கையும் களவுமாக சிக்கிய தெலுங்கு நடிகை ஸ்வேதா-நிர்வாண குளியல் வீடியோ-கதைத் திருட்டு‘சலீம்ஸ

01 Sep,2014
 

             


 ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார்.இவர் தமிழில் 'ரா ரா' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் ரகளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கருணாசுக்கு ஜோடியாக சாந்தமாமா படத்தில் நடித்து வருகிறார்.ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் அந்த ஹோட்டலுக்கு திடீர் என்று சென்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், சில தொழில் அதிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர். இதையடுத்து ஸ்வேதா பாசு, ஏஜெண்ட் பாலு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.இந்த விபச்சார தொழிலில் மும்பை மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பெரிய தொழில் அதிபர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். முன்னதாக தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்த ஸ்டிங் ஆபரேஷனின்போது ஸ்வேதா எசக்குபிசக்காக இருந்தது ரகசிய கேமராவில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமாவின் அடுத்த கதைத் திருட்டு ‘சலீம்ஸ


தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் எப்போதோ ஒரு முறைதான் கதைத் திருட்டு நடக்கும். ஆனால், இன்று அறிமுகமாகும் பல இயக்குனர்கள் கொரியன், ஜப்பான், ஈரான் போன்ற படங்களிலிருந்து கதைகளைத் திருடி படத்தை எடுத்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களின் வீச்சு அதிகமாகி விட்ட காரணத்தால் அந்த கதைத் திருட்டுக்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் கிண்டலக்கப்பட்டு வருகின்றன.
அப்படி சமீபத்தில் “ஜிகர்தண்டா, சரபம்” ஆகிய படங்கள் கொரியன், ஜப்பான் படங்களிலிருந்து திருடப்பட்டு எடுக்கப்பட்டதை பல ரசிகர்களும் கிண்டலடித்தார்கள். இது தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள கற்பனை வறட்சியைத்தான் காட்டுகிறது.
இப்போது, சில நாட்களுக்கு முன் வெளிவந்த ‘சலீம்’ திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியான ‘பிங் பாங்’ என்ற கொரியன் திரைப்படத்திலிருந்து கதையைத் திருடி படத்தை எடுத்துள்ளார்கள். விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கூட ‘சலீம்’ படத்தை 30 பாகங்கள் வரை கூட எடுக்கலாம். அவ்வளவு விஷயம் கதையாக இருக்கிறது என்று சொன்னார். அதன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது. அப்படியென்றால் அவர்களிடம் எத்தனை கொரியன் பட சிடிக்கள் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆங்கிலப் படங்கள் தற்போது தொலைக்காட்சிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதால் சிறு குழந்தைகள் கூட அந்தப் படங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்கிறார்கள். அதனால் தான் கொரியன், ஜப்பான் பக்கம் புதிய இயக்குனர்கள் சென்று விட்டார்கள் போலிருக்கிறது.
திருட்டு விசிடியைப் பற்றி தீவிரமாக எதிர்க்கும் திரைத் துறையினர், அதே போல் இந்த கதைத் திருடர்களையும் எதிர்ப்பார்களா  என்பதே சராசரி ரசிகனின் கேள்வி.

விஷால் தயாரித்த 'பூஜை' உரிமையை வேந்தர் மூவீஸ் கைப்பற்றியது.



 

விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் 'பூஜை' திரைப்படத்தின் தமிழக உரிமையை வேந்தர் மூவீஸ் வாங்கியிருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கின்றது.

தாமிரபரணி படத்தை அடுத்து ஹரி-விஷால் இணையும் புதிய திரைப்படமான 'பூஜை', வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அதன் தயாரிப்பாளரும், படத்தின் நாயகனுமான விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தான் வேந்தர் மூவீஸுக்கு கொடுத்துள்ளதாக விஷால் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த தீபாவளிக்கு தனது தயாரிப்பில் வெளியான 'பாண்டிய நாடு' திரைப்படத்தை போல், வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள 'பூஜை' வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ள விஷால் இந்த படத்தில் சத்யராஜ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அவருடைய கேரக்டர் படம் வெளியான பின்னர் பெரும் பரபரப்புடன் பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்



பிரபல நடிகையின் நிர்வாண ஐஸ் பக்கெட் குளியல் வீடியோ. அதிர்ச்சியில் ALS நிறுவனம்.



 

உலகெங்கிலும் உள்ள பிரபலங்களை ஐஸ் பக்கெட் சாலஞ்ச் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இதை காரணமாக வைத்து சில சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை பூனம் பாண்டே உள்ளாடை மட்டும் அணிந்து ஐஸ் பக்கெட் சாலஞ்ச் குளியல் செய்து அந்த வீடியோவை யூடியூப் இணையதளத்திலும், தனது ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்தார். அவருடைய வீடியோ மிகவும் ஆபாசமாக இருப்பதாக கருதிய ஃபேஸ்புக், பூனம் பாண்டேவின் ஃபேஸ்புக் பக்கத்தை தடை செய்தது.

இந்நிலையில் பூனம் பாண்டேவை விட மிக மோசமாக அதாவது நிர்வாணமாக ஒரு நடிகை ஐஸ் பக்கெட் குளியல் செய்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். அவர்தான் பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கும் Sofia Hayat  என்பவர். கட்டில் ஒன்றின் மேல் நிர்வாணமாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள Sofia Hayat  மீது ஐஸ் பக்கெட் தண்ணீர் ஊற்றப்படுவது போல் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது.

நடிகை Sofia Hayat நிர்வாண வீடியோவுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளது. ஒரு நல்ல காரியத்திற்காக நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கெட் குளியலை தவறான முறையில் வெறும் விளம்பரத்திற்காக ஒரு சிலர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று ALS நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்காகத்தான் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் குளியல் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பே-பால் அக்கவுண்டில் பணம் கட்டினால் பிரபல நடிகையின் செக்ஸ் வீடியோ. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.



 

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் அவர்களின் இணையதளம் ஒன்றை ஹேக்கிங் செய்த மர்ம நபர் ஒருவர் இன்று காலை டுவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தான் ஜெனிபரின் இணையதளத்தை ஹேக்கிங் செய்ததாகவும், அதில் கிடைத்த ஒரு நிர்வாண செக்ஸ் வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் தன்னுடைய பே-பால் கணக்கில் நன்கொடை அளித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானவுடன் நூற்றுக்கணக்கானோர் அவருடைய கணக்கில் பணம் கட்டிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இரண்டு நிமிடங்கள் மட்டுமே அந்த வீடியோவில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஜெனிபர் லாரன்ஸ் செக்ஸ் உறவு கொள்கிறார் என்றும் பரபரப்பாக பேசபட்டு வருகின்றது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சைபர் க்ரைம் காவல்துறையினர்களிடம் ஜெனீபர் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக தனது வீடியோ பரவுவதை தடுத்து நிறுத்துமாறு அவரது சார்பில் அவரது உதவியாளர் புகார் மனுவை கொடுத்துள்ளார். ஆனால் காலம் கடந்துவிட்டது என்றும் மில்லியன் கணக்கானோர் தற்போதே அந்த வீடியோவை பார்த்துவிட்டதாகவும் ஹாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



சுந்தர் சி படத்தில் சிம்ரன்நடிக்க மறுத்தது ஏன்? .



 

அரண்மனை படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தின் கதையயை தயார் செய்துவிட்டார் சுந்தர் சி. இந்த படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்கிறார். மேலும் அவரே இந்த படத்தையும் தயாரிக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.

 'ஆம்பள' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சுந்தர் சி இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகா ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் தீயா வேலை செய்யணும் குமார், அரண்மனை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் "ஆம்பள" படத்தின் ஒரு முக்கிய குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரனை சுந்தர் சி அணுகிய போது அவர் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சிம்ரனை யாரும் கண்டுகொள்ள வில்லை என்றும், விமர்சனங்களில் கூட தனது நடிப்பை குறித்து யாரும் குறிப்பிடவில்லை என்றும் கூறிய சிம்ரன், இனி கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என்று கூறி சுந்தர் சியின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் அம்பிகா நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


3 நாயகிகளுடன் 'நேரம்' நிவின் நடிக்கும் பிரேமம்”.




நிவின், நஸ்ரியா நடித்த நேரம் படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தனது அடுத்த படத்தை தற்போது முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த படத்திலும் ஹீரோவாக நிவின் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


யுவா, நேரம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இணையும் அல்போன்ஸ் - நிவின் ஜோடி இணையும் இந்த படத்திற்கு 'பிரேமம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் நிவினுக்கு ஜோடியாக மூன்று புதுமுக ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.


தற்போது கோவாவில் படப்பிடிப்பு நடத்தி வரும் அல்போன்ஸ் பிரேமம் திரைப்படத்தை வரும் டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளார். நேரம் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திலும் பணிபுரிகின்றனர் என்றும், படக்குழுவினர் அனைவரும் நஸ்ரியாவை மட்டும் மிஸ் செய்வதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த படம் தமிழிலும் வெளிவரும் என இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.





Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies