அர்னால்ட் வெளிநடப்புக்கு பாபி சிம்ஹா, பாடி பில்டர்கள் காரணமா?

18 Sep,2014
 

             



சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஐ இசைவெளியீட்டுவிழாவில் இசையை வெளியிடாமலே பாதியோடு கிளம்பிப்போனார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். அவரது வெளிநடப்பால் ஐ விழாவுக்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அர்னால்ட் புகழ்பெற்ற நடிகர். கலிபோர்னியா மாநில கவர்னராக இருந்தவர். தவிர ஐ விழாவில் கலந்து கொள்ள 15 கோடி பணம் பெற்றிருக்கிறார்.

பிறகு ஏன் ஐ இசை வெளியீட்டு விழாவிலிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றார்? என்ற கேள்விக்கு பல்வேறு தகவல்கள் பதில்களாக சொல்லப்படுகிறது. ஐ விழாவுக்கு அர்னால்ட் கொடுத்தது 2 மணி நேரம் மட்டுமே..! விழா ஏற்பாட்டாளர்களின் சொதப்பல் காரணமாக பல மணி நேரம் அநியாயத்துக்கு காக்க வைக்கப்பட்டாராம் அர்னால்ட். தவிர விழாவின் இடையிடையே டெக்னிக்கல் பிராப்ளம் என்று ஏகப்பட்ட நேரத்தை சாப்பிட்டார்கள்.

இதன் காரணமாகவே ஐ படத்தின் இசையை வெளியிடாமல் பாதியோடு கிளம்பிப்போனார் அர்னால்ட் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். தயாரிப்பாளர்கள் தரப்பிலோ வேறு காரணம் சொல்கிறார்கள், ஐ விழாவில் கலந்து கொண்ட பாடி பில்டர்களுடன் அர்னால்ட் கைகுலுக்கியபோது, சில பாடி பில்டர்கள் ஆர்வக்கோளாறில் அர்னால்டின் கையை முத்தமிட்டார்கள் என்றும், சில பாடி பில்டர்கள் அர்னால்டை கட்டிப்பிடிக்க முற்பட்டதால் அவரது உடை அழுக்காக்கப்பட்டது என்றும், அதனாலேயே கோபம் அடைந்து அர்னால்ட் கிளம்பிச்சென்றார் என்றும் சொல்கிறார்கள். அதாவது அர்னால்டின் வெளிநடப்புக்கு பாடி பில்டர்கள்தான் காரணமாம்.

தங்கள் மீது பழியைப்போடுவதை அறிந்த பாடி பில்டர்கள் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி மீது கடும் மன வருத்தத்தில் உள்ளனர். இந்தப்பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்கஸவிழாவை தொகுத்து வழங்கிய நடிகர் பாபி சிம்ஹா, அர்னால்டிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் அதனால் அர்னால்ட் கிளம்பிச் சென்றார் என்றும் சொல்கிறார்கள். இது குறித்து அர்னால்ட் ட்வீட் செய்தால்தான் உண்மை தெரிய வரும் போலிருக்கிறது?




34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்


1980ம் ஆண்டில் ஒண்டர் பலூன் என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை. தற்போது, அதாவது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார். அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

அஷூதோஸ் இயக்கிய பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அதன் அடிப்படையில் இதற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: ஒண்டர் பலூனுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். சின்னத்தரை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹை டெபினிசியனில் ஒளிபரப்புகிறது.

அஷூதோஸ் தன் படங்களுக்கு என்னிடம் நல்ல பாடல்களை வாங்கியிருக்கிறார். அவருடன் பணிபுரிவதே நல்ல அனுபவம். எவரெஸ்ட் நிகழ்ச்சியின் கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் தீம் மியூசிக்கை முடித்து விட்டேன் என்கிறார் ரகுமான்.




கத்தி ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு


லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடக்கிறது. தனியார் டிவி ஒன்று, விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் படத்தையும் வாங்கி உள்ளது. இதனிடையே கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், விழா நடைபெறும் அரங்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் கூறுகையில்,

நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தை, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் குடும்ப நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தமிழர்களின் விரோதியான ராஜபக்சேயின் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். நடிகர் விஜய்யோ, இயக்குனர் முருகதாசோ, இந்த படத்தை தயாரித்து வெளியிடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இந்த படம் வெளிவருவதை எங்கள் கூட்டமைப்பு அனுமதிக்காது.
மேலும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்.

எங்கள் கூட்டமைப்பில் 150-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உள்ளன. சில கட்சிகளும் எங்கள் அமைப்பில் உள்ளன. ‘கத்தி’ படம் வெளிவருவதை எதிர்க்கும் வகையில், எங்கள் அமைப்பு சார்பில் மாபெரும் போராட்டம், சென்னையில் நடத்தப்படும். இதுதொடர்பாக எங்கள் அமைப்பில் உள்ள இயக்கங்களின் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார்.

இதனிடையே தமிழர் அமைப்புக்களின் பகிரங்க எதிர்ப்பு காரணமாக கத்தி ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நான் ஈ சுதீப் கலந்து கொள்ள உள்ளார்.

நாளை 9 படங்கள் ரிலீஸ்!


தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. 2014ம் ஆண்டில் இதுவரை 200 படங்கள் ரிலீசாகிவிட்டது. வாரத்துக்கு குறைந்தது 5 படங்கள் முதல் 10 படங்கள் ரிலீசாகிறது. நாளை (செப் 19) 9 படங்கள் ரிலீசாகிறது.
நாளை ரிலீசாகும் படங்களில் அரண்மணை மட்டுமே பெரிய பட்ஜெட் படம். சுந்தர்.சி இயக்கியுள்ள திரில்லர் காமெடி படம். இதில் வினய், ஹன்சிகா, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

தில்லுமுல்லு படத்திற்கு பிறகு பத்ரி இயக்கி உள்ள ஆடாம ஜெயிச்சோமடா நாளை ரிலீசாகிறது. இது கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காமெடி படம். சமீபத்தில் காமெடி நடிகரான அறிமுகமான கருணாகரன் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயின் விஜயலட்சுமி. சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ரெட்டவாலு நாளை ரிலீசாகிறது.

கல்லூரி அகில், காதல் சரண்யா நடித்திருக்கும் படம். வாலுத்தனமாக சுற்றித் திரியும் ஒருவனுக்கு வரும் காதலும், பிரச்சினையும் கதை.
ஆள் படம் வித்தியாசமான க்ரைம் திரில்லர். ஒரு இளைஞனை தீவிரவாதிகயாக்க நினைக்கும் ஒரு சர்வதேச தீவிரவாத கும்பலிடமிருந்து அந்த இளைஞன் தப்பித்தானா, தீவிரவாதியாகிறானா? என்கிற கதை.

மடிசார் மாமி டைட்டிலுடன் ஆரம்பிக்கப்பட்ட படம், டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இனிப்பு புளிப்பு என்ற பெயரில் ரிலீசாகிது. இது பேமிலி காமெடிப் படம்.

கூலிக்காக கொலை செய்யும் ஒருவன். தான் செல்போனிலேயே காதலிக்கும் தன் காதலியை அவர் யார் என்று தெரியாமல் கொல்கிற கதை தமிழ் செல்வனும் கலைச் செல்வியும்.

உசிலம்பட்டி பஸ் நிலையத்தையே வீடாக கொண்டு வாழ்கிறவர்களின் வாழ்க்கையை சொல்லுகிற படம் நான் பொண்னொன்று கண்டேன். இதுதவிர புதியவர்கள் இயக்கிய மைந்தன் என்ற படமும். ரகசிய தீவு என்ற ஆங்கில அனிமேஷன் படமும் ரிலீசாகிறது

புறம்போக்கு படத்தின் டைட்டில் திருத்தம்


பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்ட ஜெயில் ஷெட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் புறம்போக்கு என்ற படத்தின் டைட்டிலில் திருத்தம் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

புறம்போக்கு என்ற டைட்டிலுடன் பொதுவுடமை என்ற வார்த்தையை சேர்த்து “புறம்போக்கு என்கிற பொதுவுடமை” என்று மாற்றி உள்ளார்.இந்த மாற்றம் குறித்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நம் நாட்டில் புறம்போக்கு என்று எதுவும் இல்லை.

எல்லாமே பொது நிலம், மக்கள் நிலம். நாம்தான் அதனை நம் வசதிக்கேற்ப விளைச்சல் பொறம்போக்கு, பாசன பொறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என்று பிரித்து வைத்திருக்கிறோம். எனவே பொறம்போக்கு என்பது ஊருக்கு பொதுவான இடம் என்று அர்த்தம். அதனால்தான் டைட்டிலை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று வைத்திருக்கிறேன் என்கிறார் ஜனநாதன்




ஜீவாவுக்கு யூ சான்றிதழ்


பாண்டியநாடு படத்துக்கு பிறகு சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ஜீவா. இதில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாட்டின் உள், வெளி அரசியலை கதை களமாக வைத்ததைபோல ஜீவாவில் கிரிக்கெட் விளையாட்டை கதை களமாக வைத்திருக்கிறார்.

கிரிக்கெட் அணியில் சேர ஒரு நடுத்தர இளைஞன் படும் துயரங்களே படம்.படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இயக்குனர் சுசீந்திரனையும், விஷ்ணு விஷாலையும் பாராட்டி உள்ளனர்.

அதோடு ஒரு கட் கூட கொடுக்காமல் படத்துக்கு யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் வரிவிலக்கிற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்தது சுசீந்திரனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்ட் பிக் பிலிம். இதனை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரியும், ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனமும் வாங்கி வெளியிடுகிறது. படம் வருகிற 26ந் தேதி ரிலீசாகிறது.


சலீம் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்.


விஜய் ஆண்டனியின் 'சலீம்' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் நிர்மல்குமார், தற்போது சலீம் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சலீம் தெலுங்கு படத்தில் வெங்கடேஷ், விஜய் ஆண்டனி கேரக்டரில் நடிக்கிறார்.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியான சலீம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. இந்த வெற்றிப்படத்தை அடுத்து கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்கள் இயக்குனர் நிர்மல்குமாருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தனர். ஆனால் நிர்மல் குமார் தற்போது சலீம் தெலுங்கு ரீமேக்கை இயக்க முடிவு செய்துவிட்டார்.

வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகையை தேர்வு செய்து வருகிறார். அனேகமாக தமிழில் நடித்த அக்ஷா பர்தாசி தெலுங்கிலும் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை வெங்கடேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களில் இந்த படத்தை இயக்க திட்டமிட்ட்டுள்ளதாகவும், வரும் 2015 மார்ச் மாதத்தில் இந்த படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.



ரோஜா மீதான கத்திக்குத்து குறித்து கவலையில்லை. ஆர்.கே.செல்வமணி


 

சமீபத்தில் நகரியில் நடந்த ஒரு கோவில் விழாவில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர். கட்சியில் எம்.எல்.வுமான ரோஜாவின் கையை மர்ம நபர் ஒருவர் கத்தியால் கீறி காயத்தை ஏற்படுத்தினார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது கணவரும் பிரபல இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜாத்திரை திருவிழா என்று கூறப்படும் அம்மன் கோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பது குறித்த சர்ச்சை ரோஜாவுக்கும், தெலுங்கு தேச எம்.எல்.ஏ கிருஷ்ணம்மா நாயுடுவுக்கும் ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் நடுவே புகுந்த ஒரு நபர் ரோஜா கையில் இருந்த ஆரத்தி தட்டை கீழே தள்ளிவிட்டு, அவரது கையை கத்தியால் கீறினார். இதனால் அந்த விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரோஜாவின் கொடும்பாவியை கிருஷ்ணம்ம நாயுடுவின் ஆதரவாளர்கள் எரித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க கிருஷ்ணம்மா நாயுடு கொடும்பாவியை எரிக்க முயன்ற ரோஜா ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஆர்.கே.செல்வமணி, "ஜாத்திரை திருவிழாவில் முதல் ஆரத்தி வழங்கவில்லை என்பதற்காக ரோஜா போராட்டம் நடத்தவில்லை. கடவுளுக்கு முதல் ஆரத்தி, 2–வது ஆரத்தி என்று சொல்வது அர்த்தமற்றது. ரோஜா கடவுள் பக்தி உள்ளவர். அம்மனுக்காக விரதம் இருந்து உடலை வருத்திக்கு கொள்வார். அப்படிப்பட்டவரின் ஆரத்தி தட்டை தட்டி விட்டதால்தான் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரது கையை கத்தியால் வெட்டியதை கூட அவர் கவலைப்படவில்லை. ஆனால் ஆரத்தி தட்டை தட்டி விட்டதுதான் அவரை கவலையடைய செய்து உள்ளது. எனது மனைவி தைரியமானவள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


ராம்கோபால் வர்மாவின் சரளா ஆன்ட்டி யார்? திடுக்கிடும் தகவல்


திரைப்படம் எடுத்து பெயர் வாங்கும் இயக்குனர்கள் மத்தியில் சர்ச்சைகளில் சிக்கியே பெரும்புகழ் பெற்ற இயக்குனர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அது ராம்கோபால் வர்மா தான் என்பதை அனைவரும் அறிவர். அவர் இயக்கும் படங்களும் சரி, எடுத்துக்கொண்ட கதையிலும் சரி சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. இந்நிலையில் அவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் கூட விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பெரும் கண்டனங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ராம்கோபால் "வர்மா வர்மா தோ சரளா ஆண்ட்டி" என்ற படத்தை இயக்கவுள்ளார். இதுவரை அவர் தான் இயக்கிய படங்களில் அவருடைய நிஜப்பெயரை பயன்படுத்தியது இல்லை. இந்த படத்தில்தான் முதன்முதலாக அவருடைய பெயரை டைட்டிலில் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் ஒரு முன்னணி தெலுங்கு நடிகை ஒருவரின் இருட்டு பக்கங்களை விவரிக்கும் கதை என படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது வருகிறது. மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ள ராம்கோபால் வர்மா, யார் அந்த சரளா ஆண்ட்டி என கேட்டதற்கு படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.




Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal