ஒரு பூர்வீகக்குடி இனம் அழிந்த துயரக் கதை இது

17 Mar,2019
 

 
பசுபிக் பெருங்­க­டலில் தனித்து காணப்­படும் தீவு அது. தனித்து என்றால்… மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல ஆயிரம் கிலோ­மீற்றர்­க­ளுக்கு எந்த நிலப்­ப­ரப்­பையும், வேறு எதை­யும்­கூட பார்த்­திட முடி­யாது. நீலக் கடலின் நடுவே, பச்சை புள்ளியாய் இருக்கும் அந்தத் தீவு.
அந்தத் தீவின் வடக்கு மூலையில் “ராணா ரராக்கு” (சுயயே சுயசயமர) எனும் அந்த எரி­மலை எரிந்­து­கொண்­டி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட முடியும் தரு­வாயில் இருந்­தது.
புகை மூட்டம் எங்கும். புகை இன்னும் முழு­மை­யாக வில­காத நிலையில், சிலர் அந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்­டி­ருக்­கி­றார்கள்.
அவர்­களின் உடல் மிகவும் வலி­மை­யா­ன­தாக இருக்­கி­றது. அவர்கள் அந்த எரி­ம­லையின் அருகே சென்று, சில கூடை­களில் சாம்­பல்­களை சேக­ரிக்­கி­றார்கள்.
அதை சுமந்­து­கொண்டு மீண்டும் மலை­யி­லி­ருந்து இறங்­கு­கி­றார்கள். கால்­களில் செருப்பு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அந்தக் காட்டில், மலையில் அவர்கள் வெறுங்­கால்­க­ளோடு நடப்­பது பெரும் ஆச்­சரி­யத்தைக் கொடுக்­கி­றது.
சில மணி நேர நடைக்குப் பிறகு, ஒரு இடத்­துக்கு வந்து சேர்­கி­றார்கள். அங்கு ஏற்­கெ­னவே குழு­மி­யி­ருக்கும், அந்தக் கூட்டம் ஏதேதோ கல­வை­களைக் கலந்து சில வேலை­களைச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள்.
உற்­றுப்­பார்த்தால், அவர்கள் சிலை­களை வடித்துக் கொண்­டி­ருப்­பது தெரி­கி­றது. அங்­கி­ருந்து சற்று நகர்ந்துப் போனால், பலர் அந்த மண்ணில் விவ­சாயம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள். சிலர் கடலில் மீன் பிடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.
அந்த மொழி பரிச்­ச­ய­மா­னது அல்ல.
“எத்­தனை மோவாய் (ஆடியi) முடிந்தது?”
“கடைசி மோவாய் செய்­து­கொண்­டி­ருக்­கிறோம். கணக்குப் பார்த்தால், எப்­ப­டியும் 800க்கு மேல் இருக்கும்.” என்று அவர்கள் பேசிக் கொண்­டி­ருக்­கிறார்கள் .
அவர்கள் வாழ்க்கை அத்­தனை மகிழ்ச்­சி­யாக இருந்­தது. கடலும், காடும், மலையும், எரி­ம­லையும், சிற்­பக்­க­லையும், மீன் உணவும் என அத்­தனை ரம்­மி­ய­மாக ஒரு வாழ்வை வாழ்ந்­து­கொண்­டி­ருந்­தார்கள்.
இந்தத் தீவை “ஈஸ்டர் தீவு” என்று இன்று அழைக்­கி­றார்கள். இந்தக் கதைகள் நடப்­பது 13-லிருந்து 15-ஆம் நூற்­றாண்டு கால­கட்­ட­மாக இருக்­கலாம்.
ஐரோப்­பி­யர்­களின் கால்கள் இந்தத் தீவை கண்­ட­டையும் வரை நிம்­ம­தி­யா­கத்தான் இருந்­தார்கள். முதல் ஐரோப்­பியன் அந்தத் தீவில் கால்­வைத்த அந்த நொடி முதல் இவர்­களின் அழிவு தொடங்­கி­யது.
அது­வரை அதிக வேற்று மனித இடை­யூறு இல்­லாமல், இயற்­கையை மட்­டுமே நாடி வாழ்ந்து வந்த அந்த இனம் சூறை­யா­டப்­பட்­டது.
பல நாடு­க­ளுக்கு, அவர்கள் அடி­மை­க­ளாக இழுத்துச் செல்­லப்­பட்­டனர். இது அந்த இனத்தின் எண்­ணிக்­கையைப் பாதி­யாகக் குறைத்­தது. மிச்­ச­மி­ருந்த மக்­க­ளையும் அந்த எலிகள் கடித்துக் குதற ஆரம்­பித்­தன. ஆம்…நிஜ­மான எலிகள் தான்.
ஈஸ்டர் தீவு மர்­மங்கள்
பல வெளி­நாட்­ட­வர்கள் வரத் தொடங்­கிய நிலையில், அவர்­களின் கப்­பல்­களில் “பொலி­நே­சியன் எலி” (ஞடிடலநேளயைn சயவள) எனப்­படும் அந்த எலிகள் தீவை ஆக்­கி­ர­மிக்கத் தொடங்­கின.
அது பல­வித நோய்­களை அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தின. கொந்த­ளிக்கும் கட­லிலும், கொதிக்கும் எரி­ம­லை­க­ளிலும் துள்ளி விளை­யாடிய அந்த இனம், பல­வீ­ன­ம­டையத் தொடங்கியது.
வர­லாற்றை ஆராய்ந்துப் பார்க்­கும்­போது, கிடைத்த முதல் தக­வல்­படி இந்தத் தீவில் 17,500 பேர் வரை வாழ்ந்­துள்­ளார்கள் என்­பது நிரூ­பணம் ஆகி­றது.
1700-களில் தொடக்­கத்தில் இந்தத் தீவில் 3,000 பேர் வரை இருந்­த­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது. 1877இ-ன் கணக்­குப்­படி 111 பேர் இருந்­தி­ருக்­கி­றார்கள்.
இந்தத் தீவின் பூர்­வீகக்­குடி இனத்தின் பெயர் “ரபா நுய்” (சுயயீய சூரi). இன்று இந்த ஈஸ்டர் தீவு உலகின் சில ஆச்­சரி­யங்­களில் ஒன்று. குறிப்­பாக, இங்­கி­ருக்கும் “மோவாய்” என்று சொல்­லப்­படும் அந்த சிலைகள்.
1. ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் ஆளுகைக்குள் வரு­கி­றது.
சிலியின் தலை­ந­க­ரான சான்­டி­யா­கோ­வுக்கும் ஈஸ்டர் தீவுக்கும் 2,300 மைல்கள் தூரம். 5 மணி நேர விமானப் பயணம்.
2. இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்­தி­யா­ச­மாக இருக்கும். அது முட்­டி­யிட்­ட­படி உட்கார்ந்­தி­ருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்­த­வாறு, குறுந்­தா­டி­யோடு இருக்கும். இது அந்தத் தீவின் “சுநன ஞரயே ஞரய” எனும் கல்லைக் கொண்டு செதுக்­கப்­பட்­டுள்­ளது.
3. “ரபா நுயி” இனத்தின் வழி­பாட்டுத் தலம் ஒன்று இந்தத் தீவி­லி­ருக்­கிறது. அதற்கு “அஹு அகிவி” (ஹார ஹமiஎi) என்று பெயர். நீள­மான மூக்கு, அக­லமான கன்­னங்கள், அடர்த்­தி­யான புருவம், ஆழ­மான கண்கள், செவ்­வக வடி­வி­லான காதுகள், அந்த நாசி துவாரம் சற்றே வளை­வாக காணப்­பட்­டது.
அதா­வது ஒரு மீன் தூண்­டிலைப் போல. இப்­ப­டித்தான் அந்த மோவாய்கள் இருக்கும். இது­போன்ற சிலை­களை உலகின் வேறு எந்தப் பகு­தி­யி­லுமே பார்க்க முடி­யாது.
101 சது­ர ­கி.மீ. பரப்­ப­ளவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் மொத்தம் 887 மோவாய்கள் இருக்­கின்­றன. இதில் பாதிக்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்த மாதிரி­யு­மாக இருக்­கின்­றன.
இந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளுக்குப் பல ஆச்­சரி­யங்கள் இருந்­தன. முதலில் இந்தச் சிலை­களை யார் செய்­தார்கள் என்ற கேள்வி வந்­தது.
ஒரு­வேளை ஏலியன்­களின் வேலை­யாக இருக்­குமோ என்ற சந்தேகம் ஏற்­பட்­டது. பின்னர், அந்த சிலை­களை ஆராய்ந்­த­போது அது அந்தத் தீவி­லி­ருக்கும் பொருட்­களைக் கொண்டே உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கின்றன என்­பது தெரிந்­தது.
குறிப்­பாக, 834 சிலைகள் “டஃப்” (கூரகக) என்று சொல்­லப்­படும் எரி­மலை சாம்பலைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட ஒரு மூலப்­பொ­ருளைக் கொண்டே உரு­வாக்­கப்­பட்டிருக்­கின்றன.
எனவே, இவற்றைக் கண்­டிப்­பாக ஏலி­யன்கள் செய்­தி­ருக்க முடி­யாது என்­பது நிரூ­ப­ண­மா­கி­றது. அடுத்­த­தாக இந்தப் பெரிய சிலை­களை எப்­படி தீவு முழுக்க பல இடங்­க­ளுக்கு நகர்த்­தி­யி­ருப்­பார்கள் என்ற கேள்வி எழுந்­தது.
1980-களின் ஆரம்­பத்தில் சில அமெரிக்க ஆராய்ச்­சி­யா­ளர்கள் உண்மை­யி­லேயே அதே போன்ற சிலை­களைக் கொண்டு, நவீன தொழில்­நுட்­பங்கள் ஏது­மில்­லாமல் அந்தக் கால­கட்­டத்­தி­லி­ருந்த பொருட்­களைக் கொண்டே அதை நகர்த்த முடி­யுமா என்று முயற்சி செய்து பார்த்­தார்கள்.
ஆனால், அது முடி­ய­வில்லை. பின்னர், சில ஆராய்ச்­சி­யா­ளர்கள் அதை சாத்­தி­யப்­ப­டுத்திக் காட்டினார்கள்.
சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர்.
இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சரியங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies