பிக் பிரதரை காப்பி அடித்து “பிக் பாஸ்” மாற்றிய விஜய் TV
23 Jun,2019
பிக் பிரதரை காப்பி அடித்து “பிக் பாஸ்” மாற்றிய விஜய் TV
பிரித்தானியாவில் புகழ்பெற்ற சனல் 4 TV நிகழ்சியாக இருந்தது, பிக் பிரதர். அதாவது புகழ்பெற்ற நாவல் ஆசிரியர் ஜார்ஜ் ஓவல் 1949ம் ஆண்டு எழுதிய ஒரு நூலில் இருந்தே இந்த தலைப்பு கொண்டுவரப்பட்டது. பொதுவாக வீட்டில் பெரியவர் என்று கருதப்படும் மூத்த அண்ணா உங்களை கண்காணிக்கிறார் என்பதே இதன் பொருள். ஒரு வீட்டில் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற வி.ஐ.பி நபர்களை சில வாரங்கள் அடைத்து. அங்கே நடப்பதை போட்டுக் காட்டி. இறுதியாக அங்கே உள்ளவர்கள் யாரை வெளியே அனுப்பவேண்டும் என்று ஒருவர் வாரமும் வோட்டு போடுவார்கள். இப்படியே அனைவரையும் அனுப்பி. இறுதியாக உள்ள 2 வி.ஐ.பிகளில் யார் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி உள்ளார் என்று கணித்து, அவரை வெற்றியாளராக அறிவிப்பதே இன் நிகழ்சியின் நோக்கம்.
அனால் 2014ம் ஆண்டு இன் நிகழ்சியின் பெயரை பல மில்லியன் கொடுத்து, TV5 விலைக்கு வாங்கியது. பெயரை பல மில்லியன் கொடுத்து விற்றது ஒரு புறம் இருக்க “லவ் ஐலன்” அதாவது காதல் தீவு என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தியது சனல் 4 தொலைக்காட்சி. அவர்களுக்கா சொல்லிக்க் கொடுக்க வேண்டும் ? எப்படி பிக் பிரதர்ஸ்சை அவர்கள் வெற்றி பெறச் செய்தார்களோ. அதே போல காதல் தீவும் தற்போது மிக மிக பிரபல்யமான நிகழ்சியாக மாறிவிட்டது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால். காதல் தீவில் உள்ள 13 பேருடைய அறையில் கமராக்கள் இருப்பது போதாது என்று. பாத்ரூமில் வேறு கமராவை போட்டு அதனையும் TV நிகழ்சியில் காட்டி மக்களை உசுப்பேத்தி வருகிறார்கள்.
இதனை அப்படியே காப்பி அடித்து தான், பிக் பாஸ் என்று ஆரம்பித்தார்கள் என்பது பலருக்கு தெரியாத விடையம். தற்போது வெளிநாட்டில் இது காதல் தீவாக மாறி. காம கழியாட்டங்களை காட்டும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதனை அடுத்து தமிழ் நாட்டில் எந்த TV சேனல் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க போகிறது என்று தெரியவில்லை. காதல் தீவில் உள்ள 6 ஆண்களில் மிக மிக கவர்சியான ஆண் என்று சொன்னால் அது டானி வில்லியம்ஸ் தான். 21 வயதாகும் இவருக்கு தற்போது மில்லியன் கணக்கான பெண் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் இந்த நிகழ்சியில் சேரக் கூடாது என்பதற்காக , இவரது பாஸ்போட்டையே திருடி சிலர் பெரும் குளறுபடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் பாருங்களேன். வாசர்களுக்காக காதல் தீவில் உள்ள நபர்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.