மதுரை மீனாட்சியம்மன் பற்றி நீங்கள் அறிந்திராத 35 அபூர்வத் தகவல்கள்!

17 Apr,2019
 

 


 

மதுரை மாநகரின் அடையாளம் சித்திரைத் திருவிழாதான். வருடம் முழுவதும் மீனாட்சிக்குத் திருவிழாக்காலம்தான் என்றாலும், சித்திரைத் திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. $
அப்போதுதான் மதுரை அரசியின் பட்டாபிஷேகமும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். மதுரையின் பேரரசிக்கு மாண்பு சேர்க்கும் விதமாக நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 35 அபூர்வ தகவல்கள்.
மதுரை மாநகரின் அடையாளம் சித்திரைத் திருவிழாதான். வருடம் முழுவதும் மீனாட்சிக்குத் திருவிழாக்காலம்தான் என்றாலும், சித்திரைத் திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.
அப்போதுதான் மதுரை அரசியின் பட்டாபிஷேகமும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். மதுரையின் பேரரசிக்கு மாண்பு சேர்க்கும் விதமாக நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 35 அபூர்வ தகவல்கள் உங்களுக்காகஸ
1. மீனாட்சியம்மனுக்கு 12 மாதங்களும் திருவிழாதான். ஓராண்டில் 274 நாள்கள் திருவிழா நடைபெறும்.
2. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவனை தரிசனம் செய்வது விசேஷமானது. சொக்கநாதப் பெருமான், ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதியுலாக்களில் மொத்தம் 16 முறை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார். சித்திரைத் திருவிழாவின்போது 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
3. சித்திரைத் திருவிழாவின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். வில்வ இலைகள் நிரம்பியிருந்த பகுதி, வில்வபுரம்; பின்னாளில் வில்லாபுரம் ஆகிவிட்டது.
பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் ஈசன், பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்பதால் இது பாவக்காய் மண்டபம் எனப் பெயர் பெற்றது.
முற்காலத்தில் இந்தப் பகுதியில் பாகற்காய்கள் அதிகம் விளைந்ததாகவும், இங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளிய இறைவனுக்கும் இறைவிக்கும் பாகற்காய்களைச் சமைத்து நைவேத்தியம் செய்ததாலும் இந்த மண்டபத்துக்கு ‘பாவக்காய் மண்டபம்’ என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
4. மதுரை மண்ணில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவின்போது நிகழ்த்திக் காட்டப்படும்.
5. திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை நாயக்கருக்கு, மண்டைச்சளி நோய் வருத்தியது. ஒருநாள் அவர் கனவில்  ‘மதுரைக்குப் போய் திருப்பணிகள் செய்’ என அசரீரி ஒலித்தது. அவ்வண்ணமே அவர் செய்தார். நோயும் நீங்கியது.
அதன்பின் அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். வைணவரான திருமலைநாயக்கர், சொக்கநாதர் மேலும் அன்னை மீனாட்சி மீதும் பக்தி கொண்டு செய்த திருப்பணிகள் ஏராளம். திருமலை நாயக்க மன்னரின் ஆளுகையில் மதுரை வந்த பிறகுதான், கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, ‘மதுரை திருப்பணி மாலை’ என்ற ஓலைச்சுவடி தெரிவிக்கிறது.
6. ‘மதுரைக் காஞ்சி’ எனும் சங்க இலக்கிய நூல், மீனாட்சியம்மன் கோயிலின் பிரமாண்டத்தையும் சுந்தரபாண்டிய மன்னர் காலத்தில் கிழக்குக் கோபுரம் கட்டப்பட்டதையும், கோயிலின் பெருமைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது.
7. நாயக்க மன்னர் காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில் தேரோட்டமும், மாசிமகத்தன்று ‘மீனாட்சி பட்டாபிஷேகமும்’ நடைபெறும் வழக்கம் இருந்தது.
8. மீனாட்சியம்மை, பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையைப் பட்டாபிஷேகத்தின்போது சூடிக்கொள்கிறார்.
9. அந்தக் காலத்தில் திருக்கல்யாணத்தை நடத்தி வந்த குலசேகரப்பாண்டியர், உக்கிரப்பாண்டியர் வழிவந்த பட்டர்கள்தான் இப்போதும் மீனாட்சி சுந்தரேசுவரரின் பிரதிநிதிகளாகத் திருமணத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
விழாவில், திக்விஜயத்தின்போது, மீனாட்சி சுந்தரேசுவரரின் பிரதிநிதிகளாக வேடம்பூண்டு, தெய்வங்களோடு வாகனங்களில் பவனிவருபவர்கள் இந்த இரண்டு வம்சாவழியினரின் ஆண் வாரிசுகள்தாம். திருவிழாக்கள் முழுக்க, இந்த இரு குழந்தைகளையும் தெய்வங்களாகவே பாவித்து ஏகபோக மரியாதைகளைச் செலுத்துவர், மதுரை மக்கள்.
10. திக்விஜயம் என்பது போர்புரிவதல்ல, எட்டுத் திசையில் உள்ளோரையும் அன்னை மீனாட்சி தன் அன்பினால் ஆட்கொள்ளும் நிகழ்வேயாகும்.
11. மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு வழிவழியாக மங்கலநாண் செய்து தரும் ஊர், திருமங்கலம். அன்னையின் கயல்விழிகளில் இடுவதற்கு மை கொண்டு தரும் ஊர், மையிட்டான்பட்டி.
12. திருக்கல்யாணத்தில் திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப் பெருமாளே , மீனாட்சியின் சகோதரராக வந்து அன்னையை சொக்கருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பார். ஆனால், புராணத்தின்படி, யுகப் பெருமாளாக வழங்கப்பெறும் மதுரை கூடலழகர் பெருமாள்தான். மீனாட்சிகோயிலிலும் புதுமண்டபத்திலும் உள்ள தாரைவார்க்கும் சிற்பங்களில் இருப்பவர், கூடலழகரே!
13. அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி நுழைவாயில்களுக்கு மத்தியில், பழைய திருக்கல்யாண மண்டபம் உள்ளது. மண்டபத்தின் பின்னால், வரையப்பட்டுள்ள ரகோளம், பூகோளம் என்ற நுணுக்கமான இரண்டு சித்திரங்களும் இன்றைய அறிவியல் சிந்தனைகளை, அந்த காலத்திலேயே வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.
திருக்கல்யாணம் காணவரும் கூட்டம் ஒவ்வோராண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், 1981-க்குப் பிறகு புதிய மண்டபம் கட்டப்பட்டது.
14. மற்ற ஊர்களிலும் திருக்கல்யாணத்துடன் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. ஆனால், மதுரையில் மட்டும்தான், அன்னை மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ந்த பிறகு திருக்கல்யாண வைபவம் நடந்தேறும். மதுரைநகர் ஆள்பவளைக் கரம்பிடிக்கக் கயிலாயநாதனே மணமகனாய் வந்த பெருமையைப் பேசுவது சித்திரைத் திருவிழா.
15. திருக்கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவும், திருக்கல்யாணத்தன்றும் சுமார் ஒரு லட்சம் பேர் ஆண்டுதோறும் கல்யாண விருந்தில் கலந்துகொள்கின்றனர்.
அதற்காக, மாட்டுத்தாவணிச் சந்தையே அன்றைய தினம், விருந்துப் பகுதி ஆகிவிடும். 600-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபடுவர்.
விருந்து அருந்தி, பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப மொய்யும் எழுதிச் செல்கிறார்கள். ஓர் ஊரே, திருமண வீடாக மாறிக் களைகட்டும் கண்கொள்ளா உற்சவம்.
16. திருக்கல்யாணம் என்றால் குண்டோதரன் இல்லாமலாஸ ‘குண்டோதரனுக்கு அன்னமிட்ட லீலை’ நிகழ்ந்த, மேலச் சித்திரைவீதியில் அன்னக்குழி மண்டபம், தற்போது ‘பிர்லா விஸ்ரம்’ எனும் பெயரில் தங்குமிடமாகச் செயல்பட்டு வருகின்றது.
17. திருக்கல்யாணத்தன்று, இரவு பூப்பல்லக்கில் அன்னையும், யானை வாகனத்தில் சுவாமியும்  எழுந்தருள்வர். கடந்த ஆண்டு, உபயதாரர் ஒருவர் வழங்கிய தங்க அம்பாரி யானை வாகனத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. சொக்கர், தங்க அம்பாரியில் அமர்ந்து காட்சிக் கொடுப்பது கண்கொள்ளாக் காட்சி.
18. ‘நகரும் கோயில்’ என்று தேர்கள் சிறப்புப் பெறுகின்றன. எல்லா உற்சவ நாள்களிலும் நடை திறக்கப்பட்டிருக்கிற மீனாட்சிக்கோயில், திருத்தேரோட்ட தினத்தன்று மட்டும் நடைசாத்தப்பட்டு இருக்கும்.
19. சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், அன்னை மீனாட்சி சிறிய தேரிலும் எழுந்தருள்வர். இரு தேர்களிலும் சிவபுராணமும் திருவிளையாடற்புராணமும் சிற்பங்களாய் இடம்பெற்றிருக்கும். ஓதுவார்கள், ‘சேந்தனார் திருப்பல்லாண்டு’ பாடியபடியே உடன் வருவர். அப்போதுதான் தேர்கள் நகரும் என்பது ஐதிகம்.
20. தங்கக் குதிரையில் ஆற்றில் இறங்கும் கள்ளழகரை, வெள்ளிக் குதிரையில் வீரராகவப் பெருமாள் வரவேற்பார்.
21. அந்த காலத்தில், நெற்குதிர் மண்டபங்கள்தான் கள்ளழகருக்காக அமைக்கப்பட்டன. ஒருமுறை அழகர் எழுந்தருளியிருந்த மண்டபத்தில் தீப்பற்றிவிட, எல்லோரும் அழகரை விட்டுவிட்டுத் தப்பித்தனர்.
அப்போது, வீரராகவப்பெருமாள் கோயிலின் அர்ச்சகர் அமுதவாணன், தன் உயிரைப் பொருட்படுத்தாது, அழகரை மீட்டுப் பாதுகாத்தார்.
அழகரைக் காத்த அந்த அர்ச்சகருக்கு உரிய மரியாதை செய்ய மன்னன் உத்தரவிட்டபோது, ‘எனக்கு வேண்டாம். நான் ஆராதிக்கும், என் பெருமாளுக்கு அந்த மரியாதையைத் தாருங்களேன்’ எனக் கேட்க, ஆற்றில் இறங்கும் அழகரை வெள்ளிக் குதிரையில் வந்து வீரராகவப்பெருமாள் வரவேற்று மரியாதைகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு இன்றுவரை நடைபெறுகின்றது.
22. சோழவந்தான் அருகே திருவேடகத்துக்கும் சமயநல்லூருக்கும் மத்தியில் இருக்கிற தேனூரில் உள்ள வைகையில்தான் காலங்காலமாக அழகர் ஆற்றில் இறங்குவார். வழியில் அழகருக்கு அலங்காரம் செய்யப்படும் ஊர், அலங்காரநல்லூர், பின்னாளில் அலங்காநல்லூர் ஆனது!
23. தான், ஆட்சி செய்துகொண்டிருக்கும் மதுரைக்கு அழகர் எழுந்தருள வேண்டும் என விரும்பிய திருமலை நாயக்கர், அழகர் மலையிலிருந்து – மதுரைக்குச் சாலை அமைத்துக்கொடுத்தார்.
24. மண்சாலைகளில் புழுதி பறக்காமலிருக்கத் தண்ணீர் தெளிக்கும் மரபு இருந்தது. அதுவே, இப்போது வரையிலும் தோற்பைத் துருத்தித் தண்ணீரை பீய்ச்சும் சடங்காக மாறித் தொடர்ந்து வருகின்றது.
25. அழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர், கள்ளழகர் வேடம் பூண்ட பக்தர்கள் புடைசூழப் புறப்படுவார்.
கள்ளர் கொண்டையிட்டு , கொண்டையில் குத்தீட்டி சொருகி, கரங்களில் வளைதடி, வளரித்தடி மற்றும் சாட்டைக் கம்பு ஆகியன ஏந்தி, காதுகளில் கல்பதித்த வளையத்துடன்கூடிய கடுக்கனும் அணிந்து, கறுப்பு வண்ண ஆடையோடு பக்தர்கள் ‘கள்ளர்’ வேடத்தில், அழகரோடு மெய்சிலிர்க்கப் புறப்படுவர்.
26. மதுரைக்கு வரும்வழியில், பழைய காலத்துக் கல் மண்டபங்கள் உட்பட,  தற்போது, வணிகர்கள், பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டபங்கள் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அழகருக்கு மண்டகப்படிகள் அமைக்கப்படுகின்றன!
27. மன்னர் காலத்தில் அழகருக்கும் கோயிலுக்கும் பாதுகாவலாயிருந்தது, வெள்ளியங்குன்றம் ஜமீன் வகையறா. அதை நினைவுகூரும் வகையில் வருடந்தோறும் நடக்கின்ற உற்சவங்களில், கோயில் சார்பாக உற்வசமூர்த்தி முன்னிலையில் ஜமீனுக்குப் பரிவட்டம் கட்டி மாலையணிவித்து முதல்மரியாதை செய்யப்படுவது இன்றும் தொடர்கிறது.
28. ‘சர்க்கரை தீபம், சத்துரு நாசம்!’ என்பார்கள். கள்ளழகரைச் சர்க்கரை தீபமேற்றி வழிபடுகின்றனர். நாட்டுச் சர்க்கரையையோ, வெல்லத்தையோ கடலைப்பருப்பு உள்ளிட்ட பொருள்களோடு கலந்து கிண்ணம், தூக்குச்சட்டி என எதிலேனும் இட்டு வாய்விளிம்பில் வாழைஇலை கட்டிச் சூடம் ஏற்றி, அல்லது மாவிளக்குப் போட்டு வழிபடுவர். அப்படி வழிபாடு செய்து பக்தர்களுக்குப் பரிமாறப்படுகின்ற அந்த மாவுக்கும் சர்க்கரை இடுபொருள்களுக்கும் தெய்விக ருசி வாய்த்திருக்கும்
29. அழகர்மலையின் உற்சவமூர்த்தியான கள்ளழகர் ‘அபரஞ்சி’ என்ற ஒருவகை தங்கத்தில் ஜொலிக்கிறார். அழகர்மலையின் நூபுரகங்கை தீர்த்தம் தவிர வேறு தீர்த்தங்களில் அபிஷேகம் செய்தால் அவர்மேனி கறுத்துவிடுமாம். திருவனந்தபுரத்தையடுத்து, அழகர்கோயிலில்தான் அபரஞ்சி தங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
30. திருவிழாவில், அழகர், தங்கப்பல்லக்கு, தங்கக் குதிரை, கருடன், சேஷ வாகனம், கனக தண்டியல், பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் எழுந்தருளுவார். இடையே, தசாவதாரம் முடித்து வாகனங்களின்றி, மோகினியவதாரத்தில் ராமராயர் மண்டகப்படி பகுதிகளில் வலம்வருவார். அழகரின் வாகனங்களுக்குப் பாதுகாவலர், தல்லாகுளம் சப்பரத்தடியான்!
31. தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயிலின் மூலவர், சப்பரத்தடியான். இங்கே பிரம்மன், விஷ்ணு, சிவன் மூவரும் அருள் பாலிக்கின்றனர். குங்குமம், சந்தனம், விபூதி மூன்றும் இங்கு பிரசாதமாக வழங்கப்படும். ஒருகாலத்தில் இங்கு அமைக்கப்படும் ஆயிரம்பொன் சப்பரத்தில் ஏறி ஆசிவழங்கினார் அழகர்.
தற்போது சம்பிரதாயமாகச் சப்பரம் அமைக்கப்படுகிறது. சப்பரத்தடியான், அழகரின் வாகனங்களின் காவலர் என்பதால், பக்தர்கள் தங்களது புதிய வாகனங்களையும் இங்கு வைத்துப் பூஜை செய்கின்றனர்.
32. திருமலைநாயக்க மன்னர், கள்ளழகருக்கு மதுரையில் ஒரு பெரிய தேரைச் செய்து தர விரும்பினார். ஆனால், அழகர்கோயிலில் ஏற்கெனவே தேர் இருப்பதாலும், அங்கு மற்றுமொரு தேர் செய்வது ஆகம விதிக்கு முரணானது என்பதாலும், தேர் போன்ற அமைப்பிலான சப்பரத்தை அழகருக்குச் செய்துகொடுத்தார்.
சப்பரத்தை உருவாக்கியவருக்கு ஆயிரம்பொன்னை அள்ளிக் கொடுத்தார். எனவே, அது ‘ஆயிரம்பொன் சப்பரம்’ எனப் பெயர் பெற்றது.
33. மதுரைக்குள் வரும்போது அழகரை , “வாராருஸவாராரு..அழகர் வாராரு” என்று வரவேற்கும் மதுரை மக்கள், திருவிழா முடிந்து, அழகர்மலை நோக்கிப் புறப்படும் அழகரின் பிரிவுத் துயர் தாங்காது அழுதே விடுகின்றனர். இந்த நிகழ்வின்போது, “போறார் அழகர்.. போறாரே போறார்ஸ” என்ற வர்ணனையும் பாடப்படுகிறது.
34. கள்ளழகர் ஊர்வலத்தில் வருகின்ற உண்டியல்கள் மொத்தம் 26. அதில், 8 மாட்டுவண்டி உண்டியல், 18 கைவண்டி உண்டியல்.
35. விரதமிருந்து அழகரைச் சுமக்கும் சீர்பாதம் தாங்கிகள் மொத்தம் 100 பேர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies