ஆறு, ஏரிகளில் பெண்கள் நிர்வாணமாக குளிக்க அரசு அனுமதி
06 Apr,2017

ஆறு, ஏரிகளில் பெண்கள் நிர்வாணமாக குளிக்க அரசு அனுமதி
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆறு மற்றும் ஏரிகளில் பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக குளிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சுவிஸில் உள்ள ஜெனிவா மாகாணத்தில் மட்டும் பெண்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1929-ம் ஆண்டு இந்த மாகாணத்திற்கு உட்பட்ட ஆறு மற்றும் ஏரிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வாணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குளிப்பதற்கு தேவையான ஆடைகளை அணிந்து தான் ஆண்களும் பெண்களும் ஆறு மற்றும் ஏரிகளில் நீச்சலடித்து குளித்து வந்துள்ளனர்.
மேலும், இந்த தடையை மீறுபவர்களுக்கு பொலிசார் அபராதமும் விதித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெனிவாவை சேர்ந்த சுமார் 250 பேர் கையெழுத்து போராட்டம் நடத்தி இந்த தடையை விலக்குமாறு மாகாண அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
‘கடற்கரையில் சூரியக் குளியல் போடும்போது பெண்கள் மேலாடை இன்றி இருப்பதற்கு எவ்வித தடையும் இல்லை.
ஆனால், ஆறு, ஏரிகளில் குளிப்பதற்கு மேலாடை அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெனிவா மாகாண அரசு நிர்வாகத்திடம் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மனுவை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் ‘ஜெனிவா மாகாணத்திற்கு உட்பட்ட Rhone ஏரி உட்பட அனைத்து ஏரிகள் மற்றும் ஆறுகளில் பெண்கள் மேலாடை இன்றி குளிக்க அனுமதி அளிப்பதாக’ உத்தரவிட்டுள்ளனர்.