சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

12 Nov,2017
 

 
 

சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர்.
 
இன்று 3 வது நாளாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது.
 
இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
 
விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர்.
 
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
நேற்று அவர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது  ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர்.
 
திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று  வருகிறது.  கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மன்னார்குடி சுந்தரகோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமல தாயார் கல்வி அறக்கட்டளை பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான  வரித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.
 
கைப்பற்றப்பட்ட நகை, பணம், சொத்து விவரங்களை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள்.
 
தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து அறிக்கையை, மத்திய அரசிடம் வருமான வரித்துறை தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
 
அந்த அறிக்கையின் அடிப்படையில் 3 நாள் சோதனையில் மொத்தம் ரூ.5.5 கோடி ரொக்கப் பணம், 15 கிலோதங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 150 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.150 கோடி மதிப்புள்ள 40 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது. பெயரளவிலான சில போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
 
தொடர்ந்து வருமான வரி சோதனை நீடிப்பதால் சசிகலா உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சோதனை நீடிப்பதால் அனைவரும் 3-வது நாளாக  வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
 
வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டிடிவி தினகரனின் அண்ணன் பாஸ்கரன் பங்களாவில் 7 கிலோ தங்கம் – மலைத்த அதிகாரிகள்

டிடிவி தினகரன் சகோதரர் டிடிவி பாஸ்கரனின் பங்களாவில் இருந்து 7 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
 இந்த சோதனையில் தினகரனின் சகோதரர்கள், உறவினர்கள், இளவரசியின் மகள் கிருஷ்னபிரியா, ஜெயா டி.வி இயக்குநர் விவேக் ஆகியோரது இல்லங்களும் அடங்கும்.
 
சென்னை நீலாங்கரையில் உள்ள டிடிவி தினகரனின் அண்ணன் பாஸ்கரன் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மேலும் கணக்கில் வராத 7 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பாஸ்கரன் முன்பு ஜெ.ஜெ டிவியின் நிர்வாகியாக இருந்தார். ஜெயலலிதா விரட்டி விட்ட பின்பு எந்த தொழிலுமே செய்யவில்லை.
 
அதோடு சினிமாவில் நடிக்கிறேன் என்று பணத்தை செலவு செய்து வருகிறார். எந்த தொழிலுமே செய்யாமல் இத்தனை கிலோ தங்கம், வைரங்கள், பணம் வந்தது எப்படி என்று மலைத்து வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
 
இன்னும் தோண்ட தோண்ட என்ன கிடைக்குமோ என்று அதிகாரிகள் பேசிக்கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் சுந்தரக்கோட்டையிலுள்ள திவாகரனின் வீடு, அவரது செங்கமலத்தாயார் கல்லூரி உள்ளிட்ட 20க்கும் அதிகமான இடங்களில் நேற்று கல்லூரியில் நடைபெற்ற சோதனையின்போது ஆவணங்களுடன் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்கள், தங்க நகைகள், வைரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 



Share this:

NEAR REJSER DK

Tamilmatrimony.world

DENMARK AIR TRAVELS

, Kommende Film

Kommende Film

Nearairtravelsdk-DANMARK

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Hik It Solution

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies