வளி மண்டலத்தில் எல்லை எது?
01 Mar,2019
பூமி மீது போர்த்தியுள்ள காற்று மண்டலம் எதுவரை எட்டுகிறது? அண்மைக்காலம் வரை, 100 கி.மீ.,துாரத்திற்கு வளி மண்டலம் இருப்பதாகவும், அதற்குப் அப்பால் வெற்றிடம் ஆரம்பமாவதாகவும், விஞ்ஞானிகள் கணித்து வந்தனர். ஆனால், 1990களில் ஏவப்பட்ட, 'சோஹோ' என்ற அமெரிக்க - ஐரோப்பிய செயற்கைக்கோள், அப்போது அனுப்பிய தகவல்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பூமியின் ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட காற்று மண்டலத்தின் வீச்சு, 63 ஆயிரம் கி.மீ., தூரம் வரை காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.