அக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு? பொறியாளன். திரைவிமர்சனம் செய்தித் துளிகள்

06 Sep,2014
 

             



புதிதாக சிட்டியில் வீடு வாங்குபவர்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்கியிருக்கும் பொறியாளன் இயக்குனர் மக்களுக்கு கொடுத்தது ஒரு படம் அல்ல பாடம்.

எஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு ஆடுகளம் நரேன் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார் ஹீரோ ஹரிஷ் கல்யாண். இவருடைய நண்பரின் வீட்டில் இருக்கும் நாயகி ஆனந்தி ஹரிஷை காதலிக்க ஹரீஷும் ஆனந்தை காதலிக்கிறார்.

இந்நிலையில் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வேலையை விட்டு வெளியே வரும் ஹரிஷ், சொந்தமான கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்க தந்தையிடம் இருந்து பணம் வாங்குகிறார். புரோக்கர் மோகன்ராம் உதவியுடன் சிட்டியில் உள்ள ஒரு இடத்தை பார்க்கிறார். ஆனால் அந்த இடத்தை வாங்க பணம் போதவில்லை. இந்நிலையில் ஹரீஷின் நண்பன் அஜய் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு செல்கிறார். சிறைக்கு செல்வதற்கு முன் அஜய்யிடம் ரூ.2 கோடியை கொடுத்துவிட்டு, செல்கிறார். அந்த பணத்தை நண்பன் ஹரீஷுக்காக கொடுத்து உதவுகிறார் அஜய்,

ஆனால் புரோக்கர் மோகன்ராம் ஒரு வில்லங்கமான இடத்தை ஹரீஷின் தலையில் கட்டிவிட்டு தலைமறைவாகிறார். இடத்தின் உண்மையான சொந்தக்காரர் ஹரீஷுக்கு நெருக்குதல் கொடுக்க, ஜெயிலுக்கு சென்ற அஜய் முதலாளி மீண்டும் திரும்பி வந்து தான் கொடுத்த பணத்தை கேட்கிறார். ஹரீஷ் மோகன்ராமை கண்டுபிடித்து பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

ரியல் எஸ்டேட் துறையில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை மிகவும் துல்லியமாக தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குனர் தாணுகுமார். புதிதாக வீடு வாங்குபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து கஷ்டப்பட்டு வீடு வாங்குபவர்களை ரியல் எஸ்டேட் முதலாளிகளும், புரோக்கர்களும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த படம் கண்டிப்பாக ஒரு பாடம் என்றுதான் சொல்லவேண்டும்.

படத்தில் நடித்திருக்கும் அனைவரது நடிப்பும் ஓகே. இயக்குனர் சொன்னதை சரியாக செய்துள்ளனர். ஜோன்ஸ் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளது. மொத்தத்தில் பொறியாளன் இன்னொரு சதுரங்க வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். தாராளமாக பார்க்கலாம்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்து வருகிறார். மேலும் இதில் சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினி இரண்டு விதமான கெட்-அப்களில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டை அக்டோபர் மாதம் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவை பிரம்மாண்டமாகவும் சிறப்பு விருந்தனர்களாக பல முன்னணி நடிகர்களை அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்

ஹீரோவாக நடித்து நன்றி கடன் தீர்க்கிறார் சந்தானம்


தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
Santhanam06சந்தானத்தை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி. சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது சிம்பு என்றாலும், சின்னத்திரையில் வளர்ந்தது லொள்ளு சபாவால்தான். அதிலும் குறிப்பாக அதன் இயக்குனர் முருகானந்தத்தால்தான்.

தற்போது முருகானந்தம் தில்லுக்கு துட்டு என்ற பெயரில் ஒரு படம் இயக்கக்போகிறார். இதில் நன்றி கடனுக்காக சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சந்தானம் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இதனால் இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டது. தற்போது வாலிபராஜா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வரும் சந்தானம் அடுத்து சோலோவாக நடிக்கும் படம் இது.

இதனை யுடிவி அல்லது பிவிபி சினிமாவுடன் இணைந்து சந்தானம் தயாரிக்க இருக்கிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. படம் பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும்.

படம் பார்க்க ஜோடியாக வந்த சிம்பு – நயன்தாரா!


ஆர்யாவின் தம்பி, சத்யா நடித்துள்ள ”அமரகாவியம்” படம் பார்க்க சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்தனர்.

இதனையடுத்து ஒருவரை ஒருவர் எங்காவது சந்தித்து கொண்டால் கூட முகத்தை திருப்பி கொண்டு போனார்கள்.

அப்படி இருந்தவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் தற்போது ”இது நம்ம ஆளு” படத்தில் நடித்தில் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை ஹீரோவாக்கி தயாரித்துள்ள அமரகாவியம் படம் நேற்று ரிலீஸானது. இதனையொட்டி தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தை காண்பிக்க விசேஷ ஷோவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆர்யா. இதில் நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ஷாம், உதயநிதி, விஷ்ணு, விஜயசேதுபதி, கிருஷ்ணா, லட்சுமி ராய், ஜனனி அய்யர், அட்லீ, ஜீ.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிரஸ் ஷோவில் ஹைலைட்டாக அமைந்தது சிம்புவும்- நயன்தாராவும் தான். படம் பார்க்க இருவரும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

போட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, போஸ் கொடுத்தார்கள். இரண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நயன்தாராவை பாதுகாப்பாக அழைத்து சென்றார் சிம்பு.

நாங்கள் இருவரும் நட்புடனேயே பழகி வருகிறோம் என்று சிம்பு-நயன்தாரா இருவரும் கூறி வருகின்றனர்

செப்டம்பர் 26 ஆம் தேதி மெட்ராஸ் படம் ரிலீஸ்!


தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்ததால் சட்டென காணாமல் போய்விட்டார் கார்த்தி. அதிலும் குறிப்பாக, கடைசியாய் அவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படம் ரசிகர்களை தலை தெறிக்க ஓட வைத்துவிட்டது.

எனவே, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவரத் தயாராக உள்ள மெட்ராஸ் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கினர். தியேட்டர்காரர்களிடமிருந்தும் மெட்ராஸ் படத்துக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படியும் சூழ்நிலை மெட்ராஸ் படத்துக்கு பாசிட்டிவ்வாக இல்லை என்பதை புரிந்து கொண்ட மெட்ராஸ் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார்.

அதாவது, சி.வி.குமார், எல்ரெட் குமார் போன்ற சில தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி போட்டு ட்ரீம் ஃபேக்டரி என்ற பெயரில் புதிய விநியோக கம்பெனியையே தொடங்கிவிட்டார்.

மெட்ராஸ் படத்தை இந்த ட்ரீம் ஃபேக்டரி கம்பெனிதான் வெளியிட இருக்கிறது.மெட்ராஸ் படத்தை வெளியிட விநியோக கம்பெனியை தொடங்கிவிட்டாலும், படத்தை திரையிட தியேட்டர்கள் வேண்டும் அல்லவா?கார்த்தி படம் என்பதால் தியேட்டர்காரர்கள் யாரும் தியேட்டர் தர முன்வரவில்லை, தவிர வாரம் வாரம் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்ததால் மெட்ராஸ் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சனை காரணமாக மெட்ராஸ் படம் காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் ரிலீஸ் ஆகாமலே கிடந்தது.
இந்நிலையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு வருகிற 26-ஆம் தேதி மெட்ராஸ் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார் ஞானவேல்ராஜா


காந்தி ஜெயந்தி அன்று ரிலீசாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா


விமல், பிரியா ஆனந்த் நடித்துள்ள புதிய படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டைரக்டர் கண்ணன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், விஷாகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், வார இறுதி நாளில் வெளியிடப்பட உள்ளது, தங்களுக்கு பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வார இறுதி நாளில் படம் வெளி வருவதால், எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் பெறும் என்ற நம்பிக்கையும் படக்குழுவினரிடம் ஏற்பட்டுள்ளதாம்



உத்தமவில்லன் கதை யாருடையது? – வெளிவராத ரகசியங்கள்


கமல், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உத்தமவில்லன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் சென்னையில் நிறைவடைந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உத்தமவில்லன் படக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படம் பற்றிய வெளிவராத, பல தகவல்களை அப்படத்தின் டைரக்டர் ரமேஷ் அரவிந்த் தற்போது வெளியிட்டுள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல் கமலின் இந்த படத்திற்கும் கிரேஸிமோகன் தான் வசனம் எழுதி உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் உத்தமவில்லன் படத்திற்கு வசனம் எழுதிய கிரேஸிமோகன் இல்லையாம்.

வசனம் மட்டுமல்லாது படத்தின் கதையையும் எழுதியது கமல் தானாம்.உத்தமவில்லன் பற்றிய டைரக்டர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில், இந்த முறை நகைச்சுவை கலந்து, மாறுபட்ட கோணத்தில் படத்தின் வசனங்களை எழுதியது கமல் தான்.

இது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். படத்திற்கு கதை எழுதியதும் அவரே தான். கிரேஸிமோகனின் பங்களிப்பும் இப்படத்தில் உள்ளது. அவர் எங்களின் நீண்டநாள் நண்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இமான் அண்ணாச்சியும் சூப்பர் ஸ்டார் ஆனார்

அறிமுகமாகும் புதுநடிகர்கள் முதல் டாப்பில் இருக்கும் பெரிய ஹீரோக்கள் வரை எல்லோருக்குமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் பித்து பிடித்து ஆட்டுகிறது.

ரஜினிகாந்த் என்ற தனிமனிதர் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தன் ஒருவனின் உழைப்பை நம்பியே சினிமாவில் நுழைந்து, வளர்ந்து, ஜெயித்து சூப்பர் ஸ்டார் ஆனார். இப்போதுள்ள நடிகர்களுக்கு வந்த உடனேயே சூப்பர் ஸ்டார் ஆகிவிட வேண்டும் என்கிற பேராசை.

சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர்தான் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பதால், தங்களை அடுத்த சூப்பர் ஸ்டார், நாளைய சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

இன்னும் சில கத்துக்குட்டி நடிகர்கள், பவர் ஸ்டார், சோலார் ஸ்டார், வின் ஸ்டார், டாப் ஸ்டார், எவர்கிரீன் ஸ்டார் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் போட்டுக்கொண்டு வடபழனி ஏரியாவில் வினயல் போர்ட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஒருபடி மேலே சென்ற மிர்சி சிவா தமிழ் படம் நடித்த போது அதில் கிண்டலுக்காக வைக்கப்பட்ட அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நிஜத்திலும் சொந்தமாக்கிக் கொண்டார். அவர் வசனத்தில் வெளிவரும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் டிரைய்லரில் அவரை அகில உலக சூப்பர் ஸ்டார் என்றுதான் போடுகிறார்கள்.

அடுத்து வருகிறார் அண்ணாச்சி. சின்னத்திரையில் தெருத்தெருவாக சென்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அண்ணாச்சி இப்போது சினிமா நட்சத்திரமாகவும் மாறிவிட்டார்.

காமெடியன்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்து விட்டதால் குறைவான சம்பளம் வாங்கும் அண்ணாச்சிக்கு சிறுபட்ஜெட் பட வாய்ப்புகள் குவிகிறது. உடனே அவருக்கும் சூப்பர் ஸ்டார் ஆசை வந்து விட்டது. அவரை இப்போது குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த பட்டைய கிளப்பணும் பாண்டியா, காதலைத்தவிர வேறொன்றுமில்லை படங்களின் டைட்டிலில் அவரை குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

இன்னும் எத்தனை சூப்பர் ஸ்டார்கள் கிளம்பி வருவார்களோ தெரியவில்லை.

வனிதா விஜயகுமார் இயக்கத்தில் 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்'


நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்போது டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் "எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' என்பதுதான். டைட்டிலின் கிழே ரசிகர்கள் நற்பணி மன்றம் என்று டேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மிக விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், வரும் டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாராகி வரும் இந்த படத்தை ராபர்ட் என்ற அரிமுக இயக்குனர் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் எடிட்டிங் பணியை ஆர்.ஜே. ஆனந்த் செய்கிறார்.
 '
வனிதா விஜய்குமார் இந்த படத்தை தயாரிப்பதோடு மட்டுமின்றி திரைக்கதை மற்றும் வசனங்களையும் அவர்தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான டைட்டில் கோலிவுட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



விஜய்யின் கத்தி படத்தில் தலையிட்ட ரஜினிகாந்த், செளந்தர்யா., தமிழ் அமைப்புகள் அதிர்ச்சி


 கோச்சடையான் படத்தின் மூலம் ஈராஸ் நிறுவனத்திடம் நெருங்கிய பழகிய ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராகவும் பொறுப்பேற்றார். ஈராஸ் நிறுவனத்தின் ஆடியோ பிரிவின் தென்னிந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்ட செளந்தர்யா ரஜினி செய்த முதல் வேலை கத்தி படத்தின் உரிமையை எப்



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies