சினிமா செய்தித் துளிகள் அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம்

23 Feb,2015
 


அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்

சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 களில் அறிமுகமான கலைஞர்களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் விஜய், சூர்யா, ஏ. ஆர் ரஹ்மான், ஜோதிகா, அரவிந்த்சாமி என்று பலர் கலந்து கொண்டார். ஆனால் அஜித் மற்றும் விக்ரம் காணவில்லை, இதை பற்றி கேட்டால் கடைசி நேரத்தில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

அதனால் நிறைய பேருக்கு அழைப்பு விடுவிக்கவில்லை. கண்டிப்பாக அடுத்து வருடம் நீங்கள் கேட்கும் அஜித் மற்றும் விக்ரம் இருப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார்.



 ஆர்யா-அனுஷ்கா இணையும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்


ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘மீகாமன்’. இப்படத்தை தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும், யட்சன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பி.வி.பி. புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மேலும், மாஸ்டர் பரத், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனரான பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். இவர் தெலுங்கு உலகின் பிரபல இயக்குனரான ராகவேந்திரா ராவின் மகனாவார். தெலுங்கில் சித்தார்த்-ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஒன்ஸ் அப்பான் ஏ வாரியர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். தமிழுக்கு இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் கனிகா திலோன் என்பவர் எழுதுகிறார். இவர் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ரா ஒன் படத்திற்கும் திரைக்கதையாசிரியராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் முதல்நாள் படபிடிப்பு இன்று தொடங்கியது. இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்க, கனிகா திலோன், பிரகாஷ் கொவேலமுடி ஆகியோர் கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்





பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: என்னை அறிந்தால், அனேகன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்


என்னை அறிந்தால், அனேகன் போன்ற படங்கள் எல்லாம் ரிலிஸாகி கடந்த வாரங்களில் நல்ல வசூலை அள்ளியது.

இந்த வாரம் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சண்டமாருதம் போன்ற சின்ன பட்ஜெட் படங்களே வெளியாகியுள்ளதால் பெரிய படங்களின் வசூல் இன்னும் தொடர்கிறது.

இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

1. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - ரூ. 26 லட்சம்

2. சண்டமாருதம் - ரூ. 10 லட்சம்

3. அனேகன் படத்தின் 2 வார வசூல் - ரூ. 3 கோடியே 2 லட்சம்

4. என்னை அறிந்தால் 3 வார வசூல் - ரூ. 5 கோடியே 71 லட்சம்






 நடிகை புளோராவுக்கு போனில் கொலை மிரட்டல்

தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் புளோரா ‘சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி’, ‘குஸ்தி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘கனகவேல் காக்க’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

புளோரா சமீபத்தில் ரிலீசான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் மனித வெடி குண்டாக நடித்து இருந்தார். பெண் தீவிரவாதியை போல் அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இந்த கேரக்டரில் புளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்து கருத்துக்கள் பதிவு செய்தனர். தற்போது அவரது மொபைல் போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. தீர்த்து கட்டி விடுவோம் என்றும் குறும் செய்தி அனுப்புகிறார்கள். இதனால் புளோரா பயந்து போய் இருக்கிறார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்





  ரஜினிமுருகன் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 18-ந் தேதி வெளியீடு

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கிசட்டை’ படம் வருகிற பிப்ரவரி27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. துரை.செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அனிருத் இசைமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். லிங்குசாமி தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கூடிய விரைவில் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை உலகம் முழுவதிலும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், தமிழகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies