நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ESP ஆற்றல் அமானுஷ்யமா?

01 Jan,2019
 

 

நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என பலவாறு அழைக்கப்படும் ESP. வியப்பைத் தருவதாகவும் புரியாத புதிராகவும் இன்றும் இருந்து வருகிறது.
 E.S.P (Extra Sensory Perception) உண்மைதானா? 
நாம் ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ESP உலகெங்கிலும் பல்வேறு ESP சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ESP மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்.
ESP என்றால் என்ன?
  நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ESP எனப்படுகிறது. பொதுவாக, ESP ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை, அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். இதுதான் ESP என்பதன் எளிமையான விளக்கம். இந்த ESPயில் பல வகைகள் உள்ளன.
       வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு –  Precognition என்று பெயர்.  இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர். ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர். ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.
இதில் முக்கியமான விஷயம் ESP என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ESP
இதை வெறும் விளக்கங்கள் கூறி புரியவைப்பதைவிட சில உதாரணங்களை கூறினால் இன்னும் தெளிவடையலாம். 
இனி ஒரு சில உதாரண சம்பவங்களை பார்ப்போம். 
முதலிலாவதாக ஒரு சம்பவத்தை பார்ப்போம்ஸஸ
இது 1977ல் பிரிட்டனில் நடந்த சம்பவம். ஹில்ஹெட் லார்ட் ஜெக்கின்ஸ் என்பவர் தொழிலாளர் கூட்டமைப்புக் கட்சியின் MPயாக அப்போது இருந்தார். அவர் பணி நிமித்தமாக ரோம் நகரத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவரது சக MPயும், நண்பருமான ஆண்டனி கிராஸ்லாண்ட் என்பவர் தோன்றினார். அவர், இவரிடம், “நண்பா, நான் இன்னும் சற்று நேரத்தில் இறக்கப் போகிறேன்.. விடைபெறுகிறேன். நன்றி” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.
       திடுக்கிட்டுக் கண் விழித்தார் ஹில்ஹெட். இது வெறும் சாதாரணக் கனவுதானா அல்லது ஏதேனும் முன்னறிவிப்பா என்று புரியாமல் திகைத்தார். சிலமணி நேரங்களில் ஆயிரம் மைல்களுக்கும் அப்பாற்பட்ட ஆக்ஸ்போர்டிலிருந்து அவருக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது, ஆண்டனி இறந்து விட்டாரென்று.
       தான் இறக்கப் போவதை எப்படியாவது தனது நண்பருக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்று ஆண்டனியின் ஆழ்மனம் நினைத்ததன் விளைவுதான் அந்தக் கனவு என்பதை உணர்ந்து கொண்டார் ஹில்ஹெட்.
விலங்குகள்கூட ESP திறன் படைத்தனவையா? 
மனிதர்கள் மட்டும்தான் என்றில்லை. விலங்குகளுக்கும் கூட இத்தகைய ESO ஆற்றல்கள் உண்டு. குறிப்பாக மனிதர்களோடு நெருங்கி வாழும் நாய், பூனை போன்றவற்றிற்கு இயல்பாகவே இந்த ஆற்றல்கள் அதிகம். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை விலங்குகள் முன்கூட்டியே அறிந்துவிடுகின்றன. (தமிழகத்தில் சுனாமி மீட்புபணியின்போது கட்டி வைக்கப்பட்ட கால்நடைகள் தவிர பிற கால்நடைகள் குறிப்பாக தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் ஒன்றின் உடல்கூட கிடைக்கவில்லை. அவை அனைத்தும் உயிர்தப்பிவிட்டன. சுனாமியை முன்கூட்டியே அறிந்ததனால் அவை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டன) விலங்குகளின் ESP பற்றிய சம்பவங்கள் பல வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உண்மை சம்பவம் – 2: 
1980ல் கம்பெல் என்ற ஹாலிவுட் நடிகை உடல் நலமில்லாது படுத்த படுக்கையாக இருந்தார் ஷோர என்ற நடிகை அவருக்கு உதவி செய்தார் இதற்கு உபகாரமாக
கம்பெல் ஷோரவிற்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார் ஒரு நாரையின்  வாட்டர் கலர் ஓவியம் பின் ஷோர ஹாலிவுட் சென்றுவிட கம்பெல் பிரான்ஸ்  சென்றார்.  தனது புதிய வீட்டில் குடிபுகுந்த ஷோர 
ஒருநாள் இரவில் அதிர்ச்சி கனவுஸ.
கனவில் கம்பெல் தனது கல்லறையில் இருந்து கொண்டு ‘நான் கொடுத்த படத்தின் பின்புறம் பார்த்தாயா?’ என்று கேட்கஸஸ
ஷோர விழித்துக்கொண்டார்.  கம்பெல்தான் உயிரோடு இருக்கிறாளே என்று எண்ணியபடி ஓவியத்தின் பிரேமை கழற்றிய  போது ஆச்சரியம்
அங்கெ ஒரு கோட்டுச் சித்திரம் இருந்தது மேக்ஸ் பேர்ம் என்ற பிரபல ஓவியர் வரைந்தது பின்புதான் ஷோர விற்கு விசயம் தெரிய வந்தது தான் கனவு கண்ட அதே தினத்தில் கம்பெல் இறந்துவிட்டார் என்று ஸஸ.
உண்மை சம்பவம் – 3:
யோசப் டியுலிஸ் என்ற ஒரு சாமானியர் 1969  ஜனவரி 16 இல் சிகாக்கோ நகரில் ஓர் ஹோட்டலில் உணவுக்கு ஆர்டர் கொடுத்த இடைவேளையில்  “பேப்பர் கொடுப்பா ரயில் விபத்தைப்பற்றி பாக்கணும்” என்றார்.
விபத்தா? என்ன ரயில்? என்ன விபத்து என்று சுற்றி இருந்தவர்கள் குழம்பினார்கள்
“அதுதாப்பா ஸஇங்க இருந்து தெற்கால 2 ரயில் பனிமூட்டத்தில ஒன்றோடொன்று மோதிச்சே “என்றார்.
ரேடியோ போட்டார்கள் இரவு 11  மணிவரை எந்த செய்தியும் இல்லை. ஏதோ உளறுகிறார் என்ற அவர்கள் கலைந்து சென்றனர். 
இரவு 1 மணி ரேடியோ  அலறியது  “சிக்காகோ விற்கு  தெற்கே இலியனாய் எக்ஸ்பிரஸ் ஐ சேர்ந்த 2  ரயில்கள் மோதி 47 பேர் காயம் 3 நபர்கள்  பலி என்று செய்தி கூறியது. அன்று அந்த ஹோட்டலில் அவருடன் உணவருந்த வந்த அனைவருக்கும் அதிர்ச்சி எவ்வாறு யோசப்புக்கு விபத்து நடக்கப்போவது முன்பே தெரிந்தது என்றுஸ..
யோசப் டியுலிஸ் என்பவர் ஒரு தீர்க்க தரிசி அல்ல சாதரண முடி திருத்தும் தொழிலை செய்பவர். யோசப் இன்னும் பலவற்றை கூறி உள்ளார் 1967 நவம்பர் 25 அன்று ஒரு கூற்றை கூறினார் ஒரு பாலம் இடிந்து விழப்போகிறது என்று மூன்று வரம் கழித்து நவம்பர் 25 இல் ஓஹையோ நதியின் குறுக்காக இருந்த வெள்ளிப் பாலம் உடைந்து விழுந்து 36  நபர்கள் பலியானார்கள் ஸ.நாட்டில் கலவரம் வரப்போகின்றது என 1968  ஜனவரி 8 இல் கூறினார் ஏப்ரல் 7 இல் சிகாக்கோவில் பெரிய கலவரம் ஏற்பட்டது இதை அடக்குவதற்கு 5000 மைய இராணுவப்படையினர் வரவேண்டி இருந்தது ஸ.
1968 டிசெம்பர் 15 இல் டியுலிஸ் கென்னடி குடும்பத்திற்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறினார். ஒரு பெண் நீரில் மூழ்குவதை தான் பார்த்ததாகவும் கூறினார். 1969  ஜூலை 18 இல் மேரிஜா என்னும் பெண் கென்னடியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் நீரில் மூழ்கி இறந்தாள் இது கென்னடியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்தது  மே 21 1969 இல் டியுலிஸ் ஒரு விமான விபத்து இடம்பெறும் அதில் 79  பேர் இறப்பார்கள் என்று கூறினார் செப்டம்பர் 9 இல் அலிகானி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி நன்கு பைலட்கள் 79 பயணிகள் இறந்தார்கள் ஸ
அடுத்த அமானுஷ்ய நிகழ்வு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பற்றியது இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தனது வீட்டிற்கு மூன்று மந்திரிகளை விருந்துக்கு அழைத்திருந்தார்  அப்பொழுது விமானத்தாக்குதல் தொடக்கி இருந்தது ஸசாப்பிட்டுக்கொண்டிருந்த சர்ச்சில் திடீர் என்று எழுந்து சமையல் சிப்பந்திகளிடம் சென்று சாப்பாட்டை டைனிங் டேபிளிலில் வைத்துவிட்டு பாம் செல்ட்டரினுள் செல்லுமாறு கூறினார் அவ்வாறு அவர் கூறி விட்டு வந்து அடுத்த மூன்றாவது நிமிடம் வீட்டின் பின் புறம் குண்டு விழுந்து சமையலறை முற்றாக நாசமாகியது 
இவரது வாழ்வில் இன்னொரு சம்பவமும் நடந்தது லண்டனில் காரில் செல்ல தயாராகும் போது அவர் எப்பொழுதும் உட்காரும் பக்க சீட் கதவு திறந்து அவருக்காக காத்திருந்தது வழக்கத்துக்கு மாறாக அவர் இருக்கும் சீட்க்கு எதிர்புற சீட்டில் சென்று அமர்ந்தார் கார் சென்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது கார் நிலை குலைந்தது ஒரு பள்ளத்தில் விழ இருந்தது சர்ச்சில் உயர்ந்த இடத்தில் இருந்ததால் கார் சமநிலைக்கு வந்தது நான் குண்டக்க இருந்ததால் தப்பித்தேன் என சர்ச்சில் கூறினார். இவைகள் எப்படி நடந்தன  என்று பின்னர் தான் எண்ணி வியப்படைந்தார் 
சர்ச்சில்லின் மனைவி இதை பற்றி கேட்ட பொழுது ஒரு குரல் நில் இந்த பக்கம் ஏறாதே என்று கூறியது அதனாலதான் அவ்வாறு செய்தேன் என கூறினாராம் ஸ
இவ்வாறான சில அமானுஷ்ய விடயங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்ஸ..
ஆனால் குறைந்தது  இரண்டு பேராவது பார்த்திருக்க வேண்டும் ஸ.
இல்லாவிட்டால் யாரும் நம்பமாட்டார்கள் .
ஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும் சக்திகளை சித்தர்களும் யோகிகளும் அடைகின்றனர். அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு நேர் பார்க்கும் போது விஞ்ஞானமும் திகைக்கிறது.
கண்களைக் கட்டிப் படிப்பவர்.

காஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் (Kuda But) தன் கண்களை இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார். பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச் சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள் 1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின் உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட். இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை! புகைப்படக்காரரால் இதனைப் படம் பிடிக்கத் தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது!
கண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர் வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி வந்து விடுமாம்! புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம்!! 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.
மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்! பிரமிக்கிறது விஞ்ஞானம்!!
 சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும். சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும். காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும். 
இது Extra sensory perception எனப்படுகிறது. இது கேட்டல், சுவைத்தல், பார்த்தல், உணர்தல் போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது . 
இதில் பல வகைகள் உண்டு 
1 . Telepathy  – டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதை படிக்கும் திறன்.
2 . Clairvoyance – வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை.
3 . Precognition – எதிர்காலத்தை அவதானிக்கும் திறன்.
4 . Retrocognition – இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்.
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்.
6 . Psychometry –  ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி, ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் போன்ற பல வகைகள் உண்டு .
இது ஒரு உதாரணம் .
இவரால் அந்த  நெற்றியின்  மீது இருக்கும் வடிவம் எது என்று பார்க்காமலே கூற முடியும்.
இதில் விஞ்ஞான ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .
இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம்  போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என  ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .
ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது எனகூறப்பட்டிருந்தது. 
ஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான, மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர், பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி (paranormal research)  J.B.Rhine என்பவரால்  இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .
கூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று, அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும், அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர். ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது இரு வித சாதாரண ஒளி, X-ray கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு தியரி இருக்கிறது .
ஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும். 
Precognition – எதிர்காலத்தை அவதானிக்கும் திறன், 
Retrocognition – இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்கள் ஆகியற்றிற்கு பொருந்தாது . காரணம் ஒரு மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு பெறுனர் இருக்க வேண்டும் .
ஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. “இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது” என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு, சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு, ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .
ஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே அறையில்  இருக்கும் இருவருக்கும், உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும் இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக இருப்பது உணரப்பட்டுள்ளது. ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை மற்றும் உடலில் அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய  எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .
இவ்வளவு குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி இதை, இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது?எப்படி நம்புவது? 
சிலருக்கு ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என மனம் உறுத்தும். அவரது நெருங்கிய உறவுகளுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்ப்படலாம். ஆனால் இது டெலிபதியோடு சம்மந்தப்பட்டது அல்ல. அது ESP யின் தொடக்க நிலையே. அதை நாம் வளர்த்தெடுத்தால் நாமும் ESP ஆற்றலை பெறலாம். அதை வளர்த்தெடுத்தெடுப்பது பற்றிய நமது முன்னோர்கள் பல நூல்களில் சூத்திரங்களாக பதிவுசெய்திருக்கிறார்கள். 

 Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies