சூரியன் உமிளும் அதிக ஆற்றல் உள்ள வண்ண கதிர் வீச்சுகள் படம் பிடித்த நாசாவின் நூஸ்டர் தொலை நோக்கி
01 Jan,2015
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நெடுந்தொலைவில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை ஆய்வு செய்ய 2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ந்தேதி அணு நிறமாலை தொலை நோக்கி ஒன்றை அமைத்தது.அணு நிறமாலை தொலைநோக்கி அல்லது நூஸ்டர் எனப்படும் இந்த தொலை நோக்கி கருவி விண்வெளி சார்ந்த சார்ந்த எக்ஸ்-ரே தொலைநோக்கி கருவியாகும்.
இந்த தொலை நோக்கி எடுத்து அனுப்பிய மிக அரிய புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.இது நமது சூரி மண்டலைத்தை குறித்து நீண்ட நாள் நிலவும் மர்மத்தை விடுவிப்பதாக உள்ளது. சூரிய இயக்கவியல் குறித்து படம் எடுத்து அனுப்பி உள்ளது. சூரியன் குறித்து இது எடுத்து அனுப்பி இருக்கும் முதல் படம் இதுவாகும்.இந்த படம் பார்ப்பதற்கு சூரியன் உமிளும் வண்ண கோலங்களாக காட்சி அளிக்கிறது. பட்டாசில் இருந்து வெலீவரும் வண்ண வண்ண ஒளிக்கற்றைகள் போல் அழகாக உள்ளது.
மற்ற தொலை நோக்கிகள் எடுத்து அனுப்பும் சூரிய கிரகத்தின் படங்கள் மிகவும் பிரகாசமாக இருக்கும் குறிப்பாக நாசாவின் சந்திரா எக்ஸ்ரே தொலை நோக்கி. ஆனால் நூஸ்டர் கண்ணடிகள் மற்றும் கண்டறியும் கருவி கண்ணை கூசசெய்வதை தடுக்கின்றன.
சூரியன் பலவேறூ நிறங்கள் மாறுபடும் அதிக ஆற்றல் துகள்களை வெளியிடுவதை இந்த படம் காட்டுகிறது. நூஸ்டர் தொலை நோக்கி மூலம் 79 கிலோ எலக்ட்ரான் வோல்டேஜ் வரை கண்டறிமுடியும்.
சூரியன் வெளியிடும் பச்சை கதிர் வீச்சு 2 முதல் 3 கிலோ எலக்ட்ரான் வால்ட், ஊதா நிற கதிர் வீச்சு 3 முதல் 4 கிலோ கிராம் எலகட்ரான் வால்டேஜ்.
அதிக ஆற்றல் உள்ள எக்ஸ் கதிர்களை 30 லட்சம் டிகிரி வெப்ப நிலையில் வாயுவாக அது வெளியிடுகிறது.சிவப்பு மற்றும் புற ஊதா கதிர் பிரதிபளிப்பு மற்றும் மிக குறைந்த வெப்பநிலையில் 10 லட்சம் டிகிரி வெப்ப நிலையில் நாசா சூரிய தொலை நோக்கி படம் பிடித்து உள்ளது.