லீக்’ ஆன சிம்பு – நயன்தாரா-நடிகை மல்லிகா ஷெராவத் கைது? செய்தித் துளிகள்

05 Sep,2014
 

             


காஜல் அகர்வால் இரண்டு இந்தி படங்களில் நடிக்கிறார். பாலாஜி மோகன் இயக்கும் தமிழ் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

காஜல் அகர்வால் எடை போடாமல் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். இதற்கு உடற்பயிற்சிகளும் கட்டுப்பாடான உணவுகளுமே காரணம் என்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

ஆரோக்கியமாக இருப்பவர்கள்தான் அழகாக இருப்பார்கள் எனது அழகு ரகசியம் யோகா, தினமும் தவறாமல் யோகா செய்கிறேன். இது எனக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. அதோடு உணவு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். கண்டதையெல்லாம் சாப்பிடுவது இல்லை. ஆரோக்கிய உணவுகளை மட்டுமே தேர்வு செய்து சாப்பிடுகிறேன்.

இயற்கை உணவுகளில் வாழைப்பழங்கள் மிக சிறந்தவையாகும். மாம்பழங்கள், பேரீச்சம் பழங்களும் சிறந்த உணவுகள்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


கத்தி படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய பாலிவுட் நடிகர்


துப்பாக்கி’ படத்தையடுத்து விஜய்-ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், அனிருத் இசையில் விஜய் பாடிய பாடல் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. இந்த பாடலை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படத்தின் டப்பிங் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது சொந்த குரலில் டப்பிங் பேசுகிறாராம்.

டப்பிங் பேசுவது குறித்து நீல் நிதின் முகேசிடம் முருகதாஸ் கேட்டபோது எதுவும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம். கடந்த மூன்று நாட்களாக நடைபெறும் டப்பிங்கில் தமிழில் பேசி அசத்தி வருகிறார் நீல் நிதின் முகேஷ்.

இந்தியில் ‘ஜானி கத்தார்’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ் தமிழில் அறிமுகமாகும் படம் இது. இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்து, அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் படக்குழுவினர்.

விபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கு 3 மாத காப்பக வாழ்க்கை


ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்த ஸ்வேதா பாசு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இது தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் புரோக்கராக செயல்பட்ட பாலு என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த உதவி இயக்குனர்.

ஸ்வேதா பாசுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விபச்சாரம் செய்ததை ஒப்புக்கொண்டதோடு. குடும்பத்தை காப்பற்ற இந்த தொழிலில் இறக்கி விடப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்வேதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 3 மாதத்திற்கு பெண்கள் காப்பகத்தில் வைத்து தகுந்த கவுன்சிலிங் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஸ்வேதா ஐதராபாத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். “இங்கு அவர் மூன்று மாதங்கள் இருப்பார்.

அவருக்கு வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான மனநல பயிற்சிகள், யோகா, தியானம், சிறு கைத் தொழில் பயிற்சிகள் இங்கு அளிக்கப்படும்” என்று காப்பக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

குடும்பத்தை காப்பாற்றவே விபசாரத்தில் தள்ளப்பட்டேன்: ஸ்வேதா பாசு கண்ணீர்!


தமிழில், உதயா ஜோடியாக ரா ரா படத்திலும், கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படத்திலும் நடித்தவர் ஸ்வேதா பாசு. இவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா கேரியரை தொடங்கியவர் அதன் பிறகு பெங்காலி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

இந்த நிலையில் ஐதராபாத்தில் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் வசிக்கும் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் விபசாரம் செய்தபோது ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டதாக தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. தற்போது ஸ்வேதா பாசுவின் கண்ணீர் பேட்டியையும் வெளியிட்டு பரபரப்பபு கிளப்பியிருக்கிறார்கள்.

ஸ்வேதாபாசு கூறியிருப்பதாவது: நான் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தாலும், பெயர் சொல்லும் அளவிற்குகோ பெரிய சம்பளம் கிடைக்கும் அளவிற்கோ பட வாய்ப்புகள் அமையவில்லை. எங்கள் குடும்பம் பெரிது. எனது வருமானத்தை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இதனால் சில தப்பான படங்களில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அந்த அறிமுகத்தின் மூலம்தான் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியில்லாமல் இந்த குழியில் தள்ளப்பட்டேன். என்னால் இதிலிருந்து விடுபடவும் முடியவில்லை. நான் மட்டுமல்ல என்னை போல பல நடிகைகள் எனது நிலையில்தான் உள்ளனர். அவர்களாலும் இதிலிருந்து மீள முடியவில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்வேதா பாசு.


சந்தானம் ஜோடியானார் ஷெரின்!


துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பூவா தலையா படங்களில் நடித்தார். அதன் பிறகு இங்கு வாய்ப்புகள் இல்லாமல் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது நண்பேன்டா படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.

நண்பேன்டா படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். அல்ட்ரா மார்டன் பெண்ணான ஷெரினை ஓட்டல் நடத்தும் சந்தானம் காதலிப்பார். அந்த காதல் தோற்றுவிடும். அதை பல ஐடியாக்கள் பண்ணி உதயநிதி சேர்த்து வைக்க முயற்சிக்க அந்த முயற்சிகள் மொக்கையாகி திரும்புது மாதிரியான கதை. சந்தானத்துக்கும், ஷெரினுக்கும் சிறிய டூயட் பாடல் கூட இருக்கிறது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு பிறகு வாலிபராஜாவில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம். உதயநிதிக்காக இந்தப் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இதற்காக 40 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஓகே ஓகே ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் படத்தை இயக்குகிறார்.

அருள் நிதியும் திகில் படத்தில் நடிக்கிறார்


இப்போது எல்லா நடிகர்களுமே திகில் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அருள்நிதியும் நடிக்க இருக்கிறார். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் அஜய் இயக்க இருக்கும் திகில் படத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து அஜய் கூறியிருப்பதாவது: நான் ஏ.ஆர்.முருதாஸ் சாரிடம் துப்பாக்கி படம் வரை உதவி இயக்குனராக பணியாற்றினேன். நான் தயார் செய்திருந்த திகில் கதைக்கு அருள்நிதிதான் பொருத்தமானவர் என்று அவரிடம் கதை சொன்னேன்.

நடிக்க ஒப்புக் கொண்டார். துப்பாக்கி படத்தில் கேமரா மேன் சந்தோஷ் சிவனிடம் பணியாற்றிய உதவியாளரும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் உதவியாளரும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றுகிறார்கள். ஹீரோயின் மற்றும் இசை அமைப்பாளர் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

வெளிநாட்டு நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகிறார்கள். அக்டோர் முதல் வாரத்திருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார் அஜய்.

எச்சரிகையாக இருங்கள் விஜய் ஆண்டனி!


முதல் படத்தில் வெற்றியடைந்தவர்களுக்கு எப்போதுமே இரண்டாவது படம் கண்டம்தான். அந்த கண்டத்திலிருந்து மயிரிழையில் தப்பித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றியடைந்தவர், அடுத்து நடித்தது சலீம் படத்தில்.

அண்மையில் வெளியான சலீம் பெரிய வெற்றிப்படம் இல்லை என்றாலும், அதே சமயம் தோல்விப்படமில்லை! படத்தை வாங்கியவர்களுக்கு ஓரளவு லாபம் நிச்சயம் என்ற அளவில் ஓடிக்கொண்டிருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஒன்றுஸ என்.ஆனந் என்ற புதுமுகம் இயக்கும் இந்தியா பாகிஸ்தான். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.

இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம் சைத்தான். இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்த இரண்டு படங்களை முடித்த பின்னரே சலீம் படத்தின் அடுத்த பாகத்தில் நடிப்பதற்கான ஆயத்த வேலைகளில் இறங்க உள்ளாராம் விஜய் ஆண்டனி. இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, சலீம் படத்திற்கு சக்சஸ் மீட் வைத்து அதை வெற்றிப்படமாகக் காட்டிய விஜய் ஆண்டனி, நல்ல படமாக இருந்தால் மட்டுமே நான் வெளியிடுவேன்.

முழுவதும் எடுத்து முடித்து பின்னர்கூட அந்தப் படம் நல்ல படமாக இல்லையென்றால், எத்தனை கோடி செலவழித்திருந்தாலும் அதை எரித்துவிடுவேன்! என்றெல்லாம் அந்த விழாவில் உணர்ச்சி பொங்க பேசினார்.

நடிகரான பிறகும் தன் இயல்பை தொலைக்காமல் இருக்கும் விஜய் ஆண்டனியை கெடுக்கும்வகையில் அவருக்கு ஆள் உயர மாலை எல்லாம் போட்டு அலப்பரை செய்தனர் அவரது ஜால்ராக்கள். இவர்களிடம் எச்சரிகையாக இருங்கள் விஜய் ஆண்டனி!

நான் படத்தின் 3–ம் பாகம் எடுப்பேன்: விஜய் ஆண்டனி


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கேக் வெட்டினார். தயாரிப்பாளர்கள் பாத்திமா, சுரேஷ், சரவணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

பின்னர் விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறும்போது,

‘நான்’ படத்தின் 2–ம் பாகமாக ‘சலீம்’ வந்துள்ளது. சமூக அவலங்களை உள்ளடக்கிய விறுவிறுப்பான படமாக கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 240 தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது 300 தியேட்டர்களாக உயர்ந்தள்ளது.

படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடிக்கிறேன். ‘நான்’ படத்தின் 3–ம் பாகத்தை எடுத்து அடுத்த வருடம் வெளியிடுவேன் என்றார்.

லண்டனில் படமாகும் கத்தி, செல்பி புள்ள பாடல்!


விஜய் நடிக்கும் படங்கள் வெற்றியடைகிறதோ இல்லையோஸஅவர் பாடுகிற பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். துப்பாக்கி படத்தில் கூகுள்ஸ கூகுள்ஸ, தலைவா படத்தில் வாங்கண்ணாஸ வணக்கங்கண்ணாஸ ஜில்லா படத்தில் கண்டாங்கிஸ பாடல்கள் சமீபகால உதாரணங்கள்.

இந்தப் பாடல்களைத் தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபி புள்ளஸ என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் பாடி சூப்பர்ஹிட்டான பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என்று சொல்லும் அளவுக்கு நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகுமாம். அனிருத் இசையமைப்பில் சில தினங்களுக்கு முன் செல்ஃபி புள்ளஸ என்ற பாடலை விஜய் பாடினார்.

கத்தி படத்தில் எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கும் சமந்தாவை, ஹீரோ விஜய் புகழ்ந்து பாடுவது போன் காட்சியாம். எனவேதான் செல்ஃபி புள்ள என்று இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். பெப்பி நம்பர் என்று சொல்லப்படும் இந்தப் பாடலை ஒரு மணி நேரத்திலேயே பாடி முடித்துவிட்டாராம் விஜய். பாடல் பதிவு முடிந்த பிறகு அனைவரும் இப்பாடலை கேட்டனராம்.

கேட்பதற்கு மிக இனிமையாக வந்துள்ளது என்றும் இந்தப் பாடல் சூப்பர்ஹிட்டாகும் என்றும் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டத்தை அடுத்து, இப்பாடலுக்காக பிரம்மாண்டமானமுறையில் காட்சிகளை அமைக்க முடிவு செய்திருக்கிறாராம் கத்தி பட இயக்குநர் எ.ஆர்.முருகதாஸ்.

எனவே லண்டனுக்குச் சென்று இந்தப் பாடலை படம் பிடித்து வரலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். லண்டனில் உள்ள முக்கிய இடங்களில் படம்பிடிக்க உள்ள இந்தப்பாடலில் விஜய், சமந்தா இருவரும் கலந்து கொள்கிறார்கள்.



விரைவில் வெளியாகிறது மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்!


அஞ்சான் படத்தின் தோல்வியினால் கடும் அப்ஸெட்டில் இருந்த சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். ஒருவழியாக மனசை தேற்றிக் கொண்டு தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூர்யா.

நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜி அமரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை – 600028 படம் தொடங்கி பிரியாணி படம் வரை அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்த யுவன்சங்கர்ராஜாவே இந்தப்படத்துக்கம் இசையமைக்கிறார். வெங்கட்பிரபு- யுவன்சங்கர்ராஜா இணையும் 6 ஆவது படம் இது.

சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பதால், மாஸ் படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு தொடங்கியது. என்றாலும், பரபரப்பாக பணியாற்றியதால் ஏறக்குறைய 40 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார் வெங்கட்பிரபு.

இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயார் பண்ணி வருகிறாராம் வெங்கட்பிரபு. அதை விரைவில் வெளியிடப்போவதாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் மாஸ் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு. அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மறக்கும் அளவுக்கு மாஸ் படத்தின் வெற்றி இருக்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் சூர்யா.


நயன்தாராவுடன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியா?: உதயநிதி விளக்கம்


இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா, உதயநிதி தற்போது நண்பேன்டா படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கமான காதல். உதயநிதியின் காதலை நயன்தாரா ஏற்காததால் உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முதன் முறையாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.

இதுகுறித்து அவ



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies