தந்­தையால் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை திரு­மணம் செய்த மகன்!

04 Feb,2020
 

 


 
 

வேதா­ரண்யம் அருகே தந்­தையால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்ட காத­லியை மகன் கரம்­பி­டித்த நெகிழ்ச்­சி­யான சம்­பவம் நடந்­துள்­ளது.
நாகை மாவட்டம் வேதா­ரண்யம் அருகே உள்ள செம்­போடை கிரா­மத்தை சேர்ந்­தவரான 20 வய­தான இளைஞர், வேதா­ரண்யம் பகு­தியை சேர்ந்த 21 வயது யுவதி ஒரு­வரை காத­லித்து வந்தார்.
இரு­வரும் சென்­னையில் உள்ள ஒரு தனியார் நிறு­வ­னத்தில் ஒன்­றாக வேலை பார்த்து வந்­தனர்.
இவர்கள் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்­தில ;(ஐ.டி.ஐ.) ஒன்­றாக படித்­த­போது காதல் மலர்ந்­தது.
இரு­வரும் தீவி­ர­மாக காத­லித்து வந்த நிலையில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு இவரும் சொந்த ஊருக்குச் சென்­றி­ருந்­தனர்.
மேற்­படி இளைஞனின் காதல் இளை­ஞனின் தந்­தைக்குப் பிடிக்­க­வில்லை என தெரி­கி­றது. அவர், தனது மக­னுக்கு வேறு ஒரு பெண்ணை திரு­மணம் செய்து வைக்க திட்­ட­மிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அண்­மையில் தனது மகனின் காத­லியை ரக­சி­ய­மாக சந்­தித்துப் பேசிய மேற்­படி நபர், மக­னுக்கும் உனக்கும் திரு­மணம் செய்து வைக்­கிறேன்’ என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
அவ­ரு­டைய ஆசை வார்த்­தையால் கவ­ரப்­பட்ட அந்த யுவ­தியை, மேற்­படி நபர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்­காரம் செய்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
மேலும் அந்த யுவ­தியை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்­ர­வதை செய்து வந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
இதனால் பாதிக்­கப்­பட்ட அந்த யுவதி, வேதா­ரண்யம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலை­யத்தில் புகார் கொடுத்தார்.
அதன்­பேரில் இன்ஸ்­பெக்டர் செல்வி வெர்­ஜி­னியா மற்றும் பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். விசா­ர­ணையில் கருப்பு நித்­யா­னந்தம், தனது மகனின் காத­லியை கடத்தி பாலியல் பலாத்­காரம் செய்­தது தெரி­ய­வந்­தது.
இது­தொ­டர்­பாக பொலி­ஸார் வழக்­குப்­ப­திவு செய்து இளை­ஞனின் தந்தை மற்றும் அவ­ருக்கு உடந்­தை­யாக செயல்­பட்ட அவ­ரிக்­காடு கிரா­மத்தை சேர்ந்த சக்­திவேல், அவ­ரது மனைவி பவுன்­ரா­ஜ­வள்ளி ஆகிய 3 பேரையும் கைது செய்­தனர்.
அந்த யுவ­தியை இளைஞன்; உயி­ருக்கு உயி­ராக காத­லித்து வந்த நிலையில், தந்­தையால் அந்தப் பெண் பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு ஆளாக்­கப்­பட்ட சம்­பவம் அவரை மிகவும் வேத­னைக்கு உள்­ளாக்­கி­யது.
ஆனாலும் அவர், தனது காத­லியை கைவி­ட­வில்லை. அவ­ரையே திரு­மணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்­படி கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு அந்த பெண்ணை முகேஷ்­கண்ணன் கரம்­பி­டித்தார்.
இவர்­க­ளு­டைய திரு­மணம் பெண்ணின் கிரா­மத்தில் உள்ள ஒரு கோவிலில் ஊர்­மக்கள் முன்­னி­லையில் நடந்­தது. புது­மண தம்­ப­திக்கு ஊர் மக்கள், நண்­பர்கள் வாழ்த்து தெரி­வித்­தனர்.
இந்த திருமணம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே இளைஞனின் தந்தை, குறித்த யுவதியை கடத்துவதற்கு பயன்படுத்திய காரை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

 Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies