ஆன்மா உங்கள் அருகில் இருப்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா? நம்பமுடியாத உண்மை!
12 Apr,2019
நம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும்.
ஆனால் அவர்களது உடல் மட்டுமே நம்மை பிரிந்திருக்கிறதே தவிர அவர்களின் ஆன்மா அல்ல.
அவர்கள் திரும்பி வருவதற்கு எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் திரும்பி வருவதை உணர கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
அந்த வகையில் ஆன்மாக்கள் அருகில் இருந்தால் சில அறிகுறிகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆன்மாக்களுக்கும், மனிதர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஊடகம் வாசனை ஆகும். அது அவர்களின் உடல் வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்களின் வாசனையாக இருக்கலாம் அல்லது அவர்களின் இருப்பை நீங்கள் எளிதில் உணர உதவும் வாசனையாக இருக்கலாம்.
இறந்தவர்களை பற்றி கனவு காண்பது சாதாரணமான ஒன்றுதான் ஆனால் உங்களுக்கு பிடித்தவர்களே கனவில் வந்தால் அவர்கள் உங்களுக்கு அருகில்தான் எங்கோ இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் உங்கள் கனவில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனியுங்கள், ஏனெனில் அது அவர்கள் உங்களுக்கு கூறவரும் செய்தியாக இருக்கலாம்.
சிலசமயம் உங்களுக்கு பிடித்த சிறிய பொருட்கள் காணாமல் போகலாம், இதனை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு பிடித்த ஆன்மாக்கள் உங்களிடம் ஏதாவது சொல்ல முயற்சிப்பதன் அடையாளமாக கூட இது இருக்கலாம்.
தொடர்ச்சியாக அவர்களை பற்றியே சிந்தனையே உங்களுக்கு இருந்தால் யாருடனாவது இதைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள். அவர்களை பற்றிய வித்தியாசமான எண்ணங்கள் உங்களுக்கு வந்தால் அவர்கள் உங்களிடம் கூறவருவது என்னவென்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஆன்மாக்கள் உணர்த்தும் முக்கியமான அறிகுறியாக இசை உள்ளது. நீங்கள் இருவரும் என்ன உறவை பகிர்ந்து கொண்டீர்களோ அதனை உணர்த்தும் பாடலை அடிக்கடி கேட்க நேர்ந்தால் அவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.
டிவி அல்லது லைட், மற்ற மின்சார பொருட்கள் திடீரென செய்லபட தொடங்குவது உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருப்பதற்கான அடையாளம் ஆகும். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் முடிந்தளவு அந்த வீட்டில் இருந்து விரைவில் வெளியேறி விடுங்கள்.
ஆன்மாக்கள் பொதுவாக தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு ஊடகம் எண்கள் ஆகும். அது இறந்தவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்களுடன் தொடர்புடைய எந்த நாளாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
பக்கத்தில் யாரும் இல்லாத போது யாரோ தொடுவது போன்ற உணர்வு வருவது சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் ஒரு வலிமையான அறிகுறி இதுவாகும். இது தொடுவது போலவோ அல்லது நெற்றியில் முத்தமிடுவது போன்ற உணர்வாகவோ இருக்கலாம்.
நமது கண்களுக்கு தெரியாத பல விஷயங்கள் மிருகங்களின் கண்களுக்கு தெரியும். உங்கள் வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் அவைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனியுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களின் ஆன்மா உங்கள் வீட்டில் இருந்தால் அவை வித்தியாசமாக நடந்து கொள்ளும்.