உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தாகுட்டி குஷ்பு’ ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!செய்தித் துளிகள் !

20 Sep,2014
 


உலக அழகிகளை உருவாக்குகிறார் லாரா தத்தா


2000மாவது ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாரா தத்தா. அதன் பிறகு சினிமாக்களில் நடித்தார். தற்போது உலக அழகிகளை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இந்திய அழகிகளை தேர்வு செய்து அனுப்பும் நிகழ்ச்சி “மிஸ் திவா யுனிவர்ஸ்” ஆண்டு தோறும் நடக்கும். இதில் வெற்றி பெறுகிறவர்கள்தான் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டுக்கான இந்த நிகழ்ச்சி விரையில் தொடங்க உள்ளது. அந்த நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு 9 எபிசோட்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் வழிகாட்டுனராகவும் லாரா தத்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த போட்டியில் நான், ப்ரியங்கா சோப்ரா, தியா மிர்சா வெற்றி பெற்றோம்.

அப்போதிருந்த வழிமுறைகள் வேறு, இப்போதுள்ள வழி முறைகள் வேறு. நான் இந்த போட்டிக்கு அழகிகளை தயார் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன். மிஸ் யுனிவர்சாக விரும்பும் பெண்கள் இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பார்கள். நான் அவர்களுக்கு என்ன செய்தேன் என்பதை கற்றுக் கொடுக்க போகிறேன்.15 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்களை மிஸ் யுனிவர்சுக்கு தயார்படுத்துவது என் வேலை. இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுறவருக்கும் மேலும் பயிற்சியும் வழிகாட்டுதலும் தர இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால் மற்ற பெண்களும் அதன் மூலம் பாடம் படித்துக் கொள்ள முடியும் என்கிறார் லாராதத்தா.

அனிருத்தை சந்தோசப்படுத்திய விஜய் ரசிகர்கள்!

இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படங்களின் டீசர், ஆடியோவை இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். அதன்பிறகு அவற்றை எவ்வளவு ரசிகர்கள் டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள் என்பதை கணக்கிடுகிறார்கள்.

அதையடுத்து, முந்தைய படங்களில் இருந்து எத்தனை நாளில் எவ்வளவு ரசிகர்கள் பார்த்துள்ளார்கள் என்பதுடன் ஒப்பிட்டு இந்த படம் எத்தனையாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பதை கணக்கிடுகிறார்கள்.

அந்த வகையில், இந்த தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ஐ, கத்தி படங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் ஐ படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த 15-ந்தேதி நடைபெற்றது. அதையடுத்து இதுவரை வெளியான படங்களை முறியடித்து விட்டு முதலிடத்தில் ஐ படம் இருப்பதாக நேற்று வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள.

ஆனால். இன்றைக்கு நிலைமையே வேறு நேற்று விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. அதோடு, விஜய் ரசிகர்களும் இணையதளங்களில் கத்தி பாடல்களை போட்டி போட்டு, அதாவது ஐ படத்தை விட ஒரே நாளில் அதிகம்பேர் டவுன்லோடு செய்து விட்டனர். இதனால் ஒரே நாளில் ஐ படத்தை முறியடித்து முதலிடத்துக்கு வந்து விட்டது கத்தி.

இதனால் அதிக உற்சாகத்தில் இருப்பவர் அனிருத்தான். அவர் இசையமைத்து வெளியான 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே, கத்தி என அனைத்து படங்களுமே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருவதால், கடும் உற்சாகத்தில் இருக்கிறார் அனிருத்.

குறிப்பாக, ஏஆர்.ரகுமான் இசையமைத்த ஐ படத்தை விட கத்தி பாடல்களை அதிக ரசிகர்கள் டவுன் லோடு செய்திருப்பது விஜய் படம் என்பதினால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்றும் கூறியுள்ளார் அனிருத்.


தீபாவளி ரிலீஸ்ஸ’வி’ ஃபார் விக்டரி’ யாருக்குஸ?


தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் பண்டிகை நாட்களில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி கவனம் கிடைக்கும். வருடப் பிறப்பு, பொங்கல் ஆகிய நாட்களை விட தீபாவளிக்கு வரும் திரைப்படங்கள் என்றாலே ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் மூன்றே மூன்று படங்கள் மீதுதான் திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக அமைந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘ஐ’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘கத்தி’, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘பூஜை’ ஆகிய படங்களுக்கு இடையேதான் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று இயக்குனர்களுமே கமர்ஷியல் இயக்குனர்கள் என்று பெயரெடுத்தவர்கள், இதற்கு முன் பல வெற்றிகளைக் குவித்தவர்கள். இவர்களது படங்களின் வசூலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் இந்த மூன்று படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதிலும், எது அதிகமான வசூலைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் பலத்த போட்டி உருவாகியுள்ளது.

விக்ரமிற்கு கடைசியாக வெளிவந்த சில படங்கள் வசூல் ரீதியாக சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘தலைவா’ படம் பற்றி அனைவருக்குமே தெரியும். விஷால் நடித்து கடைசியாக வந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படமும் பெரிய அளவில் வசூலாகவில்லை. ஆக, இவர்கள் மூவருமே அடுத்த படத்தில் அதிகபட்ச வசூலைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழின் மிகச் சிறந்த கமர்ஷியல் இயக்குனர் படங்களில்தான் நடித்துள்ளனர்.

இந்த கமர்ஷியல் இயக்குனர்கள் – ஹீரோக்கள் கூட்டணியில் எந்தக் கூட்டணி தீபாவளி ரேஸில் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது என்பதற்கு நாம் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். இந்த மூன்று படங்களின் நாயகர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

அதாவது மூன்று பேரின் முதலெழுத்தும் ‘வி’யில் ஆரம்பமாகிறது. ‘வி’ ஃபார் விக்டரி’ என்று சொல்வார்கள். அந்த ‘விக்டரி’யில் விஜய், விக்ரம், விஷால் ஆகிய மூவரில் முந்தப் போவது யார்ஸ?


பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் காலமானார்


பிரபல மாண்டலின் இசைக்கலைஞரான ஸ்ரீனிவாசன் உடல்நிலை பாதிப்பால் இன்று (செப்டம்பர் 19) அன்று காலமானார். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் கொள்ளூரைச் சேர்ந்த சத்யநாராயணன்-காந்தம் தம்பதியின் மூத்த மகனான ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சகோதரர் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி விவகாரத்து பெற்று கொண்டு, மகனுடன் ஆந்திராவில் வசித்து வருகிறார்.

இந்த விவகாரம் காரணமாக ஸ்ரீநிவாசனின் குடும்பத்தார் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இவர் மான்டலின் இசை குடும்பத்தின் வாரிசான 45 வயதாகும் இவருக்கு சமீபத்தில் கல்லீரல் ஆப்பரேஷன் நடைபெற்றுள்ளது.

அதில் குணமாகி வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஸ்ரீநிவாசனுக்கு மகல்லீரலில் நோய் கிருமிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக செப்டம்பர் 2ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

மாண்டலின் ஸ்ரீநிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், நரேஷ் அய்யர் மற்றும் பாடகர்கள், பாடகிகள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ஸ்ரீநிவாசனின் உடல் நாளை பகல் 3 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளது.
மான்டலின் இசை உலகில் புகழ்பெற்றவராக திகழ்ந்த இவர் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!


கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன். அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தவருக்கு ஜிகர்தண்டாவிற்கு பிறகு புதிதாக படங்களேதும் கமிட்டாகவில்லை. அதற்கு முன்பே அவர் நடித்து வந்த சிப்பாய், கமிட்டாகியிருந்த கொம்பன் படங்கள் மட்டுமே தற்போது அவரது கைவசம் உள்ளன.

மேலும், மலையாளத்தில் திலீப்புடன் நடித்த அவதாரம் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றபோதும், லட்சுமிமேனனின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதாம். அதனால் இப்போது தமிழை விட தனது தாய்மொழியான மலையாளத்தைதான் அதிகமாக நம்பிக்கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில, லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமனே தற்போது கயல் படத்தில் ஆனந்தியை அறிமுகம் செய்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது.

மேலும், அதன்பிறகு ஆனந்தி கமிட்டான பொறியாளன் படம் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், பிரபுசாலமன் படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும் என்று சில டைரக்டர்கள் நினைக்கிறார்கள்.

அதனால், கயல் வெளியான பிறகு அவரது நடிப்பும் லட்சுமிமேனன் ரேஞ்சுக்கு இருந்தால் உடனடியாக தங்கள் படங்களுக்கும் ஆனந்தியை கமிட் பண்ணி விட வேண்டும் என்று சில இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.

இருப்பினும், தற்போது ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் களவாணி பட சற்குணம் இயக்கும் படம் என சில படங்களில் நடித்து வருகிறார் ஆனந்தி. ஆக, பிரபுசாலமனின் கயல் படத்தில் ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கும் பட்சத்தில் லட்சுமிமேனனுக்கான வாய்ப்புகள் அவரை முற்றுகையிடும் அறிகுறிகள் இப்போதே தென்படுகிறது.


குட்டி குஷ்பு’ ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!


உடல் எடையை குறைக்க பலர் பலவிதங்களில் முயற்சிப்பார்கள். அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதில் மிகவும் குண்டாக பப்பளிமாஸ் போன்று இருந்து, திடீரென்று சிக்கென்று மாறியவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் திரையுலகிற்கு புதிது அல்ல. சிறுவயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். பின் மடமடவென்று வளர்ந்து, தற்போது பிரபலமான நடிகையாகிவிட்டார். அப்படி அவர் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் தான் மாப்பிள்ளை, இந்த படத்தில் கொழுகொழுவென்று இருந்து, பின்

 

சமீபத்திய திரைப்படங்களில் சிக்கென்று வந்தது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவர் மீடியா ஒன்றிற்கு தனது பிட்னஸ் ரகசியத்தை தெரிவித்தார். சரி, இப்போது ஹன்சிகா சிக்கென்று மாறுவதற்கு மேற்கொண்டவற்றைப் பற்றி பார்ப்போம். ஹன்சிகா பேட்டியின் போது "எனக்கு உணவில் அவ்வளவாக நாட்டமில்லை. அதனால் என்னால் டயட்டை எளிமையாக பின்பற்ற முடிகிறது. முக்கியமாக எனக்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் நாட்டமில்லை. மேலும் எனக்கு வீட்டில் செய்யப்பட்ட ராஜ்மா சாவல் என்றால் பிடிக்கும். இதன் காரணமாகத் தான் நான் உடல் எடையை குறைக்க முயலும் போது ஈஸியாக உடல் எடையை குறைக்க முடிந்தது". என்று கூறினார். அதுமட்டுமின்றி, அவர் தனது டயட்டுடன், குரு மிக்கி மேத்தா அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வருகிறார். ஹன்சிகா காலை உணவு மிகவும் முக்கியமானது என்று நம்புவதுடன், காலையில் சாப்பிடும் உணவு நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் தினமும் காலையில் ஸ்கிம் செய்யப்பட்ட பால் மற்றும் ஆப்பிளை சாப்பிட்டு வருவாராம். ஹன்சிகா உடல் எடையை குறைக்க முயலும் போது, தினமும் கார்டியோ மற்றும் எடை உடற்பயிற்சி என இரண்டையுமே கலந்து மேற்கொள்வார். அதற்காக தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் தவறாமல் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பாராம். ஹன்சிகா உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் மில்க் ஷேக் குடிப்பாராம். ஹன்சிகா உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொள்ள நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பாராம். அதற்காக மதிய வேளையில் ரொட்டி, தால், சாலட் மற்றும் தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்வாராம். எப்போதுமே ஹன்சிகா குளிர்பானங்களை குடிக்கவேமாட்டாராம். அதற்கு பதிலாக பிரஷ்ஷான பழச்சாறுகளைத் தான் குடிப்பாராம். இரவு நேரத்தில் தாமதமாக உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். முடிந்த வரையில் மாலையிலேயே அதாவது 7 மணிக்கே இரவு உணவை முடித்துவிடுவாராம். இது தான் இவர் ஆரோக்கியமாகவும், சிக்கென்றும் இருப்பதற்கான காரணமாக சொல்கிறார்.




Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies