தனியாக இருப்பதே மகிழ்ச்சி, மீண்டும் திருமணம் செய்யும் எண்ணமில்லை – கள்ளசாவி – திரை விமர்சனம்

12 Sep,2014
 

             


நடன அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறி, இப்போது இயக்குநராக உயர்ந்துள்ள பிரபுதேவா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் முன்னணி இயக்குநராக விளங்கி வருகிறார்.

பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் பிரபுதேவாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர், அஜய் தேவ்கானை வைத்து இயக்கியுள்ள ”ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன்” படம் தொடர்பாக சென்னை வந்திருந்தார்.

அப்போது, சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பிரபுதேவா பேசியதாவது, தமிழ் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. இங்குள்ள ஹீரோக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். பாலிவுட் சினிமா, தமிழ் படங்களை உற்று நோக்கி கவனிக்கிறது. அதனால் மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் நடிப்பேன்.

ஒருபோதும் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன். எதிர்காலத்தில் பட நிறுவனம் தொடங்கி, நல்ல தமிழ் படங்களையும் எடுக்கும் எண்ணம் உள்ளது. எனக்கு விருது வாங்கும் படங்களை இயக்கும் ஆசையில்லை, கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுக்க விரும்புகிறேன்.
தற்போது நான் இயக்கி வரும் ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து அக்ஷ்ய் குமாரை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். இதுதவிர ஏ.பி.சி.டி. இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன். தற்போது எனது சினிமா வாழ்க்கை பிஸியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய பிரபுதேவாவிடம், மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இருக்கிறதா என பத்திரிகையாளர் கேட்க, அதற்கு பிரபுதேவா அப்படி ஒரு எண்ணம் இல்லை, தனியாக வாழ்வதே இப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.


சுசீந்திரன் படத்தில் நட்புக்காக ஆடிய சதுரங்க வேட்டை நட்ராஜ்!

முத்துக்கு முத்தாக, மிளகா, சதுரங்க வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நட்டி என்ற நட்ராஜ். நடிகரான இவர் பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளரும் கூட. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீவா படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நட்ராஜ்.

”ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கினாலே அவலேசாஸ” என தொடங்கும் மதன் கார்க்கியின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் நட்ராஜ். சுசீந்திரன், நட்ராஜ் நெருங்கிய நண்பர், அவரது நட்புக்காவுகம், விஷ்ணுவின் அன்புக்காகவும் இந்தப்படத்தில் ஆடியுள்ளதாக கூறும் நட்ராஜ், இந்தப்பாட்டு குத்தாட்டம் போன்றும், கதை சொல்வதும் போன்றும் இருக்கும் என்கிறார்.

சுசீந்திரன் இயக்கி வரும் ”ஜீவா” படம், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும், அதில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

ஏற்கனவே இவர்களது நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப்படத்தில் கபடியை மையப்படுத்தி படம் எடுத்த சுசீந்திரன், இதில் கிரிக்கெட்டை மையப்படுத்தி, அதிலும் நிஜ கிரிக்கெட் வீரரான விஷ்ணுவையே நடிக்க வைத்துள்ளார்.

விஷ்ணு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவர்கள் தவிர சூரி, அன்னக்கொடி லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.


சென்னையில் ஐரோப்பிய பட விழா: 3 நாள் நடக்கிறது


சென்னையில் வருகிற 15ந் தேதி முதல் 18ந் தேதி வரை ஜரோப்பிய படவிழா நடக்கிறது. ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்சுரல் செண்டரில் நடக்கும் இந்த விழாவில் நெதர்லாந்து, ஸ்பெயின், கிரிஸ், பிரான்ஸ் நாட்டு படங்கள் திரையிடப்படுகிறது. தினமும் இரண்டு படங்கள் திரையிடப்படும்.

மாலை 6 மணிக்கு ஒரு படமும், இரவு 7.45க்கு ஒரு படமும் திரையிடப்படுகிறது. புதுடில்லியில் உள்ள ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளுடன் இணைந்து சென்னை இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டடேசன் இதனை நடத்துகிறது.

அனுமதி இலவசம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் கிடைக்கும்.



வடிவேலுவை தனியா காமெடி பண்ணச்சொல்லுங்க பார்க்கலாம்: சீறும் சிங்கமுத்து


ஒரு காலத்தில் வடிவேலுவின் நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தவர் சிங்கமுத்து. சிங்கமுத்து எனக்கு இடம் வாங்கித் தருகிறேன் என்று பணமோசடி செய்துவிட்டார் என்று வடிவேலு குற்றம் சாட்டினார். வடிவேலு தி.மு.க பக்கம் போக சிங்கமுத்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆனார். இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் சிங்கமுத்து, வடிவேலு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது: பங்காளிக்கு (வடிவேலு) கையில படமே இல்லை. நான் நடிச்ச 11 படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 25 படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்பவும் நான் பிசியான காமெடி நடிகன் தான்.

வடிவேலு காமெடியில பெருசா சாதிச்சிட்டதா சொல்றாங்க. அவர் ஒண்ணும் தனியா சாதிக்கல. நாங்க பத்து பேர் சேர்ந்து யோசித்து செய்தோம். கதைக்கு தக்கபடி யாருக்கு என்ன கேரக்டர்? யார் எப்படி நடிக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம்.

அது ஹிட்டாச்சு. இப்போது வடிவேலுவை தனியாக காமெடி பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பார்க்க ஆள் இருக்காது.என்னையும் சில பேரு ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. என்னோட உயரம் எனக்குத் தெரியும். ஹீரோன்னா பைட் பண்ணனும், டான்ஸ் ஆடனும், அதெல்லாம் இந்த வயசுல செய்ய முடியுமா. தேவையில்லாம ரிஸ்க் எடுத்து எதுக்கு சிலபேர் மாதிரி இருக்கிறதையும் கெடுத்துக்கணும், என்கிறார் சிங்கமுத்து



விஜய் சேதுபதியை காதலித்தேன்: சமந்தா அதிரடி


சித்தார்த், சமந்தா காதல் தான் இப்போதைய ஹாட் டாபிக். இருவரும் “ஆமா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று சொல்லவில்லை. ஆனாலும் கோவிலுக்கு ஒன்றாக சென்று பரிகார பூஜை செய்கிறார்கள். பட விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.

“நாங்கள் காதலிக்கவில்லை” என்றும் சொல்லவில்லை.இந்த நிலையில் “பீட்சா படம் பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பிச்சேன்” என்று அடுத்த அதிரடியை வெளியிட்டிருக்கிறார் சமந்தா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதியோட பெரிய ரசிகை நான். அவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.

பீட்சா படம் ரிலீசானப்போ பிரண்ட்சுங்கல்லாம் வற்புறுத்தி அந்தப் படத்துக்கு கூட்டிட்டு பேனாங்க. சும்மா வேண்டா வெறுப்பாத்தான் அந்தப் படத்தை பார்த்தேன். முதல் 15 நிமிடத்திலிருந்தே விஜய் சேதுபதியோட நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன்.

அப்போதிருந்தே அவரை காலிக்க ஆரம்பிச்சிட்டேன்.விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலேயும் வித்தியாசமாக நடிக்கிறார். அவருடன் நடிக்க ஆசை. நல்ல கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன். ஆனாலும் அவர் நடிக்கும் படத்தில் எல்லோரையும் விட அவர் ஸ்கோர் பண்ணிவிடுவார் என்கிற தயக்கமும் இருக்கிறது” என்கிறார் சமந்தா.

“விஜய்சேதுபதி தற்போது நயன்தாராவுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்து சமந்தாவும் நடிக்க ஆசைப்படுகிறார். மற்ற டாப் ஹீரோக்களின் காதில் புகை வருகிற மாதிரி இருக்கிறது விஜய் சேதுபதியின் வளர்ச்சி.

விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பித்ததாக சமந்தா விளையாட்டுக்காக சொல்லி இருந்தாலும் சித்தார்த்துக்கு சின்ன அதிர்ச்சியாகத்தான் இருக்கும்” என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.

டபுள் ரோலில் கவர்ச்சி பேரலை வீசப்போகிறார் சன்னி லியோன்!


கனடா நாட்டைச் சேர்ந்த ஆபாச பேரலை சன்னி லியோன். ஹாலிவுட் சினிமாவை கலக்கிய அவர், 2012ல் இருந்து பாலிவுட் சினிமாவையும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

அதில் ஜாக்பாட் உள்ளிட்ட சில படங்களில் நிர்வாணமாகவும் நடித்து சர்ச்சைகளையும் உண்டு பண்ணிய சன்னி, வடகறி படத்தின் மூலம் கோலிவுட்டிலும் என்ட்ரி ஆனார். ஆனபோதும், எதிர்பார்த்தபடி அவரது அதிரடி ஆட்டம் தமிழக ரசிகர்களை தாக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது மஸ் திஸாதே என்றொரு இந்தி படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் சன்னி லியோன். கவர்ச்சி, காமெடி, திரில்லர் கலந்த சப்ஜெக்டாக உருவாகவுள்ள அந்த படத்தில் லைலா, லிலி லேலே என்ற இரண்டு வேடங்களில் சன்னி நடிக்கிறாராம்.

மேலும், இந்த படத்தில் ஹீரோவாக வீர் தாஸ், துஷார் கபூர் என இரண்டு இளவட்டங்காளைகள் நடிக்கிறார்களாம். இதில் துஷார் கபூர் ஏற்கனவே ஒரு படத்தில் சன்னியுடன் நடித்து விட்டார்.

ஆனால் வீர்தாஸ், சன்னி லியோன் இருவரும் இணைவது இதுவே முதல் முறை என்பதோடு, இருவருமே ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வமாக இருந்து வந்தார்களாம்.

அதனால் இந்த படத்தில் நடிக்க வேறு சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தபோது சன்னிலியோனைதான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று இயககுனரிடம் மல்லுக்கு நின்று ஓ.கே செய்தாராம் வீர்தாஸ்.

அதனால் முதன்முறையாக இணையும் சன்னிலியோன்-வீர்தாஸின் ரொமான்ஸ் மட்டுமின்றி, கவர்ச்சி ஆட்டம் பாட்டமும் வெறித்தனமாக இருக்கும் என்று பாலிவுட் படஉலகமே எதிர்பார்க்கிறதாம்.


கள்ளசாவி – திரை விமர்சனம்


பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார்.

வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம் ராகேஷ் மட்டுமில்லாது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அவளை பிடித்துப் போய்விடுகிறது.

நெடுநாளாக தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தாம்பத்ய சுகம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார் ராகேஷ். இவருடைய வீட்டிலேயே இருந்து மனைவிக்கு பணிவிடை செய்துவரும் வர்ஷா மீது இவரது பார்வை விழுகிறது. ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் அவளை பலாத்காரம் செய்துவிடுகிறார் ராகேஷ்.

மறுநாள் காலையில் தனது கற்பு போய்விட்டதாக சொல்லி புலம்பும் வர்ஷாவை சமாதானம் செய்கிறார் ராகேஷ். ஆனால், வர்ஷா சமாதானமாக மறுக்கிறாள்.

தன்னுடைய மானம் அவளால் பறிபோய்விடுமோ என பயப்படும் ராகேஷ் அவளை வேலையிலிருந்து தூக்கிவிட முடிவெடுக்கிறார். ஆனால், அவளுடைய மனைவி அவள் மீது அதிக பாசமாக இருப்பதால் அவளை வேலையிலிருந்து தூக்க முடியவில்லை.

இறுதியில் ராகேஷ் என்ன முடிவெடுத்தார்? என்பதே மீதிக்கதை.

‘திருடா திருடி’ படத்தில் தனுஷுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வர்ஷா, இந்த படத்தில் சற்று உடல் பெருத்து கூடுதல் கவர்ச்சியுடன் களமிறங்கியிருக்கிறார்.

ஆனால் நடிப்புதான் வரவில்லை. செல்வந்தருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் இவருடைய முகபாவணைகள் நம்மையும் கிரங்க வைக்கின்றன. படம் முழுக்க சேலையுடன் வந்தாலும் கவர்ச்சியில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

ராகேஷ் கதாபாத்திரத்தில் வரும் கவின் மற்றும் அவரது மனைவியும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். ராகேஷின் மகளாக வருபவர் மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவர் அணிந்திருக்கும் உடை நம்மை கிளுகிளுப்பாக்குகிறது.

காமம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் அவசியமான ஒன்று. ஆனால், அந்த காமம் அளவுக்கு மீறி சென்றால் அது நமக்கே ஆபத்தில் முடியும் என்ற ஆழமான கருத்தை சொல்ல வந்த இயக்குனர் ராஜேஷ்வரன், கதையில் ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ராகேஷ் மது குடிக்கும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

ராஜ் பாஸ்கர் இசையில் பாடல்களை கேட்கவே முடியவில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. என்.கிருஷ் ஒளிப்பதிவு ஓரளவு பரவாயில்லை.

மொத்தத்தில் கள்ளசாவி களவாடவில்லை




சிகரம் தொடு. திரைவிமர்சனம்



தந்தை மகன் பாசப்பிணைப்பு, ஏடிஎம் கொள்ளை, இடையிடையே வயிறு குலுங்க வைக்கும் காமெடி, இடைவேளைக்கு பின்னர் வேகமாக நகரும் திரைக்கதை என ஒரு அனைத்து அம்சங்களையும் திகட்டாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் கவுரவ்.

படித்து முடித்துவிட்டு பேங்க் மேனேஜராக ஆசைப்படுகிறார் விக்ரம் பிரபு. ஆனால் முன்னாள் போலீஸ் அதிகாரியான சத்யராஜ் தனது மகன் விக்ரம் பிரபுவை ஒரு விருது வாங்கும் போலீஸ் அதிகாரியாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார். விக்ரம் பிரபுவின் காதலி மோனல் கஜ்ஜார், தனக்கு கணவராக வருபவர் எந்த காரணத்தை முன்னிட்டும் போலீஸ் அதிகாரியாக இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவராக இருக்கின்றார். இந்நிலையில் விக்ரம் பிரபு தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? அல்லது காதலியின் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார? என்பதுதான் கதை.

இதனிடையே ஹைடெக் ஐடியாவுடன் ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க விக்ரம் பிரபு செய்யும் சாகசம் என கதையும் திரைக்கதையும் அசராமல் பயணிக்கிறது.

போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரம், காதல் காட்சிகளில் குறும்பு, நகைச்சுவை காட்சிகளில் கலகலப்பு என ஒரு பல்சுவை நாயகனாகவே மாறிவிட்டார் விக்ரம் பிரபு. இதேபோல கவனமாக கதையை தேர்வு செய்தால் கண்டிப்பாக கோலிவுட்டின் முன்னணி நாயகனாக உருவாகிவிடுவார் விக்ரம் பிரபு.


மோனல் கஜ்ஜார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு அழகான நடிகை. பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டும் மோனல் நடிப்பிலும் ஓகே ரகம்.

சதீஷ், சிங்கமுத்து, கோவை சரளா மற்றும் லொள்ளுசபா மனோகர் என நகைச்சுவை பட்டாளம் ஏராளம். அனைவரும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றனர்.

இமான் இசையில் ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது படத்தின் பிளஸ்.

காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகளை கொஞ்சம் குறைத்துவிட்டு ஏ.டி.எம் கொள்ளை சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகம் வைத்திருக்கலாம். இருப்பினும் தூங்கா நகரம் போலவே இந்த படத்தையும் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைத்துள்ளார் இயக்குனர் கவுரவ். வாழ்த்துக்கள்.



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies