் தழை போடவும்.
காரைக்குடி அயிரை மீன் குழம்பு
அயிரை மீன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 150 கிராம் , பச்சை மிளகாய் - 3 , தக்காளி - 2, தேங்காய்ப் பால் - 1 கப், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் , சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன் , புளி - 1 கப் , உப்பு - தேவையான அளவு, வெந்தயம், சோம்பு - 1/2 ஸ்பூன், கடலெண்ணை - 100 மிலி, கறிவேப்பிலை - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஏறிய பின்பு, வெந்தயம், சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்பு தக்காளி சேர்க்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் போட்டு கிளறவும். பின்பு புளி கரைசலை ஊற்றவும். தேவையான உப்பைப் போட்டு கொதித்த பின்பு தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும். பின்பு நன்றாக கழுவி வைத்த அயிரை மீனை அதில் போடவும். இரண்டு கொதியில் அதை இறக்கி வைக்கவும். கொத்தமல்லியை தூவவும்
அப்பல்லோ ஃபிஷ்
பூண்டு - 5 பல்,
போன்லெஸ் மீன் - 1 கிலோ,
பச்சை மிளகாய் - 5,
தயிர் - 5 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலை,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
முதலில் மீன்களை போன்லெஸ் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு துண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின்பு பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்பு மல்லித்தூள் ஒரு ஸ்பூன், காபித்தூள் ஒரு சிட்டிகை பிறகு தயிர் ஊற்றவும். பிறகு வேக வைத்த மீன் துண்டுகளை போட்டு எடுக்கவும். அதன்பின் மல்லித்தழை போட்டு எடுக்கவும். ரெடி.