வலியுடன் ஒரு காதல் –பட்டைய கௌப்பணும் பாண்டியா–வலியுடன்ஒருகாதல்-அமரகாவியம் திரை விமர்சனம்

05 Sep,2014
 

             


நியூயார்க் நகரில் நவீன உலகிற்கு இத்திரைப்படம் நம்மை அழைத்து செல்கிறது. அழகான நியூயார்க் நகரில் அட்டகாசம் செய்கிறது பூட் கிளான் என்றழைக்கப்படும் தீவிரவாதக்குழு. இத்தீவிரவாதிகள் குழுவின் நடவடிக்கைகளை துடிப்பான செய்தியாளர் ஏப்ரல் ஓநில் துப்பறிந்து செய்திகளை வெளியிடுகிறார்.

தனக்கு சூடான செய்திக்களம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ”ஏப்ரல்” பின் தொடர ஆரம்பிக்கிறார். அப்படி தொடரும் போது தான் இந்த தீவிரவாதக் குழுக்களை எதிர்த்து ஒரு விசித்திரமான குழுவினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பார்க்கிறார்.

ஆக சூடான செய்திதளம் கிடைத்த சந்தோசத்தில் துப்பறிய ஆரம்பித்த ஏப்ரலுக்கு விசித்திரமான குழுவினரை பார்த்த உடன் மேலும் சுவையான செய்தி கிடைத்த சந்தோசத்தில் தனது தேடல்களை தீவிரப்படுத்துகிறார். இதில் அவர் சந்திக்கும் மாற்றங்களை வெள்ளித்திரையில் காண்க.

இப்படத்தின் இயக்குநர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்தி இருக்கிறார். ஆச்சரியமூட்டும் காட்சிகளை அமைத்து பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார். படத்தில் விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் மோஷன் கேப்ச்சர் முறை சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்கிறது.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜோஷ் ஆப்பேல்லாம் மற்றும் ஆன்டர் நெமக் ஆகியோரை வெகுவாக பாரட்டலாம். பிரயன் டெய்லர் இசை மிரட்டலாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ்’ பிரம்மாண்டம்

வலியுடன் ஒரு காதல் – திரை விமர்சனம்


fநாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதேஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல் கொள்கிறார்.

நாயகியோ அவரை வெறுமனே பார்த்து ரசிக்க மட்டுமே செய்கிறாள். தனது நண்பர்களுடன் அவளை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு திரிகிறார் கதிர். இது ஸ்வேதாவை திருமணம் செய்துகொள்ள காத்துக் கொண்டிருக்கும் அவளது மாமாவான துரைச்செல்வத்துக்கு தெரிய வருகிறது.

உடனே கதிரை வரவழைத்து மிரட்டி அனுப்புகிறார். ஆனார், கதிர் மறுபடி மறுபடியும் ஸ்வேதாவை சுற்றி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த துரை செல்வம் தனது சகோதர்களுடன் வந்து கதிரின் வீட்டை சூறையாடுகிறார். கதிரை தூக்கிக்கொண்டு செங்கல்சூளையில் வைத்து அடைத்து வைக்கின்றனர்.

அப்போது ஸ்வேதாவை வரவழைத்து இவன் யாருன்னு தெரியுதா? என்று கேட்கிறார் அவளது அப்பா. இதற்கு ஸ்வேதா, அவன் யாரென்றே தெரியாது என்று சொல்கிறாள். நாம்தான் நமது மகளை தவறாக நினைத்துவிட்டோம் என்று சொல்லி அவனை அடித்து உதைக்க சொல்கிறார்.

கதிர் அடிவாங்குவதை பார்க்கும் ஸ்வேதாவுக்கு கதிர்மீது காதல் துளிர்விடுகிறது. அடிவாங்கி வேதனையில் இருக்கும் நாயகனை தேடிப்போய் தனது காதலை சொல்கிறாள். அன்றுமுதல், இருவரும் போனிலேயே பேசி இவர்கள் காதலை வளர்த்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் இது ஸ்வேதாவின் பெற்றோர்களுக்கும், அவளது மாமாவுக்கும் தெரியவருகிறது. இறுதியில் இவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கதிர் கதாபாத்திரத்தில் ராகேஷ் முகம் முழுக்க தாடியும், லுங்கியுமாக கிராமத்து இளைஞனை நினைவுபடுத்துகிறார். ஆனால், நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். வில்லன்கள் இவரை போட்டு எவ்வளவுதான் உதைத்தாலும் எதையும் தாங்கும் இதயம்போல தாங்கிச் செல்வது பரிதாபத்தை வரவழைக்கவில்லை. சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

கௌரி நம்பியார் கிராமத்து பெண் வேடத்துக்கு பொருந்தினாலும், காதல் காட்சிகளில் இவருடைய நடிப்பு அழுத்தமாக பதியவில்லை. சரவணப் பொய்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.கே.செல்வா பார்வையாலேயே மிரட்டுகிறார்.

நாயகியின் மாமாவாக வரும் சுரேஷ் வின்சென்ட்டுக்கு படத்தில் நாயகனை அடிப்பது ஒன்றேதான் வேலையே தவிர, படத்தில் இவருக்கென்று பெரிய காட்சிகள் இல்லை.

வலியுடன் ஒரு காதலை நமக்கு வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் சஞ்சீவன். படத்தில் சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்பதற்காக கதையை குழப்பி, நம்மையும் புலம்ப வைத்திருக்கிறார். கதையை நகர்த்த காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். வில்லன் நாயகனை அடிக்கும் காட்சிகள் எல்லாம் நீளமாக வைத்திருப்பது பார்க்கமுடியவில்லை.

செல்லாஹ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். செல்வக்குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டவில்லை.

மொத்தத்தில் ‘வலியுடன் ஒரு காதல்’ பயங்கரமாக வலிக்கிறது

பட்டைய கௌப்பணும் பாண்டியா – திரை விமர்சனம்


பாப்பணாம்பட்டி-பழனி செல்கிற மினி பஸ் டிரைவராக இருக்கிறார் விதார்த். இவருடைய சகோதரரான சூரி அதே பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்யும் மனிஷா யாதவை ஒருதலையாக காதலித்து வருகிறார் விதார்த். ஒருநாள் இவருடைய காதலை அவளிடம் சொல்கிறார். ஆனால், அவள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இந்நிலையில், மனிஷா யாதவின் வீட்டுக்கு சென்று அவளை பெண் கேட்கும் படி விதார்த்துக்கு ஆலோசனை கூறுகிறார் சூரி. அதன்படி, அவரும் மனிஷா யாதவ் ஊருக்கு செல்கிறார். அப்போது அந்த ஊரில் ஒரு பெண்மணியை சிலர் மிரட்டுவதை கண்டதும், அவர்களை தட்டிக்கேட்டு விரட்டியனுப்புகிறார் விதார்த்.

அதன்பிறகுதான் தெரிகிறது அந்த பெண்மணி மனிஷா யாதவின் அம்மா என்று. விதார்த்தின் மீது அவளது வீட்டில் நல்ல மதிப்பு கிடைத்ததும், தன் குடும்ப சூழ்நிலையை விதார்த்திடம் விளக்குகிறாள் மனிஷா யாதவ்.

கண் தெரியாத அக்கா, உடல்நிலை சரியில்லாத அம்மா இவர்களை வைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அதற்காகத்தான் காதலை பற்றி யோசிக்காமல் என்னுடைய வேலையிலேயே கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறுகிறாள். இதையெல்லாம் கேட்ட விதார்த், இனிமேல் அவளை தொந்தரவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். தனது வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

விதார்த் வேலையை விட்டு சென்றதை அறிந்ததும், மனிஷா யாதவ் அவனை தேடி செல்கிறாள். அவனை சந்தித்து, தான் அவனை காதலிப்பதாக கூறுகிறாள். இதைகேட்டதும் விதார்த் சந்தோஷமடைகிறான். ஆனால், தனது பார்வையற்ற சகோதரிக்கு திருமணம் செய்து வைத்தபிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று கூறுகிறாள்.

இதனால், தனது காதலியின் குடும்பதை தனது குடும்பமாக நினைத்தது பார்வையற்ற நாயகியின் சகோதரிக்கு திருமணம் செய்து வைக்க முழு மூச்சுடன் இறங்குகிறார் விதார்த். இந்த திருமணத்தை நடத்திவைக்க அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வருகிறது.

இறுதியில் இந்த சிக்கல்களையெல்லாம் தகர்த்து நாயகியின் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்து, விதார்த் தனது காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

மினி பஸ் டிரைவராக வரும் விதார்த் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தனது காதலிக்காக இவர் செய்யும் செயல்கள் ஒரு பொறுப்பான காதலனாக நம் கண்முன்னே நிறுத்துகிறது. நர்சாக வரும் மனிஷா யாதவ் வெள்ளை உடையில் பளிச்சென இருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சிக்கு குறை வைக்கவில்லை.

விதார்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார். கதையில் எங்கு காமெடி தேவைப்படுமோ அதற்கேற்றார்போல் சூரியை பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் சிறப்பு. விதார்த்தின் அம்மா, அப்பாவாக வரும் கோவை சரளா-இளவரசு கூட்டணி வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. அதேபோல், மினி பஸ் உரிமையாளராக வரும் இமான் அண்ணாச்சி வரும் காட்சிகளும் கலகலப்பு.

காமெடி படம், ரொம்ப ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்று நம்பி தியேட்டருக்கு போகும் ரசிகர்களை ஏமாற்றாமல், நல்ல பொழுதுபோக்கான, ஜாலியான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். முதல் பாதி ஜாலியாக பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக செல்கிறது. ஆனாலும், கதையோடு வரும் காமெடிகள் ரசிக்க வைக்கிறது.

அருள் தேவ் இசையில் படம் பார்க்கும் வரையில் ரசிக்க வைக்கின்றன. ஆனால், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை. மூவேந்தர் ஒளிப்பதிவில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை படமாக்கியது அருமை.

மொத்தத்தில் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ பட்டைய கௌப்பிட்டான்



அமரகாவியம். திரை விமர்சனம்


விஜய் ஆண்டனியின் முதல்படமான 'நான்' படத்தை இயக்கிய ஜீவா ஷங்கரின் இரண்டாவது படம். ஆர்யாவின் தம்பி நடித்த படம்,. ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கே வராத நயன்தாரா இந்த படத்தின் புரமோஷனுக்கு வந்ததோடு மட்டுமின்றி இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து கதறி அழுதார் என ஊடகங்கள் கிளப்பிய இலவச விளம்பரம் ஆகியவை அனைத்து சேர்ந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா? என்றால் சந்தேகம்தான் என்று தோன்றுகிறது.

முதல் காட்சியிலேயே சத்யாவை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து செல்கின்றனர். செல்லும் வழியில் சத்யாவின் பிளாஷ்பேக்தான் கதை. சத்யாவும், மியா ஜார்ஜும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள். சத்யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போக சென்ற சத்யாவுக்கு மியா கொடுக்கும் அதிர்ச்சி, மியா சத்யாவை காதலிக்கிறார் என்பதுதான். இதனால் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் தான் கதை. சத்யா ஏன் ஜெயிலுக்கு போனார் என்பதையும் கிளைமாக்ஸில் சொல்கிறார்கள்.

படத்தில் உருப்படியாக இருப்பது கடைசி அரைமணி நேரம் மட்டுமே. யாரும் எதிர்பாராத டுவிஸ்டுடன் கூடிய கிளைமாக்ஸ். ஆனால் அந்த சில நிமிடங்களுக்காக படம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

பள்ளிக்கூட பருவத்தில் வரும் காதல், அவர்கள் போட்டிருக்கும் கிளாமர் உடைகள் இதையெல்லாம் எந்த ஊரில் உள்ள பள்ளியில் அனுமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. முதல் ஒருமணி நேரம் சாதாரண காதல் காட்சியிலேயே படத்தை ஓட்டிவிடுகிறார் இயக்குனர். நான் திரைப்படத்தில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லை. ஆனாலும் கடைசி அரைமணி நேர காட்சிகளுக்காக அவருக்கு ஒரு பாராட்டு.

சத்யா, மியா இருவருமே நன்றாக நடித்துள்ளனர். இன்னொரு ஆர்யா உருவாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மியா ஜார்ஜ் நல்ல கதையயை தேர்வு செய்து நடித்தால் கண்டிப்பால் நல்ல எதிர்காலம் உண்டு.

கடைசி அரைமணி நேரத்தில் கொடுத்த விறுவிறுப்பை இயக்குனர் ஆரம்பத்தில் இருந்து கொடுத்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். 1980களில் காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்த எதிர்ப்பு தற்போது இல்லை. தற்போது பெற்றோர்களும் சரி, காதலிப்பவர்களும் சரி நல்ல மெச்சூரிட்டியுடன் உள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற கதையயை இயக்குனர் ஏன் தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை. பல காட்சிகள் இயல்பாக இல்லை.

பாடல்கள் எதுவுமே மனதில் பதியவில்லை. இருப்பினும் பின்னணி இசையை நன்றாக செய்துள்ளார் ஜிப்ரான்,. இயக்குனரே ஒளிப்பதிவாளரும் இருப்பதால் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.

மொத்தத்தில் இது அமரகாவியம் இல்லை. அழிந்த காவியம். ஆர்யாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies