சினிமா துளிகள் ஏறிய எடை இறங்கலையே கண்ணம்மா...

01 Sep,2016
 

    


ஏறிய எடை இறங்கலையே கண்ணம்மா...


 பாகுபலி படத்தில் நடித்து முடித்தவர் அடுத்து இஞ்சி இடுப்பழகி படத்தில் உடம்பை கண்டபடி அதிகரித்து நடித்தார். அந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக சுமார் 20 கிலோ எடை போட்டார். ராஜமௌலி உள்பட அனைவரும் அனுஷ்காவையும் அவரது டெடிகேஷனையும் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் வந்தது வம்பு.
 
கடகடவென ஏறிய உடம்பு கடுமையாக உடற்பயிற்சி செய்தும் இறங்கவில்லை. அனுஷ்காவின் யோகாவுக்கும் இளகி கொடுக்கவில்லை உடம்பு. பாகுபலி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா தமன்னாவுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு ஸ்லிம்மாக அழகாக மாற வேண்டும். ஆனால் உடல் எடை இறங்கினால்தானே?
 
ராஜமௌலியின் பொறுமையை சோதித்த இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ், அவரிடமிருந்து அனுஷ்காவுக்கு ஏகப்பட்ட மண்டகபடியையும் வாங்கித் தந்தது. இப்போது கடைசி முயற்சியாக காலை எழுந்ததும் சைக்கிளில் கிலோ மீட்டர் கணக்கில் மிதித்துக் கொண்டிருக்கிறார்.
 
ஸ்லிம்மாகிறது எவ்ளோ கஷ்டம்னு இப்போ அனுஷ்காவுக்கு புரிஞ்சிருக்கும்.



             


அருண்விஜய் விவகாரம் : தலைகாட்ட முடியாத ராதிகா சரத்குமார் : பின்னணி என்ன?
தலைகாட்ட முடியாத ராதிகா சரத்குமார் : பின்னணி என்ன?



சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரெய்னாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் சினிமா திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதுவிருந்தும் அளிக்கப்பட்டது.

பிரபலங்கள் பலர் மது அருந்திவிட்டு ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து செல்பி எடுத்தனர்.அந்த விழாவில் கலந்து கொண்ட, தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ், ஜெயம் ரவி, சுந்தர் சி. குஷ்பு சுந்தர், ரம்யா கிருஷ்ணன், மதுபாலா, உள்ளிட்ட பலரும் போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது.

இந்த விருந்து முடிந்து குடி போதையுயில், வீடு திரும்பும் போதுதான் விபத்து ஏற்படுத்தி, காவல்துறையினரிடம் அருண்விஜய் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் மதுவிருந்து அளிக்கப்பட்டது வெளியே தெரியக்கூடாது என்று ராதிகா கவனமாக இருந்தாராம். குடிபோதையில் மிதந்த பல நடிகர், நடிகைகள் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் அருண்விஜய் மட்டும் போலீசாரிடம் மாட்டிக் கொண்டது ராதிகாவை அப்செட் ஆக்கியுள்ளதாம்.

எல்லோரும் இதுபற்றியே கேட்க, ராதிகாவால் வெளியே தலை காட்டமுடியவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.



அடக்குனா அடங்குற ஆளா அமலா பால்...


 
 
அமலா பாலின் தனிப்பட்ட வாழ்க்கையை இணையத்தில் பிரித்து மேய்ந்தார்கள். இப்படியொரு உளவியல் தாக்குதலுக்கு எந்தப் பெண் ஆளானாலும், துவண்டு போவார்கள். ஆனால், அமலா பால் அப்படியில்லை.
 
சென்னையில் நடந்த செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் அறிமுக விழாவில் அமலா பால் முகம் நிறைய சிரிப்புடன் கலந்து கொண்டார்.
 
நட்சத்திர கிரிக்கெட்டைப் போன்று பேட்மிண்டன் போட்டிகளும் சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெறவிருக்கிறது. இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.
 
இதில், சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
 
இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடுகிறார்கள்.
 
இந்த அணியின் விளம்பர தூதராக மாதவன் பொறுப்பேற்றுள்ளார். அணியின் ஊக்குவிப்பாளராக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.
 
இந்த விழாவில் அதே பழைய உற்சாகத்துடன் கலந்து கொண்ட அமலா பாலைதான் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்




ஸ்ருதி ஹாசன், கௌதமி சண்டை?: பூனைக்குட்டி வெளியே வந்தது!


 
 
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கௌதமி தான் கமலின் காஸ்டியூம் டிசைனராக இருந்தார். அதேப்போல் கமல் தற்போது நடித்து வரும் சபாஷ் நாயுடு திரைப்படத்திற்கு கௌதமி மற்றும் ஸ்ருதி ஆகியோர் தான் காஸ்டியூம் டிசைனர்.
 
இங்குதான் கௌதமி, ஸ்ருதி இடையே மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் சபாஷ் நாயுடு காஸ்டியூம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். கௌதமி கொடுக்கும் காஸ்டியூம்களை ஸ்ருதி ஏதாவது குறை சொல்லி, தேவையின்றி நிராகரித்து வந்துள்ளார்.
 
இது குறித்து கமலிடம், கௌதமி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சபாஷ் நாயுடு படம் குறித்து சமூக வலைதளத்தில் அமெரிக்காவில் இருந்து ஸ்ருதி வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் கூட கௌதமி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், கௌதமியை அதன் பிறகு சந்தித்தீர்களா? என்று  நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஸ்ருதி ஹாசன், எனக்கு என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்கவே சிரமப்பட்டு நேரம்  ஒதுக்க வேண்டி உள்ளது, மற்றவர்களை பார்க்கத் தான் நேரமில்லை என கூறி தங்களுக்கிடையே உள்ள மோதலை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்



அறிமுக இயக்குனருக்கு கால்ஷீட் தந்த விஷால்

 
 
விஷாலின் கத்திச்சண்டை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மாதம் மிஷ்கின் இயக்கத்தில் அவர் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் தொடங்குகிறது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி இரண்டாம் பாகம்.
 
இதையடுத்து அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு 1960 -இல் சிவாஜி நடித்த இரும்பு திரை படத்தின் பெயரை தேர்வு செய்துள்ளனர்



 மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிப்பவர், சிவகார்த்திகேயன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
 


ரெமோவுக்குப் பிறகு மோகன்ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க தற்போது சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
இனி தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதென சினேகா முடிவு செய்துள்ளார்.




சதுரங்க வேட்டை... சிக்குவாரா அரவிந்த்சாமி...?


 
தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கான துருவாவில் அதே வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். தமிழில் போகன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார். விரைவில் ஹாலிவுட் படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 
இந்நிலையில், சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இரண்டாம் பாகத்துக்கான கதையை சதுரங்க வேட்டையை இயக்கிய வினோத் எழுதியுள்ளார். ஆனால், அவர் படத்தை இயக்கப் போவதில்லை. அவர் ஸ்டுடியோ கிரீனுக்காக கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
 
சதுரங்க வேட்டை படத்தை தயாரித்த மனோபாலாவே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். அரவிந்த்சாமியை எப்படியும் அதில் நடிக்க வைப்பது என்று முயற்சி எடுத்து வருகின்றனர்.





Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies