ஆடாம ஜெயிச்சோமடா -அரண்மனை தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் திரை விமர்சனம்

19 Sep,2014
 

             


இது, கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து, நகைச்சுவை கலந்து எடுத்துள்ள ஒரு குற்ற நாடகம் (கிரைம் டிராமா). கிரிக்கெட்டில் ஆடி ஜெயிக்கிறவர்கள் ஒரு பக்கம் இருக்க, அவர்களைப் பின்னாலிருந்து இயக்குவதன் மூலம் ஆடாமல் ஜெயிக்கும் சூதாட்டக்காரர்கள் பற்றிய படம்.

 

டாக்சி டிரைவர் கருணாகரன் ஓட்டும் காரில் கிரிக்கெட் புக்கி பாலாஜி பயணிக்கிறார். சிறிய முட்டல், மோதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இந்த நேரத்தில், புக்கி பாலாஜி அவரது ஓட்டல் அறையில் கத்தியால் குத்தப்பட்டுச் செத்துக் கிடக்கிறார். அவரைப் பார்க்கச் சென்ற கருணாகரன் மீது கொலைப் பழி விழுகிறது. அதே நேரம், புக்கி பாலாஜி, அடுத்து நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்க, அது குறித்தும் காவல் துறையினர் துப்பறிகின்றனர்.

 

இதற்கிடையே கருணாகரன், தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தும் விஜயலட்சுமியைக் காதலிக்கிறார். அதை ஏற்கும் விஜி, உன் வீட்டில் தனிக் கழிவறை இருந்தால், உன்னைக் கல்யாணம் கட்டிக்குவேன் என ஒரு நிபந்தனை விதிக்கிறார். அன்று வரையில் அவர் பொதுக் கழிவறையைப் பயன்படுத்தி வந்ததால் பட்ட இன்னல்களை இயக்குநர் ஓரிரு காட்சிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறார். தனிக் கழிவறை இருக்கிறது என்றவுடன் திருமணத்துக்குச் சம்மதித்த விஜி,  கருணாகரனுடன் இரண்டு டூயட்டும் பாடியிருக்கிறார்.

 

புக்கி பாலாஜியைக் கொன்றது யார்? என்ன காரணம்? அவர் பின்னுள்ள சூதாட்டத் தரகர் யார்? இதற்குப் பின்னுள்ள வலைப் பின்னலில் யார் யார் இருக்கிறார்கள்?

 

புக்கி பாலாஜியின் சூதாட்டத்துக்கு உடந்தையாக உள்ள பந்து வீச்சாளர் யார்?  அவர் எந்த ஓவரில் எவ்வளவு ரன்கள் விட்டுத் தருவார்? அதற்கு அவர் காட்டும் சைகை என்ன?

 

இந்த இரண்டு கேள்விக் கொத்துகளை வைத்துக்கொண்டு, காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். அதில் காவல் துறை ஆணையராகக் கே.எஸ்.ரவிகுமார், ஆய்வாளராக சிம்ஹா, உதவி ஆய்வாளராகச் சேத்தன் ஆகியோர் விசாரணைகளுக்கு நடுவே, அவ்வப்போது ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார்கள். இவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

 

செல்பேசி வழியாகக் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்து விடுகிறார்கள். எனவே, ஒரே இடத்தில் நிற்காமல் ஓடும் காரில் செல்லில் பேசுவதும் அந்தப் பேச்சு, ஓட்டுநரின் காதில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக அவரை இயர் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கச் சொல்வதும் நல்ல காய் நகர்த்தல்கள். கிரிக்கெட் வீரர்களை மயக்க, சூதாட்டத் தரகர்கள், பலான பெண்களைப் பயன்படுத்துவதைப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நகைச்சுவை நடிப்பில் திறமை காட்டிய கருணாகரன், இந்தப் படத்தில் கதாநாயகனாகப் பரிமளித்திருக்கிறார். அவருடைய முட்டைக் கண்களும் அப்பாவித்தனமான நடிப்பும் இந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. பாடல் காட்சிகளில் அவர் இன்னும் துடிப்பாக நடித்திருக்கலாம்.

 

விஜயலட்சுமிக்குச் சென்னை பாஷை இயல்பாக இல்லை என்றாலும் இயன்ற அளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். தனிக் கழிவறை வேண்டும் எனக் கேட்பது, அவரது ஒற்றைக் குரல் இல்லை. இந்தியாவில் உள்ள கோடானு கோடி பெண்களின் கோரிக்கை. அதை வெட்கப்படாமல் திரையில் காட்டியதன் மூலம், அவர் இந்தத் தேவையை உலகறியச் செய்திருக்கிறார். அதற்காக அவரையும் இயக்குநர் பத்ரியையும் பாராட்டலாம்.



ஆடாம ஜெயிச்சோமடா - படங்கள் | ட்ரெ‌ய்ல‌ர்!

 

சாமுத்ரிகா லட்சணம் பற்றிய ராதா ரவியின் கண்ணோட்டமும் படத்துக்குள் படமாக வரும் சூறாவளி திரைப்படமும் நல்ல நகைச்சுவை. நாம் பொறுமையாகக் காத்திருந்தால் குற்றவாளி தானாகவே வந்து நம்மிடம் மாட்டிக்கொள்வான் என்ற போலீஸ் சிம்ஹாவின் நம்பிக்கையும் சிரிக்க வைக்கும். இடையில், விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதிகள் தமிழ் பேசுவது பற்றிய கிண்டலும் இந்தப் படத்தில் உண்டு.

 

சியன் ரோல்டனின் பின்னணி இசை கலக்கல். துவாரகநாத்தின் ஒளிப்பதிவு தெளிவு. செயற்கையான சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால், படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் நான் இப்போ உச்சா போறேன், சொய்ங், சொய்ங் எனக் கருணாகரனின் நண்பர் சொல்வது, ரசக் குறைவாய் உள்ளது.

 

இவ்வளவு கண்காணிப்புக்கு இடையிலும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. அந்த வகையில் இதிலிருந்து மக்கள் விழிப்புணர்வு பெற்று, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருந்தால், அதுவே வெற்றிதான்.

 ஆடாம ஜெயிச்சோமடா, ஓடி ஜெயிக்கும்.

அரண்மனை விமர்சனம்.

 

பீட்சா படம் வெற்றி பெற்றதில் இருந்தே நமது இயக்குனர்களின் கவனம் பேயின் பக்கம் திரும்பிவிட்டது. யாமிருக்க பயமே படத்தில் பேயுடன் காமெடியையும் கலக்கி கொடுக்க அந்த படமும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து காமெடி படங்களை எடுத்து வந்த சுந்தர் சி, சற்று பாதை மாறி தனது காமெடியுடன் பேயையும் இந்த அரண்மனையில் உலாவ விட்டுள்ளார்.

வினய்-ஹன்சிகா காதல், ஆனால் அந்த காதல் நிறைவேற முடியாமல் ஹன்சிகா கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்கிறார் வினய். இந்நிலையில் பேயாக வரும் ஹன்சிகா, வினய்யுடன் ஒருமுறையாவது உறவு கொண்டுவிட வேண்டும் என்று துடிக்க, இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வரும் வழக்கறிஞராக வருகிறார் சுந்தர் சி. இவர் எப்படி பேயை சமாளிக்கிறார் என்பதை தனது காமெடி பட்டாளங்களுடன் கலகலப்பை ஏற்படுத்தியுளார் சுந்தர் சி.

படத்தில் லாஜிக் இல்லை, பேய் என்ற பயம் இல்லை, அழுத்தமான திரைக்கதை இல்லை, படத்தின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் சந்திரமுகி, காஞ்சனா, அருந்ததி, யாமிருக்க பயமே போன்ற படங்களில் சுட்டது என பல மைனஸ்கள் படத்தில் இருந்தாலும் சுந்தர் சியின் வழக்கமான டிரேட் மார்க்கான காமெடி படத்திற்கு பெரும் பலமாக இருக்கின்றது.

கோவை சரளா, மனோபாலா, சந்தானம், காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், லொள்ளுசபா சாமிநாதன், மற்றும் பலரை வைத்துக்கொண்டு ஒரு காமெடி கலாட்டை செய்த சுந்தர் சியை கண்டிப்பாக பாராட்டலாம். இந்த காமெடியை அவர் பேயின் உதவி இல்லாமல் தனது வழக்கமான கதையுடன் செய்திருந்தாலே இதே வெற்றியை பெற்றிருக்கும்.

வினய்யை இன்னும் ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. அவருடைய நடிப்பும் ரொம்ப சுமார்தான். ஆண்ட்ரியா மற்றும் லட்சுமிராய் இருவரும் கவர்ச்சியில் கலக்கியிருக்கின்றனர். ஹன்சிகாவின் மேக்கப் இல்லாத சாதாரணமான முகம், மிகைப்படுத்தப்படாத நடிப்பு மனதை கவர்கிறது.

பரத்வாஜின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. பேய் படத்துக்குரிய பின்னணி இசையும் ஓகே ரகம். சுந்தர் சியின் ஆஸ்தான் கேமிராமேன் செந்தில்குமார் வழக்கம்போல சிறப்பாக செய்துள்ளார்.

ஹன்சிகாவின் பேய்க்காக இல்லாவிட்டாலும், சுந்தர் சியின் காமெடிக்காக பார்க்கலாம்.



தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் – திரை விமர்சனம்


தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டையில் வசிக்கும் பிரபல ரவுடி. இவன் கட்டப்பஞ்சாயத்து, ஆள்பலம் கொண்ட காசி என்ற தாதாவிடம் அடியாளாக வேலை பார்க்கிறான். காசி சொல்லும் வேலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்து வருகிறார் தமிழ்ச்செல்வன்.

அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி நர்சிங் படித்து முடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராணிப்பேட்டையில் வசிக்கும் கலைச்செல்வி தோழியின் செல்போன் தொலைந்து போய்விடுகிறது. அந்த செல்போனை தமிழ்ச்செல்வனின் நண்பர்கள் எடுத்துவிடுகிறார்கள்.

அப்போது தோழிக்கு போன் செய்கிறாள் கலைச்செல்வி. அந்த போன் தமிழ்ச்செல்வன் நண்பர்கள் வசம் இருப்பதால் தமிழ்ச்செல்வன் வாங்கி பேசுகிறான். அப்போது எதிர்முனையில் பேசும் கலைச்செல்வி அது தன்னுடைய தோழியின் செல்போன் என்றும், அதை அவளிடம் ஒப்படைக்குமாறும் அவனிடம் கெஞ்சுகிறாள்.

அவளிடம் தோழியின் முகவரியை வாங்கிக்கொண்டு அவளது வீட்டுக்கு சென்று ஒப்படைக்கின்றனர். அப்போது நாயகி தோழியின் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, நாயகன் தன்னுடைய போனை கொடுத்து நாயகிக்கு போன் போடச் சொல்கிறான். அதன்மூலம் இருவரும் தங்கள் செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதன்பின்னர் தமிழ்ச்செல்வனின் செல்போனுக்கு நாயகி போன் செய்து அவனை பற்றி விசாரிக்கிறாள். இவனும் அவளிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்கிறான். இதனால் மனவேதனையுடன் நாயகி அவனை மாற்ற முயற்சிக்கிறாள். இவனும் திருந்தி வாழ முடிவெடுக்கிறான். நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாமலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. தன்னுடைய பிறந்தநாள் அன்று அவனிடம் காதலை சொல்வது என முடிவெடுத்திருக்கிறாள் நாயகி.

இந்நிலையில், காசிக்கு காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்யவேண்டும் என்ற வேலை வருகிறது. அந்த வேலையை தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைக்கிறார். தமிழ்ச்செல்வனோ அந்த வேலையை செய்ய தயங்குகிறான். காசியோ இந்த வேலையை செய்தால் பெரிய தொகை கிடைக்கும். அதை வைத்து செட்டிலாகிவிடலாம் என ஆசை வார்த்தைகூறி அவனை சம்மதிக்க வைக்கிறான்.

அந்த பெண்ணை தேடி காஞ்சிபுரத்துக்கு செல்கிறான் தமிழ்ச்செல்வன். காஞ்சிபுரத்தில் தமிழ்ச்செல்வன் அழைந்து கொண்டிருக்கும் வேளையில் காசிக்கு, தான் கொலை செய்யச் சொன்னது தமிழ்செல்வனுடைய காதலியான கலைச்செல்விதான் என்பது தெரிய வருகிறது. நண்பனுக்காக அந்த கொலையை செய்ய வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கிறான். பின்னர், தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல நினைக்கிறான். ஆனால், அவனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவதால் அவனை தொடர்பு கொள்ள முடிவதில்லை.

இறுதியில் தமிழ்ச்செல்வன் கலைச்செல்வியை கண்டுபிடித்து அவளை கொலை செய்தானா? அவள்தான் தன்னுடைய காதலி என்பதை தமிழ்ச்செல்வன் அறிந்தானா? கலைச்செல்வியை கொலை செய்யச் சொல்ல காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வனாக ராஜேஷ் படம் முழுக்க ஒரே முகபாவணையில் நடித்து அனைவருக்கும் வெறுப்பை கொடுத்திருக்கிறார். இவரை ஒரு ரவுடியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவருடைய நண்பர்களாக வரும் மகேந்திரன், தில்சா, பாப் சுரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நாயகி கலை அனாமிகா, கருணையான முகத்துடன் அனைவரையும் கவர்கிறார். இறுதியில் இவர் கதறி அழும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அடியாளாக வரும் ராம்ஸ் மனிதநேயத்துடன் கூடிய வில்லனாக மனதை கவர்கிறார். மருத்துவமனை அதிபராக வரும் அசோக் பாண்டியன் வில்லத்தனத்தில் அழுத்தம் இல்லை.

விறுவிறுப்பான கதை, ஆனால் அதை அழகான திரைக்கதையாக அமைக்க தவறியிருக்கிறார் இயக்குனர் பி.பாண்டியன். பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்தது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய காட்சிகளாக அமைத்தது என படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கிறது. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.

குறிப்பாக, காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணை கொலை செய்வதற்காக கொடுக்கப்படும் போட்டோ செய்தித்தாளில் இருப்பதாக கொடுக்கப்படுகிறது. அந்த செய்திதாளில் அந்த பெண்ணின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அதற்கான செய்தியோ, அவளைப் பற்றிய ஒரு சிறு குறிப்போ அந்த செய்தித்தாளில் இடம்பெறவில்லை. இயக்குனர் எந்த செய்தித்தாளில் செய்தியில்லாமல் புகைப்படத்தை மட்டும் பார்த்தாரோ தெரியவில்லை. இதுபோல் லாஜிக் மீறலான நிறைய காட்சிகள் படத்தில் இருக்கின்றன.

ராஜதுரையின் ஒளிப்பதிவு தேசிய நெடுஞ்சாலையை அழகாக படமாக்கியிருக்கிறது. மற்ற இடங்களில் பெரிய அளவில் முயற்சி எடுக்காதது தெரிகிறது. சந்திரா பார்ஸ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பேசும்படி இல்லை.

மொத்தத்தில் தமிழ்செல்வனும் கலைச்செல்வியும் மனதோடு சேரவில்லை.


ரெட்ட வாலு – திரை விமர்சனம்

சென்னையில் திருட்டு தொழில் செய்து வரும் நாயகன் அகிலை போலீஸ் தேடி வருகிறது. அவர்களுக்கு பயந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்கிறார்.

அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் ஜோஸ் மல்லூரி திடீரென்று மயங்கி விழுகிறார். அப்போது அகில் அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். இதனால் அகில் மீது ஜோஸ் மல்லூரிக்கு நல்ல எண்ணம் வருகிறது.

அகில் அனாதை என்று அறிந்துகொள்ளும் மல்லூரி தன்னுடைய ஊருக்கு அவனை அழைத்துச் செல்கிறார். போலீசில் இருந்து தப்பிக்க இதுதான் சரியான வழி என்று ஜோஸ் மல்லூரியுடன் செல்கிறார் அகில்.

திருவண்ணாமலையில் தனது மனைவி கோவை சரளாவுடன் வாழும் மல்லூரிக்கு ஒரு பிரச்சினை. தனது மகளை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பி ராமையா மீது கோபத்துடன் இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

இந்நிலையில், ஜோஸ் மல்லூரியின் வீட்டுக்கு வந்திருக்கும் அகிலை, தம்பிராமையாவின் மகளான நாயகி சரண்யா நாக், பார்த்ததும் காதல் வயப்படுகிறார். அகிலையே சுற்றி சுற்றி வருகிறார். இது அகிலுக்கு பிடிக்கவில்லை.

ஒருகட்டத்தில் சரண்யாவை அகில் கண்டிக்கிறார். இதனால் கோபமடைந்த அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவளை காப்பாற்றும் அகில், அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜோஸ் மல்லூரிக்கு தெரிய வருகிறது. அதனால் அகிலை ஊரை விட்டே அனுப்புகிறார்.

பேருந்தில் செல்லும் அகிலை தம்பி ராமையா பார்க்கிறார். ஜோஸ் மல்லூரிக்கு வெறுப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக அகிலை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். அகில் தன்னுடைய மகளைத்தான் காதலிக்கிறார் என்பது தம்பி ராமையாவுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது.

ஒருநாள் அகில் தம்பி ராமையா வீட்டில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ் அவரது வீட்டில் வந்து அவனை தேடுகிறது. அகில் அங்கு இல்லாததால் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பி ராமையாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தம்பி ராமையா தனக்கு அகிலும் தொடர்பில்லை என்று போலீசிடம் எடுத்துச் சொல்கிறார்.

இதற்கிடையில், தான் ஒரு திருடனை காதலித்துவிட்டோம் என்று மிகுந்த மனவேதனையடைகிறாள் சரண்யா. அவளிடம் அகில் தான் எதற்காக திருடன் ஆனேன் என்பதை விளக்கிக் கூறுகிறார் அகில். இதைக் கேட்டதும் சமாதானமடைந்த சரண்யா, அவனுடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு இருவரும் சென்னைக்கு தப்பித்து செல்கிறார்கள்.

சென்னைக்கு சென்ற அவர்களை போலீஸ் உதவியோடு தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிற



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies