, கண்களை பாதிக்கும்! ரத்த சொந்தம்

05 Dec,2018
 

 

 
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில், 50 சதவீத திருமணங்கள், குடும்ப வழக்கம், சமூக நம்பிக்கைகள் என்று பல காரணங்களால், ரத்த சொந்தங்களுக்குள் நடக்கிறது. நம்மைப் போலவே, வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்காசிய நாடுகளிலும், இந்த பழக்கம், கலாசாரம், சமூக ரீதியில் விரும்பிச் செய்யும் நிகழ்வாக உள்ளது.
தாத்தா – பாட்டி என்று நம் முன்னோர்களிடம் இருந்து, பொதுவாகவே, மரபணுக்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம். மாமா – மருமகள் என்ற பெற்றோருடன் பிறந்தவர்களின் பிள்ளைகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, மரபியல் கோளாறுகள் அதிகம் வருகின்றன.
தாய்மாமா – மருமகள் திருமண உறவில், பகிர்ந்து கொள்ளப்படும் மரபணுக்கள், 25 சதவீதமாகவும் மாமா – அத்தை பிள்ளைகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் மரபணுக்களின் சதவீதம், 12.5 சதவீதமாகவும் உள்ளன.
அதாவது, தாய் மாமாவைத் திருமணம் செய்து கொள்வதால், பிறக்கும் குழந்தைகளுக்கு வரும் மரபணு கோளாறுகள், மற்ற ரத்த சொந்தங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
நெருங்கிய உறவு திருமணங்கள் வாயிலாக பிறக்கும் குழந்தைகளுக்கு, மூளை நரம்பு மண்டல பாதிப்பு, உணர்வு உறுப்புகள் பாதிப்பு, பிறவியிலேயே ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நோய்த்தொற்று, புற்று நோய் பாதிப்பு வரும் அபாயமும் அதிகம் உள்ளது.
கண்களைப் பொறுத்தவரை, மரபணு குறைபாடுகள், அதன் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். கண்களே இல்லாமல் பிறப்பது, சிறிய கருவிழி, இயல்பைக் காட்டிலும் கண்கள் சிறிய அளவில் இருப்பது, கண் வெண்படல ஊட்டச்சத்துக் குறைபாடுகள், கண்புரை, விறைப்பு நோய், விழித்திரை குறைபாடுகள், சிதைவுகள் என்று ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான கோளாறுகளோ ஏற்படலாம்.
பிறவியிலேயே ஏற்படும் கருவிழி நோய்கள், கண்புரை, விறைப்பு நோய் ஆகியவற்றிற்கு, செய்யும் அறுவை சிகிச்சையில், பார்வைத் திறன் கிடைக்கும். ஆனால், பிறவியிலேயே ஏற்படும் விழித்திரை பிரச்னைகளுக்கு, சிகிச்சை ஆரம்ப நிலையிலேயே உள்ளது.
விழித்திரை கோளாறுகளுக்கு, மரபணு சிகிச்சை, நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், பரிசோதனை நிலையிலேயே உள்ளது. மரபியல் காரணங்களால் ஏற்படும் பார்வைத் திறன் இழப்பை சரி செய்ய, ஸ்டெம் செல் சிகிச்சை நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது.
சமீபத்தில், இளம் வயது நபர் ஒருவர், பரிசோதனைக்கு வந்தார். கண்ணாடியோடு பார்க்கும் போது, அவரின் பார்வைத் திறன் இயல்பானதாக இருந்தது. சில பரிசோதனைக்குப் பின், அவரின் கடந்த கால மருத்துவ வரலாறு, குடும்பப் பின்னணி குறித்து, ஆய்வு செய்தோம்.
விழித்திரை சார்ந்த கோளாறால், அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது பெற்றோர் மிக நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ததால், மரபியல் காரணங்களால் இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தது.
முழுமையான பரிசோதனையை அவருக்குச் செய்து, பிரச்னை, அதற்கான சிகிச்சை குறித்து விளக்கி, தொடர் சிகிச்சைக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளோம். இந்தக் கோளாறை சரி செய்வதற்கான நம்பிக்கையையும் கொடுத்து உள்ளோம்.
நம் சமுதாயத்தில், ஆழமாக வேரூன்றியிருக்கும், ரத்த சொந்தங்களுக்கு இடையிலான திருமணம், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.

 



Share this:

NEAR REJSE. DK

ayngaran.dk

.

DENMARK

Kommende Film danmark

DANMARK TAMIL FILM

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND /2018/2019

HolylandTour Package 2018 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk

Denmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014 புதன் திறப்புவிழா

NAER CAR RENTAL SERVICES

swees travels

தொலைபேசி எண்: 22666542 dk

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

puthandu palan

09N 10 D Best of Kerala

Wedding Holl in india

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

திருமண நல் வாழ்த்துக்கள்

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

இணையத்தளங்கள் இணைப்புக்கள்

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies