ஸ்வேதா பாசுவை தொடர்ந்து விபசார வேட்டையில் இன்னொரு நடிகை கைது செய்தித் துளிகள்

08 Sep,2014
 


ஆந்திராவில் விபசார வழக்கில் நடிகைகள் தொடர்ச்சியாக கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை ஸ்வேதா பாசு விபசார வேட்டையில் கைதானது தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வேதாபாசு தமிழில் ராரா, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபகாலமாக ஸ்வேதா பாசுக்கு படங்கள் இல்லை. பண நெருக்கடியால் கஷ்டப்பட்டார் . உதவி இயக்குனர் ஒருவர் இதைபயன்படுத்தி ஸ்வேதா பாசுவை விபசாரத்தில் தள்ளி தொழில் அதிபருடன் படுக்கை அறையில் இருந்த ஸ்வேதா பாசுவை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தெலுங்கு நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். திவ்யஸ்ரீ தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.

உடனடியாக அந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அங்கு விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திவ்யாஸ்ரீயை கைது செய்தனர். இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீசாரிடம் சிக்கினர்.

             

கார்த்தியுடன் போட்டிக் கோதாவில் குதிக்கும் விஜயசேதுபதி!


இதுவரை 7 படங்களில் நடித்துள்ள விஜயசேதுபதியின் கையில் தற்போது 7 படங்கள் உள்ளன. இது தவிரவும் பல கதைகளில் நடிக்க ஓ.கே செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில், வருகிற 2017ம் ஆண்டு வரை அவரது கால்சீட் டைரி புல்லாகி விட்டதாம். அதனால்தான் புதிய கதைகளை இப்போதைக்கு கேட்பதாக இல்லை என சமீபத்தில் தெரிவித்துள்ளார் அவர்.

இந்த நிலையில், இதுவரை முன்னணி ஹீரோக்கள் படங்கள் ரிலீசாகும்போது விஜயசேதுபதி நடித்த படங்கள் ரிலீசாகாமல் இருந்தது. ஆனால், இப்போது அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாகி விட்டதால் அவரும் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் ரிலீசாகும்போது தனது படங்களையும் களத்தில் இறக்கி விட தயாராகி விட்டார்.

அந்த வகையில், செப்டம்பர் 26-ந்தேதி கார்த்தி நடிப்பில் வெளியாகயிருக்கும் மெட்ராஸ் படத்துக்கு போட்டியாக தனது வன்மம் படத்தை வெளியிடுகிறார், விஜயசேதுபதி. இதனால் கார்த்தி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

காரணம், சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், மெட்ராஸ் படத்தை யாருமே இல்லாத களத்தில் இறக்கி விட்டு வெற்றியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் கார்த்தி.

ஆனால் இந்த நேரம் பார்த்து விஜயசேதுபதி படமும் திரைக்கு வருவதால், போட்டியை எதிர்கொள்ள கார்த்தி தரப்பும் தற்போது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

ரஜினியுடன் முன்னாள் கதாநாயகிகள் மீனா– ஸ்ரீப்ரியா சந்திப்பு


மீனாவும், ஸ்ரீப்ரியாவும் ரஜினி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளனர். ‘முத்து’ படம் ரஜினி, மீனா நடிப்பில் வந்து வெற்றிகரமாக ஓடியது. ஜப்பானியர்களையும் ரஜினி ரசிகர்களாக மாற வைத்தது.

ரஜினியும் ஸ்ரீப்ரியாவும் நடித்த படங்கள் வசூல் குவித்தது. முன்னாள் கதாநாயகிகள் பலர் ரஜினி படங்களில் அம்மா, அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் மீனா, ஸ்ரீப்ரியா மட்டும் நடிக்கவில்லை.

சமீபத்தில் மலையாளத்தில் ஹிட்டான திரிஷ்யம் படத்தை ஸ்ரீப்ரியா தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கினார். இதில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடித்தனர்.

இந்த நிலையில் மீனாவும், ஸ்ரீப்ரியாவும் திடீரென ‘லிங்கா’ படப்பிடிப்பு நடந்த அரங்குக்கு சென்றனர். அங்கு ரஜினியை சந்தித்தார்கள். இருவரையும் ரஜினி வரவேற்றார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். நீண்ட நேரம் ரஜினியிடம் பேசிக் கொண்டருந்த இருவரும் பின்னர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.



'கத்தி'க்காக முதல்வரிடம் பேச்சுவார்த்தை. சரத்குமார் முயற்சி.



கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்ற காரணத்தால் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தி வரும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைக்க முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தருவதாக கத்தி படக்குழுவினர்களிடம் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உறுதி கூறியுள்ளார்.

அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் விஜய் மற்றும் முருகதாசுடன் இணைந்து சென்று முதல்வரை சந்தித்து இந்த படத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட வழிவகை செய்யப்படும் என்றும் சரத்குமார் உறுதி கூறியுள்ளார். ஆனால் இதுவரை முதல்வரிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கோலிவுட்டில் இன்று காலை முதல் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. கத்தி படத்தின் உரிமையை தமிழகத்தின் பிரபல நிறுவனம் ஒன்று பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன. அந்த நிறுவனம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை மாற்றிவிட்டால் படத்திற்கு எந்த பிரச்சனையும் செய்ய மாட்டோம் என தமிழ் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் கூறியுள்ளதால் படத்தை கைமாற்றும் முயற்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய்யின் கத்தி பட பாடல்கள் 18–ந்தேதி ரிலீஸ்


விஜய் இரு வேடங்களில் நடிக்கும் படம் ‘‘கத்தி.’’ நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங், கிராபிக்ஸ் ரீ ரிக்கார்டிங் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா வருகிற 18–ந்தேதி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதில் விஜய், சமந்தா பங்கேற்று பேசுகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் செல்லபுள்ள என துவங்கும் பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். கத்தி படப்பாடல் சி.டி. உரிமையை ரஜினி மகள் சவுந்தர்யா தலைமை நிர்வாகியாக பொறுப்பு ஏற்றுள்ள ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியுள்ளது.



விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தனுஷ்


நடிகராக இருந்த தனுஷ் ‘எதிர்நீச்சல்’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார்.

இப்படம் கணிசமான வசூலைத் தந்தது. இப்படத்தையடுத்து தனுஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தயாரித்தார். இப்படம் அதிக வசூலை வாரிக்கொடுத்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது இவர் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்னும் படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியை அடுத்து விஜய்யை வைத்து பட தயாரிக்க தனுஷ் ஆசைப்படுவதாக தகவல் வந்துள்ளது.

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு தனுஷ் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பார் என கூறப்படுகிறது.

விஜய்க்கும் தனுஷுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இவர்கள் கூட்டணியில் விரைவில் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.



தல தளபதிக்காக காத்திருக்கும் ஜிப்ரான்


தமிழில் ‘வாகை சூடவா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இவருடைய இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்படத்திற்காக இவர் பல விருதுகளும் பெற்றார். இப்படத்தையடுத்து ‘வத்திகுச்சி’, ‘குட்டிபுலி’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்ஹா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அமரகாவியம்’ படத்திற்கும் இசையமைத்தவர் ஜிப்ரான். தற்போது கமல் நடித்துவரும் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ஆகிய மூன்று படங்கள் கைவசம் உள்ளன.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் இணையதளத்தில் பேசிய ஜிப்ரான், ரசிகர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது விஜய், அஜீத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள் என்று கேட்டதற்கு, துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய ‘ஐ அம் வெயிட்டிங்’ என்று பதிலளித்தார். மேலும் நான் இருவரின் ரசிகன், அவர்களுக்கு இசையமைப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.



விரைவில் திரைக்கு வரும் சரத்குமாரின் நீ நான் நிழல்


சரத்குமார் தற்போது நடித்துவரும் படம் ‘நீ நான் நிழல்’. சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை ஜான் ராபின்சன் இயக்கி வருகிறார். இவர் 12 ஆண்டுகள் கே.எஸ்.அதியமான், மேஜர் ரவி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். ஆல்பி -நஸீர் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

சரத்குமாருடன் இப்படத்தில் அர்ஜூன் லால், மனோஜ் கே ஜெயன், இஷிதா, எம்எஸ் பாஸ்கர், தேவன், பிளாக் பாண்டி, காதல் அருண், சூப்பர் குட் லட்சுமணன், நிகிதா, ஸ்ருதி, பகத், லட்சுமி ப்ரியா, பாத்திமா பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது. இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது.

மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது ஒரு பேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை நடக்கும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார்.

அதே நேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் உருவாக்கி வருகிறார்கள்.

ஸ்ரீ முத்தாரம்மன் பிக்சர்ஸ் வெளியிடும் இப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது.

சரத்குமார் பட பெயர் மாற்றம்


சரத்குமார் நடித்து வரும் படம் நறுமுகையே. இந்தப் படத்தின் பெயரை இப்போது நீ நான் நிழல் என்று மாற்றம் செய்திருக்கிறார்கள். சரத்குமாருடன் மனோஜ் கே.ஜெயன், அஜ்மல், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். மலேசிய பெண் திசுந்தா ஹீரோயின். ஜான் ராபின்சன் இயக்கி உள்ளார்.

தமிழ் நாட்டு இளைஞன் மலேசிய பெண் ஒருத்தியை பேஸ்புக்கிலேயே காதலிக்கிறான். அவளை சந்திப்பதற்காக மலேசியா செல்கிறான். அங்கு அவள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அவள் யார்? கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.

இதில் சரத்குமார் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காதலனாக அஜ்மல் நடித்துள்ளார். பெரும்பகுதி படம் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் பாடல்களையும், அடுத்த மாதம் படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்.



அனுஷ்கா நடிக்கும் ‘ருத்ரமாதேவி’ படப்பிடிப்பு நிறைவுஸ


தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ருத்ரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தியாவில் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி முறையில் படமாக்கப்படும் முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

ககாத்தியா வம்சத்தின் தெலுங்கு ராணியான ருத்ரம்மா தேவியின் வாழ்க்கையைச் சொல்லும் இப்படத்தில் ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றும் கிருஷ்ணம் ராஜு, பிரகாஷ் ராஜ், சுமன், நித்யா மேனன், கேத்தரின் தெரேசா, ஆகியோருடன் அல்லு அர்ஜுன் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தோட்டா தரணியின் பிரம்மாண்டமான கலை அமைப்பில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் பல பிரம்மாண்டமான அரங்குகள், கோயில்கள், அந்தக் கால நகரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. உடனுக்குடன் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவற்றிற்கான கிராபிக்ஸ் வேலைகளும் நடந்து வருகிறது.

இளையராஜா இசையில் இனிமையான பாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவையும் படமாக்கப்பட்டு விட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இவையனைத்தும் முடிந்து திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. தமிழிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




மகளை வைத்து படம் இயக்குகிறார் அர்ஜூன்


ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். அந்த படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவையே ஹீரோயினாக்கவும் உள்ளாராம், அர்ஜூன்.

அர்ஜூன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், ஜெய்ஹிந்த் -2 படத்தின் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் ஜெய்ஹிந்த்-2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த படத்தை முடித்த பிறகு எனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க போகிறேன்.

தற்போது என்னிடம் இரண்டு கதைகள் கைவசம் உள்ளது. விரைவில் அந்த கதைகளில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளேன். இது முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்கும். படத்தின் 80 சதவீதம் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டம் உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எனது மகளை வைத்து படம் இயக்குவது கண்டிப்பாக எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அவள் முதலில் பயந்தாலும், நாங்கள் அவளுடன் இருப்பதால் தற்போது தைரியமாக படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாள் என்று சொல்லும் அர்ஜூன் தான் அந்த படத்தில் நடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த படத்தின் இயக்கமும், தயாரிப்பும் மட்டும் தான் நான்



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies