40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி – கமல் பேட்டி

07 Feb,2019
 

 

 
 
விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மநீம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளும் போட்டியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். வரும் 21ஆம் தேதியுடன் அந்தக் கட்சியை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகப்போகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்துவரும் கமல் மக்களைச் சந்தித்து மநீமவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் மநீம வரும் பொதுத்தேர்தலில் 40 தமிழகம் மற்றும் புதுச்சேரில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எனவும் திமுகவுடன் கூட்டணி அமைக்காது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட ஓராண்டு பயணம் நிறைவடைந்துள்ளது. இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா இதைவிட கடினமானது. அதில் இந்த அளவுக்கு அன்பைப் பெற முடியாது. நான் மக்களின் உண்மையான அன்பை மதிக்கிறேன். ஓர் உண்மையான உறவு இது.
தற்காலிக இலக்குகளை நீங்கள் கொண்டிருக்கலாம். அவற்றை எட்டிவிட்டீர்களா?
அந்த இலக்குகளை நன்றாகவே தாண்டிவிட்டோம். கட்சியின் சின்னம்இ கொடிஇ பெயர் ஆகியவற்றை அறிவித்து 5 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் ஆதரவைப் பெற திட்டமிட்டோம். ஆனால்இ அந்த இலக்கை உடைத்தெறிந்துஇ இப்போதே ஒவ்வொரு கிராமத்திலும் நன்றாக அறியப்பட்டிருக்கிறோம்.
அறியப்பட்டிருக்கிறீர்கள் என்பது சரிதான்; ஆனால், புதிய கட்சிக்கு வரும் அழுத்தத்திலிருந்து எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறீர்கள்?
அறியப்பட்டிருப்பது என்றால் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவது. அதற்கு கிராம சபைகள் மூலம் மூலம் கிராமங்களைச் சென்றடைய எங்கள் வழியை அமைத்துக்கொண்டோம். அதை மற்ற கட்சிகளும் போலச்செய்ய ஆரம்பித்துள்ளன.
உங்கள் முன் இருக்கும் சவால்கள் எவை?
பிறரால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவர்கள் நாங்கள் ஒரு மேடை அமைக்கக்கூட அனுமதிப்பதில்லை. நான் என் வாகனத்தையே மேடையாக ஆக்கிக்கொண்டேன். இடையூறுகளை எங்கள் வாயப்புகளாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்கு பலன் கிடைத்துள்ளது. நான் எங்கு சென்றாலும் அதிக அளவில் மக்கள் திரள்கிறார்கள். ஓர் ஆண்டில் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்துவிட்டேன்.
அரசியல்வாதியாக மக்களைக் கவரத் தொடங்கிவிட்டீர்களா?
அப்படித்தான் நினைக்கிறேன். என் குழந்தைப் பருவம் முதலே மக்களைச் சந்தித்து வந்துள்ளேன். அவர்கள் என்னை அணுகும் முறையில் கடலளவு மாற்றத்தைப் பார்க்கிறேன். முன்பு என்னை அவர்கள் திரைப்பட கதாபாத்திரமாக பார்த்தார்கள். இப்போது ஒரு மனிதனாகஇ ஆளுமையாகக் காண்கிறார்கள்.
உங்களுக்குள் ஒரு தலைவர் இருக்கிறார் எனக் கண்டுவிட்டீர்களா?
ஒரு பகுதி மக்கள் என்னை தலைவராகக் கருதியதால்தான் அரசியலில் பயணத்தைத் தொடங்க முடிவு செய்தேன். அதற்கான அறிகுறிகள் இருந்தன.
மநீம கூட்டணி அமைக்குமா? அல்லது தனித்துப் போட்டியா?
நாங்கள் தனித்துப் போட்டியிட முடியும். அதற்கான உறுதியைக் கொண்டிருக்கிறோம்.
தனித்துப் போட்டியிடுவீர்களா?
இது ஒரு பொறுப்பு. ஆனால் நாங்கள் எதற்காக அந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பரிசீலிக்க வேண்டும். நம் பலம் பன்மடங்காகும் என்றால்இ வெற்றி பெரும் வாய்ப்பு உறுதி என்றால்இ சரியான கூட்டணி இருக்கலாம். அதே நேரத்தில் என்னால் மற்றவர்களின் சுமையைத் தாங்க முடியாது. கூட்டணியால் எங்களுக்கு பலவீனம் ஏற்படக் கூடாது.
காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?
நாங்கள் எங்கள் கருத்தில் தெளிவாக இருக்கிறோம்.
திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள்.
கண்டிப்பாக.
திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய காங்கிரஸ் அழைத்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
இது எனது மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு. தமிழ்நாடுதான் எங்கள் கவனமாக உள்ளது. தொகுதிப் பங்கீடு போன்ற விஷயங்களுக்காக அதை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.
திமுக கூட்டணியைத் தவிர்த்து தனியாக போட்டியிடுவீர்களா?
அதற்கு தனியாகவே நாங்கள் போட்டியிடுவோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் பொய் சொல்ல விரும்பிவில்லை. அதற்குப் பின் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பயப்படுகிறோம்.
முதலில் போட்டியிடுவதாகச் சொன்னீர்கள். இப்போது மாற்றி யோசிப்பதுபோலத் தெரிகிறது. ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
மநீம போட்டியிடும் என்று கூறினேன். அது என்னைப் பொறுத்த விஷயம் அல்ல. வாய்ப்புகள் இருக்கின்றன. என்னுடைய தனி கவனம் 25 முதல் 40 வயது வரை உள்ளவர்களை நோக்கியே. அவர்களிடம் எங்களைப் பற்றி புரியவைக்க வேண்டும். இதனை முன்னெடுத்துச் செல்லக்கூடிய குழுவை எதிர்பார்க்கிறேன். அதற்கு 63 வயதோ 70 வயதோ ஆனவர்களிடம் செல்வதில் அர்த்தமில்லை.
அப்படியானால், மநீம 40 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளரை அறிவிக்கும்?
ஆம், அதைத்தான் செய்யப்போகிறோம்.
எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவது உங்கள் இலக்கு?
அனைத்து கட்சிகளின் நம்பிக்கையையும் நாங்கள் ஆட்டம் காண வைப்போம். நாங்கள் ஆழமாகப் பரவியுள்ளோம். இது எங்கள் விரும்பம் இல்லை. செயல் திட்டம்.
அதிமுக அரசு ஊழல் புகார்களைச் சந்தித்து வருகிறது. திமுக அதன் தலைவர் ஸ்டாலினை சரியானவராக முன்னிறுத்துகிறது.
(ஸ்டாலினை) நான் ஏற்கவில்லை. இவர்களுக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. நேரில் பார்க்கும்போது இருவரும் கைகுலுக்கி நலன் விசாரித்துக்கொள்வோம்.
கொல்கத்தாவில் நடப்பது பற்றி உங்கள் கருத்து?
என்ன நடக்கிறது என்று பாருங்கள். மத்திய அரசு தற்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது.
பாஜகவும் மோடியும் ஓர் அச்சுறுத்தலா? கிட்டத்தட்ட எல்லா பிராந்திய கட்சிகளும் அவர்களுக்கு எதிராக ஒன்றிணைகிறார்களே?
மோடி ஒரு தனிநபர். அவரை நாங்கள் தாக்குவதில்லை. நாங்கள் கட்சியைத் தான் பார்க்க வேண்டும். மோடியை மட்டும் தோற்கடித்து என்ன ஆகிப்போகிறது?
இந்தியாவுக்கு இன்னும் விரிவான பார்வை இருக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பின் மூன்றாவது அணி உருவாகலாம் என ஒரு பேச்சு இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் அரசு அமைவைவதை விட மூன்றாவது அணியை சில தலைவர்கள் ஆதரிக்கிறார்கள்.
நாற்காலியைப் பிடித்து ஒவ்வொருவரும் ஒரு பக்கம் இழுத்துகொண்டிருந்தால்இ ஒரு நோக்கமும் நிறைவேறாது.
ராகுல் பிரதமராவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர் ஒருவரே இந்த நாட்டை நடத்திச் செல்கிறாரா? அவர்தான் இத்தருணத்தின் தேவை என்றால் இந்தியா அவரைத் தேர்ந்தெடுக்கும். அனைவரும் ஒரு வகையில் இந்தியாவை மேம்படுத்துவதற்கான கருவியாகவே திகழ்வார்கள். இதில் ஒருவருக்கு சார்பாக என்னால் பேச முடியாது.
அப்படியானால், யார் வேண்டுமானாலும் பிரதமராக வருவதை ஏற்கிறீர்களா?
அறிவார்ந்த எவராக இருந்தாலும். சர்வதேசத் தளத்தில் நாம் வேடிக்கையான நடந்துகொள்ள முடியாது. நாம் 120 கோடி பேர். நமது அடுத்த சத்தியாகிரகம் இந்தியாவை திறன் ரீதியாக வளர்ப்பதற்காகவே.
கிராம சபை கூட்டங்கள் எவ்வளவு வெற்றியைக் கொடுத்திருக்கின்றன?
அது மிகவும் வெற்றிகரமானது எனச் சொல்ல முடியாது. ஸ்டாலின் எங்களைப் பின்பற்றுவது எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். ஆனால் கிராம சபை வெற்றி அடைய தொடர்ந்து மக்களை வளப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
சமீபத்திய பேட்டியில் நீங்கள் விஜய்யை வரவேற்க  தயாராக இருப்பதாகக் கூறினீர்கள்.
அவர்கள் குறிப்பாக விஜய் பெயரைச் சொல்லிக் கேட்டார்கள். அதனால் சொன்னேன். விஜய் மட்டும் என்ன, யாரையும் வரவேற்க தயார்தான். அவரைப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என நினைத்து முன்வரலாம்ஸ ஆனால் அவரை வற்புறுத்த முடியாது.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறதே.
அது எங்களுக்குக் சாதகமாகவே அமையும். நீங்கள் சொன்னதுபோல அந்தப் பேச்சு ஒரு பேரம். நாங்கள் எதிர்நோக்கியிருப்பது தமிழகத்தின் முன்னேற்றம்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies