முகப்­புத்­தகம் மூல­மான களி­யாட்ட நிகழ்வில் : பங்­கேற்ற 6 பெண்கள் உட்­பட 89 பேர் கைது

04 Feb,2019
 


 

முகப்­புத்­தகம் மூலம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட களி­யாட்ட நிகழ்­வொன்றில் போதைப்­பொ­ருட்­களை பயன்­ப­டுத்­திய 6 பெண்கள் உட்­பட 89 பேர் ஹிங்­கு­ராங்­கொட பிர­தே­சத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
பிறந்­தநாள் கொண்­டாட்டம் என ஹோட்­டலில் பதிவு செய்து, போதைப் பொருட்கள் மது­பானம் என்­ப­வற்­றோடு களி­யாட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ண­மா­கவே இவ்­வாறு 89 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஹிங்­கு­ராங்­கொட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்.
கைது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,
நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை அலு­வ­ல­கத்­தி­லுள்ள ஒரு­வரின் பிறந்த நாள் கொண்­டாட்டம் எனக் கூறி ஹோட்­டலை பதிவு செய்­துள்­ளனர். 6 பெண்கள் உள்­ள­டங்­க­ளாக 89 பேர் இந்த களி­யாட்ட நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இவ்­வாறு களி­யாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்கள் போதைப் பொருட்­களை பயன்­ப­டுத்­து­வ­தாக ஹிங்­கு­ராங்­கொட பொலிஸ் நிலை­யத்­திற்கு இர­க­சிய தகவல் கிடைக்கப் பெற்­றது.
அதனைத் தொடர்ந்து பொலன்­ன­றுவை பொலிஸ் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யு­டைய தலை­மையில் ஹிங்­கு­ராங்­கொட பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் நள்­ளி­ரவு 12 மணி­ய­ளவில் குறித்த ஹோட்­டலில் திடீர் சுற்­றி­வ­ளைப்பை மேற்­கொண்­டனர்.
இந்த திடீர் சுற்றி வளைப்பின் போது 6 பெண்கள் உள்­ள­டங்­க­லாக 89 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து கேரள கஞ்சா, ஐஸ், ஹெரோயின் மற்றும் மேலும் சில போதை மாத்­தி­ரைகள் என்­பன கைப்­பற்­றப்­பட்­டன.
அத்­தோடு இவர்கள் போதை பொருட்­களை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­மையும் விசா­ர­ணை­களின் பின்னர் தெரி­ய­வந்­துள்­ளது. குறித்த பெண்கள் அறு­வரும் கைது செய்­யப்­படும் போது மது­போ­தையில் காணப்­பட்­டனர்.
கைதா­ன­வர்கள் கண்டி, குரு­ணாகல், திரு­கோ­ண­மலை மற்றும் அநு­ரா­த­புரம் ஆகிய பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். குறித்த ஹோட்­டலில் பதிவு செய்­வ­தற்கு நப­ரொ­ரு­வ­ருக்கு 2500 ரூபாய் அற­வி­டப்­ப­டு­கின்­றது.
அத்­தோடு ஹோட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்றி வளைப்பின் பின்னர் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்றார்Share this:

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages

NEAR REJSE. DK

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies