ராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்?

21 Feb,2019
 


 
ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார்.
இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி பயனியர், டெக்கான் கிரானிக்கில், தி ஆசியன் ஏஜ் மற்றும் ட்ரிபியூன் போன்ற முன்னணி ஊடகங்களில் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றியவர்.
இதுவரை ராஜீவ் காந்தி கொலை குறித்து வந்த நூல்கள் யாவும் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு குறித்தோ, அல்லது SIT கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் தங்களின் புலனாய்வு குறித்தோ எழுதப்பட்டவை .ஆனால், இந்த நூல்தான் முதன்முறையாக புலனாய்வு, குற்றச்சாட்டப்பட்டவர்களின் வாதம் தாண்டி, அனைத்திற்கும் மேலாக அதன் பின்னே இருக்கும் ‘அரசியல்’ குறித்து தெளிவாக விவரிக்கிறது.
இந்த நூலில் அவர் ‘இப்படி’ துவங்கி ‘இப்படியே’ முடிக்கிறார். அதாவது, எந்த ஒரு காவல் அமைப்பும், புலனாய்வு நிறுவனமும் அதிமுக்கிய கொலைகளை விசாரிக்கும் போது..கொலைக்கு பின்னே இருக்கும் கொலையாளிகளின் நோக்கம், கொலை செய்ய ஏற்படும் தூண்டுணர்வு (motivation), கொலையால் கிடைக்ககூடிய ஆதாயம்..இவற்றை ஆராயாமல் எந்த ஒரு குற்ற விசாரணையையும் நிகழ்த்த முடியாது, துப்பு துலக்குவதில் வெற்றியும் கிட்டாது என்கிறார்.
ராஜீவின் கொலையை அந்த நோக்கில் ஆராயும்போதுஸஆதாயமடைந்தவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதை ராஜீவுக்கு பிந்தைய கடந்த இரு தசாபத்ங்களின் அரசியல் போக்கில் பார்க்க முடிகிறது.ராஜீவ் இறக்கும் முன்னர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாமல் இருந்த ஒரு கும்பல் இன்று பாராளுமன்ற அரசியலை மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது.
கொலையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட அல்லது ஜெயின் மற்றும் வர்மா கமிஷனால் சந்தேக நிழல் படிந்த..நரசிம்மராவ் துவங்கி சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, டி என் சேஷன், நாராயணன், மார்கரெட் ஆல்வா, மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்களும்..விசாரணையை திட்டமிட்டு குழப்பி, திசை திருப்பிய அதிகாரிகள் எண்ணற்றோர் தங்கள் புரொஃபஷனில் உச்சத்திற்கு செல்கிறார்கள்.
குறிப்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு (SIT) கார்த்திகேயன், ராகவன் பிற்காலத்தில் சிபிஐ தலைவராகிறார்.இவர்தான் பின்னர் குஜராத் படுகொலைகளில் மோடிக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்தவர்.அந்த ராகவன் தற்போது சைப்ரசுக்கான இந்தியாவின் ஹை கமிஷனர். மற்றொரு அதிகாரி Radhavinod Raju பின்னர் NIA வின் தலைவரானார்.MK நாராயணன் NSA தலைவராகி, பிரதமரின் சிறப்பு ஆலோசகராகி, பின்னர் வங்காள கவர்னர் ஆனார்.
ராஜீவ் கொலை விசாரணையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தத்தமது வாழ்வின் உச்சத்தை தொட்டது கொலையின் சூத்திரதாரிகளை காப்பாற்றியதற்காக கிட்டிய பரிசா?அதேவேளை, புலிகளுக்கு ராஜீவின் இறப்பால் ஏற்பட்ட ஆதாயம் என்று ஏதுமில்லை, மாறாக பெரும் இழப்பே மிச்சம்.ஏனெனில், சோதனைக் காலங்களில் புலிகளின் பதுங்கு அரண் தமிழ் நாடு. புலிகளின் ‘இதயத்துடிப்பு’ தமிழர்களின் புலிப்பற்று. ராஜீவ் கொலையால் அது முற்றிலும் நின்று விட்டது.
தமிழ்நாடு தொடர்பறுந்தால், இன்றல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் எதிரிகளிடம் இலகுவாக expose ஆகிவிடுவோம் என்பதை யூகிக்கத் தெரியாத இயக்கமல்ல புலிகள் இயக்கம்.அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொன்றதற்கு பழிக்கு பழியாக, ராஜீவை கொன்றார்கள் என்ற இந்திய அதிகார வர்க்கத்தின் சொத்தை வாதத்தை ஆய்வு செய்தால்..ஒரு தேசத்தை கட்டி எழுப்ப பெரும் கனவுடன் முப்படை கட்டி வீரச் சமர் புரியும் ஒரு விடுதலை இயக்கம்ஸ
போஃபர்ஸ் ஊழலில் சிக்கி பல்லு புடுங்கப்பட்டு, ஆட்சியை இழந்து, மண்டல கமிஷனால் விபி சிங்கிடம் தன் வசீகரத்தையும் இழந்த ஒரு தனி நபர் ராஜீவின் பின்னால்..
அவரின் உயிருக்கு குறி வைத்து, படை அனுப்பி, கொலைசெய்ய காத்திருக்கும் சிறுபிள்ளை விளையாட்டை செய்யும் என்பதை உலக அரசியல் தெரிந்த எவரும் நம்ப மாட்டார்.(ராஜா வீட்டு கன்றுக்குட்டி ராஜீவுக்கு தவறான ஆலோசனை வழங்கி, அமைதிப்படையை வைத்து புலிகளை அழிக்க ஒரு ‘வர்க்கம்’ முயல்வதை, அமைதிப்படையே பிரபாகரனிடம் விளக்கி இருக்கிறது).
SIT-கார்த்திகேயன் தரப்பு மற்றும் சுப்பிரமணியசாமி தரப்பு உளவு மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்புவது போல ..ராஜீவ் மீண்டும் ஆட்சிக்கு வந்து அமைதிப்படை அனுப்புவார் என்று புலிகள் பயந்தார்கள் என்பதும் பொருளற்ற வாதம்.
ஏனெனில் 1. ராஜீவின் செல்வாக்கு அதள பாதாளத்தில் இருந்தது. அவர் ஜெயிக்க வாய்ப்பேயில்லை.
ராஜீவ் இறந்த பின்னரும், அந்த அனுதாப அலையிலும் கூட அத்தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 244 தொகுதிகளில் மட்டுமே வென்றது, 28 தொகுதிகள் மெஜாரிட்டிக்கு குறைவு.
(இந்திரா இறந்து ஏற்பட்ட அனுதாப அலையில் 410 இடங்களை காங்கிரஸ் வென்றது நினைவில் இருக்கலாம்)
2. மேலாக, இறையாண்மை கொண்ட இலங்கைக்கு இஷ்டம் போல இந்தியா அமைதிப்படை அனுப்ப முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் காலாவதியாகி..ராஜீவின் பரம வைரியும், அமைதிப்படையை இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த பிரேமதாசா அப்போது அதிபராகி இருந்தார்.பிரேமதாசா இந்தியப்படையை எதிர்க்க புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்.
இப்படியாக, புலிகளின் நட்பு சக்தியாக இருந்த விபிசிங்- ஜார்ஜ் பெர்னாண்டஸ்சின் ஜனதா தளம் மீண்டும் ஆட்சிக்கு வர இருந்த வாய்ப்பையும் கெடுத்தது ராஜீவ் கொலை.
ஆகவே எல்லா கணக்குப்படியும் நஷ்டம் வரும் வேலையை புலிகள் செய்யமாட்டார்கள்.
ஒருவேளை, ஆயுதம் வாங்க பணத்திற்காக புலிகள் அந்த ராஜீவ் கொலைக்கான சர்வதேச ‘சப் கான்டராக்ட்’ எடுத்திருந்தாலும்..
அந்த கான்டராக்டை வழங்கியவர்களை சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி, நரசிம்மராவ் போன்றோர் மறைப்பதேன்?
ஒருவேளை, மோஸாத்திற்காகவோ, சிஐஏவிற்காகவோ அந்த கான்டராக்ட் வேலையை புலிகள் செய்திருந்தாலும்..
மோஸாத்தோ, சிஐஏவோ புலிகளை அந்த கொலைப்பழியில் இருந்து பாதுகாத்து இருக்காதா?
ஆக,
விபிசிங்கின் மண்டல் கமிஷன் எழுச்சியால் கிளர்ந்தெழுந்த ஒபிசிக்களின் ‘தலைமை’ நோக்கிய புதிய பாய்ச்சலை வீழ்த்தவும்..
இந்தியத்திற்கு நிரந்தர பிராமண சாயம் பூசவும்..
இந்திய அரசியலை காந்திய அணிசேரா, மதசார்பற்ற அரசியல் தத்துவத்தில் இருந்து மாற்று தத்துவத்திற்கு மாற்றவும்..
முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து தேசத்தை அவர்களுக்கு விற்று, கைமாறாக அவர்கள் துணையோடு பிராமணியத்தை நிலைநிறுத்தவும்..
புலிகளை தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, புலிகளின் முதுகெலும்பை ஒடித்து, தமிழர்கள் இந்திய துணைக்கண்டத்தில் தேசம் அமைத்துவிடாது தடுத்து..
ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியது இந்தியா என்று சொல்லப்படும் Brahminical Establishment என்கிறார் ஆசிரியர்.
புலிகளிடம் வேலை செய்த rogue element ஒன்றோ, அல்லது சிவராசன் போன்ற டபுள் ஏஜெண்டுகளோ..
இந்திய Brahminical Establishment ‘டிடம் இருந்து கான்டராக்ட் பெற்று ராஜீவை தீர்த்ததோடு, புலிகளையும் தீர்த்துவிட்டார்கள் என்கிறார் ஆசிரியர்.
கொலையில், கொலை விசாரணையில் இருந்த சுவாரசியமான மர்ம முடிச்சுக்கள் குறித்து விவாதிக்கும் போதுஸ
ராஜீவின் பயணத்திட்டத்தில் சிறிபெரும்புதூர் பலவந்தமாக மரகதம் சந்திரசேகர்- மார்கரெட் ஆல்வா காம்போவால் திணிக்கப்பட்டது.
பிற்காலத்தில் காங்கிரஸ் சந்திராசாமியின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்த போதும், மார்கரெட் ஆல்வா மட்டும்..
ராஜீவ் கொலையின் சூத்திரதாரி சந்திரசாமியின் வீட்டு வைபோவங்களில் முன்னின்று நடத்தினார்.
மரகதம் சந்திரசேகரின் மருமகள் ஒரு சிங்களத்தி என்பதை பிராமண ஊடகங்களும், SIT கார்த்திகேயனும் திட்டமிட்டு அலட்சியப்படுத்தி மறைத்தது.
மரகதம் சந்திரசேகரின் மகளின் தோழி லதா கண்ணன் மற்றும் தாணு, சிவராசன் நட்பு.
சிவராசன் அக்காலத்திலேயே மரகதத்துக்கு ஐந்து லட்சம் நன்கொடை வழங்கியது.
ராஜீவோடு இறந்து போன லதா கண்ணனின் கணவர் அதன் பின்னர் இரவோடு இரவாக பெரும் செல்வந்தர் ஆனது.
மரகதம்தான் நரசிம்மராவை முதன்முதலாக ஆந்திராவின் முதல்வராக தேர்ந்தெடுத்தவர்.
ராவுக்கு அரசியல் வாழ்வு கொடுத்த மரகதத்தின் அந்த நட்பு சந்திராசாமியின் வாசல் வரை இழுத்து சென்றது..
கொலைக்கு முன்னர் சிவராசன் சவுதிக்கு பயணம் செய்து, சந்திராசாமியின் தொழிற்கூட்டாளியும் ஆயுத பேர மன்னனுமான அட்னன் கஷோகியை ஏன் சந்திக்கிறார்?
SIT கார்த்திக்கேயனின் அறிக்கைப்படியே பார்த்தாலும் சிவராசனின் புராஜெக்ட் தமிழ்நாட்டில் இருந்த எந்த LTTE உறுப்பினர்களுக்கும் தெரியாமல் இருந்ததுஸ
ராஜீவின் கொலைக்கு மறுதினம் பத்திரிக்கைகள் மூலம் சிவராசன் படத்தை பார்த்து மற்ற புலிகள் தெரிந்து கொள்ள நேரிட்டதுஸ
கொலையை படம் பிடிக்க சிவராசன் ஹரிபாபுவை ஏன் நியமித்தார்? பின்னர் காமிராவை எடுத்து செல்ல தகுந்த நேரமும் வாய்ப்பும் இருந்தும் அதை ஏன் அங்கேயே விட்டு செல்கிறார்?
கேசட்டில் கொலைக்கு சற்று முன்னதான முக்கியமான நிகழ்வுகளை SIT கார்த்திகேயன் அழிக்க காரணம் என்ன?
அதை ஜெயின், வர்மா கமிஷன்களிடம் ஒப்படைக்காமல் எம்கே நாராயணன் ஏன் இப்போதும் மறைக்கிறார்?
தீவிர தேடுதல் துவங்கியதும் எண்ணற்ற புலிகள் ஈழம் நோக்கி பயணிக்க, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அழைத்தும் சிவராசன் ஈழம் செல்ல ‘பயந்து’ மறுத்தது.
பத்மநாபாவை அழித்தொழித்துவிட்டு அடுத்த சில மணித்துளிகளில் ஈழம் அடைந்திருக்க, சிவராசன் ஏன் இந்தியம் உஷாராகும் முன் அன்றிரவே படகு ஏறவில்லை?
மாறாக, கனகசபாபதியை அழைத்து சந்திராசாமியின் வீட்டுக்கு அருகே தெற்கு டெல்லியில் தங்க ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்.
இடையே, பெங்களூரில் சிக்கி மற்றவர்கள் சையனைடை விழுங்கி மரணிக்க, சிவராசன் மட்டும் குண்டடி பட்டு இறக்கிறார்.
காட்ராக்ட்டுக்கு ஆளெடுத்த அதிகார வர்க்கம் காப்பாற்றும் என்று நம்பியிருந்தது அவர்களால் கொலை செய்யப்பட்டாரா?
பெங்களூரில் சிவராசனுக்கு வீடு வழங்கிய ரெங்கநாத், சிவராசன்- சந்திராசாமி நெருக்கம் குறித்து ஆங்கில நாளேடுகளில் பேட்டி வழங்கியதும்..
சிபிஐ SIT தலைவர் கார்த்திகேயன் வெளியே சொல்லாதே என ரெங்கநாத்தை மிரட்டியது.
ரெங்கநாத் தனது அவுட்லுக் பேட்டியில் மார்கரெட் ஆல்வா தனக்கு முன்பே ராஜீவின் பயண அட்டவணையை வழங்கியது பேருதவியாக இருந்தது என சிவராசன் சொன்னதாக கூறுகிறார்.
டெலோவில் இருந்து புலிகள் அமைப்புக்கு மாறிய சிவராசன் இரட்டை ஏஜெண்டா?
அப்போதைய IB தலைவர் MK நாராயணன் ஏன் ராஜீவ் இறப்பதற்கு முதல்நாள் அரசு விடுமுறையன்று கூடுதல் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதுகிறார்.
பிராமண சாம்ராஜ்ய தளபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்ட டி என் சேஷன் எப்படி ராஜீவ் இறந்துவிடுவார் என்று தேர்தலுக்கு முன்பே கணித்து..
அதை சுப்பிரமணியசாமியிடம் தெரிவித்து, தேர்தலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மூன்று மாதங்களுக்கு பிரித்து நடத்துகிறார்?
(சோனியா) காந்தி குடும்பம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம் தங்கள் சொந்த கட்சி பிரதமரின் இரங்கலை தவிர்க்க காரணம் சந்திரா சாமி- சுப்பிரமணிய சாமி- நரசிம்மராவ் கூட்டணி கொலைக்கு காரணம் என்பதாலா?
வர்மா, ஜெயின், சிபிஐ-SIT ஆகிய மூன்று விசாரணை குழுக்களையுமே அமைத்தது கொலை குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணிய சாமிதான் (அப்போதைய சட்ட அமைச்சர்) என்பது வேடிக்கை அல்லவா.
இதில் மற்ற இருவரும் சுப்பிரமணிய சாமி ராஜீவ் இறந்த மறுநாள் வாசித்த ‘புலிகள் கொலையாளர்கள்’ என்ற தீர்ப்பிற்கு பொருத்தமாக விசாரணை செய்ய..
ஜெயின் மட்டும் அங்கும் இங்கும் விசாரணையின் திசையை திரும்பியதும்..
ஜெயினை மோசக்காரன், முன்னாள் கம்யூனிஸ்டுஸ என்றெல்லாம் தூற்றி பல இடங்களில் விசாரணையின் போக்குக்கு தடை பெறுகிறார், சாமி.
இப்படியாக மிக சுவாரசியமான, அவசியமான அரசியல் பகுப்பாய்வு நூல் இது.
கிட்டத்தட்ட அறிவியல் ஆய்வு நூலுக்கு இணையாக சம்பவங்களை பகுப்பாய்வு செய்கிறார்.
கொலைச்சதியின் Big Players க்குஎன தனித்தனி chapter ஒதுக்கி இருக்கிறார். அவசியம் வாசியுங்கள்.
மேலும்,
ராஜீவின் கொலை என்பது இந்திய பிராமண சாம்ராஜ்யத்தின் முன்னெடுப்பில், சிங்கள அரசோடு நெருக்கமாக இருந்த புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்பினரின் பங்களிப்புடன் நிகழ்ந்த பிராமண-சிங்கள கூட்டு கொலையாகும் என்கிறார்.
இஸ்ரேலின் நகர்வுகள் இலங்கையில் அதிகமானபோதுதான் ராஜீவ் இலங்கை அரசியலில் தலையிட்டு, இஸ்ரேலை வெளியேற்றினார் என்பதை பலரும் இதற்கு முன்னர் விளக்கி இருக்கிறார்கள்.
ஆக, பிராமண- சிங்கள-இஸ்ரேல் முக்கோண காதல் கூட்டணி ராஜீவை கொன்று பழியை புலிகள் மீது போட்டது என்கிறார்.
பிராமணியத்தை ஆளவைக்க ‘அழுக்கு அரைப்பிராமணன்’ ராஜீவ் பலிகொடுக்கப்பட்டார்.
நம் பார்வையில், ராஜீவ் போன்ற அரண்மனை செல்லப்பிராணிகள் ஒரு நாள் இருக்கும், ஒரு நாள் சாகும், அது அவர்கள் பாடு.
ஆனால், பொய்ப்பழி சுமத்தி ஒரு இனத்தின் விடுதலை வேட்கையை நசுக்கி, தமிழினத்தை கொலையாளிகள் ஆக்கியதற்கு பிராமணியம் பெரும் விலை கொடுக்கும்.
புலிகள் இறந்தார்கள், மக்கள் மாண்டார்கள்,பலர் சிறையில் வாடுகிறார்கள் என்பதைத் தாண்டி ..
இது ஒரு சமூகத்தின் வரலாற்று வளர்ச்சி போக்கு, இனவிடுதலை என்பது இனத்தின் அரசியல் பரிணாம வளர்ச்சி..
அதை தடுத்து மீண்டும் பிராமண பிரமிடில் தமிழினத்தை மண்டியிட வைத்த பிராமணியம் தமிழர்களின் கையில் வன்முறையான அழிவை சந்திக்கும்!Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies