சிகரம் தொடு -துடிக்கும் துப்பாக்கி -வச்சிக்கவா- திரை விமர்சனம்

17 Sep,2014
 காவல் துறைப் பணியை வெறுக்கும் ஒருவர், அதே பணியில் சேர்ந்து சிறந்த காவலர் விருதினைப் பெறுவதே இந்தப் படத்தின் கதை. இதில் ஏ.டி.எம். கொள்ளையைச் சற்றே நுணுக்கமாக அலசியதன் மூலம், வித்தியாசம் காட்டுகிறார் இயக்குநர்.

 

நேர்மையான காவலராகப் பணியாற்றி, பணியின்போது ஒரு காலை இழந்த போலீஸ்காரராகச் சத்யராஜ். அவர் மகன் முரளி பாண்டியனாக விக்ரம் பிரபு. காவல் துறையில் தன்னால் சாதிக்க இயலாததைத் தன் மகன் மூலம் சாதிக்கும் கனவில் சத்யராஜ் இருக்கிறார். ஆனால், இந்த வேலையால் தானே அப்பாவுக்குக் கால் போச்சு என்று, மகன் அந்தப் பணியை வெறுக்கிறார். வங்கிப் பணியில் சேரவும் முயல்கிறார். ஆனால், அதை அப்பாவிடம் சொன்னால், அவர் மனம் உடைந்துவிடுவார் என்பதால், அவர் முன் காவல் பணிக்குத் தயார் ஆவது போல் நடிக்கிறார்.

 

இந்நிலையில் வட மாநிலப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் அவரின் தாத்தாவுடன் விக்ரம் பிரபு துணைக்குச் செல்கிறார். அந்த முதியோர் குழுவில் வரும் கோவை சரளாவுக்குத் துணையாக வரும் அவர் மகள் அம்புஜமாக மோனல் கஜ்ஜார். விக்ரம் பிரபுவும் மோனலும் விமானத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர, வானில் களேபரமாக அரங்கேறுகிறது முதல் முத்தம். இந்த மோதல் பின்னர் காதலாக மாறுவது, தனி அத்தியாயம். மோனலுக்கும் போலீஸ் வேலை பிடிக்காது என்பதால், காதல் வேகமாக வளர்கிறது.சிகரம் தொடு படக் காட்சிகள்

 

யாத்திரை முடிந்து வரும்போது, விக்ரம் பிரபுவுக்குக் காவல் துறைப் பணிக்கான பயிற்சியில் சேர, அழைப்பு வருகிறது. மோனலிடம் பொய் சொல்லிவிட்டு, அப்பாவுக்காக விக்ரம் பயிற்சியில் சேர்கிறார். ஆனால், பயிற்சி அளிப்பவரின் மகளே மோனல் தான் எனத் தெரிய வருகிறது. பயிற்சியில் சரிவரச் செய்யாமல் வெளியேறப் போவதாக, விக்ரம் தன் திட்டத்தைச் சொல்கிறார். ஆனால், பயிற்சி நிறுவனத்தின் முதல்வரான மோனலின் அப்பா, சத்யராஜின் நண்பர். இந்தப் பயிற்சியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, வேலையில் சேர்ந்து ஒரு மாதம் வேலை செய். அதன் பிறகு இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லை என்றால், பதவி விலக உனக்கு உதவுகிறேன். என் மகளையும் உனக்குத் திருமணம் முடிக்கிறேன் என்கிறார். அவரது யோசனையை ஏற்று விக்ரம் பிரபு, காவல் துறையில் உதவி ஆய்வாளராகச் சேர்கிறார்.

 

வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய கணக்கு விவரங்களைத் திருடி, போலி டெபிட் அட்டைகளைத் தயாரித்து, ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கும் குழுவினர், சென்னையின் பல இடங்களிலும் கைவரிசை காட்டி வருகின்றார்கள். இவர்களைத் தற்செயலாகக் காணும் சத்யராஜ், அவர்களுடன் சண்டையிட்டுப் பிடித்துக் கொடுக்கிறார். அவர்கள் விக்ரம் பிரபு பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய விக்ரம், மோனலிடம் ஒப்புக்கொண்டபடி திரைப்படம் பார்க்கச் செல்கிறார். அந்த நேரத்தில் காவலில் இருந்த குற்றவாளிகள் இருவரும் தப்பிச் செல்லப் பார்க்கிறார்கள். மகனைத் தேடி அங்கே வந்த சத்யராஜ், அவர்களுடன் போராட, அவரைச் சுட்டுவிட்டு இருவரும் தப்பிக்கிறார்கள்.

 

அதுவரை காவல் துறைப் பணியில் ஒட்டாமல் இருந்த விக்ரம், அதன் பிறகு தீவிரமாகக் களம் இறங்குகிறார். குற்றவாளிகளை அவர் பிடித்தாரா? சுடப்பட்ட சத்யராஜ் பிழைத்தாரா? போலீஸான விக்ரம் பிரபுவை மோனல் ஏற்றாரா என்பது மீதிக் கதை."என் மகன், நான் சொல்வதைக் கேட்பான்" எனப் பெருமைப்படும் அப்பாவாகவும் கடமை தவறாத காவலராகவும் சத்யராஜ் வாழ்ந்திருக்கிறார். ஒரு காலை இழந்த பிறகும் அவர் நம்பிக்கையையும் கொள்கைகளையும் கைவிடாமல் இருப்பது சிறப்பு. ஆனால், அவரை நொண்டி ஹீரோவாகப் பார்க்கும் விக்ரம் பிரபு, தன் தந்தையை ஏமாற்றுவதும் காதலிக்காகக் கடமையில் தவறுவதும் அவரது மதிப்பைக் குறைக்கின்றன. பிற்பாதியில் தான் அவர் கதாநாயகனாக முகம் காட்டுகிறார். குற்றவாளிகளை அவர் துப்பறியும் விதம் நன்று.சிகரம் தொடு படக் காட்சிகள்

 

நாயகி மோனல் கஜ்ஜார், வட்ட முகத்துடன் வசீகரிக்கிறார். கடமையை விடக் காதலியே முக்கியம் என விக்ரம், படத்துக்கு வரும்போதும், திரையரங்கில் அவரது செல்பேசியை மோனல் அணைத்து வைக்கும்போதும் காதலின் மீதே வெறுப்பு வருகிறது. போலீஸ் வேலையை மோனல் வெறுப்பதற்கு இன்னும் வலுவான காரணம் காட்டியிருக்கலாம்.

 

காவல் நிலையத்திலிருந்து விக்ரம் பிரபுவின் கைத்துப்பாக்கியை எடுத்து வந்து, சத்யராஜைச் சுட்டுவிட்டுக் கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். துப்பாக்கியைப் பறி கொடுத்ததற்கும் காவலில் இருந்த கைதிகளைத் தப்பவிட்டதற்கும் விக்ரம் பிரபுவின் மீது துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யராஜைக் கொல்ல நெருங்கிய கைதி, அவரைக் கொல்லாமல் சென்றது ஏன்? இறுதிக் கட்டக் காட்சிகளில் தன் கூட்டாளியை விக்ரம் பிரபு அடித்து நொறுக்க, அவர் மீது காரை ஏற்றிக் கொல்ல ஏடிஎம் கொள்ளையர் முயல்கிறார். பின் இருக்கையில் இருக்கும் மோனல் கழுத்தில் கத்தியை வைத்திருந்தாலே போதுமே, விக்ரம் பிரபு விலகியிருப்பாரே?

 

ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மரையும் மைக்ரோ கேமராவையும் வைத்து ரகசிய விவரங்களைத் திருடுவதாகப் படத்தில் காட்டுகிறார்கள். ஆனால், அவற்றை வைக்கும்போது யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அடுத்த நாள், பணம் எடுப்பது போல் சென்று அவற்றை மீண்டும் எடுத்துவிடுவதாகக் காட்டுகிறார்கள். அந்தக் காட்சிகள், மேலே உள்ள வீடியோவில் பதிவாகாதா? உள்ளிட்ட சில கேள்விகள் எழுகின்றன.

 

ஏடிஎம் காவலாளிகள் உறங்குகிறார்கள், எனவே அவர்களைச் சாய்ப்பது எளிதாக இருக்கிறது. ஆனால், ஹெல்மெட் அணிந்து வந்து ஒருவர் கேமராவை மூடி மறைக்கிறார் என்றால், அவர்கள் பணத்தை எடுப்பதற்கு முன்பே அந்த ஏடிஎம் எந்திரத்தைச் செயலிழக்கச் செய்ய முடியாதா? இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தானாகவே தகவல் பறக்க வேண்டாமா? வங்கியும் காவல் துறையும் இந்தச் சூழ்நிலைகளில் அதிவிரைவாகச் செயல்பட வேண்டாமா? இதற்கெல்லாம் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கையில், ஏடிஎம் கொள்ளையின் ஒரு பகுதியை மட்டும் இயக்குநர் காட்டியிருக்கிறார். மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும்போது, கேமராவை மறுமுனையில் பார்ப்பவர், என்ன செய்வார் என்பதையும் காட்டியிருக்க வேண்டும். ஏடிஎம் மையங்களின் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.


Sigaram Thodu

வாடிக்கையாளரின் 16 இலக்க எண்ணும் ரகசிய பின் எண்ணும் கிடைத்தால், அதைக் கொண்டு ஏடிஎம் மையத்திலிருந்துதான் திருட வேண்டும் என்பதில்லை. இணையத்தின் வாயிலாகவும் பல வகைகளில் திருடலாம் என்பது வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு நன்றாகத் தெரியுமே. ஆனால், அந்தக் கோணங்களில் இந்தப் படம் ஒரு துளியும் பயணிக்கவில்லை.

 

அதே நேரம் ஏடிஎம் கொள்ளையை மட்டுமின்றி, ஹரித்வார் சாமியாரின் சீட்டு மோசடி, கூட்டம் கூட்டிப் பர்சுகளைத் திருடுவது உள்ளிட்ட வேறு சிலவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது. படத்தின் இயக்குநராகக் கவர்ந்ததை விடவும், ஏடிஎம் கொள்ளையரில் ஒருவராக நடித்ததன் மூலம் இயக்குநர் கௌரவ், அதிகம் கவர்கிறார்.

 

விக்ரம் பிரபுவின் நண்பராக வரும் கேகே, அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். இவர் நடத்தும் ஜிம்மில் சேரும் இளம் பெண்களுக்கு இவரே கட்டணம் செலுத்துகிறார். இந்தப் பெண்களுடன் இணைந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் பெரிசுகள் இவரிடம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த உத்தியை உண்மையிலேயே வேறு யாராவது பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

இமானின் இசையில் சில பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசை, படத்திற்குப் பெரிய அளவில் துணை புரிந்துள்ளது. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு அருமை.

 

காவல் துறையில் சேர்வதும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதும் ஒரு தொடக்க நிலைதான். முதல் படியையே சிகரம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், பொறுப்புணர்ந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் சிகரம் தொடலாம்துடிக்கும் துப்பாக்கி – திரை விமர்சனம்


மேற்படிப்பு படிப்பதற்காக சீனாவுக்கு வருகிறாள் லூசி. அவளிடம் சூட்கேஸ் ஒன்றை கொடுத்து அதை சீனாவில் இருக்கும் ஜேன்ங் (மின் சிக் சோய்) என்ற மிகப்பெரிய தாதாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறான் அவளுடைய நண்பன். லூசி அந்த வேலையை செய்ய மறுக்கிறாள்.

அதனால் அவளது கையில் சூட்கேசுடன் ஒரு கைவிலங்கை மாட்டி, அந்த கைவிலங்கின் சாவி ஜேன்ங்கிடம் இருக்கிறது. அவனிடம் சூட்கேசை ஒப்படைத்து கைவிலங்கை நீக்கிக் கொள் ஒன்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். லூசி வேறு வழியில்லாமல் ஜேன்ங்கிடம் சென்று சூட்கேஸை ஒப்படைத்துவிட்டு தனது கையை விடுவித்துக் கொள்கிறாள்.

அந்த சூட்கேசுக்குள் மூளையின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் ரசாயன பவுடர் இருக்கிறது. அதை உலகில் உள்ள பல நாடுகளுக்கு அனுப்ப திட்டம் போட்டுள்ள ஜேன்ங், லூசி மற்றும் நான்கு பேரின் உடம்புக்குள் அந்த பவுடரை பாக்கெட் போட்டு தைத்து விடுகிறான். லூசி அந்த வேலையை செய்ய அடம்பிடிக்கிறாள்.

ஜேன்ங்கின் அடியாட்கள் அவளை அடித்து துன்புறுத்துகின்றனர். அப்போது லூசியின் வயிற்றுக்குள் இருந்த ரசாயன பவுடர் பாக்கெட் உடைந்து அவளுடைய ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் லூசிக்கு மிகப்பெரிய சக்தி கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அவளுடைய மூளை சாதாரண மனிதர்களைவிட 10 சதவீதம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்துகொண்ட லூசி அங்கிருந்து தப்பித்து புரொபசர் நார்மனிடம் (மோர்கன் ஃப்ரீமேன்) சென்று தன்னுடைய பிரச்சினைக்கு தீர்வு காண செல்கிறாள். அதே நேரத்தில் தன்னிடமிருந்து தப்பித்துச் சென்ற லூசியை தனது ஆட்களுடன் தேடிச் செல்கிறான் ஜேன்ங்.

நேரம் ஆக ஆக லூசியின் மூளை வேலை செய்யும் திறன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் அவளுக்கு புதுவிதமான சக்திகளும் வருகின்றது. இறுதியில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

லூசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாகச நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்ஸனுக்கு படத்தில் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம். லூசியாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தாதாவிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி பெண்ணாக அவர் படும் அவஸ்தைகள் ரசிக்க வைக்கிறது. லூசியின் மூளை பலமடங்கு வேலை செய்ய தொடங்கியதும் அவர் எதிரிகளை பந்தாடுவது தியேட்டரில் விசில் பறக்க வைக்கிறது.

நம்ப முடியாத விஷயங்களை நம்ப வைக்கும் அளவுக்கு ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் வேலைகளும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, லூசிக்கு மூளை செயல்படும் திறன் அதிகரித்த பிறகு ஒரு மரத்தை பார்க்கிறாள். அந்த மரத்திற்குள் இருக்கிற ஒவ்வொரு செல்லையும் அவளால் பார்க்க முடிவதுபோல் காட்சி அமைத்திருப்பது சிறப்பு.

இதுபோல் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராத பல காட்சிகளை எடுத்திருப்பது இயக்குனர் லக் பெஸ்ஸன் தனி திறமைதான். சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை அழுத்தமான திரில்லராக படமாக்கியிருக்கிறார்.

படம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்தாலும் ஒருசில இடங்களில் லாஜிக்கையும் மீறியிருக்கிறார்கள். அதேபோல் சொல்ல வந்த விஷயத்தை முழுதாக சொல்லி முடிக்காமல் பாதியிலேயே முடித்தது போன்ற உணர்வு நமக்குள் ஏற்படுகிறது.

மொத்தத்தில் ‘துடிக்கும் துப்பாக்கி’ துடிக்க வைக்கும்


வச்சிக்கவா – திரை விமர்சனம்


நாயகன் மாணிக்கவேலும் நாயகி அச்சிதாவும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அச்சிதாவிற்கு மாணிக்கவேல் முறைப்பையன். இருவரும் சிறுவயதில் இருந்தே ஸ்கூலுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள்.

அச்சிதாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் மாணிக்கவேல். ஆனால், அச்சிதாவிற்கு இந்த விசயம் தெரியாமல் மாணிக்கவேலுடன் முறைப்பையன் என்பதால் சாதாரணமாக பழகி வருகிறார்.

மாணிக்கவேலுக்கு அச்சிதா மீதுள்ள காதல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தன் காதலை சொல்ல பல வழிகளில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் பக்கத்து ஊரில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு செல்கிறார் அச்சிதா.

அந்த ஊரில் உள்ள பள்ளியில் சிறுவர்கள் அடிக்கடி காணாமல் போகிறார்கள். இது தெய்வ குற்றம் என்று சொல்லி ஊரில் உள்ள மக்களை ஏமாற்றிக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் சிறுவர்களை பலி கொடுத்து வருகிறார் சாமியாரான ராஜ அம்மையப்பன்.

அப்படி ஒருநாள் அச்சிதா செல்லும் வழியில் சாமியார் ஒரு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து அவனை மயங்க வைத்து கடத்தி செல்வதை பார்த்து விடுகிறார். அதை தன் அக்காவின் கணவரான ரபியிடம் சொல்கிறார்.

அவர் அந்த சாமியார் மீது போலீசிடம் தகவல் கொடுக்க, போலீசார் சாமியாரை கைது செய்து விடுகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாததால் ஜெயிலில் இருந்து வெளியில் வரும் சாமியார் அச்சிதாவை பழி வாங்க நினைக்கிறார்.

இதற்கிடையில் தன் அக்காவும் அவரின் கணவரும் சந்தோஷமாக இருப்பதை பார்க்கிறாள் அச்சிதா. அதலிருத்து தன் மாமா மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரை அடைய முயற்சி செய்கிறாள்.

இறுதியில் அச்சிதா, தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் மாணிக்கவேலுடன் சேர்ந்தாரா? தன் அக்காவின் கணவரை அடைந்தாளா? சாமியாரின் பழிக்கு ஆளானாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் மாணிக்கவேல், நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவர் செய்யும் செய்கைகள் செயற்கைத்தனமாக தோன்றுகிறது. அச்சிதாவிடம் தன் காதலை சொல்ல முயற்சி செய்யும் காட்சிகளும், அவளுக்காக ஏங்கும் காட்சிகளிலும் நடிப்பு திறனை காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

நாயகி அச்சிதா சிறப்பாக நடித்திருக்கிறார். ஓரிரு இடத்தில் இவரின் முகபாவனைகளை ரசிக்கலாம். முதல் படத்திலேயே நடிப்பதற்கான நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சாமியாராக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளரான ராஜ அம்மையப்பன் பார்வையிலேயே மிரட்டுகிறார். இவருக்கு குறைந்த காட்சிகளே அமைத்து ஒரே வசனத்தையே படம் முழுக்க கூற வைத்திருக்கிறார் இயக்குனர்.

நரபலி கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ரபி, அதில் நரபலி சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் காதல் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். படத்தின் நீளத்திற்காக முதற்பாதியில் தேவையற்ற காட்சிகளை திணித்தது போல் இருக்கிறது.

மேலும், காமெடி என்னும் பெயரில் மைனர் மற்றும் குடிகாரனாக வருபவர் செய்யும் செய்கைகள் ரசிக்க முடியவில்லை. முதற்பாதியில் வரும் காதல் காட்சிகள் மற்றப் படங்களை ஞாபகப்படுத்துகிறது.

ரித்தேஷ் இசையில் ஒரு பாடலை ரசிக்கலாம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ரபியின் ஒளிப்பதிவு ஓரிரு இடத்தில் ரசிக்க வைக்கிறது. ஆனால் பெரும்பகுதி இருட்டாகவே காட்சியளிக்கிறது.

மொத்தத்தில் ‘Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies