சினிமா செய்தித் துளிகள் நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி

19 May,2016
 

             


நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி



நயன்தாராவும், அனுஷ்காவும் சம காலத்தில் சினிமாவுக்கு வந்த மூத்த நடிகைகள். இளம் கதாநாயகிகள் வருகை அவர்களின் மார்க்கெட்டை

துளியும் சரிக்கவில்லை. பெரிய கதாநாயகர்களின் ஜோடியாகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளாகவும் வலம் வருகிறார்கள். அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. நயன்தாராவுக்கு 31 வயது.

இத்தனை வயதுக்கு பிறகும் அவர்கள் சினிமாவில் கதாநாயகிகளாக நிலைத்து நிற்பது ஏற்கனவே வயது முதிர்வால் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட கதாநாயகிகள் சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா 2005-ல் மலையாளத்தில் இருந்தும், அனுஷ்கா அதே ஆண்டில் தெலுங்கில் இருந்தும் தமிழ் பட உலகுக்கு வந்தனர்.

முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தார்கள். நயன்தாரா 60 படங்களையும், அனுஷ்கா 50 படங்களையும் நெருங்குகிறார்கள். காதல் கதையம்சம் உள்ள படங்களில் இருந்து இருவருமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு மாறி விட்டார்கள்.

ராமாயண சீதா வேடத்தில் வந்த ஸ்ரீ ராமராஜ்ஜியம், பேயாக நடித்த மாயா, வெளிநாட்டில் இருந்து வந்து தீவிரவாத கணவனை தேடிப்பிடித்து கொலை செய்யும் பெண்ணாக நடித்த அனாமிகா, காது கேட்காத பெண்ணாக வந்த நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் நயன்தாராவின் நடிப்புத் திறமையை பறைசாற்றின. அனுஷ்காவும் ராணி வேடத்தில் வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சி எடுத்து நடித்த ருத்ரமாதேவி, பாகுபலி மற்றும் குண்டான பெண்ணாக வந்த இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்களில் பேசப்பட்டார்.

கைநிறைய படங்கள்

தற்போது இருவருமே கை நிறைய படங்கள் வைத்துள்ளனர். சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜீவாவுடன் திருநாள், கார்த்தியுடன் காஷ்மோரா, விக்ரமுடன் இருமுகன் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கிறார். இது நம்ம ஆளு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் இரண்டு பெயரிடப்படாத தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அனுஷ்கா பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி, சிங்கம்-3 போன்ற படங்களில் நடிக்கிறார். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி ஜோடியாக அவருடைய 150-வது படத்தில் நடிக்க ரூ.3 கோடி கேட்டாராம். ஆனால் அந்த தொகையை கொடுக்க சிரஞ்சீவி சம்மதிக்காமல், அவருக்கு பதிலாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

கடும் போட்டி

அனுஷ்காவும் ரூ.1.50 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். தற்போதைய நிலவரப்படி நயன்தாராவே தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தை தட்டிப்பறிக்கும் முயற்சியில் அனுஷ்காவும் முன்னேறி வருகிறார். இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது

 
எஸ்.ஜே.சூர்யா உடன் இணையும் ஸ்ருதிஹாசன்


  
.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிப் படங்களிலும் நடித்துக் கொண்டு செமத்தியாய் கல்லா கட்டிக்

கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் சூர்யாவுடன் எஸ் 3 படத்திலும், தனது அப்பா கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்திலும் நடித்து வருகிறார். இவை தவிர, 'பிரேமம்' மலையாளப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், ஹிந்தியில் 'யாரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் 4 படங்களை தற்போது கையில் வைத்திருக்கும் ஸ்ருதி, லேட்டஸ்ட்டாக மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பவன் கல்யாணை கதாநாயகனாக வைத்து எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கவிருக்கும் படம்தான் அது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சமீபத்தில் பூஜை நடைபெற்றது. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அனுப் ரூபன் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் ஆரம்பமாகிறது.

இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இரண்டு கோடி சம்பளம் என்றதும் மற்ற படங்களுக்குக் கொடுத்த தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொடுத்துள்ளார் ஸ்ருதி. ஏற்கெனவே பவன் கல்யாணுடன் 'கப்பார் சிங்' படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி.


 அட்டகாசத் தோற்றத்திற்கு திரும்பிய அனுஷ்கா


  
.
'சைஸ் ஜீரோ' படத்தில் நடித்ததற்காக தன்னுடைய உடல் எடையை அதிகமாக ஏற்றிய அனுஷ்கா மிகவும் குண்டாக மாறினார். அந்தப் படத்திற்காக

அவர் அப்படி மாறினாலும் அதற்கான பலன் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது. இதனால் மற்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆவதற்கும் அவருக்குப் பிரச்சனையாக இருந்தது. 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிலும் உடனடியாக கலந்து கொள்ள முடியாமல் போனது. ஏறக்குறைய ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு இப்போதுதான் அனுஷ்கா பழைய தோற்றத்திற்குத் திரும்பியுள்ளாராம்.

முன்பை விட மிகவும் அழகாகவே இருக்கிறார் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அனுஷ்காவின் புதிய தோற்றத்தைப் பார்த்தவர்கள் தற்போது அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க முன் வந்திருக்கிறார்கள். அதில் சிரஞ்சீவியின் படமும் ஒன்று. மேலும் சில தெலுங்குப் படங்களில் அவரை நடிக்க வைக்கவும் அணுகியிருக்கிறார்கள்.

இதனிடையே, அனுஷ்கா 'பாகுபலி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முப்பது வயதைக் கடந்த பின்னும் அனுஷ்காவிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருப்பதைப் பார்த்து இருபது வயதைக் கடந்த நாயகிகள் கொஞ்சம் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அனுஷ்காவிற்கு அழகு திரும்பியதோடு அதிர்ஷ்டமும் திரும்பியிருக்கிறது




எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷுக்கு இரண்டு கெட்டப்


  

இளம் ஹீரோக்களில் படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் தனுஷ். பிரபுசாலமனின் தொடரி, துரை

செந்தில்குமாரின் கொடி, கௌதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', கார்த்திக் சுப்பராஜுடன் ஒரு படம், பாலாஜி மோகனின் 'மாரி 2' ஆகிய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இவற்றில், தொடரி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

துரைசெந்தில்குமார் இயக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது. கௌதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு 20 நாள் கொண்ட முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது. துருக்கியில் நடைபெற்ற இந்த 20 நாள் படப்பிடிப்பில், பாடல் காட்சி ஒன்றையும் எடுத்துள்ளார்களாம். இதனைத் தொடர்ந்து விரைவில் சென்னை, மதுரை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ப்ளாஷ்பேக் காட்சியில் இடம்பெறும் பீரியட் போர்ஷன் ஒன்றும் உள்ளதாம். அதற்காக பழைய மாடல் கார் ஒன்றையும் வாங்கியுள்ளர் கௌதம் மேனன். இந்த போர்ஷனில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

 


லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்தார் காஜல் அகர்வால்


பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுமானவர் காஜல் அகர்வால். தெலுங்கில் வெளிவந்த மகதீரா படத்தின் மூலம் முன்னணி

நடிகை ஆனார். தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் காஜல், அதிகபட்சமான கிளாமர் காட்சிகளிலோ, முத்தக் காட்சியிலோ நடித்ததில்லை. முதன் முறையாக இந்திப் படத்தில் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.

தீபக் திஜோரி இயக்கும் தோ லப்சான் கி கஹான் என்ற இந்திப் படத்தில் காஜல் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரன்தீப் ஹோடா நடிக்கிறார். இது ஒரு காதல் கதை. கதைப்படி ஒரு காட்சியில் தன்தீப்புக்கு காஜல் லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் தீபக் திஜோரி கூறியதாவது: காஜல் அகர்வால் இதுவரை லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்ததில்லை. அதனால் நான் அவரை வற்புறுத்தவில்லை. என்றாலும் கதையையும், காட்சியின் சூழலையும் விளக்கி இந்த இடத்தில் லிப்லாக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அவர் முதலில் தயங்கினார். தென்னிந்திய சினிமாவில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அது போய்விடுமே என்றார். நான் அவருக்கு தென்னிந்திய படங்களில் வந்த முத்தக் காட்சிகள் பற்றியும் அதில் நடித்தவர்கள் பற்றியும் எடுத்துக்கூறி அவரது பயத்தை போக்கினேன். அதன் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். கதையிலும், கேரக்டரிலும் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தால் ஒரே டேக்கில் நடித்தார். என்கிறார் தீபக்.

இந்திக்கு செல்லும் தமன்னா!


  

தமன்னாவுக்கு, இந்தி தாய்மொழி என்ற போதும், தென்னிந்திய சினிமா தான், அவரை முன்னணி நடிகையாக வளர்த்து விட்டது. எனினும், தாய்மொழி

பாசத்தால், அவ்வப்போது இந்தி படங்களில் நடிப்பதும், அப்படம் தோல்வி அடைந்ததும், இங்கு வருவதுமாக இருந்து வந்தவர், தற்போது, தர்மதுரை படத்தில் நடித்து முடித்ததும், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் தில்வாலே படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தில் நாயகனாக ரன்வீர்சிங் நடிக்கிறார். அருள் வேணும்; பொருள் வேணும்; ஆகாச வாணி துணையும் வேணும்!






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies