சினிமா – ஸ்பெஷல் ஸ்டோரி!செய்தித் துளிகள்

10 Sep,2014
 


கிரிக்கெட் விளையாடும் சினிமா – ஸ்பெஷல் ஸ்டோரி!


கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே நட்சத்திர கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். சினிமா நடிகைகளை கிரிக்கெட் வீரர்கள் காதலிப்பதும், கழற்றி விடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுத்து நடத்துகிறார்கள். இதுதவிர சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் போட்டா போட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஸ்ரீகாந்த் தற்போது ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் இப்போது சினிமாவில் நுழைந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ உலா என்ற படத்தில் குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.

விஷால், விஷ்னு, விதார்த், ரமணா, சாந்தனு, ஜீவா ஆகியோர் கிரிக்கெட் வீரர்களாக இருந்து நடிகரானவர்கள்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட் பிரபு சென்னை 28 என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு சில படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்தது. ஆனால் அவைகள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் அடிப்படை விஷயம் கூட கிரிக்கெட் விளையாட்டுதான். இப்போது நான்கு படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகிக் கொண்டிருக்கிறது. அவற்றின் முன்னோட்டம் இதுஸ

 

 

ஜீவா
வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாட்டில் இருந்த உள்ளூர் பாலிடிக்சையும், பகையையும் காட்டிய சுசீந்திரன், இப்போது கிரிக்கெட்டில் இருக்கும் சர்வதேச முறைகேடுகள், ஊழல்கள், பெட்டிங்குளை காட்டப்போகும் படம் ஜீவா. இதில் நிஜத்திலும் கிரிக்கெட் வீரரான விஷ்ணு நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஒரு சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரன் தனக்கான இடத்தை பெற நடத்தும் போராட்டங்களும், அவமானங்களும்தான் கதை. சுசீந்திரனின் சொந்த தயாரிப்பு. இமான் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

 

ஆடாம ஜெயிச்சோமடா
தில்லுமுல்லு படத்தை இயக்கிய பத்ரி இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா. இதில் கருணாகரன், சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி நடிக்கிறார்கள். இது கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய படம். ஒரு கால் டாக்ஸி டிரைவரான கருணாமூர்த்தியின் பார்வையில் கிரிக்கெட் சூதாட்டத்தை காமெடியா காட்டும் படம். கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆடிய சூதாட்டத்தை மையமாக கொண்டு தயாராகி வருகிறது.

 

1 பால் 4 ரன் 1 விக்கெட்
அறிமுக இயக்குனர் வீரா இயக்கும் படம் 1 பந்து 4 ரன் 1 விக்கெட். கிரிகெட்டின் கிளைமாக்ஸ் பகுதியை டைட்டிலாக கொண்ட படம். இது கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய படம் அல்ல. கிரிக்கெட் பேய் படம். ஹீரோ ஒரு நாள் நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இந்தியா ஜெயிக்க 4 ரன் தேவைப்படுகிறது. கையில் இருப்பது ஒரு பந்து அதை வீரர் அடிக்கப்போகும் அந்த கடைசி விநாடியில் கிரிக்கெட்டை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு ஒரு விஷயம் நடக்கும் இப்படி போகுற கதை. கிரிக்கெட் விளையாட்டுக்குள் ஆவி புகுந்தால் எப்படி இருக்கும் என்கிற காமெடி த்ரில்லர். கவுடா என்பவர் தயாரித்திருக்கிறார், கார்த்திக் நல்லமுத்து இசை அமைக்கிறார்.
கிரிக்கெட் ஸ்கேண்டல்
திருநங்கை ரோஸ் வெங்கடேசன் இயக்கும் படம் கிரிக்கெட் ஸ்கேண்டல். இது கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்களை பற்றியும், கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் எடுக்கப்படுகிற துணிச்சலான படம். இதில் கிஷன் ராமச்சந்திரன் என்பவர் கிரிக்கெட் வீரராகவும்.

அவர் காதலிக்கும் கிளப் டான்சராக ரோஸ் வெங்கடேசனும் நடிக்கிறார்கள். செந்தில்குமார் என்பவர் தயாரிக்கிறார். தீபன் இசை அமைக்கிறார். அக்கு அஜ்மல் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.
எந்த படம் டக் அவுட் ஆகும், எந்தப் படம் செஞ்சுரி அடிக்கும் என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.

தமிழ், மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், இந்தி ‘கஜினி’ மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்தார். தொடர்ந்து அங்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தவர் பின்னர் படவாய்ப்பு இன்றி சொந்த ஊரான மலையாளத்திற்கே சென்றார். இந்நிலையில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் உடன் கொச்சினில் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தற்போது அவர், கொச்சினில் 6 படுக்கையறை வசதிகள் கொண்ட இரண்டு வீடுகளை கட்டி வருகிறார்.
இதுகுறித்து அசின் கூறியுள்ளதாவது, நான் கட்டி வரும் வீடுகளில் தற்போது, உட்புற அழகு சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. வீட்டின் அழகை பார்த்து எனது நண்பர்கள் பாராட்டினார்கள். மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடிய நான், ஓணம் பண்டிக்கைக்காக விடுமுறையை ரத்து செய்துவிட்டு கொச்சி வந்தேன்.

வீடு முழுக்க மலர்களால் அலங்கரித்தும், விளக்கு ஏற்றியும், அன்றைய நாள் விரதம் இருந்து சாமி கும்பிட்டு பிறகு வாழை இலையில் உணவு வைத்து சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

தி புரொபஷனல், தி பிப்த் எலிமெண்ட், லியோன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கிய பிரான்ஸ் இயக்குனர் லுக் பெசான் தற்போது இயக்கிய உள்ள படம் லூசி. ஒரு மனிதன் தன் மூளையின் சக்தியில் 10 சதவிகித்தை மட்டுமே பயன்படுத்துகிறான். முழு சக்தியையும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் லூசி படத்தின் ஒன் லைன்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் லூசிக்கு ஒரு உயிருக்கு உயிரான நண்பன் இருக்கிறான். ஒரு நாள் அந்த நண்பன் லூசியிடம் ஒரு சூட்கேசை கொடுத்து அதனை ஒரு இடத்தில் ஒப்படைத்துவிடுமாறு சொல்கிறான்.

அதற்குள் சக்தி வாய்ந்த போதை மருந்துகள் இருக்கிறது என்பது தெரியாமல் அதை கொண்டு செல்கிறாள் லூசி. முதலில் போலீசில் சிக்கி கொடுமைகளை அனுபவிக்கிறாள். அங்கிருந்து தப்பி செல்லும்போது போதை கடத்தல் கும்பலிடம் சிக்குகிறாள். அவர்கள் லூசிக்கு போதை மருத்தை ஊசி மூலம் செலுத்தி கொடுமை படுத்துகிறார்கள்.

அந்த மருந்துகள் லூசியின் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று அவளின் முழு மூளையும் செயல்பட ஆரம்பிக்கிறது. அதைக் கொண்டு தன்னை போதை கும்பலில் சிக்க வைத்த நண்பனையும், போதை மருந்து கடத்தல் காரர்களையும் எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை.

தி அயர்மேன் 2, தி அவென்ஞ்சர், கேப்டன் அமெரிக்கா, தி விண்டர் ஜோல்சர் படங்களின் நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்சன் லூசியாவாக நடித்திருக்கிறார். சால்ட் படம் ஏஞ்சலினா ஜூலிக்கு அமைந்ததை போல இந்தப் படம் ஸ்கார்லெட்டுக்கு அமையும் என்கிறார்கள். மார்கென் ப்ரீமேன், வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியாகிறது.


ஒரு காலத்தில் ‘சிக்ஸ் பேக்’கில் நடிகர்கள் அசத்துவது ஒரு ஃபேஷனாக ஆனது. தமிழில் பல நடிகர்கள் ‘சிக்ஸ் பேக்’ டிரை செய்து தங்களது உடல் வலிமைய வெளிப்படுத்தினர். சமீபத்தில் அதர்வா ‘இரும்பு குதிரை’ படம் வரை இந்த சிக்ஸ் பேக் கலாச்சாரம் இருந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், பாலிவுட்டில் ஷாரூக்கான் ஒரு படி, இல்லை இரண்டுபடி மேலே போய் ‘எய்ட் பேக்’கில் தோன்றும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பரபப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

48 வயதில் அவர் உடலை இப்படி மாற்றியிருப்பதைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினரும் ஆச்சரியப்படுகிறார்கள்.’எய்ட் பேக்’ குறித்து ஷாரூக் அதை உருவாக்கக் காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்து, “இதற்கு மேல் என்னை கஷ்டப்படுத்தாதீர்கள் என ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் இயக்குனரான ஃபரா கானிடம் ஜாலியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ஃபரா கான் “எனக்காக இதை செய்ததற்காக நன்றி,” என்று ஷாரூக்கானுக்கு பதிலளித்திருக்கிறார்.

ஷாரூக் கானின் எய்ட் பேக் உடலமைப்பைப் பார்த்து இன்னும் எத்தனை நடிகர்கள் அதை தொடர இருக்கிறார்களோ, இன்னும் எத்தனை லட்சம் ரசிகர்கள் அவருக்கு புதிதாக சேர இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆமீர் கான் ஒரு பக்கம் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்க மறுபக்கம் ஷாரூக் கான் எய்ட் பேக்குடன் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்ல, முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்த படம் – த்ரிஷ்யம். மோகன்லால் கதாநாயகனாக நடித்த த்ரிஷ்யம் படத்தை தற்போது கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார்.

த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசஃபே பாபநாசம் படத்தையும் இயக்கி வருகிறார். மலையாள சினிமாவில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரியாகி மீனா நடித்த படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார்.

மலையாளத்தில் மீனா நடித்த வேடத்தில் தமிழில் நடிக்க மீனா, ஸ்ரீதேவி, சிம்ரன் உட்பட பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் கௌதமி நடிக்கிறார். நடிப்பிலிருந்து விலகி, கமலின் கம்பெனியனாக இருக்கும் கௌதமி தமிழில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார்.

த்ரிஷ்யம் ரீ-மேக்குக்கு பாபநாசம் என்று தலைப்பு சூட்டப்பட்டதற்கு காரணம்ஸதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் கதை நிகழ்கிறது. எனவே பாபநாசம் படத்தின் படப்பிடிப்பையும் பாபநாசத்தை சுற்றி உள்ள கிராமங்களில் நடத்தினார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன் பாபநாசத்தில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது பாபநாசம் படக்குழு கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டது. கேரளாவில் உள்ள தொடுபுழாவில் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கேரக்டர் பெயர் ஜார்ஜ் குட்டி! பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்து வரும் கேரக்டருக்கு சுயம்புலிங்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனைப் படைத்த படம் ‘துப்பாக்கி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்தப் படத்திற்கு விஜய் கால்ஷீட் தரவுள்ளதாக தகவல் வந்தது. தற்போது விஜய், கலைப்புலி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை இயக்குபவர் அட்லி. இவர் ஏற்கனவே ஆர்யா-நயன்தாரா நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர். சமீபத்தில் இவருக்கும் நடிகை பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அட்லி இயக்கும் அடுத்த படத்தை பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது ‘கத்தி’ படத்தின் இறுதிக்கட்ட வேலை நடந்து வருகிறது. இப்படத்தையடுத்து சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ. களத்தில் இவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை கண்டு எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் கலங்கியது உண்டு. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் அடுத்தப்படியாக சினிமா பக்கம் தாவியுள்ளார். ஆமாம், இப்போது அவர் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

ஆஸ்திரேலிய -இந்திய கூட்டு தயாரிப்பாக உருவாகும் ”அன்இந்தியன்” என்ற படத்தில் பிரட்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் தனீஸ்தா சாட்டர்ஜி நடிக்கிறார். அனுபம் சர்மா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் துவங்குகிறது.

ஆஸ்திரேலிய-இந்திய பிலிம் தயாரிக்கும் முதல்படத்தில் நான் நடிப்பது சந்தோஷமாகவும், கவுரமாகவும் இருக்கிறது. அனுபவம் சர்மா மற்றும் தனீஸ்தா ஆகியோருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் பிரட் லீ.

தனீஸ்தா கூறுகையில், ஆஸ்திரேலியா எனக்கு எப்பவும் ஸ்பெஷல். இந்தப்படத்தில் நான் நடிப்பது சந்தோஷம், அதுவும் பிரட் லீ கூட நடிக்கிறேன், என்ன சொல்லஸ என்கிறார்.


ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாம். கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘டாக்கீ போர்ஷன்’ என்று சொல்லக் கூடிய அனைத்து வசனக் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாம். முக்கியமான சில சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் லீ விடேகர் தலைமையில் படமாக்கி வருகிறார்கள். அவையும் சில நாட்களில் முடிந்து விடுமாம்.

அதன் பின் ரஜினிகாந்த், ரவிக்குமார் இருவரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு வர உள்ளதால் படப்பிடிப்புக்கு சிறு இடைவெளி விடுகிறார்களாம். அடுத்து பாடல் காட்சிகளைப் படமாக்க ஐரோப்பா செல்வதுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுகிறது. இதனிடையே படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.
‘லிங்கா’ படத்தின் மூலம் மீண்டும் அசத்தலான வெற்றியைப் பெற வேண்டும் என்று ரஜினிகாந்த் உட்பட குழுவினர் அனைவரும் இடைவிடாது உழைத்து வருகிறார்கள். ‘கோச்சடையான்’ படத்தால் ரஜினி ரசிகர்கள் முழு திருப்தியடையாததால் ‘எந்திரன்’ படத்தை விட இன்னும் பெரிய அளவிற்கு ‘லிங்கா’ படத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என நினைக்கிறார்களாம்.

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படம் கண்டிப்பாகத் திரைக்கு வந்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ’ பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று பல முக்கியப் பிரமுகர்களும் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி வருகிறார்களாம். நட்சத்திரங்கள் பலருக்கும் அந்த ஆசை இருக்கிறதாம். அதை வெளியில் சொல்லாமல் அவர்களது ஆட்கள் மூலம் தூது அனுப்பிக் கொண்டிருப்பதாக



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies