வருங்கால மனைவிக்கு 500 கிலோ தங்க கார் பரிசளித்த அம்பானியின் மகன்..
23 Jul,2018
தனது வருங்கால மனைவிக்கு 500 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன கார் ஒன்றை முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் பரிசாக கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இந்திய பணக்கார பட்டியலில் இடம் பிடித்த முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது காதலியான ஸ்லோகா மேத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாக படித்து வந்த நிலையில், அவரை காதலித்து கரம் பிடிக்கயிருக்கிறார். சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, வருங்கால மனையாகப்போகும் ஸ்லோகாவிற்கு 500 கிலோ எடையுள்ள பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதுவும், துபாயில் இருந்து அந்த 500 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன கோல்டு பிளாட்டேடு கொசில்லா (gold plated godzilla) என்ற கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டுமே ரூ.7 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.