விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான்ஸ.

19 Dec,2014
 

             


லிங்கா’ – இதுவரை எந்த ஒரு ரஜினி படத்திற்கும் வந்திருக்காத விமர்சனம் இந்தப் படத்திற்கு வந்திருக்கிறது. சுமார் நான்கு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் நேரடியாக நடிக்கும் ஒரு திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம்.

கதையிலேயே இருக்கும் ‘அணை’ என்கிற பிரம்மாண்டம், அதை வைத்து பின்னப்பட்ட காட்சிகள், மிகப் பெரும் நட்சத்திரங்கள், துணை நடிகர்கள் என ஒரு படத்தை ஆறு மாத காலத்திற்குள் திட்டமிட்டபடி முடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது, சவால் நிறைந்த ஒரு விஷயம்.

அப்படிப்பட்ட ஒரு சவாலை ஏற்று, முடித்துக் காட்டியிருக்கிறார்  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

கடந்த வெள்ளியன்று ‘லிங்கா’ படம் வெளியாகி ஒரு சில நாட்களுக்குள்ளேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்ற தகவல் ஒரு பக்கம்,  மறுபக்கம் படத்திற்கான பலதரப்பட்ட விமர்சனங்கள், சில இடங்களில் படத்திற்கு வசூல் குறைவாக உள்ளது, என பல குரல்களுக்கு மத்தியிலும் ‘லிங்கா’ படம் ரஜினிகாந்த் நடித்துள்ள படங்களிலேயே ஒரு சிறந்த ‘கிளாசிக்’ படம் என உறுதியுடன் தனது குரலை உயர்த்திச் சொல்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

நேற்று நமக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்துஸ.

“லிங்கா’ படத்தைப் பத்தி ஒரு சிலர்தான் எதிர்மறையா பேசிக்கிட்டிருக்காங்க. எல்லாரும் விமர்சிக்கிற மாதிரி எல்லாரையும் திருப்திப்படுத்தற மாதிரி ஒரு படத்தைக் கொடுக்க முடியாது. ரஜினியோட ‘படையப்பா’ படம் வெளிவந்த போது ‘முத்து’ படம் மாதிரி ‘படையப்பா’ படம் இல்லன்னு சொன்னாங்க. இப்ப ‘லிங்கா’ பிறகு அந்தப் படங்கள் மாதிரி இந்தப் படம் இல்லைன்னு சொல்றாங்க.

நான் ரஜினி ரசிகர்களுக்காகவும், குழந்தைகளோட குடும்பத்தோட வந்து பார்க்கிறவங்களுக்காகவும்தான் படம் பண்ணியிருக்கேன். சிலர் கிண்டலடிக்கிற மாதிரி ‘கிளைமாக்சை’ வேணும்னேலாம் எடுக்கலை. ஏற்கெனவே ஒரு கிளைமாக்ஸ் சீன் ‘வாட்டர் போட்டிங்’ சீன் யோசிச்சி வச்சிருந்தோம். அது அஜித் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்துல வந்துடுச்சி. கிளைமாக்ஸ் சீன் பிடிக்கிறன்னு சொல்றவங்க, ரஜினி அவங்க தாத்தா படத்தை தடவிக் கொடுத்துட்டு நகர்வாரு இல்லையா, அதோட தியேட்டரை விட்டு எழுந்து போகட்டும். ஒவ்வொருத்தரையும் திருப்திப்படுத்தற மாதிரி படம் பண்ண முடியாது.

director ks ravikumar lingaa working stills_00003சூப்பர் மேன், ஜேம்ஸ்பாண்ட் இவங்கள்லாம் ஒரு ஆக்ஷன் படத்துல என்ன பண்ணாலும் ஒத்துக்குவாங்க. அவங்களுக்கு மட்டும் என்ன தனி சக்தியா இருக்கு. நான் என்டர்டெயின்மென்ட் படம்தான் பண்றன், அதுல இப்படித்தான் வைக்க முடியும்.

படத்தோட ஆரம்பத்துல எக்கச்சக்கமான கூட்டம், அப்புறம் சில இடங்கள்ல கூட்டம் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாங்க. ஒரு இயக்குனரா நான் படத்தை இயக்கி சொன்ன தேதியில தர்றதான் முடியும். ஒவ்வொரு ஊர்லயும் அதிகமான தியேட்டர்கள்ல படத்தைப் போடறது, டிக்கட் விலைய ஏத்தி விக்கிறாங்கன்னு சொல்றதுலலாம் நான் தலையிட முடியாது. ஒரு சின்ன ஊர்ல கூட 5 தியேட்டர்ல போடறது யாரோட தப்பு. முன்னாடிலாம், ஒவ்வொரு இடத்துலயும் இவ்வளவு தியேட்டர்லதான் வெளியிடணும்கற ஒரு கட்டுப்பாடு இருந்தது, ஆனால், இப்ப அப்படியில்லையேஸஎல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கணும்.

படத்துல ஒரு காட்சி மட்டும்தான் ஒரு ஆங்கிலப் படத்துல இருந்து எடுத்ததுன்னு  சொல்றாங்க. டிஸ்கஷன்ல இருக்கும் போது அப்படி ஒரு நகை திருடற சீன் ஒண்ணு வைக்கணும்னு நினைச்சோம். அப்ப ஒரு உதவி இயக்குனர் இதை மாதிரி ஒரு காட்சி, நான் ஒரு படத்துல பார்த்திருக்கன்னு சொன்னாரு. அவர் சொன்னதை வச்சி டிஸ்கஸ் பண்ணி வேற மாதிரி அந்தக் காட்சியை எடுத்தோம். அப்புறம்தான் அது ஒரு ஹாலிவுட் படத்துல இருந்ததுன்னு அந்த சீனைக் காட்டினாங்க. முதல்ல நீங்க சொல்லியிருக்கக் கூடாதான்னு அவங்ககிட்ட சண்டை போட்டேன்.

அப்புறம் பென்னி குயிக்குக்கு நன்றி கூட போடலையேன்னு சொன்னாங்க. இது அப்படியே பென்னி குயிக் கதை கிடையாது. பொன். குமரன் இந்தக் கதையை வந்து என் கிட்ட சொல்லும் போது ஒரு ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படம் மாதிரியா தெரிஞ்சது. ரஜினி ரசிகர்களுக்காகவும் படத்துல ஒரு இளமையான கேரக்டரை வச்சி, அப்புறம் அவரை கலகலப்பான, ஜாலியான ஒரு திருடன்னு இன்னொரு கேரக்டரை உருவாக்கினோம். முழுமையான பென்னி குயிக் கதையா இல்லாததனாலதான் அவருக்கு நன்றி கார்டுலாம் போடலை.

director ks ravikumar lingaa working stills_00004நான் இதுவரைக்கும் 45 படத்துக்கும் மேல பண்ணிட்டேன், சில படங்கள் சரியா போகலை, ஆனாலும் அந்தப் படங்களையும் நான் எனக்குப் பிடிச்சிதான் பண்ணேன். நான் பிடிக்காம பண்ண ஒரே படம் ‘சாமி’ படத்தோட ஹிந்தி ரீமேக்தான். ‘ராணா’ ஆரம்பிச்ச பிறகு ரஜினி சார் மருத்துவமனையில இருந்ததால் அந்தப் படத்தை அப்ப தொடர முடியலை. அப்புறம் ரஜினி சார் சொன்னதாலதான் ஹிந்தி ரீமேக் பக்கம் போனேன். அங்க ‘சாமி’ ஹிந்தி ரீமேக் முடியற நேரத்துல சஞ்சய் தத் பத்து நாளைக்குள்ள ஜெயிலுக்குள்ள போயிடணும்கற ஒரு நிலைமை.

தயாரிப்பாளர் வந்து என்கிட்ட பல கோடிகள் செலவாகிடுச்சி சார், பத்து நாளைக்குள்ள படத்தை எப்படியாவது முடிச்சிக் கொடுத்துடங்கன்னு சொன்னாரு. அதனால தமிழ்ல  விஜயகுமார் பண்ண கேரக்டரை அமிதாப் வச்சி எடுக்க திட்டமிட்டிருந்தேன், அதையெல்லாம் எடுக்கவேயில்லை. பிளாஷ்பேக் காட்சிகள் இல்லாம, நான் நினைச்சபடி பண்ண முடியாம அவசரத்துல முடிச்ச படம் அது. அந்தப் படத்தைத் தவிர என்னோட எல்லா படமுமே எனக்குப் பிடிச்ச படங்கள்தான்.

‘லிங்கா’வுக்கு சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான். அவர்கள் சொல்வதை நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளலாம். ஒரு படம் வெளியான பின் பொதுவாக யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவார்கள், ஆனால் நான் அப்படியில்லை. உங்களைச் சந்திப்பதும்  அதற்காகத்தான்ஸ

அமிதாப் பண்ணுவது போன்ற முற்றிலும் மாறுபட்ட படங்களை ரஜினியை வைத்து இயக்கலாமேஸ.என நாம் கேட்டதற்குஸ“அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்தால் கண்டிப்பா நான் பண்ணுவேன். ஆனால், அந்த மாதிரி கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதப் பத்தி ரஜினி சார்தான் முடிவு பண்ணணும். அவர் அப்படி ஒரு முடிவு எடுத்தார்னா, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ மாதிரியான படங்களை நானும் எடுக்க ஆசைப்படுவேன்,” என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

‘லிங்கா’ படமும் கண்டிப்பாக ரஜினிகாந்தின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். அதற்கேற்றபடி அந்தப் படத்தில் உள்ள ராஜா லிங்கேசுவரன் கதாபாத்திரம் மீது அனைவருக்குமே ஒரு மரியாதை வந்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் ரஜினியின் முந்தைய கிளாசிக் படங்களின் கதாபாத்திரங்களின் வரிசையில் கண்டிப்பாகச் சேரும்.

எல்லோருக்கும் மீண்டும்  ‘ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும்’ மாதிரியான ரஜினிகாந்தைப் பார்க்க நிறையவே ஆசை உள்ளது. அப்படிப்பட்ட நடுநிலையான குடும்பத்து ரசிகர்களின் ஆவலையும் ரஜினிகாந்த் நிறைவேற்றுவாராஸ.?

இன்று நேற்று நாளை’ – புதுமையான முயற்சிஸ


பல வித்தியாசமான படங்களைக் கொடுத்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘இன்று நேற்று நாளை’.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், ‘அமர காவியம்’ மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படம் ஒரு புதுமையான முயற்சி என்கிறார் படத்தின் இயக்குனர் ரவிக்குமார்.

“இந்த படத்தோட கதையை முதன் முதலா தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் கிட்ட சொல்லும் போது, நீ சொல்றத அப்படியே ரசிகர்களுக்குப் புரிய வச்சிட முடியுமான்னு கேட்டாரு. முடியும்னு சொன்னேன், ஏன்னா இந்தப் படத்தோட திரைக்கதை அப்படிப்பட்ட ஒரு திரைக்கதை. ரசிகர்களுக்கும் அது புரியற மாதிரி அவங்கள என் பக்கம் இழுக்க முடியும்னு நான் கண்டிப்பா நம்பறேன்.

படத்தோட கதை என்னன்னு இப்பவே சொல்லிட்டால் மிகப் பெரிய சுவாரசியம் இருக்காது. ஒரு பெரிய விஷயம் படத்தோட நாயகனுக்குக் கிடைக்குது, அதை வச்சிக்கிட்டு அவன் என்னலாம் பண்றாங்கறதுதான் படத்தோட ஒரு வரிக் கதை.

அதை இன்று, நேற்று, நாளை என ஒரு வித்தியாசமான படைப்பா கொடுக்கப் போறோம். திரைக்கதையில அப்படி ஒரு விஷயம் வர்றதுனாலதான் படத்துக்கு அந்தப் பொருத்தமான பெயரையே வச்சோம். இந்த மாதிரி ஒரு யுக்தி இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு சொல்லலாம். படத்துக்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் கூடுதல் பலம். நிச்சயம் இந்தப் படம் ஒரு புதுமையான முயற்சியா இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.

வானவில் வாழ்க்கை’ – இசை மயமான படம்ஸ


இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். பாடல் போட்டி, நடனப் போட்டிகள் ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படங்கள் வெற்றி பெறும் என்பது வரலாறு.

இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது ‘வானவில் வாழ்க்கை’. ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘பருவ ராகம்’ என இளைஞர்களைக் கவர்ந்த இனிய இசை மயமான படங்களுக்கு அன்று முதல் இன்று வரை வரவேற்பு உத்திரவாதம்.  அத்தகைய ஒரு படம்தான் ‘வானவில் வாழ்க்கை’. மொத்தம் 17 பாடல்கள் அமைந்துள்ள இப்படத்திற்கு, இசையமைத்து இயக்குனராகவும் அறிமுகமாகிறார் ஜேம்ஸ் வசந்தன். இப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் படத்தில் நடித்தவர்களே பாடுகிறார்கள்.

“இரண்டு கல்லூரியின் இசைக் குழுக்களுக்கு இடையே நடக்கும் போட்டிதான் கதை. இசைக் குழுக்களில் இருக்கும் நபர்களே படத்தின் பிரதான 11 கதாபாத்திரங்கள். இவர்களே பாடல்களைப் பாடி நடித்திருக்கிறார்கள். கல்லூரி காலத்திலிருந்தே பாடல்கள் நிறைந்த ஒரு மியுசிக்கல் படத்தை இயக்குவதை பெரும் லட்சியமாகக் கொண்டிருந்தேன், கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

நடிப்பு, பாடல், இசைக்கருவி வாசித்தல் என பன்முகம் கொண்ட இளமை ததும்பும் 11 கலைஞர்களை 2 ஆண்டுகள் தேடி பிடித்து நடிக்க வைத்துள்ளோம். சிறு, குறு, பெரியது என கதையுடன் ஒன்றிய பொருத்தமான 17 பாடல்களை இசையமைத்தும் இருக்கிறேன். நான் அறிமுகம் செய்யும் இந்த இளைய திறமைகள் நிச்சயம் பெரிய அளவில் வளர்ந்து ஜொலிப்பார்கள். இப்படம் காதலர் தின கொண்டாட்டமாக வெளிவரும்,” என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies