இந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..?
12 Feb,2018
முக்கியமான ஆய்வில் நாட்டின் வர்த்தக நிலையை முழுமையாக மாற்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.ஆம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதியின் வாயிலாகவே வருகிறது. இதனைத் தீர்க்கும் வகையில் சுமார் 11.48 கோடி டன் தங்க படிமம் ராஜஸ்தான் பகுதியில் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய இந்த ஆய்வின் படி 11.48 கோடி டன் தங்கம் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களான பனஸ்வாரா மற்றும் உதய்பூர் பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது. Loading ad தங்கம் இந்தத் தங்க படிமம் பூமிக்கு அடியில் சுமார் 300 அடி தூரத்தில் உள்ளதாக இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பின் தலைவர் குடும்ப ராவ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். தேடல் இந்த ஆய்வு செம்பு மற்றும் தங்க படிவத்திற்காக நடத்தப்பட்ட நிலையில் வெற்றிக்கிடைத்தது மட்டும் அல்லாமல் பிற தாதுகளும் கிடைத்துள்ளது. மேலும் ஆய்வுகள் சிக்கார் மாநிலத்தின் நீம் கா தானா பகுதியில் நடந்துகொண்டு இருப்பதாக ராவ் தெரிவித்தார். பிற தாதுகள் தங்கம் மற்றும் செம்பு ஆகியவற்றைத் தாண்டி துத்தநாகம் (zinc) மற்றும் ஈயம் ஆகிய தாதுகளின் படிமமும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது. இதில் ஈயம் மட்டும் சுமார் 350 மில்லியன் டன் அளவிலான படிமம் கிடைத்துள்ளது. செம்பு இந்த ஆய்வின் மூலம் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 80 மில்லியன் டன் அளவிலான செம்பு படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.