நடிகை ஸ்ருதி சந்திரலேகா கைது செய்தித் துளிகள் செய்தித் துளிகள்

07 Sep,2014
 

             

தமிழ், கன்னட படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி சந்திரலேகா(22). அவரது கணவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸோ(35). திருமணத்தின்போது பிரின்ஸோ உமாசந்திரன், பிரின்சன் ஆகியோருடன் சேர்ந்து நெல்லையில் பலசரக்கு கடை வைத்துள்ளார். ஆனால் கடை நஷ்டத்தில் போனதும் அவர் பெங்களூருக்கு சென்றுவிட்டார். தங்களின் முதலீட்டு பங்கு பணத்தை உமாசந்திரன், பிரின்சன் கேட்டதற்கு அதை கொடுக்காமல் சென்றுவிட்டார் பிரின்ஸோ.


நிதி நெருக்கடியால் ஆபாச படம் எடுத்து சம்பாதிக்க முடிவு செய்தார் பிரின்ஸோ. தனது மனைவியை ஆபாச படங்கள் மற்றும் கூட்டாக நடக்கும் செக்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மதுரவாயலுக்கு வந்தபோது ஸ்ருதி தனது கணவரை தீர்த்துக்கட்ட பிரின்சன் மற்றும் உமாசந்திரனுடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி பிரின்ஸோவுக்கு விஷம் கலந்த பாலை ஸ்ருதி கொடுத்தார். பிரின்ஸோ மயங்கியதும் அவரை உமாசந்திரனும், பிரின்சனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

அதன்பிறகு காந்திமதிநாதன், விஜய், வினோத் நிர்மல், எலிசா மற்றும் ரபீக் ஆகியோரின் உதவியோடு உடலை காரில் ஏற்றிச் சென்று பாளையம்கோட்டையில் புதைத்துவிட்டனர். இதன் பிறகு ஸ்ருதி தனது கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.75 லட்சத்துடன் தலைமறைவானார். அதே சமயம் பிரின்ஸோவின் சகோதரர் ஜஸ்டினும் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

விசாரணையில் பிரின்ஸோ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஸ்ருதி பெங்களூரில் உள்ள பைனான்சியர் ஒருவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.


உலகின் நம்பர் ஒன் டி.வி.நடிகை!


உலகின் நம்பர் ஒன் டி.வி.நடிகை யார் தெரியுமா? சோபியா வெர்க்காரா. 42 வயதாகும் இவர்தான் அமெரிக்கா, கொலம்பியா டி.வி நடிகைகளில் நம்பர் ஒன். இவரது தினசரி சம்பளத்தை கணக்கிட்டால் ஹாலிவுட் நடிகைகளை விட அதிகம்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிக்கை. 2013&2014 ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான கணக்கெடுப்பில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடம் பிடித்துள்ளார் சோபியா வெர்க்காரா. ஒரே ஆண்டில் 220 கோடி சம்பாதித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இவரே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். ஆக்ஷன், செண்டிமெண்ட், பேமிலி டிராமா, 11 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் அடல்ட்ஸ் ஒண்லி சீரியல் எல்லாவற்றிலும் கலக்குபவர் சோபியா வெர்க்காரா.



உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் ‘கெத்து’ஸ.


சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த ‘மான் கராத்தே’ வெற்றிப் படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்து உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கெத்து’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தைப் பற்றி உதயநிதி ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

உதயநிதி தற்போது ஜெகதீஷ் இயக்கத்தில் ‘நண்பேன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அகமது இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இவற்றோடு  ‘கெத்து’ படத்தையும் ஆரம்பிக்க உள்ளார். ‘மதராசபட்டிணம், தாண்டவம்’ ஆகிய படங்களில் நடித்தவரும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ படத்தின் நாயகியுமான எமி ஜாக்சன் உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். எமி சூர்யாவுடன் ‘மாஸ்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கெத்து’ படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில்

2025ல் நடக்கும் ‘மூன்றாம் உலகப் போர்’ஸ


ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் தயாரிக்கும் படம் ‘மூன்றாம் உலகப் போர்’. அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார்.

‘பாலை’ படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் கதை.

ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.

ஐ’ இசை வெளியீடு – ஆர்னால்ட் வருகை வீடியோ அறிவிப்புஸ


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட்டின் பிரபல நடிகரான ஆர்னால்ட் ஷவாஸ்நேகர் வருகை தர உள்ளார். தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆர்னால்ட் கலந்து கொள்ள இருப்பது தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த விழாவில் ஆர்னால்ட் வந்து கலந்து கொள்ள இருப்பதைப் பற்றி அவரே வெளியிடும் அறிவிப்பு ஒன்றை சோனி மியூசிக் இந்தியா இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், “ஹலோ இந்தியா, மிகச் சிறந்த இயக்குனரான ஷங்கர் ‘ஐ’ படத்தை இயக்கியிருப்பதற்கு அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். நிறைய விஷவல் எஃபெக்ட்டுகளுடன் அற்புதமான படத்தை உருவாக்கியிருக்கிறார். ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் இந்தியாவிற்கு வருகிறேன்.

‘ஐ’ படத்தின் இசை வெளியீடு ஒரு கண்கவர் விருந்தாக அமைய உள்ளது. உங்களை சந்திப்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சென்னைஸசெப்டம்பர் 15 ஸஒரு பிரமாதமான விழாவுக்காகஸநான் அங்கு இருப்பேன்,” என அந்த வீடியோ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

‘ஐ’ படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தியத் திரைப்பட இசை விழாக்களிலேயே இந்த படத்தின் விழாவைப் பற்றி உலகம் முழுவதும் பேசப் போவது உறுதிஸ

ஆர்னால்ட் பேச்சு வீடியோஸ




Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies