குடும்ப கஷ்டம் போக்க விபச்சாரம் செய்தால் தவறில்லை: செய்தித் துளிகள் செய்தித் துளிகள்

14 Sep,2014
 

குடும்ப கஷ்டம் போக்க விபச்சாரம் செய்தால் தவறில்லை: தீபிகா படுகோனே கருத்து


கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதராபாத் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ஸ்வேதா பாசு இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு படத்திற்கு தேசிய விருதும் பெற்றவர். அதனால் அவரை பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும்.

ஸ்வேதா பாசுக்கு ஆதரவாக இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். தற்போது தீபிகா படுகோனேவும் சுவேதாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

குடும்ப கஷ்டத்தை போக்க விபச்சாரத்தில் ஈடுபட்டால் தவறில்லை என்று அவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியிருப்பதாவது: தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்குத்தான் சுவேதா அப்படிச் செய்துள்ளார். அது தவறில்லை.

மக்கள் அவரை பற்றி தவறாக பேசுவது நியாயமற்றது. நிர்க்கதியற்ற நிலையில் ஒரு பெண்ணால் வேறு என்ன செய்ய முடியும்.ஸ்வேதாவை குறை சொல்கிறவர்கள் அவரை அந்த குற்றத்தை நோக்கி தள்ளியவர்கள் பற்றி ஏன் பேசுவதில்லை.

ஸ்வேதாவை எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நான் உள்பட யாருமே அவருக்கு உதவி செய்ய வில்லையே. எனவே அவரைப் பற்றி தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்யுங்கள் என்கிறார் தீபிகா.

அக்டோபர் 3-ல் ‘ருத்ரமாதேவி’ முதல் பார்வை டீஸர்


தெலுங்குத் திரையுலகில் ஒரே சமயத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இரண்டு படங்கள் ‘ருத்ரமா தேவி, பாகுபலி’. இரண்டு சரித்திரப் படங்களிலும் நாயகியாக நடிப்பவர் அனுஷ்கா. ‘ருத்ரமாதேவி’ படத்தை ‘ஒக்கடு’ புகழ் குணசேகர் இயக்க, ‘பாகுபலி’ படத்தை ‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி இயக்கி வருகிறார்.

இதில் ‘ருத்ரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘ருத்ரமாதேவி’ படத்தின் அடுத்த விளம்பரப்படுத்தும் திட்டமாக படத்தின் டீஸரை விஜயதசமியன்று வெளியிட இருக்கிறார்களாம். இதுவரை இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமாக ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு சிம்மாசனத்தில் அனுஷ்கா கம்பீரமாக உட்கார்ந்திருப்பது போன்ற அந்த புகைப்படமே படத்தின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என அப்போதிலிருந்தே பேச்சு இருந்து வருகிறது.

இப்போது படத்தின் முதல் பார்வை டீஸரை உருவாக்கி வருகிறார்களாம். இந்தியத் திரையுலகின் திறமையான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையில் இப்படத்தின் இசைக் கோர்ப்புப் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. டீஸருக்கும் அவர் தனிக் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படமான ‘பாகுபலி’ படத்தின் டீஸர் கண்டிப்பாக மிரட்டலாக இருக்கும் என இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.



தெலுங்கில் நடிக்கப் போகிறாரா கார்த்திஸ?


தெலுங்கில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் நிறையவே வர ஆரம்பித்து விட்டன. அதிலும் சீனியர் ஹீரோ ஒருவரும் ஜுனியர் ஹீரோ மற்றொருவரும் என்ற பாணியில் சில படங்கள் வந்து வெற்றி பெற்றன.

தற்போதும் சில படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓரளவிற்கு ஆரோக்கியமான மல்டிஸ்டார் படங்கள் தெலுங்கில் தயாராகி வருவது அந்தத் திரையுலகைப் பொறுத்தவரை ஆரோக்கியமான ஒரு விஷயமாகவே திரையுலகினர் பார்க்கிறார்கள்.

தமிழைப் பொறுத்தவரையில் அது எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும் விஷயமாக இருக்கிறது. இன்றைய இளம் ஹீரோக்கள் பலரும் நண்பர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் இணைந்து நடித்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் விஷாலும், ஆர்யாவும் ஏற்கெனவே ‘அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்தது போல் விரைவில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.

தமிழில் சமீபத்திய தனது தோல்விப் படங்களால் தடுமாறிக் கொண்டிருக்கும் கார்த்தி விரைவில் நாகார்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஒரு நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த கதாபாத்திரத்தில் ஜுனியர் என்டிஆர் தான் நடிக்க இருந்தாராம்.

ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் அந்தப் படத்திலிருந்து விலகி விட கார்த்தியை அணுகியிருக்கிறார்கள். கார்த்தி நடித்த சில படங்கள் தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளதால் அவரைப் பற்றிய பரிச்சயம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்

யூட்யூப்பில் சாதனை படைத்த மன்வா லாகே ரோமான்டிக் பாடல்


ஷாருக்கான் நடித்த ஹேப்பி நியூ இயர் படத்தில் உள்ள மன்வா லாகே என்ற ரோமான்டிக் பாடல் சமூக வலைதளங்களில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் டுவிட்டரில் அதிகம் விற்பனையான பாடலும் இது தான். யூட்யூப்பில் மட்டும் கடந்த 48 மணி நேரத்தில் 2.6 மில்லியன் மக்கள் இந்த பாடலை ரசித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஏராளமானவர்களின் உள்ளம் கவர்ந்த பாடலாக வலம் வரும் ஹேப்பி நியூ இயர் படத்தின் மன்வா லாகே பாடலை 21 மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு மில்லினுக்கும் அதிகமானவர்கள் ரசித்துள்ளார்கள். கடந்த 24 மணிநேரத்தில் அதிகமாக பார்க்கப்பட்டதும், அதிகமாக ஷேர் செய்யப்பட்டதும் இந்த பாடல் தானாம். இந்த ஒரு பாடல் மட்டும் தனக்கான ரசிகர்கள் எண்ணிக்கையை மிக வேகமாக அதிகப்படுத்தி வருகிறதாம்.

இந்த சாதனை பற்றி ஹேப்பி நியூ இயர் படத்தின் இயக்குனர் ஃரக் கான் கூறுகையில், நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்திற்காக நாங்கள் முதலில் இயக்கியது இந்த பாடலை தான். படத்தில் பணியாற்றி விஷால்-ஷேகர் மற்றும் இர்சாத் கமீல் உள்ளிட்ட அனைவரும் தங்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த பாடலின் ஒளிப்பதிவையும் பெரும்பாலான மக்கள் விரும்பி இருப்பது எனக்கு மகிழச்சியாக உள்ளது. பாலிவுட் படங்களில் ஒரு படத்தின் ரோமான்டிக் பாடல் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில் அதிகம் விற்பனையாகி உள்ள ரோமான்டிக் பாடலும் இது தான்.

அமைதியையும், காதலையும் வலியுறுத்தும் இந்த பாடல் இப்போதும் உலகம் முழுவதும் ஒலிக்க துவங்கி உள்ளது. இந்த பாடலை படமாக்கியதே ஒரு மிகச் சிறந்த அனுபவம் தான். இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக ஷாருக்கானும், தீபிகாவும் நடித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மன்வா லாகே பாடலின் வெற்றியையும் வரவேடற்பையும் பற்றி கூறிய அப்பாடலின் பாடலாசிரியர் இர்ஷாத் கமீல், இப்போது எனது உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளையும், சந்தோஷத்தையும் வார்த்தையால் சொல்ல முடியாது. இந்த பாடலை விரும்பி கேட்டு வரும் அனைவரும் எனது நன்றிகள். ரசிகர்கள் இந்த பாடலுக்கு சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

விஷால்-ஷேகர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், யூமன் இரானி, மோனு சூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதல், ஆக்ஷன், நட்பு, இசை, அழகிய ஒளிப்பதிவு என அனைத்தும் கலந்த கலவையாக இசை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது.

ரெட் சில்லீஸ் என்டர்டைன்மன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் உலகம் முழுவதும் விநியோகிக்க உள்ளது. ரிலீசாவதற்கு முன்பே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுடன், பாடல்கள் மூலம் வெற்றியை பதிவு செய்ய துவங்கி உள்ள ஹேப்பி நியூ இயர் படம் தீபாவளியன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.


வட சென்னை வார்த்தைகளை கொண்ட ஐ பாடல்


ஐ படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் முழுக்க முழுக்க வடசென்னை பகுதி மக்கள் பேசும் பிரத்யே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அந்தப் பாடலை எழுதிய கவிஞர் கபிலன் கூறியிருப்பதாவது:படத்தின் கதைக்கு ஏற்றபடி வட சென்னை பேச்சுத் தமிழில் ஒரு பாடல் வேண்டும் என்று சங்கர் சார் கேட்டார்.

வடசென்னையை சேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக அந்த பாட்டு சூழல். இதற்காக வடசென்னை பகுதியில் ஒருவாரம் வரை சுற்றித் திரிந்து அந்த மக்களின் பிரத்யேக வார்த்தைகளை கண்டுபிடித்து அதை வைத்து அந்தப் பாடலை எழுயிருக்கிறேன். கொடைக்கானல் மலை உச்சியில் அமர்ந்து ஷங்கர் சாரும் நானும் இதை முடித்தோம்.

பாட்டை கேட்டுவிட்டு இந்த பாட்டு உங்களை உச்சத்திற்கு கொண்டு போகும் என்றார்.நான் வண்ணாரப்பேட்டைநீ வெண்ணிலா முட்டைஒரு மாட்டுகொம்பு மேலபட்டாம்பூச்சி போலஸ என்று அந்த பாட்டு தொடங்கும். இதை இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

அதே போல “என்னோடு நீயிருந்தால்..” பாடல் ஆண் பாடுவது போலவும் பெண் பாடுவது போலவும் எழுதியிருக்கிறேன். அந்த பாடல் இதுஸஎன்னோடு நீயிருந்தால்உயிரோடு நானிருப்பேன்உண்மை காதல் யாதென்றால்உன்னை என்னைச் சொல்வேனேநீயும் நானும் பொய்யென்றால்காதலைத் தேடிக் கொல்வேனேகூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனேதேங்காய்குள்ளே நீர்போலஉன்னை தேக்கி வைப்பேனேஸ

வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா?இவ்வாறு கபிலன் கூறினார். இதற்கு முன் ஷங்கரின் பாய்ஸ், அந்நியன் படங்களுக்கும் கபிலன் பாடல் எழுதியிருக்கிறார்.




முடிவுக்கு வந்தது ஜி.வி.பிரகாஷின் 'டார்லிங்'


பிரபல இசையமைப்பாலர் ஜி.வி.பிரகாஷ், பென்சில், டார்லிங் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் டார்லிங் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ரானி, ஸ்ருஷ்டி டாங்கே, கருணாஸ், ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'டார்லிங்' படத்தை அறிமுக இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில், உருவாகும் இந்த படத்தை ரூபன் எடிட்டிங் செய்கிறார். மேலும் கிருஷ்ணன் வசந்தன் ஒளிப்பதிவு பணியை கவனிக்கிறார்.

தெலுங்கு மொழியில் அபார வெற்றி பெற்ற 'பிரேம கத சித்ரம்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் 'டார்லிங்' என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடித்து வரும் 26ஆம் தேதி வெளிவரவுள்ள 'மெட்ராஸ்' படத்துடன் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் பாடல் வெளியீடும், டிசம்பர் படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது

பிரேசில் கால்ந்து வீரர் பீலே திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை.


 

பிரபல பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் பீலே அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று ஹாலிவுட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் பிரேசில் வீரர் பீலே வேடத்தில்  Kevin de Paula நடித்து வருகிறார். அவருடன்  Vincent D’Onofrio, Rodrigo Santoro, Colm Meaney, Seth Michaels, Seu Jorge and Diego Boneta ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனர்கள் duo – Jeff மற்றும் Michael Zimbalist ஆகிய இருவரும் சேர்ந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் தளத்தில் இந்த படத்தின் பாடகர்  Anna Beatriz அவர்கள் படத்தை வெளியிட்டு இந்த செய்தியை தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

இந்த திரைப்படத்தை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே ரிலீஸ் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறைவேறாததால், இந்த படம் வரும் 2015 ஜனவரியில் வெளியாகும் என தெரிகிறது. Slum dog millionaire, Life of Pie படங்களுக்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இன்னொரு ஹாலிவுட் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.



பாபநாசம் படப்பிடிப்பின் இடையே சமூக சேவை செய்யும் பெரியவர்களையும் சந்திக்கும் கமல்.




உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது த்ரிஷ்யம் ரீமேக் படமான பாபநாசம் படத்தில் பிசியாக உள்ளபோதிலும் இடையிடையே சமூக தொண்டு செய்யும் பெரியவர்கள் மற்றும் இலக்கிய சிந்தனையாளர்கள் ஆகியோர்களை சந்தித்து வருகிறார்.

நாங்குநேரியில் படப்பிடிப்பு நடந்தபோது, அங்குள்ள தோத்தாத்ரி நாதர் வைணவ மடத்துக்கு சென்று ஜீயரை சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் நாத்திகரான கமல் விபூதி பூசி இருந்ததால் விமர்சனங்களும் எழுந்தன. அதன்பின்னர் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்களில் மிகவும் முக்கியமான்வருமான தொ.பரமசிவன் என்பவரை சந்தித்து தமிழ் இலக்கியங்கள் குறித்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்.


  மேலும் குற்றாலம் அருகேயுள்ள தென்காசி பகுதியில் வசிக்கும் சமூக சேவகர் ராம கிருஷ்ணன் என்பவரை சமீபத்தில் கமல் சந்தித்தார். ராமகிருஷ்ணன் அவர்கள் ஆய்க்குடி அமர்சேவா என்ற தொண்டு நிறுவனத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். ராமகிருஷ்ணன் அவர்களிடம் கமல் இரண்டு மணி நேரம் அவருடைய தொண்டு நிறுவனம் குறித்து பேசிக்கொண்டு இருந்தார்.

படப்பிடிப்புடன் சமூக தொண்டு செய்பவர்களையும் சந்தித்து வரும் கமல்ஹாசனை படக்குழுவினர் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies