சினிமா துளிகள் மகளின் செல்ஃபி மோகத்திற்கு ஸ்ரீதேவி தடை?

13 Feb,2017
 

             

மகளின் செல்ஃபி மோகத்திற்கு ஸ்ரீதேவி தடை?


  
.
சாதாரண மக்கள்தான் செல்ஃபி மோகத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால், பிரபலங்கள் பலரும் செல்ஃபி மோகத்தில்

இருக்கிறார்கள். சீனியர் நடிகையான ஸ்ரீதேவி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டே இருப்பார். அவரைப் போலவே அவருடைய மகள் ஜான்வியும் அவருடைய சமூக வலைத்தத்தில் அவருடைய செல்ஃபி புகைப்படங்களை அதிகம் பதிவிடும் பழக்கம் உடையவர்.

ஜான்வி விரைவில் ஹிந்தித் திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் மகளின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியாவது ஸ்ரீதேவிக்குப் பிடிக்கவில்லையாம். அடிக்கடி செல்ஃபி எடுத்து படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என மகளிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். அதற்கு ஜான்வியும் சரியனெ சம்மதித்துவிட்டாராம்.

 

 

பாலிவுட் வட்டாரங்களில் இதுதான் தற்போது அதிகப்படியான பேச்சாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அம்மா புகைப்படங்களைப் பதிவிடுவதை குறைத்துக் கொண்டாலே மகளும் குறைத்துக் கொள்வாரே என சிலர் கிண்டலடிக்கிறார்களாம்.



காதலரை கரம்பிடித்த ‘சொப்பன சுந்தரி’ மனிஷா யாதவ்



‘சொப்பன சுந்தரி’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் தனது காதலரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.




பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.

 

 
இந்நிலையில், சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடிப் போனார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மனிஷா யாதவ், தற்போது தனது காதலரை கரம் பிடித்திருக்கிறார்.

7 வருடங்களாக காதலித்த தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தேறியுள்ளது. ஆனால், திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திரையுலகில் மனிஷா யாதவ்வுக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 


ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்த கங்கனா ரனாவத்




இந்தி பட உலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ரூ. 2 கோடி வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். யாருக்கு கொடுத்தார் என்பதை கீழே பார்க்கலாம். 

இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவரை மிகவும் கவர்ந்தவர் யோகா குரு சூர்ய நாராயண் சிங். கங்கனா  ரனாவத் நடிக்க வரும் முன்பு அவரது 18-வது வயதில் மும்பையில் உள்ள ஜுஹூ கடற்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு யோகா  செய்து கொண்டிருந்த சூர்ய நாராயண்சிங்கை பார்த்து வியப்பு அடைந்தார்.



பின்னர் அவரை சந்தித்து தனக்கு யோகா கற்றுத்தரும்படி கங்கனா கேட்க, அதில் இருந்து அவருக்கு சூர்ய நாராயண் சிங் யோகா குரு  ஆனார். இன்று வரை அவருடைய ஆலோசனைப்படி தான் கங்கனா ரனாவத் யோகா செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்து  இருக்கிறார். இந்தி பட உலகின் பிரபலமாகவும் இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய யோகா குரு மும்பையில் யோகா மையம்  ஒன்றை தொடங்க திட்டமிட்டார். இதை அறிந்த கங்கனா ரனாவத் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது இரண்டு படுக்கை அறை  கொண்ட வீட்டை சூர்ய நாராயண்சிங்குக்கு அன்பளிப்பாக கொடுத்து அவரை யோகா மையம் தொடங்கும்படி கூறி இருக்கிறார். இந்த  வீட்டின் மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

‘யோகா குருவுக்கு குருதட்சணையாக இந்த வீட்டை கொடுத்து இருக்கிறேன்’ என்று கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.  இதுமட்டுமல்ல, அந்த வீட்டை யோகா மையமாக மாற்றி அமைக்க தேவையானவற்றையும் செய்து வருகிறார். இத்துடன் விடவில்லை.  தனக்கு தெரிந்தவர்களிடம் சூர்ய நாராயண்சிங்கிடம் யோகா கற்கும்படியும் கங்கனா ரனாவத் கூறி வருகிறார். இவரது குரு பக்தியை  அறிந்த இந்தி பட உலகம் பிரமித்து நிற்கிறது.

 


தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டப்மாஷ் புகழ் மிர்னாலினி


  

சுரேஷ் எஸ் குமார் இயக்க உள்ள புதிய படத்தில் டப்மாஷ் புகழ் மிர்னாலினி அறிமுகமாக உள்ளார். அது என்ன படம் என்பதை கீழே பார்க்கலாம்.


இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கவுள்ள படம்  'நகல்'. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த 'நகல்' படத்தில் நடிப்பதற்கு சில முன்னணி  கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமாக உள்ளார். இப்படத்தை 'கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்' சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார்.

மிர்னாலினி ரவி தனது தனித்துவமான டப்மாஷ்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தமிழகத்தில் இவருக்கென தனி  ரசிகர் பட்டாளமே உள்ளது. டப்மாஷில் அவரது முகபாவமும், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களுக்கு மிர்னாலினி மீதான ஈர்ப்பு  அதிகரிக்க காரணம். இந்நிலையில், அவர் `நகல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதால் சிறிய வீடியோவில் மட்டுமே  பார்த்த ரசித்த அவரது ரசிகர்கள், இனி வெள்ளித்திரையில் காணலாம்.

நகல் படம் குறித்து இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்ததாவது, 



 
"ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில்   உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த 'நகல்'. ஒரு பெண்ணின் அமானுஷிய   அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'நகல்' படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால்,   'நகல்' படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது.

தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக 'நகல்' இருந்தாலும், ரசிகர்களை  உற்சாகப்படுத்த கூடிய எல்லா  சிறப்பம்சங்களையும் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன்.

ஒளிப்பதிவாளர் - பிரசன்னா, இசையமைப்பாளர் - ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் - லோகேஷ், கலை இயக்குநர் - ரூபெர்ட்,   ஸ்டண்ட் மாஸ்டர் - சக்தி சரவணன் மற்றும் டிசைனர் - ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள்    இந்த 'நகல்' படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.



நயன்தாரா, விஜய், அஜித் பட வில்லனுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகனாக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில்  நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள `புரூஸ் லீ' படம் பொங்கலில் திரைக்கு  வரவிருந்தது. அதேநேரத்தில் விஜய் நடித்த `பைரவா' படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்த `புரூஸ் லீ', `புரியாத புதிர்'  உள்ளிட்ட படங்கள் பின்வாங்கியது.

அதனைத்தொடர்ந்து, `புரூஸ் லீ' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார். மேலும் பால சரவணன், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த்,  ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மார்ச் 3-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

 

அதேநாளில், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்-மகிமா நம்பியார் நடித்துள்ள `குற்றம் 23' படமும், தாஸ் ராமசாமி இயக்கத்தில்  நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள `டோரா' படமும், வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள `அட்டு' என்ற படமும்  மார்ச் 3-ஆம் தேதியே ரிலீசாக உள்ளது.

மேலும் விஜய், அஜித் படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிப்பில் உருவாகியுள்ள `கமாண்டோ 2' தமிழிலில் டப்  செய்யப்பட்டு அதே நாளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies