எனக்கு அரண்மனையில்தான் நெருக்கம் ஏற்பட்டது. ஹன்சிகா செய்தித் துளிகள்

10 Sep,2014
 

கனடாவில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னர் பாலிவுட் திரையுலகிற்கு வந்த நடிகை சன்னிலியோனுக்கு இந்தி படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் நடித்த ஜிஸம் 2, ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ், ஹேட் ஸ்டோரி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது சன்னிலியோன் 'Mastizaade' என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் சன்னிலியோன் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். ஒரு வேடத்தில் நடித்தாலே கவர்ச்சி மழை பொழியும் இரண்டு வேடத்தில் என்றால் ரசிகர்களின் நிலை என்ன ஆகும் என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல். அந்த இன்னொரு வேடம் குடும்பப்பாங்கான கேரக்டர் ரோல் என்பதுதான்.

இந்த தகவலை சன்னிலியோன் தனது இரண்டு விரலை காட்டி சமூக வலைத்தளத்தில் தெரிவித்தபோது எங்களால் இரண்டையும் சமாளிக்க முடியாது என பல ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.


ஆனந்தம், உன்னை நினைத்து, உன் சமையலறையில், ஆட்டோகிராப் போன்ற பல படங்களில் நடித்த முன்னணி நடிகை சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த பிரசன்னாவுடன் காதல் கொண்டார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் அவருக்கும் பிரசன்னாவுக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் சினேகா தற்போது கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.  இதற்கு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமாக இருந்ததாக் செய்தி வெளிவந்தபோது அவரும் பிரசன்னாவும் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அவர்களிடம் இருந்து எவ்வித மறுப்பும் வெளிவராததால் இந்த தகவல் உண்மையாக இருக்கும் என கருதப்படுகிறது.

சமீபத்தில் வடபழனியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சினேகா செக்கப்பிற்காக வந்ததாகவும், தான் கர்ப்பிணி என்பதை உறுதிபடுத்தவே அங்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சினேகா மற்றும் பிரசன்னாவிடம் இருந்து இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிரபல நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த நடிகை ஜெனிலியாவும் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன



இணையம் என்ற ஒன்று பிரபலமானதில் இருந்தே இணையத்தில் நிர்வாண படங்களை பார்க்கும் வழக்கம் இணையவாசிகளிடம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பிரபல நடிகைகளின் நிர்வாண படங்களை கூகுளில் தேடி பார்க்கும் வழக்கம் இளைஞர்களிடையே மிகவேகமாக பரவி வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று கூறுகிறது.

தற்போது மில்லியன் கணக்கில் இணையதளங்கள் பெருகிவிட்டதால் தங்களுடைய இணையதளங்களை பிரபலமாக்குவதற்காக பலர் தங்கள் இணையதளங்கள் நிர்வாண படங்களை தேடும்போது கூகுளின் முதல்பக்கத்தில் வருமாறு டெக்னிக்கலாக வேலை செய்து வருகின்றனர். இதற்காகவே பலர் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை தங்கள் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களுடைய மார்பிங் வேலைக்கு எந்த நடிகையுமே தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளின் தலையை மட்டும் வெட்டியெடுத்து வேறொரு நிர்வாண பெண்ணின் தலையில் ஒட்டிவிடும் மார்பிங் பணி தொடர்ந்து சட்டவிரோதமாக நடந்து வந்தாலும், கூகுள் தேடுபொறியில் இந்திய நிர்வாண நடிகைகள் என தேடினால் முதல் பக்கத்தில் வருபவை பெரும்பாலானவை தமன்னாவின் படங்களாகவே இருக்கின்றது என்ற தகவல் அவருக்கு மிக சமீபத்தில்தான் தெரிந்துள்ளது.

தன்னுடைய இமேஜ் இதனால் பாதிக்கின்றது என்பதால் இதுகுறித்து தமன்னா சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இவருடைய புகாருக்கு பின்னர்தான் தமன்னாவின் நிர்வாண படங்களை இணையவாசிகள் அதிகம் தேடுவதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இதனால் தமன்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் தமன்னாவிற்கு வரிசையாக படங்கள் தோல்வி அடைந்து வருவதால் வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமன்னா நிர்வாண பட விவகாரத்தை பெரிதுபடுத்துவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.



கோலிவுட்டில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்டு வரும் ஹன்சிகாவுக்கு குஷ்பு 'சின்ன குஷ்பு' என்ற பெயரை அடைந்தாலும் உங்களுடைய தனித்தன்மையை இழக்கக்கூடாது என அறிவுரை கூறியதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த அரண்மனை விழாவில் குஷ்புவை சந்தித்து மனம் விட்டு தான் பேசியதாகவும், அப்போது அரண்மனையில் தன்னுடைய நடிப்பை குஷ்பு பாராட்டியதாகவும் தெரிவித்த ஹன்சிகா, நீ என்னை விட நன்றாக நடிக்கின்றாய். சின்ன குஷ்பு என்ற பெயர் நிலைத்து தன்னுடைய உன்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை நீ இழந்துவிட கூடாது என்றும், ஹன்சிகாவுக்கென ஒரு தனி ஸ்டைல் உருவாக நீ உழைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குஷ்புவின் கணவர் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும், அரண்மனையில் நடிக்கும்போதுதான் சுந்தர் சி அவர்களுடனும், அவருடைய குடும்பத்துடனும் நெருங்கி பழகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரைவில் வெளிவர இருக்கும் அரண்மனை திரைப்படத்தில் ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா, சுந்தர் சி, வினய், மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை காமெடி படங்களையே இயக்கி வந்த சுந்தர் சி முதன்முதலாக திகில் படம் ஒன்றை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியலிலும் சினிமாவிலும் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்துவரும் சர்ச்சைகுமார். 'சண்டமாருதம்’ படத்தில் பிஸியாக இருந்த போது எடுத்த பேட்டி.

''அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.கவை விமர்சித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீங்கள் மட்டும் அ.தி.மு.கவை ஆதரிப்பது ஏன்?'

''எங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க அரசு சரியான பாதையில்தான் செல்கிறது. அதற்கு சாட்சிதான் தமிழக மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்குக் கொடுத்த மிகப் பெரிய வெற்றி.'

''விஷால், கார்த்தி, ஆர்யா போன்ற இளம் நடிகர்கள், நடிகர் சங்க விஷயத்தில் போர்க்கொடி தூக்குகிறார்களே. சங்கப் பொறுப்பில் இளைஞர்களுக்கு இடம் இல்லையா?'

'நடிகர் சங்கத் தலைவர் பதவி என்பது நிரந்தரமான பதவி அல்ல. இனிமேல் எப்போதுமே சங்கம் கடன்படாமலிருக்க சில வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது. அதில் ஒரு திட்டம்தான் நடிகர் சங்கத்துக்கு என்று சொந்தமாகக் கட்டடம் கட்டுவது. அந்தக் கடமையை முடித்துவிட்டுதான் வழிவிடுவேன். அதன் பின்னால் ஜனநாயகப்பூர்வமான முறையில் யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரட்டும்.'

'' கத்தி’, 'புலிப்பார்வை’ படங்களுக்கு எதிர்ப்பு வருவதை, நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?'

''இந்த விஷயத்தில் என்ன நடக்குதுனே தெரியவில்லை. படம் ரிலீஸ் ஆகி, அதன் பிறகு பிரச்னை வந்தா பேசலாம். பப்ளிசிட்டிக்குப் பண்றாங்களா அல்லது வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கிறார்களா என்றே தெரியவில்லை. இந்த நிலையில் இரண்டு படங்களைப் பற்றியும் கருத்து சொல்ல விரும்பவில்லை.'

''இப்போதெல்லாம் எந்தப் படம் வந்தாலும் ஏதாவது ஓர் அமைப்பு நாங்கள் பார்த்து சரி என்று சொன்னால்தான் வெளியிட வேண்டும் என்கிறார்களே, இது ஆரோக்கியமானதுதானா?'

'' சென்சார் போர்டு பார்த்து முடிவு செய்த, வெளியிட அனுமதி கொடுத்த பின் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து. அதே நேரம் சில விதிவிலக்கான படங்களில் ஒரு பெரிய அமைப்போ அல்லது சமுதாயமோ எதிர்ப்பைப் பதிவுசெய்தால், அரசு தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைக்கலாம். 'விஸ்வரூபம்’ வெளியீட்டின்போது அப்படித்தான் நடந்தது. ஆனால் அதற்காக யார் படம் எடுத்தாலும் இப்படி சின்னச்சின்ன அமைப்புகளைத் திருப்திப்படுத்த வேண்டியிருக்கும் என்றால், அது சினிமாவைப் பாதிக்கும். வேண்டுமானால் சென்சார் போர்டைக் கலைத்துவிட்டு ஒவ்வொரு மாநில அரசும் நியமிக்கும் குழுவிடம் அனுமதி வாங்கி வெளியிடுமாறு செய்யலாம்.'

''உங்கள் முன்னாள் நண்பர் விஜயகாந்த் உங்களின் திரை வெற்றிக்கு முக்கியக் காரணம். அவரும் நீங்களும் தற்போது எதிரும் புதிருமாக இருக்கிறீர்களே?'

''அவர் இப்பவும் எனக்கு நண்பர்தான். எனது சினிமா வெற்றிக்குக் காரணமாகச் சொல்ல வேண்டுமானால், அவரும் ஒரு காரணம். 'புலன்விசாரணை’ மூலம் நல்ல பெயர் கிடைத்தது. என்னை இயக்குநரிடமும் விஜயகாந்திடமும் அறிமுகப்படுத்தியது மேக்கப் ராஜு. இப்ராஹிம் ராவுத்தர்,

ஆர்.கே.செல்வ மணி, விஜயகாந்த், மேக்கப் ராஜு இவர்கள் நால் வருக்கும் நான் என்றும் நன்றி சொல்வேன். ஆனால் விஜய காந்தின் அரசியல் நிலைப்பாட்டில் பெரிதும் மாறுபடுகிறேன்.'

''நீங்கள் நடிக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவாகிவிட்டன. ஏன் விழா எடுக்கவில்லை?'

''சின்னத் திருத்தம். நடிப்பு என்பதைத் தாண்டி தயாரிப்பாளராகத் திரையுலகிற்கு வந்து 33 வருசமாகிடுச்சு. என் மனைவி நடிக்க வந்து 36 வருடமாகிடுச்சு. விழா எடுக்கணும்னா, என் மனைவிக்குதான் முதலில் எடுக்க வேண்டும். அதை நான் செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டிருக்கிறேன்.'


ரவிதேஜா, தமன்னா நடித்த பவர் திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரிவியூ காட்சியை பார்க்க வந்த ரவிதேஜா, இசையமைப்பாளர் எஸ்.தமன் அவர்களிடம் மனம் விட்டு சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் 'வாலு' படத்தின் இயக்குனர் விஜய் சந்திராவும் சேர்ந்து கொண்டனர்.

விஜய் சந்திரா ரவிதேஜாவிடம் தனது வாலு படம் குறித்த அனுபவங்களை கூறிக்கொண்ட்டிருந்தபோது, தனது படத்தில் இடம்பெறும் நயன்தாரா வேணாம், ஆண்ட்ரியா வேணாம் என்ற பாடல் குறித்தும் ரவிதேஜாவிடம் கூறியுள்ளார். உடனே தான் இந்த பாடலை கேட்கவேண்டும் என்று கூறிய ரவிதேஜாவுக்காக சிடியை வரவழைத்து ரவிதேஜாவுக்கு போட்டு காட்டினார் விஜய் சந்திரா.

பாடலை கேட்டதும் மிகவும் குஷியான ரவிதேஜா, தன்னுடைய அடுத்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்திக்கொள்ள இந்த பாடலின் உரிமையை தனக்கு பெற்றுத்தரும்படி இயக்குனர் விஜய் சந்திராவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 'மாஸ் மகராஜா' என்ற பட்டத்தை தெலுங்கு ரசிகர்களிடம் பெற்றுள்ள ரவிதேஜாவின் அடுத்த படத்தில் இந்த பாடல் இடம்பெறுவது உறுதி என தெரிகிறது.

ஐதராபாத் நகரில் விபச்சாரம் செய்ததாக பிடிபட்ட நடிகை ஸ்வேதா பாசுவிடம் செய்த ரகசிய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை பெற்றுள்ள போலீஸார் தற்போது விபச்சாரத்தில் ஈடுபடும் பல நடிகைகளுக்கு வலைவிரிப்பதாக தெரிய வந்துள்ளது. தெலுங்கில் வெளிவரும் ஒரு புலனாய்வு பத்திரிகை இதுகுறித்து விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று கைதான நடிகை திவ்யஸ்ரீயின் கைதுக்கு காரணம் ஸ்வேதா பாசு கொடுத்த தகவல்தான் என கூறப்படுகிறது.

கடந்த வாரம் கைதான ஸ்வேதா பாசுவிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, ஏழ்மைக்காக விபச்சாரம் செய்வது மட்டுமின்றி ஆடம்பர வாழ்க்கை வாழ்க்கை வாழ பணத்திற்காக முன்னணி நடிகைகளும் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ஸ்வேதா பாசு கூறிய லிஸ்ட்டில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள தமிழ், தெலுங்கு, கன்னட நடிகைகளின் பெயர்களும் உள்ளன. இதனால் அந்த நடிகைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எந்நேரமும் முன்னணி நடிகைகள் கைதாக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் நடிகைகள் மட்டுமின்றி தொழிலதிபர்களும், சிக்குவார்கள் என போலீஸார் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக மும்பை தொழிலதிபர் வார இறுதியில் நடிகைகளிடம் உல்லாசமாக இருப்பதற்கென்றே ஐதராபாத் வருவதாகவும், அவ்வாறு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நடிகைகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம், சிங்கப்பூர் மீடியா அதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ‘சென்னை சிங்கப்பூர்’ என்ற தமிழ்ப் படத்தை தயாரிக்கின்றனர்.


இந்த படத்தின் மூலம் சிங்கப்பூர் தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பல்வேறு திரையுலகத் திறமைகள் ஒருங்கிணைந்து இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்கள். பல்வேறு ஆவணப் படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர் என்னும் அறிமுக இயக்குனர் கதை , திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்குகிறார்.


சென்னையை சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடிச் செல்கிறான். அங்கே அவன் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்களும்தான் படத்தின் கதை.


‘அமர காவியம்’ மூலம் இளைஞர்களை குறிப்பாக இளம் பெண்களை அதிக அளவில் கவர்ந்த சத்யா இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் அறிமுகமான ஹெப்பா படேல் நடிக்கிறார்.


‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் அறிமுகமாகும், திறமையானப் ஒளிபதிவாளர் என்று பாராட்டப்படும் முகேஷ் ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் படத்தொகுப்பில், “வாகை சூடவா, திருமணம் எனும் நிக்காஹ், அமர காவியம், ரன் ராஜா ரன் [ தெலுங்கு]” ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘சென்னை சிங்கப்பூர்’ அடுத்த வருடத்தின் துவக்கத்தில் வெளியாக உள்ளது.



இயக்குனர் ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ‘ கப்பல் ‘ திரைப்படத்தை வெளியிட உள்ளார்.

ஐ ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் , ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக். ஜி. கிருஷ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

நாயகனாக வைபவ் , நாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனம் பிரீத் நடித்து உள்ளனர். ‘கப்பல்’ படத்தினைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் படம் பார்த்த பின்னர் இயக்குனர் கார்த்திக்கிடம் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார். அதோடு அந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுக் கொண்டு அவருடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளார்.

இதை பற்றி இயக்குனர் ஷங்கர் கூறியதாவது ‘ நீண்ட



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies