சி.எம்.ஜெயலலிதாவின் முதல் வில்லன் நான் தான். நளினிகாந்த் பேட்டி செய்தித் துளிகள்

21 Sep,2014
 

             

நளினிகாந்தை ஞாபகம் இருக்கா? ரஜினியின் ஆரம்ப காலங்களில் ரஜினியைப் போலவே இருக்கும் நளினிகாந்தும் ஓரளவு பிரபலம்தான். இடையில் பல வருடங்களாக ஆளையே காணோம். அண்மையில் ஹிட்டடித்த 'யாமிருக்க பயமே’ படத்தில் ஃபிரைடு ரைஸ் திருடனாக வந்து 'யார் இந்தக் கிழவர்?’ என கேட்க வைத்தார். அவரிடம் ஒரு பேட்டி

''என்னாச்சு? இத்தனை வருஷமா எங்கே போனீங்க?''

''ஹாஹா... நான் இங்கேயேதான் இருக்கேன். 15 வருஷத்துக்கு முன்னாலேயே நடிக்கிறதை நிறுத்திட்டு சீரியல் பக்கம் போயிட்டேன். 'புதுப்பட்டி பொன்னுத்தாயி’, 'எங்க முதலாளி’னு ரெண்டு படங்கள் ஒரே நேரத்துல நடிச்சேன். அதுதான் கடைசியா நான் பண்ணின படங்கள். காவேரி, சுயரூபம், புதிய வாழ்க்கை, புதிய பாரதம்னு நாலு தமிழ் சீரியல்களும் மூணு தெலுங்கு சீரியல்களையும் ப்ரைம் டைம்ல தயாரிச்சேன். அஸ்வினி, சுதா சந்திரன், இளவரசினு பல முன்னாள் பாப்புலர் நடிகைகளை கன்வின்ஸ் பண்ணி சீரியல்களுக்கு கூட்டிட்டு வந்தது நான்தான். சினிமா மேல வருத்தம் எதுவும் இல்லை. ஆனா, ஏனோ எனக்கு நிப்பாட்டிக்கணும்னு தோணுச்சு. ஆனா, சீரியல்ல சிலபேரை நம்பி 50 லட்ச ரூபாய் நஷ்டமாச்சு. அதோட பசங்க தலை எடுக்கட்டுமேனு ஒதுங்கி வாழ ஆரம்பிச்சுட்டேன். இப்போ என் மகன் ராம், 'சிம்கார்டு’னு ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறான்.''

''இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு கேரக்டர்ல எப்படி நடிக்க சம்மதிச்சீங்க?''

''ஒரு நல்ல நடிகன்னா, கேரக்டராத் தெரிஞ்சா போதும்னுதான் விரும்பு வான். 15 வருஷங்களுக்குப் பிறகு என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிட்டதே எனக்குப் பெருமைதான். தாடி வெச்சு கிறுக்குபோல இருக்கிற ஒரு கிழவர் வேஷம்னதும் தயங்காம ஒத்துக்கிட்டேன். இப்போ படம் ரிலீஸானதும் நிறைய பேர் 'யார் அந்த ஃபிரைடு ரைஸ் தாத்தா’னுதான் கேட்கிறாங்க. இந்தப் படம் பார்த்துதான் நான் இன்னும் ஃபீல்டுல இருக்கேனு தெரிஞ்சுக்கிட்டு 'கத்தி’ படத்துல ஒரு பாஸிட்டிவ் ரோல் நடிக்கிற வாய்ப்பு வந்திருக்கு. எல்லாம் அந்த ஃபிரைடு ரைஸ் தாத்தா கேரக்டர் தந்த கிஃப்ட்.''

''சி.எம்முடன்தான் உங்க முதல் படமாமே... நிஜமா?''

''ஆமா. 1979ல எடுக்கப்பட்ட அந்தப் படத்தோட டைட்டில் 'சம்பா’. ஜெயலலிதா மேடம் பிரதான கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க. நான் அவங்களுக்கு வில்லனா நடிச்சிருந்தேன். படம் ரிலீஸ் ஆகி இருந்தா, எனக்கு தனி அடையாளம் கிடைச்சிருக்கும். ஆனா, துரதிருஷ்டவசமா கடைசி வரை அந்தப் படம் ரிலீஸாகலை. அந்தப் படத்துக்கு அப்புறம் 'இதயம் பேசுகிறது’ மணியனின் 'காதல் காதல் காதல்’ என்ற படத்திலும், 'அழைத்தால் வருவேன்’ என்ற படத்திலும் ஹீரோவா நடிச்சேன். அப்போ எனக்கு தாசரி நாராயணராவ் சார்தான் நளினிகாந்த்னு பேர் வெச்சார். சிவாஜி சாருக்கு வில்லனா ’சத்யம்’னு ஒரு படம் நடிச்சேன். அது 100 நாட்கள் ஓடியது. அப்படியே தெலுங்கிலேயும் 35 படங்கள் வில்லனா பண்ணினேன்.

என்.டி.ஆர், நாகேஸ்வர ராவுக்கு ஆரம்பிச்சு சோபன்பாபு, பால கிருஷ்ணா, சிரஞ்சீவி வரைக்கும் வில்லனா  நடிச்சேன். தமிழ்ல அப்போ 'முந்தானை முடிச்சு’ படத்துல நான் நடிச்ச ஒரு பாத்திரம் எம்.ஜி.ஆர் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் ஸ்கூல் பசங்களுக்கு வெச்சிருக்கிற சத்துணவை திருடிக் கொண்டுபோய் ஹோட் டலில் விற்கும் ஒரு கேரக்டர் பண்ணி இருந் தேன். என்னை வெச்சு இந்தத் திட்டத்தைப்பற்றி பெருமையா பேசுவார் பாக்யராஜ் சார். வெற்றிவிழாவில் ஷீல்டு கொடுக்கிறப்போ புரட்சித்தலைவர் கட்டிப்பிடிச்சு, 'என் திட்டத்தை ரெண்டு பேரும் மக்கள்கிட்ட கரெக்ட்டா கொண்டுபோய் சேர்த்துட்டீங்கப்பா’னு வாழ்த்தினார்.''

''ஆரம்ப காலங்கள்ல ரஜினி உங்க மேல தனிப்பட்ட முறையில வருத்தமா இருந்தார்னு சொல்றாங்களே?''

''அதான் இல்லை. என்னைப் பார்த்து அக்கறையா விசாரிப்பார். ஏன்னா 'பெத்த ராயுடு’ படத்தை டைரக்ட் பண்ணின ரவிராஜா பின்னிசெட்டியும் சிரஞ்சீவி மச்சான் அல்லு அரவிந்தும் சென்னை தியாகராயா காலேஜ்ல படிக்கும்போது என்னோட கிளாஸ்மேட்ஸ். அவங்க ரெண்டு பேருக்குமே என்னைப்பற்றி நல்லாத் தெரியும். பின்னாளில் அவங்க ரெண்டு பேரும் ரஜினிக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். நான் காலேஜ் நாட்கள்ல சினிமா வெறியோட நாடகம், டான்ஸ், பாட்டுப் போட்டினு நம்பர் ஒன் மாணவனா வலம் வந்ததை ஒரு சந்தர்ப்பத்துல ரஜினிகிட்ட சொல்லி இருக்காங்க. ரஜினி ஆச்சர்யப்பட்டாராம். இதை ரஜினியே என்னிடம் சொன்னார்.

70கள்ல சினிமாதான் என் வாழ்க்கைனு தீர்மானம் பண்ணப்போ பாம்பேல இருந்து ஹேர்கட் பண்றதுக்குனே வரும் ஸ்டைலிஸ்ட்கிட்ட அப்போ கிராஃப் வெட்டிக்கிட்ட நாலைஞ்சு பேர்ல நானும் ஒருவனா இருந்தேன். லேட்டஸ்ட் ஸ்டைல் எது வந்தாலும் நான் அப்போ அதை இங்கே கொண்டுவருவேன். அப்போ ஒருதடவை பத்திரிகையில் ரேமண்ட்ஸ் ஷர்ட்டிங் சூட்டிங் மாடலா என்னைப் படம் பிடிச்சுப் போட்டிருந்தாங்க. எனக்கு இதை எல்லாம் பத்திரப்படுத்தி என்னை விளம்பரப்படுத்திக்கணும்னு தோணியதில்லை. இப்பவும் ரஜினியைப் பார்த்து வந்தவர் இவர்னு என்னைச் சொல்வாங்க. ரஜினியோட வளர்ச்சியைப் பார்த்து எனக்கு நானே இந்தப் பேர் வெச்சுக்கலை என்பதுதான் நிஜம். அது ரஜினிக்கும் தெரியும். 'நீங்க எனக்கு சீனியர்னு தெரியும்’னு அவரே என்கிட்ட சொல்லி இருக்கார். அவருக்கு கொடுப்பினை அப்படி இருந்தது. எனக்குக் கொடுப்பினை இப்படி. கடவுள் எனக்கு விதிச்சது இவ்ளோதான் என்பதை நான் பெருந்தன்மையா ஏத்துக்கிறேன்'' என்றவாறு,

''இப்போ 'யாமிருக்க பயமே’ படத்தைக் கன்னடத்துல ரீமேக் பண்றாங்க. அதே ரோல்ல அங்கேயும் நடிக்கிறேன். இப்போ ஹைதராபாத் போறேன்'' என்றபடி விறுவிறுவென ரஜினிகாந்த் ஸ்டைலில் நடையைக் கட்டினார் நளினிகாந்த்.


சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கினை இயக்கும் பாரதிராஜா மகன்.


கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த மாபெரும் ஹிட் படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை பாரதிராஜா ரீமேக் செய்ய இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தன. தற்போது இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

மனோஜ் இதுவரை நடிகராகவும், உதவி இயக்குனராகவும் மட்டுமே இருந்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி வேடங்களில் நடிக்க புதுமுகங்கள் தேர்வாகிவிட்டனர்.  சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் சிறுவயதாக இருக்கும்போது ஒரு பிளாஷ்பேக் காட்சி வரும். மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் அவரை கொலை செய்யும் முதலாளியிடம் கமல்ஹாசன் குத்துங்க எஜமான் குத்துங்க' என்று வசனம் பேசுவார். அந்த முதலாளியின் கேரக்டரில் பாரதிராஜா நடிக்க உள்ளாராம்.

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்துள்ள மனோஜ், இந்த படத்திற்காக தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி திரைக்கதை அமைக்கும் பணியை முடித்துவிட்டாராம். கூடியவிரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீடு நள்ளிரவில் தாக்குதல். பெரும் பதட்டம்.


தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாலர் ஜாக்குவார் தங்கம் வீட்டின் மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் கோலிவுட்டில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீடு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ளது. இவரது வீட்டின் மீது நேற்று இரவு சுமார் 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் இவரது வீட்டின் முன்புறம் இருந்த கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக உள்ள ஜாக்குவார் தங்கம், சங்கத்தின் தலைவரக இருந்த கிரிதலிலால் நாக்பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறியதால், அவர்தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை ஆள் வைத்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் ஜாக்குவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.


நஸ்ரியா இடத்தை பிடிப்பேன். கதை நாயகி அகிலா கிஷோர்


பார்த்திபனின் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் குடும்பப்பாங்கான கேரக்டரில் அறிமுகமான அகிலா கிஷோர் அதிரடியாக பிகினியிலும் நடிக்க தயார் என்று அறிவிப்பு செய்துள்ளார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வாய்ப்புகள் தேடிவரும் அவருக்கு ஒருசில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முதல் படத்தில் அவருடைய குடும்பப்பாங்கான கேரக்டரை பார்த்துவிட்டு அதுபோன்ற கேரக்டர்களையே இயக்குனர்கள் கொடுக்க முன்வந்தனர். இந்நிலையில் தான் கிளாமரான வேடங்களில் நடிக்க தயார் என்றும் கதைக்கு தேவைப்பாட்டால் பிகினி உடையிலும் நடிப்பேன் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

இவருடைய அறிவிப்புக்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது. தற்போது இரண்டு தெலுங்கு இயக்குனர்கள் தங்கள் படத்தில் நடிக்க அகிலா கிஷோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும் கோலிவுட்டிலும் ஒருசில திரைப்படங்களில் இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெங்களூரை சேர்ந்த அகிலா, தற்போது சென்னையில் செட்டிலாக வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார். அமலாபாலும், நஸ்ரியாவும் திருமணமாகி சென்றுவிட்டதால், அந்த இடத்தை நிரப்ப அகிலா கிஷோர் வந்துவிட்டதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

ஆம்பள படத்தின் கதை இதுதான்!


அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் தவிர இன்னும் இரண்டு முக்கிய ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள்.விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள்.

விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. விஷால் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அவருக்கு தங்கள் மகளை கல்யாணம் செய்து வைத்து விட்டால் அண்ணன் சொத்துக்கள் தங்களுக்கு வந்துவிடும் என்று தங்கைகள் திட்டமிடுகிறார்கள்.

தங்கள் மகளைத்தான் விஷால் காதலிக்க வேண்டும் என்று அத்தைகள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் போடும் திட்டங்களும் அந்த திட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் விஷால் தப்பிப்பதும்தான் காமெடி கதை. கடைசியில் மூன்று அத்தைகளில் எந்த அத்தை மகளை விஷால் காதலிக்கிறார், கைவிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ். படத்திற்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் இது.


கோச்சடையான்’ சாதனையை ஐந்தே நாளில் முறியடித்த ‘ஐ’ஸ


தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகில் ஒரு படம் பற்றிய வீடியோ டீஸர், யு டியூப் மூலமாக மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பது கடந்த சில வருடங்களாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. ‘கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் புகழ் பெற்றப் பிறகுதான் யூ டியூப் மூலமாகவும் இணைய தளங்களின் மூலமாகவும் ஒரு படத்தை எளிதில் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பது நிரூபணமானது.

தற்போது ஒரு படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் திரையுலகினர் அவர்களது படத்தை விளம்பரப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.அந்த அளவிற்கு இணையதளங்கள் மக்களிடையே முக்கிய ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது.

இதை மீண்டும் ‘ஐ’ படத்தின் டீஸர் நிரூபித்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் யு டியூப் இணையதளத்தில் ‘ஐ’ டீஸர் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 49 லட்சம் பேர் அந்த டீஸரைப் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ‘கோச்சடையான்’ டீஸருக்குக் கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை ‘ஐ’ பட டீஸர் ஐந்தே நாட்களில் முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்ட ‘கோச்சடையான்’ பட டீஸரை மொத்தமாக இதுவரை 48 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். ஆனால், அந்த எண்ணிக்கை வெறும் ஐந்தே நாட்களில் ‘ஐ’ படம் கடந்து விட்டது. இது இந்திய அளவிலும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

ஒரு தமிழ்ப் படத்திற்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருப்பதை தெலுங்குத் திரையுலகமும், ஹிந்தித் திரையுலகமும் மிகவும் ஆச்சரியடத்துடன் பார்க்கின்றனர். இதன் மூலம் உலக அளவிலும் ‘ஐ’ படம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம் ஆகியோரின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று இதை உறுதியிட்டுச் சொல்லலாம்.

மராத்தி மணமகளாக வருகிறார் சன்னி லியோன்


கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தற்போது அவர் நடித்து வரும் மிலப் ஜவேரி இயக்கும் கவர்ச்சி கலந்த காமெடி படமான மஸ்திசாதி படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம்.

இப்படத்தில் துஸ்ஸார் கபூர், விர் தாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். லில்லி, லைலா என்ற இரட்டை சகோதரிகள் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.இப்படத்தில் ஒரு காட்சியின் அவரது திருமணத்திற்காக பாரம்பரிய மராத்தி மணமகள் போல் புடவை, நகைகள் அணிந்து நடித்துள்ளார் சன்னி.

அதே சமயம் இதற்கு நேர்மாறான கவர்ச்சி உடையில் சகோதரி வேடத்தில் படு கவர்ச்சியாகவும் நடித்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் பல காமெடியான மணமகள் வேடங்களிலும் வந்து இந்த படத்தில் சன்னி லியோன் அசத்தி உள்ளாராம்.


சந்தானத்தின் காமெடிக்கு மீண்டும் கைதட்டல்!


சந்தானத்தின் காமெடி அலை ஓய்ந்து விட்டது. அவரது இடத்தை சூரி பிடித்து விட்டார் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் கலர் கலராக ரீல் ஓடிக்கொண்டிருககிறது. குறிப்பாக, சந்தானத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை பயன்படுத்தி சூரியின் அபிமானிகள் இதுபோன்ற செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்களாம்.

ஆனால், பட்டையக் கிளப்பனும் பாண்டியா படத்தில் சூரி விதார்த்தை ஓவர்டேக் செய்து நடித்திருந்தபோதும் அந்த படம் தோல்வியடைந்து விட்ட இந்த நேரத்தில், சந்தானம் காமெடி பட்டையக் கிளப்பியுள்ள அரண்மனை படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

கதைப்படி ராஜாவின் இரண்டாவது மனைவியின் பேரனாக சொத்தில் பங்கு கேட்பது போன்று அரண்மனைக்குள் செல்லும் சந்தானம், அங்கு சமையல்காரனாக்கப்பட்ட படம் முழுக்க தனது ப்ராண்ட் காமெடிகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

கூடவே, காமெடிக்கு பேர் போனவரான டைரக்டர் சுந்தர்.சியின் கதையும், காட்சிகளும் சந்தானத்துக்கு கைகொடுத்திருப்பதால் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். இதனால் சந்தானம் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலுமே தியேட்டர்களில் கைதட்டல் காதை பிளக்கிறதாம்.

இதனால் இதே கைதட்டல் அடுத்தபடியாக நான் நடித்துள்ள லிங்கா உள்ளிட்ட மShare this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies