தோள் மீது கை போட்டால்பிடிக்காதுஸடாப்ஸீ கோபம்ஸ-எந்த தாதாக்கும் பயப்படமாட்டேன்ஸவிஷால் செய்தித் துளிகள்

31 Aug,2014
 

             


சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நடிகர், நடிகைகளுடன் ரசிகர்கள் தொடர்பு கொள்ள வசதியாக ஆகிவிட்டது. ஒரு காலத்தில் அவர்களுக்கு கடிதம் எழுதி ஃபோட்டோ கேட்டு அதை மற்றவர்களிடம் காண்பித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மனம் கவர்ந்த நட்சத்திரங்களுக்கு ஃபோன் செய்து பேசினால் கூட அவர்களுடைய உதவியார்கள் மட்டுமே பேசுவார்கள்.

ஆனால் தற்போது நட்சத்திரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்துவிட்டன.
அதிலும் தங்கள் நட்சத்திரங்களை எங்காவது பார்த்தால் அவர்களுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் ஏற்றி அதிகமான ‘லைக்’ வாங்க வேண்டும் என்ற ஆவல் சராசரி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. பல நடிக, நடிகையரும் ரசிகர்களின் புகைப்படம் எடுக்கும் ஆவலை தடுப்பதில்லை.

ஆனால், நடிகை டாப்ஸீக்கு ரசிகர்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும் என்கிறார். “ சில ரசிகர்கள்தான் மிகவும் மரியாதையாக அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கிறார்கள். அதே போல் என்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் தவறான, ஆபாசமான டுவிட்டர்களைப் பதிவிடுபவர்களை தடை செய்துவிடுவேன்.

மேலும், என்னுடன் புகைப்படம் எடுக்கும் போது என் தோள் மீது கை போடுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. அது போன்று செய்பவர்களைக் கண்டால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காது, ” என்று தெரிவித்துள்ளார்.
அதனால், ரசிகர்களே இனி டாப்ஸீயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டால் பார்த்து எடுங்கள்

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்ஸ


தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் நடிகர் தனுஷ். தன்னுடைய நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர் நீச்சல்’ என்ற படத்தை எடுத்து அவரை ஒரு தனிப்பட்ட கமர்ஷியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்தினார் தனுஷ்.

தொடர்ந்து வந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் மாபெரும் வெற்றி பெற முன்னணிக்கு வந்தார் சிவகார்த்திகேயன். அந்த சமயத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த எந்தப் படங்களும் வெற்றி பெறாத நிலையில், தனுஷ் தானாகவே அவருடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு விட்டுக் கொடுப்பதாக பலரும் நினைத்தனர்.

இருந்தாலும் தற்போது வரை சிவகார்த்திகேயனை வைத்து ‘காக்கிச் சட்டை’ படம் வரை அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
இதனிடையே விநாயகர் சதுர்த்தியன்று தனுஷ் அவருடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

அப்படத்தின் அறிவிப்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவர் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள். தனுஷ் என்ன செய்தாலும் அதைப் பாராட்டி, வாழ்த்தி தன்னுடைய டுவிட்டரில் செய்தி வெளியிடும் சிவகார்த்திகேயன் இதுவரை ‘நானும் ரவுடிதான்’ படத்தை வாழ்த்தி எந்த செய்தியையும் வெளியிடாததை அவர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அன்றைய தினம் ரஜினியின் ‘லிங்கா’ முதல் பார்வைக்கெல்லாம் வாழ்த்துகளைப் பதிவிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும், சிவகார்த்திகேயனுக்கு நீண்ட நாட்களாகவே நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையாம். அந்த ஆசை விஜய் சேதுபதிக்கும் இருந்தது என்பது விஜய் விருதுகள் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தனுஷ், சிவகார்த்திகேயனை முழுமையாக ஓரம் கட்ட முடிவு செய்துவிட்டாராம். அதன் எதிரொலிதான் விஜய்சேதுபதியை தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைப்பது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

சில வாரங்களுக்கு முன் கூட ஒரு பத்திரிகையாளரிடம் பிரசுரிக்க வேண்டாமென்று சொல்லி சில விஷயங்களை தனுஷ் சொன்னதையும் அவர்கள் கணக்குப் போட்டுப் பாருங்கள், எல்லாம் சரியாக இருக்கும் என்கிறார்கள்.


மொட்டை அடிக்கவும் தயார் – பிரியங்கா சோப்ரா


பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரி கோம்’ படம் ஹிந்தித் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது. வரும் வாரம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

இந்தியாவுக்காக குத்துச் சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று கொடுத்த மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பிரியங்கா சோப்ரா ‘மொட்டை’த் தலையுடன் காட்சியளிக்கிறாராம். உண்மையாக மொட்டை அடிக்கவில்லையென்றாலும், ஒரு முழுப்படத்திற்காக மொட்டை அடிக்க வேண்டிய நிலை வந்தால் அதற்காக கண்டிப்பாக அடிப்பேன் என்று பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.

“மேரி கோம்’ படத்தில் ஒரு சில காட்சியில் மட்டுமே மொட்டைத் தலையுடன் நடிக்க வேண்டி இருந்ததால் உண்மையாக மொட்டை அடிக்கவில்லை. அதன் பின் முழு படத்திலும் எப்படி நடிப்பது.

ஆனால், ஒரு படத்தில் முழுவதுமாக மொட்டைத் தலையுடன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் வந்தால் அதற்காக கண்டிப்பாக மொட்டை அடிப்பேன். ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் நடிக்க வேண்டி வந்தால் எப்படி மொட்டை அடிக்க முடியும்,” என்கிறார் பிரியங்கா.

அறிமுக இயக்குனர் ஓமங் குமார் இயக்கியுள்ள ‘மேரி கோம்’ திரைப்படம் வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.


இந்தியா- ஜப்பான் கூட்டுத் தயாரிப்பில் ஜம்போ 3டி


அம்புலி 3டி படத்தை தொடர்ந்து இரட்டை இயக்குனர்கள் ஹரி, ஹரீஷ் தற்போது ஆ என்ற படத்தை இயக்கி வருகிறார்கள். அம்புலி படத்தில் நடித்த கோகுலே இதிலும் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இந்த மூவரும் இணையும் அடுத்த படம் ஜம்போ 3டி.

இதனை ஹரியும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கே ஒக்கிடாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஸ்ரீ வித்யா இசை அமைக்கிறார். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோகுலுடன் பேபி ஹம்சிகா ஹரி நடிக்கிறார்.

இதன் துவக்க விழா நடந்தது. இதில் இந்திய ஜப்பான் கலாச்சார தூதர் கயோலா புருகொவா கலந்து கொண்டார் அவர் கூறியதாவது: “இந்தப் படம் இந்திய ஜப்பானிய கூட்டுத் தயாரிப்பு. தமிழ் திரைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு பெருமை. எங்கள் நாட்டின் பெருமை மிகு இயக்குனர் அகினோகுரோசேவோ நினைவாக சென்னையில் கண்காட்சி நடத்த இருக்கிறோம்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஜி. ஹரி கூறியதாவது: தமிழ் நாட்டு மக்களின் பின்னணியை ஜப்பானிய மக்கள் திரைப்படங்கள் வாயிலாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ் படங்களுக்கு ஜப்பானில் தனி மார்க்கெட் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படத்தை எடுக்கிறோம். டோக்கியோ தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இதனை நான் லட்சியமாக கொண்டிருக்கிறேன். 90 சதவிகித படப்பிடிப்பு ஜப்பானில் நடக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் பி.வாசு, கங்கை அமரன் நடிகைகள் சுகன்யா, நமீதா, ஒய்.ஜி.மகேந்திரன், நடன இயக்குனர் கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஷங்கரின் ஐ படத்தில் ஓநாய் தோற்றத்தில் விக்ரம்


டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக, நீண்ட நாட்களாக உரவாகி வரும் ஐ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் விக்ரம்.

ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாக உள்ள நிலையில், தற்போது 50 வினாடிகள் ஓடக்கூடிய டீசர் மீடியாக்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

அதில், உடல் முழுவதும் ரோமங்களுடன், பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் ஓநாய் போன்ற உருவத்தில் தோன்றுகிறார் விக்ரம்.

தவறான பாதையில் செல்லும் விளையாட்டு வீரனை குறித்து அறிவியல் பரிசோதனை செய்வது தான் ஐ படத்தின் கதையாம். இப்படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக மட்டுமின்றி விளையாட்டு வீரர் போன்ற உடல்கட்டுடன் தோற்றமளிக்கிறார். இதற்காக விக்ரம் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்து உடல் எடையை கூட்டியும் குறைத்தும் உள்ளாராம்.

சமீப காலமாக தான் பங்கேற்ற விழாக்களிலும் விக்ரம் அடையாளம் காண முடியாத, ஆர்ச்சயபட வைக்கும் தோற்றங்களிலேயே தலை காட்டி வந்தார்.

விக்ரமின் இந்த மாறுபட்ட தோற்றங்கள் டீசரில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்த்த மீடியாக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக கோரமான, அடையாளம் காண முடியாத முகம் மற்றும் விலங்குகளை போன்ற கால்களுடனும் விக்ரம் வரும் காட்சிகள் தான் டீசரில் வெளியிடப்பட்டது.

இந்த டீசருக்காக டம்மியான இசை பின்னணியில் ஒலிக்க செய்யப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இப்படத்தில் ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட் படமான ஹல்க் படத்தின் சாயல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது கூறி உள்ளனராம்.


பொங்கலுக்குத்தான் தல 55 ரிலீஸ்!


கௌதம் மேனன் இயக்கத்தில் முதன் முதலாக அஜித் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் அடிபட்டன.

இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி வெளியானதை நம்பி அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலாய் காத்திருந்தனர்.

குறிப்பிட்ட தினத்தில் தல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாததினால், அஜித் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.

அதிகாரபூர்வமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என்றாலும், அஜித் நடிக்கும் புதிய படத்தின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிவிட்டன. அதில் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

அது சரிஸதல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏன் வெளியிடப்படவில்லையாம்?
லேட்டஸ்ட் தகவலின்படி அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
அப்படீன்னா படம் எப்போது ரிலீஸ்?

இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த வீரம் படம் ரிலீசானது.

அதேப்போல வருகிற பொங்கலுக்கு அஜித் நடித்து வரும் புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனராம்.


எந்த தாதாக்கும் பயப்படமாட்டேன்ஸவிஷால் அதிரடி


நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் நேற்று அவருடைய பிறந்தநாளைக் நேற்றுக் கொண்டாடினார்.  அதோடு புதிதாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“என்னிடம் காசு இல்லாத போதே பல நல்ல விஷயங்களுக்கு உதவி செய்திருக்கிறேன். அப்படியிருக்கும் போது இப்போது கையில் காசு இருக்கிறது, இன்னும் பல நல்ல விஷயங்களை செய்ய ஆசைப்படுகிறேன். அரசியலுக்கு வந்துதான் பொதுமக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றில்லை. அரசியலுக்கு வராமலும் நல்லது செய்யலாம்.
அரசியல்லி வரவேண்டும் என்றால் நான் கல்லூரியில் மீண்டும் சேர்ந்து பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்க வேண்டும். இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. எந்த அரசியல் கட்சியிலும் சேரவும் மாட்டேன்.
திருட்டு விசிடியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களும் இறங்க வேண்டும். திரையுலகில்  அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் விசிடியை ஒழித்துவிடலாம். படத்தில் மட்டும் அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக இருக்க விரும்பவில்லை, நிஜத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன்.
எந்த பெரிய தாதாவாக இருந்தாலும் பயப்படமாட்டேன். திருட்டு விசிடி என் படுக்கை அறைக்குள் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன். இதற்காக என் உயிரைக் கொடுக்கவும் தயார்.
நடிகர் சங்கத்ற்கனெ புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று என்னைப் போலவே ஜீவா, கார்த்தி, ஆர்யா போன்றவர்கள் ஆசைப்படுகிறோம். இதற்காக சம்பளமே வாங்காமல் நடித்துத் தரவும் தயாராக இருக்கிறோம், ” என்றார் விஷால்.


அணையை அசுத்தப்படுத்திய ‘லிங்கா’ குழுவினர்ஸ


ஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பில் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநிலங்களில் மட்டுமே படமாகி வரும் தமிழ்ப் படமான ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் இரண்டு முறை தடைபட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, ராமோஜி ராவ் பிலிம் சிட்டி அருகே உள்ள அஞ்சப்பூர் என்ற கிராமத்தில் உள்ள ஏரியில் படப்பிடிப்புக்காக சில கெமிக்கல்களைக் கலந்து அசுத்தப்படுத்தியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் படப்பிடிப்பு தடைபட்டது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் லிங்கனமக்கி அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது சுற்றுப் புறச் சூழலைக் கெடுக்கும் விதத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுப் பொருட்கள் என பலவற்றை அணைப் பகுதியில் அப்படியே போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தக் கூடாதென ஆட்சியாளர்களிடம் மனு அளித்தனர்.
‘லிங்கா’ படத்தின் கதையே ஒரு  அணையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைதான். அப்படிப்பட்ட கதை கொண்ட படத்தில் ஒரு அணையை படப்பிடிப்பிற்காக இவர்கள் அசிங்கப்படுத்துவது சரியா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர்.
கோவில்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்கள் பலவற்றிற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தால் இப்படித்தான் அசுத்தப்படுத்துகின்றனர் என்று பொதுவாகவே பொதுமக்களிடம் ஒரு கோபம் இருக்கிறது. அந்த கோபமும் நியாயமானதுதான்ஸ
‘லிங்கா’ படத்தின் முக்கியஸ்தர்களான இயக்குனர் ரவிக்குமாரும், ரஜினிகாந்தும் இனி மேலாவது இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வார்களாஸ ?

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ரங்கூன்’ஸ


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் நிறுவனமான ஏ.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ‘ரங்கூன்’ என்ற புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராகப் பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.
‘ரங்கூன்’ படத்தைப் பற்ற



Share this:

Kommende Film DK

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

DENMARK

Kommende Film danmark

SWEES TRAVELS

Tamilnews.cc-facebook

திருமண அழைப்பிதழ்

Travel News

Tamil Movies

Honeymoon Package

Denmark Kommende Film

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

INDIAN MANGOES ( exports)

கேர்னிங் எம்.பி. கடை Dk

08.10.2014

NAER CAR RENTAL SERVICES

swees travels

Andaman Package

Aalbo Attractio Asian SuMart dk

side

jothidam

11,600 -D4 3 N Goa Package

North India Rs. 17,000 -09N

09N 10 D Best of Kerala

Wedding Holl in india 9884849794

Kashmir Tour 09N in- 3* Hotel

RANDERS DK 0045 40737632

Maldives Special

SHIRDI SAI BABA DARSHAN

Wildlife of Gujarat

Temple Tours

Srilanka Tour Package 21.500Rs

Forex 9884849794

Free ads

marana arvithal

© tamilnews.cc. All right reserved Design and development by: Gatedon Technologies