
ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்து அசத்தும் நடிகைகளை விட, மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து அசத்தும் நடிகைகள்தான் தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் பத்து வருடங்களாக மங்காத புகழுடன் இருந்து வருபவர் நயன்தாரா.
ஆனால், தமிழ் நடிகைகள் தமிழில் அசத்துவதை விட மற்ற மொழிகளில் குறிப்பாக தெலுங்குத் திரையுலகில் அசத்தி வருகிறார்கள். இங்கிருந்து ஹிந்திக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி.
அதே போல் இங்கிருந்து தெலுங்குத் திரையுலகிற்கு சென்று தற்போது அசத்திக் கொண்டிருக்கும் நடிகைகளில் குறிப்பிட வேண்டியவர்கள் முன்னர் த்ரிஷா, தற்போது ஸ்ருதிஹாசன், சமந்தா. இந்த வரிசையில் தற்போது புதிதாக ரெஜினா சேர்ந்து விட்டார் என தெலுங்கு மீடியாக்கள் தெரிவித்து வருகின்றன.
அவர்களை தெலுங்கு பத்திரிகைகள் பொதுவாக ‘சென்னை கேர்ள்ஸ்’ என்று அழைப்பது வழக்கம். த்ரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ரெஜினா ஆகியோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்படி ஒரு பெயர். தெலுங்குத் திரையுலகில் சில வருடங்கள் முன்னர் வரை கொடி கட்டிப் பறந்தவர் த்ரிஷா.
பின்னர் சிறு இடைவெளி அவருக்கு விழ, அந்த இடத்தை சமந்தா பிடித்துக் கொண்டார், ஆனாலும், த்ரிஷா தற்போது கன்னடத்தில் ஒரே படத்தில் டாப் ஸ்டார் ஆகிவிட்டார். சில தினங்களுக்கு முன் வெளியான ‘பவர்’ படத்தில் ரெஜினாவின் அசத்தலான தோற்றத்தை தெலுங்கு மீடியாக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றன. முத்தக் காட்சியில் வேறு நடித்து விட்டார், கேட்கவா வேண்டும்.
‘அஞ்சான்’ படத்தில் நீச்சல் உடையில் பரபரப்பை ஏற்படுத்தி தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க சமந்தா முயற்சி செய்து வர அவர் இடத்தை ரெஜினா பிடிப்பாரா என்றெல்லாம் டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம். ஆக, டோலிவுட்டைப் பொறுத்தவரை ‘சென்னை கேர்ள்ஸ்’-க்கு இடையேதான் போட்டி பலமாக இருக்கிறதாம். இவர்களில் தற்போது ஸ்ருதிஹாசன், சமந்தா, ரெஜினா யார் அடுத்த கட்டத்திற்கு போக இருக்கிறார்கள் என்பது அடுத்தடுத்த வெற்றியைப் பொறுத்துத்தான் தெரிய வரும்.

யூ டியூப் பார்த்து பெல்லி டான்ஸ் கற்ற சானியாதாரா!
இன்றைய தேதியில் ஹன்சிகா, நயன்தாராவுக்கு அடுத்து அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பது யார் என்று கேட்டால் சானியாதாராதான். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு இவர்தான் ஆதர்சன ஹீரோயின். சங்கராபுரம், தகடு தகடு, வாரயோ வெண்ணிலாவே, மெய்மறந்தேன், கடை எண் 6 என ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கிறார்.
இதில் மெய்மறந்தேன் படத்தில் ஒரு கிக்கான பெல்லி டான்ஸ் ஆடியிருக்கிறார்.இத்தனைக்கும் அவர் பெல்லி டான்சர் இல்லை.
இதுபற்றி சானியாதாரா கூறியதாவது: மெய்மறந்தேன் படத்தில் முதலில் பெல்லி டான்ஸ் இல்லை. ஒரு அயிட்டம் சாங் வைக்கிற மாதிரிதான் பிளான் பண்ணியிருந்தாங்க. திடீர்னு டைக்டர் நீயே ஆடும்மா என்றார். நானும் ஓகே என்றேன். சாதாரணமான குத்தாட்டம் வேண்டாம். பெல்லி டான்ஸ் ஆடமுடியுமான்னு கேட்டார்.
இரண்டு நாள் டயம் கொடுங்கன்னு கேட்டு யூ டியூப்புல இருக்கிற அத்தனை பெல்லி டான்சையும் போட்டு பார்த்து வீட்டில் ஆடக் கத்துக்கிட்டு இரண்டே நாள்ல ஷ¨ட்டிங் கிளம்பிட்டேன். இப்போ என்னோட டான்சை பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறப்போ சந்தோஷமா இருக்கு.
வாராயோ வெண்ணிலாவே படத்தில் அட்டகத்தி தினேஷ் ஜோடியாக நடிக்கிறேன். கடை எண் 6 படத்தில் அக்கா, தங்கை என இரண்டு கேரக்டரில் நடிக்கிறேன். என்கிறார் சானியா தாரா.

யுவன் இசையமைக்கும் தெலுங்குப் படம் இன்று இசை வெளியீடு!
தமிழ்த் திரையுலகமே இன்று வெளியாகும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், தெலுங்குத் திரையுலகம் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படத்தின் இசை வெளியீட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ண வம்சி இயக்கத்தில், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், கமலினி முகர்ஜி, ஜெயசுதா, மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வரும் படம் அது. இப்படத்தின் இசை வெளியீடு இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது.
கிருஷ்ண வம்சி இயக்கத்தில் இதுவரை பல வித்தியாசமான படங்கள் வெளிவந்துள்ளன. அவர் இயக்கிய ‘அந்தப்புரம்’ படம் தமிழிலும் வெளியாகியது. மகேஷ் பாபு உட்பட பல நட்சத்திரங்களை அவர் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை.
‘அந்தப்புரம்’ படத்திற்கும் யுவனின் அப்பாவான இளையராஜாதான் இசையமைத்திருந்தார். கிருஷ்ணவம்சி இளையராஜாவை அதிகம் நேசிக்கும் இயக்குனர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படத்தின் டீஸரும் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமாகியுள்ளது.
‘மகதீரா’ படத்தின் வெற்றி ஜோடியான ராம் சரண் தேஜா, காஜல் அகவர்வால் மீண்டும் இணைந்துள்ளதாலும் பல வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்தில் உள்ளதாலும் தெலுங்குத் திரையுலகில் முதலில் 100 கோடி வசூலிக்கப் போகும் படமாக இப்படம் அமையும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

நயன்தாராவுடன் நடிக்க பரத்துக்கு ஆசை!
ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா. இப்போதெல்லாம் உடன் நடிக்கும் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையும், தன்னோட கேரக்டரும் நன்றாக இருக்கிறதா, கேட்கிற சம்பளம் தருகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். தன் மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்.
ராஜா ராணியில் ஜெய் ஜோடியாக நடித்தார், தற்போது ஒரு திகில் படத்தில் நெடுஞ்சாலை ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றம் இரண்டாவது வரிசை ஹீரோக்களையும் அவருடன் நடிக்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. அப்படி ஆசைப் படுகிறவர்களில் ஒருவர் பரத்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் அது கிடைக்கலாம்.
என் மனதில் மூன்று ஆசைகள் உள்ளது. என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார் டைரக்ஷனில் மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டும். எந்த ஹீரோவின் கலரையும் மாற்றிவிடும் கவுதம் மேனன் சார் படத்தில் நடிக்க வேண்டும். என் கனவு தேவதை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இந்த மூன்றும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் பரத்

இந்திய படங்களில் நடிக்க ஆசைஸ! ஐ பட ஆடியோ விழாவில் அர்னால்டு பேச்சு
இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரட்டும் போய் உள்ளனர்.
அர்னால்டு வருகை
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டீசர் வெளியீடு
விழாவில் ஐ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் பிரமாண்ட திரையில் வெளியிடப்பட்டது.
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி
ஐ படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ரஹ்மான் உடன் பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோர் ஐ படத்தின் பாடல்கள் பாடி அசத்தினர்.
விக்ரம்-எமியின் நடனம்
நிகழ்ச்சியின் போது, ஐ படத்தில் இடம்பெற்றுள்ள என்னோடு நீயிருந்தால்ஸ பாடலுக்கு விக்ரமும், எமி ஜாக்சனும் நடனம் ஆடினர். இந்தப்பாடலுக்கு விக்ரம் ஓநாய் மனிதன் போன்ற தோற்றத்தில் வந்தார்.
பாடி பில்டர்களின் சாகசம்
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அர்னால்டுக்கு பிடித்த பாடி பில்டிங் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கலைஞர்கள் தங்களது அழகிய உடற்கட்டை காண்பித்தனர். இதனை அர்னால்டு மிகவும் ரசித்து பார்த்தார்.
இந்திய படங்களில் நடிக்க ஆசை – அர்னால்டு
இந்தியா ஒரு அழகான நாடு, முதன்முறையாக நான் சென்னை வந்துள்ளேன். ஆஸ்கர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.
இந்தியாவில் நல்ல நல்ல படங்கள் நிறைய வருகின்றன. ஐ போன்ற படங்களை பார்க்கும் போது எனக்கும் இந்திய படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது, குறிப்பாக ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. சென்னை மக்களின் அன்பு பிடித்து இருக்கிறது, நான் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்று பேசினார்.
குவிந்த திரை நட்சத்திரங்கள்
விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார், லட்சுமி ராய், சிபிராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், விஜய் அமலாபால், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆடியோ வெளியீடு
ஐ படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே மேற்சொன்ன வார்த்தைகளை பேசிவிட்டு கிளம்பிவிட்டார் அர்னால்டு. இதனால் ஐ படத்தின் இசை தட்டை கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் வெளியிட ரஜினி பெற்றுக்கொண்டார். இவர்களோடு ரஹ்மான், பாடலாசிரியர்கள், கபிலன், மதன்கார்கி, ஷங்கர் உள்ளிட்ட ஐ படத்தின்
குழுவினர் பங்கேற்றனர்.
பாதியில் வெளியேறிய அர்னால்டு – அர்னால்ட்டை வீணடித்த படக்குழு
ஐ படத்தின் விழாவுக்கு, எதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டாரோ அதை படக்குழுவினர் வீணடித்துவிட்டனர். சுமார் 6 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி 8 மணிக்கு தான் துவங்கியது. மேலும் நிகழ்ச்சிக்கான நிரலும் சரிவர அமைக்கப்படாததால் படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே அர்னால்டு கிளம்பிவிட்டார்.