திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்

24 Feb,2018
 

 
 
 
 
 
 தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார்.
 
 
 
 தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
 மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
 
 
 
 இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும், இவர் பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
 
 இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி என நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது.
 
 இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies