நவம்பர் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் – சிம்பு அறிவிப்பு!செய்தித் துளிகள்

13 Sep,2014
 

             



சிம்பு ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்னா சொல்லுது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக, வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு, சற்றென்று மாறுது வானிலை உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் எந்தப்படமும் முடிந்ததாக தெரியவில்லை. எல்லா படமும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். சிம்புவின் படம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ”நான் நடித்து வரும் படங்களில் எல்லாம் ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்துவிட்டேன். எனது ரசிகர்களை போலவே நானும் எனது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்திருக்கிறேன். வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர்.

சில பிரச்னைகள் உள்ளது. அது தீர்க்கப்பட்டு படங்கள் வெளியாகும். இதில் வாலு படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது. இது நம்ம ஆளு படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கண்டிப்பாக இது நம்ம ஆளு படம் டிசம்பரில் வெளியாகும். இனி நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்” என்று கூறியுள்ளார்




தீபாவளிக்கு மும்முனைப்போட்டி!


கடந்த மாதம் வரை விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள்தான் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தீபாவளி ரேஸில் ஷங்கரின் ஐ படமும் சேர்ந்து கொண்டதால், தீபாவளி பரபரப்பு இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு நடுவே விஷாலின் பூஜை ஒருவேளை பின்வாங்கலாம் என்று கோலிவுட்டில் டாக் எழுந்தது.

ஆனால், பூஜை போடும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியே படத்தை ஆரம்பித்த விஷால், சமீபத்தில் அப்படத்தின் டீசரை வெளியிட்டவர், அதே அடிதடி என்று காண்பித்தாலும் ஹரியின் அதிரடியான திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்ற தைரியத்தில் டீசரின் முடிவில் தீபாவளி வெளியீடு குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், 65 தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளில் சிக்கியிருந்த விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ விழாவை இம்மாதம் 18-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் கத்தியும் தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. ஆக, தீபாவளிக்கு ஐ, கத்தி, பூஜை என்ற மூன்று மெகா படங்கள் வெளியாகி பலத்த மும்முனைப்போட்டி நடக்க உள்ளது.

இண்டர்நெட்டில் லீக் ஆனது 'கத்தி'. விஜய்-முருகதாஸ் அதிர்ச்சி.


விஜய்,சமந்தா நடிப்பில் உருவாகி வரும் கத்தி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிட தடைகோரும் தமிழ் அமைப்புகளை சந்தித்து வரும் படக்குழுவினர் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் விஜய், அனிருத் இசையமைப்பில் செல்பி புள்ள என்ற பாடலை பாடினார். விஜய் பாடுவதற்கு முன்னர் அனிருத் முழுப்பாடலையும் விஜய்க்கு பாடி காட்டினார். இரண்டு பேருமே பாடிய பாடல்களும் ஒலிப்பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால் விஜய் பாடிய பாடல்தான் படத்தின் வரும் என்று அனிருத் கூறியுள்ளார்.

இந்நிலையில் அனிருத் பாடிய செல்பி புள்ள பாடல் இன்று காலை இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டது. அனிருத் இசைக்குழுவில் இருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் இந்த பாடலை லீக் செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இதனால் கத்தி படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதையொட்டி அனிருத் ரிகார்டிங் செய்யும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கத்தி படத்தினை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டால் ரிலீஸுக்கு முன்னரே படத்தை எப்படியாவது கைப்பற்றி இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என படக்குழுவினர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருக்கின்ற பிரச்சனைகள் போதாதென்று இன்னொரு புதுப்பிரச்சனையும் கிளம்பியுள்ளதால் கத்தி படக்குழு திண்டாட்டத்தில் உள்ளது.


ஐ படத்தில் ஒரேயொரு பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம்!


ஐ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஒரு மிரட்டு மிரட்டியிருக்கிறார் டைரக்டர் ஷங்கர். அந்த போஸ்டரில் விக்ரமின் இயல்பான முகம் கோரமாவது போல் உருவாக்கப்பட்டிருப்பதால், படத்துக்கான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஷங்கரின் அந்நியன் படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்த விக்ரம், இந்த படத்தில் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறாராம்.
மேலும், வருகிற 15-ந்தேதி ஐ படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த தருணத்தில், அப்படத்தைப்பற்றிய இன்னொரு செய்தியையும் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஷங்கர்.

அதாவது ஐ படம் சமபந்தப்பட்ட அனைத்துகட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் ஒருபக்கம் நடந்து வந்தபோதும், இன்னொரு பாடல் மட்டும் பேலன்ஸ் உள்ளது.

இப்போது இருக்கிற பிசியில் அதற்கு நேரம் இல்லாததால், ஆடியோ விழா முடிந்த பிறகு அந்த பாடலை படமாக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள ஷங்கர், ஆடியோ விழாவில், அர்னால்டு, ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தற்போது உறுதி செய்துள்ளார்.




விஜய், முருகதாசுக்காகத்தான் கத்தியை எதிர்க்கிறார்கள்! – தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா!


விஜய் நடித்து வரும் கத்தி படத்தை ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்நாட்டில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இன்னமும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், லைகா மொபைல் நிறுவனத்தின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் 1989லேயே இலங்கையில் இருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி விட்டேன். எனது உறவினர்கள் அனைவருமே அந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். அதனால் இலங்கைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இப்போது இல்லை.

மேலும், நானும் தமிழன்தான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள்தான் என்னை எதிர்க்கிறார்கள். அதோடு, நான் ராஜபக்சேவுடன் இணைந்து ஒரு தமிழ்ப்படத்தை தயாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அதோடு, நான் ஏற்கனவே தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்றொரு படத்தை தயாரித்திருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த படத்தை யாருமே எதிர்க்கவில்லை.

ஆனால் இப்போது கத்தி படத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பிரபலங்கள் இருப்பதால் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ள சுபாஸ்கரன் அல்லிராஜா, அடுத்தபடியாக சீமான் இயக்கத்தில் சூர்யாவைக்கொண்டு தான் படம் தயாரிக்கப்போவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் நடிகர் ராணாவுடன் சுற்றும் திரிஷா


வெளிநாடுகளில் தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் ஒன்றாக சுற்றுகின்றனர். இது அவர்களின் ரகசிய காதலை அம்பலப் படுத்தியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

திரிஷா தெலங்கு படங்களில் பிசியாக நடித்த போது ராணாவுடன் நெருக்கமானார். இருவரும் அடிக்கடி சந்தித்தனர். படவிழாக்களிலும் ஜோடியாக வந்தார்கள்.

சமீபத்தில் ஐதராபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் இருவரும் ஒன்றாக காரில் வந்து தம்பதி போல் இறங்கினார்கள்.

மணமக்களை வாழ்த்திவிட்டு புறப்பட்டும் சென்றனர். இருவரும் காதலிப்பது இதன் மூலம் உறுதி படுத்தப்பட்டது. ரகசிய திருமணம் செய்து கொண்டு இருப்பார்களோ என்றும் சிலர் பேசினர்,

இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் மவுனம் காத்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டிலும் திரிஷா, ராணா ஜோடியாக சுற்றும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலாலம்பூரில் சீமா விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு இருவரும் ஜோடியாக சென்று இருக்கிறார்கள். அங்கிருந்து ஊர் ஊராக சுற்றவும் செய்கிறார்கள்.


தேனாண்டாள் பிலிம்சுடன் இணைந்து அரண்மனை படத்தை வெளியிடும் உதயநிதி


சுந்தர்.சி. இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘அரண்மனை’. இப்படத்தில் வினய், ஹன்சிகா மோத்வானி, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தை விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், செப்டம்பரில் வெளியாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக என்.ராதா மற்றும் ராமநாராயணன் இணைந்து இப்படத்தை வெளியிடயிருந்தனர். ஆனால் தற்போது இவர்களுடன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளனர்.

இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.




Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies